Monday, July 27, 2009

முல்லைப்பெரியாறும் துரோகத்தின் வரலாறும்


தமிழகத்தின் ஆறுகள் சிதைந்த வரலாறு:


நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்.இன்றைய சூழலில்
சில ஆறுகள் இன்றி அமையாது தமிழகம் என்றே குறிப்பிடலாம்,
தாவரங்கள் விலங்குகள் மற்றும் மனித உயிர்களின் அடிப்படை
உயிர் ஆதாரங்களில் ஒன்று நீர்.மனித உயிர்களால் உற்பத்தி
செய்ய முடியாத நீர் ஆதாரமே இயற்கை வழங்கிய மிகப்பெரும்
கொடையாகும்.

மேலும் நீர் ஆதாரமானது மனித சமுதாயத்தின் உற்பதி
நடவடிக்கைகளான வேளான்மை மற்றும் தொழித்துறைக்கும்
அடிப்படையாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மை
உற்பத்தி நடவடிக்கையானது வேளான்மைத்துறை சார்ந்ததாகவே
இருக்கிறது.



இயற்கையாய் உருவெடுத்து தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும்
ஆறுகளை தடுத்தும் மறித்தும் திசைதிருப்பியும் அணைகளை
எழுப்பியும் உகந்த வகையில் பயன்படுத்த முடியும்.
தமிழ்நாட்டிலே ஓடிய வைகையாறு காவிரியாறு பவானியாறு
பாலாறு ஆரணியாறு தாமிரபரணியாறு கொறட்டலையாறு
பெண்ணையாறு கூவமாறு கடிலமாறு கொலுவனாறு வெள்ளாறு
ஓங்கூறாறு வராக ஆறு மலட்டாறு அக்கினியாறு அம்புலியாறு
வெண்ணாறு கொலுவணாறு பம்பாறு மணிமுத்தாறு கோதையாறு
போன்ற ஆறுகள் தமிழ்நாட்டின் குடிநீர்த்தேவையையும்
வேளான்மை உற்பத்தி தேவையையும் நிறைவு செய்து வந்தன.




அதே சமயத்தில் வேகமாக உருவெடுத்து வந்த தரகு
முதலாளித்துவ தொழிற்துறை ஆலைகளாலும்
பெருநகரங்கள் உருவாக்கத்தாலும் நச்சுகழிவுநீர் கலப்பாலும்
தமிழநாட்டில் ஓடிய பல ஆறுகள் சிதைந்தும் காணாமலும்
அழிக்கப்பட்டும் விட்டன. எஞ்சிய ஆறுகளும் நீரின்றி
வறண்டு கிடக்கின்றன.செருப்பு இருந்தால் மட்டுமே கடக்க
முடியும் என்கிற நிலையில் இன்றைய தமிழக ஆறுகள்
காட்சியளிக்கின்றன. இம்மாற்றங்கள் இயற்க்கையால மட்டுமே
நிகழ்ந்ததாக சொல்ல முடியாது. தமிழ்நாட்டை சுற்றியுள்ள
கருநாடகம் ஆந்திரம் மற்றும் கேரள அரசுகளின் துரோகங்களும்
அதற்கு டில்லி அரசு துணை சென்றது ஒரு காரணமாகும்.



இந்த வரிசையில் முல்லை பெரியாறு அணையிலும்
தொடர் துரோகங்கள்



முல்லை பெரியாறு நீர் யாருக்கு சொந்தம் அதன் வரலாறு என்ன?
பெரியாற்றின் உரிமைகளுக்காக போராடுவதன் பாதை என்ன ?
முல்லை பெரியாற்றில் தமிழர் உரிமையை வென்றெடுப்பது எப்படி?




முல்லை பெரியாறு அணை கட்டிய வரலாறு:


தமிழகத்தில் நெல்லை மாவட்டம் சுந்தரமலையில் உள்ள
சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு தன்னோடு சின்ன
ஆறு சிறு ஆறு சிறுதோனி ஆறு கட்டப்பனையாறு
இடமலையாறு முல்லையாறு ஆகியவற்றையும்
சேர்த்துக்கொண்டு சுமார் 300 கிலோ மீட்டர்கள் ஓடி
இறுதியில் கொச்சி அருகே கடலில் கலக்கிறது.


தமிழக எல்லைக்குள் 56 கிலோ மீட்டர் தூரமும் தற்ப்போதைய
கேரள எல்லைக்குள் 244 கிலோ மீட்டர் தூரமும் பாய்கிறது.
அடர்ந்த வனப்பகுதிகலில் வழியாக பாய்ந்தோடும் பெரியாற்றின்
சமவெளி பகுதி 23 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே, பெரியாற்றின்
நீர் பிடிப்பு பகுதிகளில் சூன் சூலை ஆக்ஸ்டு மாதங்களில்
தென்மேற்கு பருவ மழையும் நவம்பர் திசம்பர் மாதங்களில்
வடகிழக்கு பருவ மழையும் பொழிவதால் ஆண்டின்
பெரும்பகுதிக்காலம் பெரியாற்றில் வெள்ளம் வழிந்தோடுகிறது.




கோள் நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியா
தண்டமிழப் பாவை என பழந்தமிழ இலக்கியங்களால்
குறிக்கப்பெறும் வைகையாறும் 19 ம் நூற்றாண்டுகளில்
பொய்த்து போனது.இதனால் வேளான்மை உற்பத்தி
சீர்குலைந்து இப்பகுதி மக்கள் பசியாலும் பட்டினியாலும்
வாட நேர்ந்தது. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும்
வேளான்மைக்கும் ஆற்று நீரையே பயன்படுத்த வேண்டிய
கட்டாயம் இருந்ததால் அப்போதைய சேதுபதி மன்னர்கள்
மற்றும் அமைச்சர் முத்து இருளப்பர் ஆகியோர்,பெரியாற்றில்
இருந்து கால்வாய் வெட்டி மேற்கு நோக்கி செல்லும் ஆற்றுநீரை
தென்தமிழகம் திருப்பி கொண்டு வருவது பற்றி ஆராய
1798 இல் ஒரு குழுவை அமைத்தனர்.



இதன் பிறகுதான் ஆங்கிலேயர்கள் மேற்குறித்த திட்டம்
குறித்து ஆய்வு செய்ய தொடங்கியதோடு அத்திட்டத்தை
நிறைவேற்றவும் அக்கறை காட்டினர்1808 இல் ஜேம்ஸ்
கால்டுவெல் என்பவர் அணைகட்டும் திட்ட ஆய்வை
செய்துள்ளார். 1850 இல் முல்லையாற்றில் அணை கட்டும்
முயற்சியானது அப்பகுதியில் தொற்று நோய் பரவியதன்
காரணமாக நின்று போனது.



1868 இல் கர்னல் பெனி குயிக் என்பவரை அப்போதைய
ஆங்கிலேய அரசாங்கம் இத்திட்டத்தை ஆய்வு செய்ய நியமித்தது.
1882 இல் ரூபாய் 65 இலச்சம் மதிப்பீட்டில் அணை கட்டும்
திட்டம் உருவாக்கப்பட்டு திட்டம் இறுதி செய்யப்பட்டது.




அணை கட்டப்படவிருந்த இப்பகுதியானது முழுமையான தமிழர்
பகுதியாகும் தேவிகுளம் பீர்மேடூ போன்ற பகுதிகள் தமிழர்கள்
வாழ்ந்து வந்த பகுதியாகும். இன்றளவும் அப்பகுதிகளில்
தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.



அணை கட்டப்படவிருக்கும் இப்பகுதியில் இருந்து சுமார் 62
கிலோ மீட்டர்கள் தொலைவுவரை தமிழ்நாட்டு எல்லை பகுதி
அமைந்திருந்தது இதன் பிறகுதான் கொட்டாக்கரை அடூர் போன்ற
பகுதிகளை கொண்ட திருவிதாங்கூர சமஸ்தான எல்லை
தொடங்குகிறது. இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி
தமிழக பகுதியா திருவிதாங்கூர் சமஸ்தன பகுதியா என்பதில்
தெளிவில்லாத வெள்ளைய அரசாங்கம் அணை கட்டப்படவுள்ள
பகுதி திருவிதாங்கூர் சமஸ்தான பகுதி என்பதாக கருதி 1886
அக்டோபர் 28 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999
ஆண்டுகலுக்கான ஒப்பந்தத்தை செய்துகொண்டது.


இவ்வொப்பந்தப்படி அணை நீரால் மூழ்கும் 8000 ஏக்கர்
நிலமும் பராமரிப்புக்கான 100 ஏக்கர் நிலமும் அணையில்
தேங்கும் நீரும் அணையின் பாதுகாப்பு படகு மற்றும் சாலை
போக்குவரது உள்ளிட்ட அணைத்து உரிமைகலும் தமிழகத்துக்கு
சொந்தமாகும் புதிதாக கட்டப்பட உள்ள இவ்வணை நீரானது
தொடர்ந்து காலங்காலமாக தமிழகத்துக்கு கிடைக்க செய்ய
வேண்டும் என்கிற நோக்கத்துக்காக 999 ஆண்டுகல் ஒப்பந்தம்
போடப்ப்ட்டாலும் ஒப்பந்த காலம் முடியும் தருவாயில் ஒ
ப்பந்தம் மீண்டும் 999 ஆண்டுகலுக்கு புதுப்பிக்க உறுதி மொழியை
திருவிதாங்கூர் சமஸ்தானத்திடமிருந்து வெள்ளை அரசாங்கம் பெற்றது.


பல்லாயிரம் ஆண்டுகலுக்கு முன்பே வேளான்மை துறையிலும்
தேவையான நீர்பாசன கட்டமைப்பை உருவாக்குவதிலும் தமிழர்கள்
தலைசிறந்து விளங்கி வருக்கின்றனர் நீர்ப்பாசன பொறியியல்
நீர்ப்பாசன பயன்பாட்டு நிர்வாகம் என இரு துறைகளில் சிறந்து
விளங்கி வருவததற்கு தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம்
ஏரிகலும் குளங்கலும் கண்மாயிகலும் சான்றாக உள்ளன.



இதுமட்டுமல்லாது அணைகட்டுகளை உருவாக்குவதிலும்
தமிழர்கள் உலகத்திற்க்கே முன்னோடியாக இருந்துள்ளனர்
என்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகாலன்
காலத்தில் கட்டப்பட்ட கல்லனை கம்பீரத்துடன் நிலைத்துநின்று பயன்பட்டுகொண்டிருப்பதை கூறலாம்.ஆங்கிலேயர்கள் தமது
ஆட்சி காலத்தில் கட்டி எழுப்பிய அணை கட்டுமானங்களுக்குக்
கல்லனையின் கட்டுமானமே அடைப்படையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.அதனால்தான் பேயர்டு ஸ்மித் தனது
இரிகேசன் இன் சவுத் இந்தியா நூலில் இரண்டாயிரம்
ஆண்டுகலுக்கு முந்திய இந்த அணை மிகச்சிறந்த பொறியியல்
சாதனை எனக் குறிப்பிடார்.


மேலும் 1874 இல் கோதாவரி ஆற்றில் தவுளீஸ்வரம் அணையை
கட்டிய ஆர்த காட்டன் த்னது நூலில் ஆழம் காண இயலாத
மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற
தொழிநுட்ப்பத்தை இவர்கலிடமிருந்து (கல்லனையை கட்டியவர்கலிடமிருந்து) தான் நாம் அறிந்துகொண்டோம் இந்த பாடத்தை பயன்படுதிதான்
ஆறு பாலங்கள் அணைகட்டுகள் போன்றவற்றை கட்டினோம்.



எனவே இந்த மகத்தான சாதனை புரிந்த பெயர் தெரியாத
அந்நாளைய மக்கலுக்கு நாம் பெரிது கடமைப்பட்டுள்ளோம்
எனக் குறிப்பிட்டுள்ளார் இது அக்கால தமிழ் தேசிய இன மக்களின்
அறிவு திறனுக்கு சான்றாகும்.


மேற்கு நோக்கி பாய்ந்தோடும் ஆற்று நீரை அணைகட்டி தேக்கி
அந்நீரை எதிர்த்திசையில் கிழக்கு நோக்கி மலையை குடைந்து
சுரங்கம் தோன்டி அதன் வழியாக கொண்டு வந்து வைகை
ஆற்றோடு முல்லை பெரியாற்று நீரை இணைக்கும்
நோக்கத்தோடுதான் முல்லை பெரியாறு அணை கட்டப்படுகிறது.
ஒரு ஆற்று படுகையிலிருந்து மற்றோர் ஆற்று படுகைக்கு
நீரை திருப்பும் இத்திட்டம் உலகிலேயே முதலாவது என கருதலாம்.



முல்லை பெரியாறு அணையின் வேலைகள் பாதியளவு
முடிந்திருந்த நிலையில் 1890 இல் பெரியாற்றில் வந்த
பெரு வெள்ளமானது அணை கட்டுமானம் அணைத்தையும்
உடைத்து சென்றுவிட்டது ஆகவே இந்த அணையை கட்டுவதை
கைவிடுவதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது ஆனாலும் முல்லை
பெரியாற்று அணை கட்டுவதில் பென்னி குயிக் உறுதியாக இருந்தார்.




அணை கட்டும் செலவினங்கலுக்காக இங்கிலாந்து சென்று
தனது சொத்துக்கலையெல்லாம் விற்று விட்டு அதில் கிடைத்த
85 இலச்சம் ரூபாயையும் செலவழித்துதான் முல்லை
பெரியாற்று அணைய கட்டி முடித்தார்.அணை முழுவதும் கட்டி
முடிக்கப்பட்டவுடன் இடதுபுறம் வெட்டப்பட்ட கால்வாயில் 240
அடி நீளமுள்ள சிற்றனை ஒன்றையும் கட்டி முடித்தார்.

1241 அடி நீள்த்தில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ள
முல்லை பெரியாற்று அணையின் மொத்த உயரம் 172 அடியாகும்.
இதில் நீரை தேக்கும் உயரம் 155 அடியாகும் திடீரென்று வரும்
வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் 152 அடி வரை மட்டுமே நீர்
தேக்கப்பட்டு வருகிறது. 152 அடி உயரமுள்ள அணையில் 104
அடி வரை தேங்கும் நீரை மட்டுமே எடுக்கும்படியாக
அமைக்கப்பட்டுள்ளது.அதாவது அணையின் மொத்த
கொள்ளளவான 15 டி எம் சி தண்ணீரில் 10 டி எம் சி நீரை மட்டுமே அணையிலிருந்து வெளியே கொண்டு வர முடியும்.
மீதமுள்ள 5 டி எம் சி நீர் கிடப்பு நீராக அணைக்குள் இருக்கும்.


முல்லை பெரியாறு அணை ஆங்கிலேய ஆட்சி காலத்தில்
கட்டப்பட்டிருந்தாலும் அவ்வணையின் தொழில்நுட்ப்பமும்
உழைப்பும் மூலப்பொருட்க்களும் தம்ழர்களுக்கு சொந்தமானவை.

முல்லை பெரியாற்று அணை மிகபெரும் பொருட் செலவு
மட்டுமின்றி மிகப்பெரும் அளவு உயிர்சேதங்களையும் செலவாக
கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.

1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது
தமிழர்கள் காலம்காலமாக வாழ்ந்து வந்த தேவிகுளம்
பீர்மேடு போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு
மாறாக கேரள மாநிலத்தோடு இணைக்கப்பட்டன.


அதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் மலயாளிகலின் குடியேற்றத்தை
கேரள அரசு திட்டமிட்டு நடத்தியது. அதாவது இலங்கையில்
சிங்கள இனவாத் அரசு தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள
மக்களை வழுக்கட்டாயமாக குடியமர்த்தி தமிழீழத்தை ஆக்கிரமிப்பு
செய்து வருவது போல அப்போதைய கேரள முதல்வர்
தானுப்பிள்ளை என்பவர் கேரளச் சிறைகளில் இருந்த கைதிகளை
விடுவித்து அவர்கலுக்கு 5 ஆயிரம் ரூபாயும் 5 ஏக்கர் நிலமும்
கொடுத்து தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் குடியமர்த்தும்
வேலைகளை செய்தார்.

இத்தகைய குடியேற்றங்கலுக்கு பின்புதான் 1963 இல் முல்லை
பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்கிற புரளியை
கேரளாவின் மனோரம இதழ் மூல மக்களிடம் பரப்பி
இனவெறியை தூண்டி விட்டது கேரள அரசு.


பெரியாற்றின் துணை ஆறுகளில் தடுப்பு அணைகளை கட்டுதல்
தமிழக்த்தின் எல்லைக்குள் உள்ள செண்பகவல்லி அணையை
உடைத்தல் முல்லை பெரியாறு அணைநீர் தேங்கும் பகுதிகளை
ஆகிரமித்து அரசு கட்டடங்களை கட்டுதல் சுற்று சூழல்
பாதிக்கப்ப்டும் வன விலங்குகள் அழியும் என பொய் கூறுதல்
அணைய பலப்படுத்தும் பணிகளை செய்ய விடாமல் தடுத்தல்
போன்ற அடாவடித்தனங்களை 1956 முதல் இன்று வரை
கேரளத்தை ஆண்டு வரும் சி பி எம் கட்சியும் காங்கிரசு கட்சியும்
மற்றும் கேரளாவின் உதிரி கட்சிகளும் செய்து வருகின்றன.
அணைக்கு ஆபத்து அணையால ஆபத்து என்று ஒரே குரலில்
திரும்ப திரும்ப பொய் சொல்லி வருகின்றன.


முல்லை பெரியாறு பலப்படுத்தப்பட்ட வரலாறு: 1924 1933
1940 1943 1961 1977 ஆகிய ஆண்டுகளில் அணயின்
முழுகொள்ளளவான 152 அடிவரை நீரை தேக்கி வைத்தபோதும்
அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.இது தவிர 1930 1933
1960 ஆகிய ஆண்டுகலிலும் தமிழக அரசு கேரள அரசுகள்
சொல்லாமலேயே அணையை பலப்படுத்தும் வேலைகலை
செய்துகொண்டிருந்தது. இது ஒரு புறமிருக்க 1976 இல்
முல்லை பெரியாறு அணைக்கு கீழே 555 அடை உயரமுள்ள
இடுக்கி அணைய 800 மெகாவாட் மின் உற்பதிக்காக கட்டி
எழுப்பியது கேரள அரசு. இந்த இடுக்கி அணை கட்டப்பட்ட
பிறகுதான் கேரள அரசு தனது பொய்புரட்டுக்களை வேகமாக ப
ரப்பி வந்தது 1978 இல் அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள
அரசு மீண்டும் புரளியை கிளப்பி விட்டதால் அணையின் நீர்மட்டம்
145 அடியாக குறைக்கப்பட்டது.



அப்போது அணையை பார்வையிட்ட மத்திய நீர்வள ஆணைய
தலைவர் அணை பலமாக்வே உள்ளது கேரள மக்களின் அச்சம்
தேவையற்றது என கூறினார்.இருப்பினும் கேரள மக்களின்
அச்சத்தை போக்குவதற்கு அணையை பலப்படுத்தும் ஒப்பந்தம்
கேரள தமிழநாடு அரசுகளிடையே செய்துகொள்ளப்பட்டது
அணையை பலபடுத்தும் வரை அணையின் நீர்மட்டம் 136
அடியாக தற்காலிகமாக குறைக்கப்பட்டது.



மூன்று ஆண்டுகளில் முடிய வேண்டிய பலப்படுத்தும் பணிகள்
கேரள அரசுகளின் இடையூறுகள் காரணமாக பல
ஆண்டுக்கனக்கில் செய்ய வேண்டியதாயிற்று. 1978 இல்
அணையின் நீர் மட்டம் 145 அடியாக குறைக்கப்பட்டதால்
இராமனாதபுரம் சிவகங்கை மாவட்ட
பகுதிகளில் 40.000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது.


காலம் காலமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள்
தங்கள் நிலங்கள் தரிசாக கிடப்பதை போட்டுவிட்டு பிழைப்பு
தேடி சொந்த மண்ணையும் விட்டு வெளியேறி பெரு
நகரங்கலுக்கும் வெளி மாநிலங்கலுக்கும் வெளிநாடுகலுக்கும்
சென்று குறைந்த கூலிக்கு கொத்தடிமைகளாக வேலை செய்யும்
நிலைக்கு தள்ளப்பட்டனர்.1979 இல் மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகலும் செய்துகொண்ட
ஒப்பந்தப்படி முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தும்
பணிகள் 1985 லேயே முடித்த பின்பும் அணையின் நீர் மட்டத்தை
உயர்த்துவதற்கு கேரள அரசுகள் மறுத்து வந்தன.



இதனால் கால் நூற்றாண்டு காலமாக பாதிக்கப்பட்டு வந்த
உழவர்கள் முல்லை பெரியாற்று பிரச்சனையை உச்ச நீதி
மன்றத்துக்கு கொண்டு சென்றனர். மத்திய நீர்வள ஆணையம்
மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை
சார்ந்த தலைசிறந்த நிபுணர்கள் அணையை பார்வையிட்டதற்கு
பிறகு அவர்கள் கேரள அரசின்அத்துனை பொய் காரணங்களையும்
நிராகரித்த பிறகு அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த
27/ 02 / 2006 அன்று நீரை 142 அடி வரை தேக்கலாம் என்று
தீர்ப்பு வழங்கியுள்ளது.


அதை ஏற்க மறுத்து கேரள அரசு சன்டித்தனம் செய்வதோடு
கேரள மக்களிடம் பயபீதியை கிளப்பி இனவெறியை தூண்டி
வருகிறது சி பி எம் அரசு.உச்ச நீதி மன்ற தீர்ப்பை
செயல்படுத்தவிடாமல் தடை செய்யும் நோக்கட்தோடு
காங்கிரசு அரசு கொண்டு வந்த கேரள அணைகள்
பாதுகாப்பு சட்டத்தை வழிமொழிந்தது இன்றைக்கு
ஆட்சியில் இருக்கும் சி பி எம் கட்சிதான்.



உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழக விவசாயிகளின்
வயிற்றில் அடிக்கும் சி பி எம் கட்சி கோக கோலா ஆலை
குறித்த உச்ச நீதி மன்ற ஆனையை உச்சி முகர்ந்து
வரவேற்றுக்கொண்டிருக்கிறது பாட்டாளி வர்ர்க சர்வதேசியம்
பேசி திரியும் சி.பி.எம் கட்சி மிக எளிய உண்மைகளை கூட
மறுக்கிறது அணை உடைந்தால் இடுக்கி உள்ளிட்ட ஐந்து
மாவட்ட மக்கள் கடலில் மூழ்கி இறந்து விடுவார்கள் என்று புரளி
பரப்பி வருகிறது.


உண்மை என்னவெனில் அணையின் உபரி நீர் வழிந்தோடும்
பகுதி முழுவதும் அடர்ந்த வன்ப்பகுதியாகும் அது
மட்டுமில்லாமல் முல்லை பெரியாறு அணையானது
கடல் மட்டத்திலிருந்து 2869 அடி உயரத்தில் உள்ளது.
அணை நீரில் மூழ்கி விடுவதாக சொல்லும் பகுதிகள்
அணைத்தும் 3500 அடி உயரத்தில் இருந்து 4750 அடி
வரையிலான உயரதில் உள்ளன கேரள அரசு சொல்வதை
போன்று ஒரு வாததிற்கு முல்லை பெரியாறு அணை உடைவதாக
வைத்துக்கொண்டாலும் முல்லை பெறியாற்றின் முழு கொள்ளலவான
15 டி எம் சியை காட்டிலும் பல மடங்கு கொள்ளளவை கொண்ட
[70 டி எம் சி] இடுக்கிஅணை முல்லை பெரியாற்று அணைக்கு
கீழே கட்டப்பட்டு உள்ளது. ஒரு வேளை அணை உடைந்தால்
கூட 15 டி எம் சி நீரும் 70 டி எம் சி கொள்ளளவு கொண்ட
இடுக்கி அணைக்குதான் போய் சேரும்.


இன வெறி பிடித்து அலையும் கேரள சி. பி. எம். ம்மின்
சன்டித்தனத்திற்கு எதிராக சுண்டு விரலை கூட
அசைக்காதவர்கள்தான் தமிழக சி.பி.எம்.அடிப்பொடிகள்

முல்லை பெரியாற்று பிரச்சணையில் கேரள சி.பி.எம் ம்மினர்
மட்டுமல்ல சி பி ஐ காங்கிரசு பா ஜ க உள்ளிட்ட அணைத்து
கட்சிகளும் இனவெறியை தூண்டி விட்டு வருகின்றன.



இக்கட்சிகள்யாவும் கேரளாவுக்குள் இருந்துகொண்டு இந்திய
ஒற்றுமை குறித்தோ இந்திய இறையானமை குறித்தோ
மறந்தும் பேசுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டிளுல்ல
இந்திய தேசியம் பேசும் கட்சிகளாகட்டும் மாநில சுயாட்சி
பேசும் மாநில கட்சிகளாகட்டும் இல்லாத இந்திய ஒற்றுமை
குறித்தே பேசி திரிகின்றன.


தமிநாட்டுக்கு இழைக்கப்படும் துரோகத்துக்கு துணை போவதையே
தொழிலாக வைத்துக்கொண்டுள்ளன இங்குள்ள ஓட்டு பொறுக்கி
கட்சிகள். 1970 இல் முல்லை பெரியாற்று நீரில் மின்சாரம்
தயாரிப்பதற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது
அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அணைக்கான
குத்தகை பனத்தை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.60 லட்சமாக
அதிகரித்து கொடுத்தார்.


மீன் பிடி உரிமையையும் படகு போக்குவரத்து உரிமையையும்
விட்டு கொடுத்தார் இதனால் சுற்றுலா பயணீகள் மூலம்
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வருமானம் 200 கோடி
ரூபாய் வருமானம் கேரளாவிற்கு சென்று விட்டது. 1979 இல்
எம் ஜி ஆர் அட்சி காலத்தில் அணையின் நீமட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டதோடு அணையின் பாதுகாப்பும் கேரள
காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

1981 இல் தமிழக எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த கேரள அரசால்
செண்பகவல்லி அணை உடைக்கப்பட்டது.


உடைக்கப்பட்ட அவ்வணையை கட்டி கொடுப்பதற்க்காக 1991 இல்
5.50 லச்சம் ரூபாயை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா
கேரள அரசுக்கு வழங்கினார். அத்தொகையை பெற்றுக்கொண்ட
கேரள அரசு இடிக்கப்பட்ட அணையை கட்டிதரவில்லை
என்பதோடு முல்லை பெரியாற்று அணையையும்
சிற்றனையையும் உடைப்பதற்கு கடப்பாறைகளோடு
புறப்பட்டிருக்கிறது.


துரோகத்தின் வரலாற்றை முறியடிப்போம் முல்லை பெரியாற்று
உரிமை மீட்டெடுப்போம்:


முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரள ஆளும்
வர்க்கமும் தமிழக ஆளும் வர்க்கமும் துரோகத்தையே
இழைத்திருக்கின்றன,

தமிழ்நாட்டின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைப்பதும் கூட
இனவாதமாகவும் பயங்கரவாதமாகவும் இங்குள்ள
ஆட்சியளர்களால் சொல்லப்படுகிறது.தமிழகம் மற்றும் கேரள
அரசுகள் சொந்த தாயகத்திற்க்காக செயல்படும் அரசுகள் அல்ல,
மாறாக டெல்லி அரசின் எடுபிடிகளாகதான் செயல்பட்டு வருகின்றன.


டெல்லி அரசானது பார்ப்பனிய ஏகாதிபத்திய அரசாக இருந்து
கொண்டிருக்கும் நிலையில் இம்மாநில அரசுகலும் டெல்லியின்
நோக்கத்தை ஈடேற்றவே துடித்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு தேசிய இனத்திலும் உள்ள இயற்க்கை வளங்களை
தங்கு தடையின்றி சுரண்டி செல்லும் நோக்கத்தோடு நமது
தமிழர்களுக்கு எதிரான இனவெறியை தூண்டி வருகிறது
டெல்லி அரசு.



முல்லை பெறியாற்று பிரச்சணையை வைத்துக்கொண்டு
உழைக்கும்மலையாளிகள் யாவருமே எதிரிகள் என்கிற
கருத்து பரவலாகதமிழகத்தில் உருவாக்கப்படுகிறது.
உண்மையில் உழைக்கும்மலையாளிகள் நமக்கு எதிரிகள்
அல்ல, இனவெறி ஊட்டும் கேரள அரசு கும்பலே நமது எதிரிகள்
அதுபோல கேரள இனவெறிக்கு துணை போகும் டெல்லி
தமிழக அரசுகளும் நமது எதிரிகளே தமிழர்களின்
நலன்கலை பாதுகாத்திடவும் தமிநாட்டின் உரிமையை
மீட்டெடுக்கவுமானபுரட்சி தேசிய அரசை அமைத்திடும்
நோக்கத்தோடு இணைந்திடுவோம்

8 comments:

மதிபாலா said...

பதிவு கொஞ்சம் நீளமானாலும் படிக்கச் சுவாரஸ்யமாக இருந்தது.

mathibala said...

NO WORD VERIFICATION PLZZZZ

ஸ்டாலின் குரு said...

நன்றி மதிபாலா

ஸ்டாலின் குரு said...

NO WORD VERIFICATION PLZZZZ//

புரியவில்லை மதிபாலா

Hai said...

mullai periyaaRu kuRiththu naan ivvaLavu theriyaathu irunhthaen. nalla koarvaiyaay ezuthappattuLLathu.

miga neenda kaala vaRalaaRu innum koota ezutha irunthum kuRaivonRum illai.

paaraattukkaL ivvaLavu akkarai kontathaRkaakavae.

kuRai enRu paarththaal lakarangaLukkitaiye niRaiya idangakaLil pizaikaL.
ivvaLavu nalla katturaiyil kaNkaLai uRuththukiRathu.

iraNdaavathaai malayaaLa makkaLin eNNam patri umathu karuthu uNmaiyaakvae irukkak kuutum.
anaal ithu malayaaLikalukku mattume porunhthi varuvathu illaiye. namathu karuththukaL namathu pirathinhithikaLaal naataaLumanRaththil ethirolikkiRathaa?
ithu ellaa itangaLilum natakkum oru pothuvaana nikalvaakum. nammaalum ulakaalum unarappatuvathu yaar thangaL unarvukaLai yaar veLippatuthukiRaarkaLoa avarkaLathu uNarvukaLthaan. enavae avrkai vittith thLLungaL. avarkal namathuethirikaLum alla. aanaal namathu urimaikaLukkaakap poaraatukaiyil atuththavarkaL nallavarkaLaa kettavarkaLaa vavaatham thaevaiyillai.

«É¡ø þÐ ÁÄ¡Ǣ¸ÖìÌ ÁðΧÁ ¦À¡Õó¾¢ ÅÕÅÐ þø¨Ä§Â. ¿ÁÐ ¸Õòиû ¿ÁÐ À¢Ã¾¢¿¢¾¢¸Ç¡ø ¿¡¼¡ÙÁýÈò¾¢ø ±¾¢¦Ã¡Ä¢ì¸¢È¾¡?
þÐ ±øÄ¡ þ¼í¸Ç¢Öõ ¿¼ìÌõ ´Õ ¦À¡ÐÅ¡É ¿¢¸øÅ¡Ìõ. ¿õÁ¡Öõ ¯Ä¸¡Öõ ¯ÉÃôÀÎÅР¡÷ ¾í¸û ¯É÷׸¨Ç ¡÷ ¦ÅÇ¢ôÀÎи¢È¡÷¸§Ç¡ «Å÷¸ÇÐ ¯½÷׸û¾¡ý. ±É§Å «ù÷¨¸ Å¢ðÊò òûÙí¸û. «Å÷¸ø ¿Áб¾¢¡¢¸Ùõ «øÄ. ¬É¡ø ¿ÁÐ ¯¡¢¨Á¸Ù측¸ô §À¡Ã¡Î¨¸Â¢ø «Îò¾Å÷¸û ¿øÄÅ÷¸Ç¡ ¦¸ð¼Å÷¸Ç¡ ÅÅ¡¾õ §¾¨Å¢ø¨Ä.

Hai said...

kadasiyaaga therivathu onrum illai naan azhagiyil eluthiyathu ingu support aaga villai.

ஹரி said...

இந்த கட்டுரையை நான் வேற இடங்களில்(இணைய தளங்களில் பதிவு செய்தல் ) பயன்படுத்தலாமா

செ.லீ.க said...

இயற்கையாய் உருவெடுத்து தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும்
ஆறுகளை தடுத்தும் மறித்தும் திசைதிருப்பியும் அணைகளை
எழுப்பியும் உகந்த வகையில் பயன்படுத்த முடியும்.
தமிழ்நாட்டிலே ஓடிய வைகையாறு காவிரியாறு பவானியாறு
பாலாறு ஆரணியாறு தாமிரபரணியாறு கொறட்டலையாறு
பெண்ணையாறு கூவமாறு கடிலமாறு கொலுவனாறு வெள்ளாறு
ஓங்கூறாறு வராக ஆறு மலட்டாறு அக்கினியாறு அம்புலியாறு
வெண்ணாறு கொலுவணாறு பம்பாறு மணிமுத்தாறு கோதையாறு
போன்ற ஆறுகள் தமிழ்நாட்டின் குடிநீர்த்தேவையையும்
வேளான்மை உற்பத்தி தேவையையும் நிறைவு செய்து வந்தன.//
எம்புட்டு அழகா எழுதி இருக்கீங்க தோழர்...முதலில் சிரம் தாழ்த்தி தலைவணங்குகிறேன் ...

ஆறுகளின் பெயர்களை வாசிக்கும் போதே எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது...

இக்கட்டுரைக்கு எமது வாழ்த்துகளும் மகாயுகம் நன்றிகளும்...

மிக அருமையான ஆய்வு தோழர்...

இந்த கட்டுரையை முழுவதையும் மீண்டும் பதிவு செய்து அருமை என்று சொல்ல வேண்டும் ஏன் என்றால் அனைத்து பத்திகளும் அருமை நல்ல ஆய்வு...


தானுப்பிள்ளை என்பவர் கேரளச் சிறைகளில் இருந்த கைதிகளை
விடுவித்து அவர்கலுக்கு 5 ஆயிரம் ரூபாயும் 5 ஏக்கர் நிலமும்
கொடுத்து தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் குடியமர்த்தும்
வேலைகளை செய்தார்.//
இந்த அயோகியனோட கொள்ளு பேரன் தான் சிவசங்கர மேனன் இத்யாதி...இவிங்க குடும்பமே தமிழன் கூட பிழைக்க வேண்டியது அப்புறம் தமிழனுக்கு எதிராக துரோகம் செய்ய வேண்டியது கருமம் புடிச்சவின்யிங்க..

மீண்டும் எமது வாழ்த்துகள் ..

Post a Comment