Sunday, July 26, 2009

ஓஷோவின் வைரங்கள்ஆக்டன் பிரபு சொல்கிறார்;அதிகாரம் கெடுக்கும்
இது உண்மையல்ல.அதிகாரம் ஒரு போதும் கெடுப்பதில்லை,
ஆனால் கெட்டுப்ப்போன மக்களே அதிகாரத்தை நோக்கி
கவரப்படுகிறார்கள்.அதிகாரமில்லாமல் அவர்களால் எப்படி
தஙகள் உண்மை முகத்தை காட்ட முடியும்?
அவர்கள் தங்கள் இதயத்தின் உண்மை தன்மையை வெளிக்காட்ட
அதிகாரம் அவர்களுக்கு வாய்ப்பை மட்டுமே எற்ப்படுத்தி தருகிறது.
அதிகாரம் கெடுப்பதில்லை,
அது உண்மையை வெளிப்படுத்த மட்டுமே செய்கிறது.


ஒருமையிலிருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.முடிந்தவரை
நடைமுறைச் சாத்தியமானவரை ஒருமையிலிருப்பதை ஆனந்தியுங்கள்.யாருமில்லாத தனிமையில் சந்தோசபப்டுங்கள்.
மௌனமாக அமர்ந்திருக்கும்போது, எதுவும் செய்யாமலிருக்கும்போது
வசந்தம் வருகிறது புல் தானாகவே வளருகிறது.


நினைவில் கொள்ளுஙகள்.வாழ்வு என்பது பகலிற்கும் இரவிற்கும்,
வெயில்காலதிற்கும் குளிர்காலதிற்கும் இடையிலான இசைவு.ஒரு
தொடர்ந்த இசைவு.எங்கும் நிற்க்காதது!தொடர்ந்து செல்வது!
இந்த இயக்கத்தின் வீச்சு எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த
அளவு உங்களது அனுபவம் ஆழமாக இருக்கும்.


ஒவ்வொரு தனி மனித உயிரியும் ஒரு சுதந்திரம்.ஒரு அறியப்படாத
சுதந்திரம்.முன்கூட்டியே கணிப்பது சாத்தியமில்லை.எதிர்பார்ப்பு சாத்தியமில்லை.ஒருவர் விழிப்புணர்விலும்,புரிதலிலுமே வாழ வேண்டும்.


அடிமையாய் இருக்காதீர்கள்.உங்களுக்கு தேவை என்று நீங்கள்
உணரும் எல்லை வரை மட்டும் சமுதாயத்தை கடைபிடியுங்கள்.
ஆனால் எப்போதும் உங்களை வழிநடத்துவதில் நீங்களே
எஜமானனாய் இருங்கள்.


நான்,ஆச்சரியப்படும் தனமையை இழக்காமல் காப்பாற்றி
வைத்திருக்கும்,மனதையே பக்குவமடைந்த மனம் என்று அழைகிறேன்.தொடர்ந்து வியப்படைந்து கொண்டே
இருக்கககூடிய மனமே பக்குவமடைந்த மனம்.
அது மற்றவர்களால்,தன்னால்,எல்லாவற்றாலும்
வியப்படையும்.வாழ்க்கை எப்பொழுதும் ஒரு ஆச்சரியமே.


வாழுங்கள்,ஆடுங்கள்,சாப்பிடுங்கள்,தூங்குங்கள்,
முடிந்தவரை செய்பவற்றை முழுமையாக செய்யுங்கள்.
அதோடு திரும்பத் திரும்பஇதை நினைவில் கொள்ளுங்கள்:
எப்பொழுதெல்லாம் நீங்களே பிரச்சனைகளை உருவாக்குவதை
கவனிக்கிறீர்களோ அப்பொழுதே அதிலிருந்து
வெளியே வந்துவிடுங்கள்.


எல்லோரும் உங்களோடு இணைந்திருப்பதை காணும்
பொழுதுதான் உங்களுக்குள் கருணை எழும்.நீங்கள்
எல்லோரிலுமிருப்பதை, எல்லோரும் உங்களில் இருப்பதை
நீங்கள் காணும் பொழுதுதான்உங்களில் கருணை எழும்.
எவரும் தனியானவரில்லை.தனி என்ற மாயை
விலகும்பொழுது கருணை எழும்புகின்றது.

கும்பல்,பெருங்கூட்டம் ஆகியவை தனிமனிதனின்
வாழ்க்கையை கட்டுப்படுத்தாமல் இருப்பதே உண்மையான
ஜனநாயகத்தின் அர்த்தம்.

ஜனநாயகம் என்பது மதத்தன்மையைவிட அரசியல்தன்மை
குறைவாகக் கொண்டது.ஜனநாயகம் அரசியலை விட மிகுந்த
முக்கியத்துவம் கொண்டது. ஜனநாயகம் என்பது வாழ்வை
பற்றிய முற்றிலும் புதிய பார்வை.அது இதுவரை எங்கும் நிகழவில்லை,இனிமேல்தான் நிகழ வேண்டும்.ஜனநாயகத்தின் பொருள்,ஒவ்வொரு தனிமனிதனும் தனது
வெளிச்சத்தில் வாழ்க்கையை வாழ முழு உரிமையும்
கொண்டுள்ளான்,அவனை அதிலிருந்து தடுக்க கூடாது என்பதே.
ஒருவன் மற்றவர்களுக்கு தொந்தரவோ,சங்கடமோ ஏற்ப்படுத்தாத வரையில்,அவனுடைய வாழ்வின் எல்லா பரிமாணங்களிலும்,
எல்லாவிதத்திலும் அவனுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
இதுவே உண்மையான ஜனநாயகம் பற்றிய எனது பார்வை.
இது போலவே எனது சந்நியாசிகள் செயல்பட வேண்டும்
என்று நான் விரும்புகிறேன்.அடுத்தவர் வாழ்க்கையில்
குறுக்கிடக் கூடாது.அடுத்தவருக்கு மிகுந்த மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.


உண்மையில் உயிர்த்துடிப்பான வாழ்க்கை,ஒரு வகையில்
தாறுமாறாகவே இருக்கும். ஒரு வகையில் என்று நான்
சொல்கிறேன்,ஏனெனில் அந்தத் தாறுமாறான நிலை
தன்னுடையதான ஓர் ஒழுக்கத்தைக் கொண்டே இருக்கிறது.
அத்ற்கு எந்த விதிமுறையும் இல்லை,ஏனெனில்
அதற்கு எந்த விதிமுறையும் தேவை இல்லை.
அது மிக அடிப்படையான விதியைத் தனக்குள்,தனக்குள் தானே கொண்டுள்ளது.அதற்கு எந்தவித புற விதிகளும் தேவை இல்லை.


எதையாவது,அது எதுவாக இருந்தாலும்,பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது
நம்பகத்தைன்மையற்று இருப்பதையே காட்டுகிறது.நீங்கள் ஒரு ஆணையோ
பெண்ணையோ நேசிக்கிறீர்கள்.அதே சமயம் பிடித்து வைத்துக் கொள்கிறீர்கள்
என்றால் அது நீங்கள் நம்பகத்தன்மையற்று இருப்பதையே காட்டுகிறது.

அன்ப தர்க்கரீதியானதல்ல.அன்பு பகுத்தறிவுக்கு உட்ப்பட்டதல்ல.
அன்பே வாழ்வு.அன்பு எல்லா முரண்பாடுகளையும் தன்னுள்
ஏற்றுக்கொண்டது. அன்பு அதற்கு எதிர்மறையான வெறுப்பைக்கூட
தன்னுள் ஏற்றுக்கொள்ளும் சக்தி கொண்டது.


புரிந்துகொள்ளக் கூடிய மனிதனே நல்ல மனிதன்.
ஒரு நல்ல மனிதன் என்பவன் எதையும் சந்திக்கும்
உணர்வோடு,விழிப்போடு இருப்பவனே.
விழிப்புணர்வு ஒன்றே எனது மதிப்பிற்குகந்தது.
மற்ற எல்லாம் அர்த்தமற்றவை.

எந்த சுமையும் சேர முடியாதபடி
கணத்திற்கு கணம் இறந்துவிடுதல் -
இதுவே முழு வாழும் கலை ஆகும்.


ஒவ்வொரு கணத்தையும் இதுவே கடைசிக் கணம்
என்பதைப்போல வாழுங்கள்.யாருக்கும் தெரியாது
- இதுவே கடைசியாகவும் இருக்கலாம்.


உங்களை பற்றி நீங்களே அதிக அக்கறை
கொண்டிருத்தலே உங்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய நோய்.


வாழ்வு ஒரு பெண்.புரிந்துகொள்ள முயன்றால் வாழ்வும்
நீங்களும் சிக்கலில்தான் விழுவீர்கள்.புரிந்துகொள்வதைப்பற்றிச்
சுத்தமாக மறந்துவிடுங்கள்.அதை வாழ்ந்து பாருங்கள்.
அப்போது அதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
அதைப் புரிந்துகொள்வது
அறிவுப்பூர்வமானதாகவோ
கருத்துப்பூர்வமானதாகவோ இருக்கப்போவதில்லை,
அது பரிபூரண புரிதலாக இருக்கபோகிறது.


மனிதன் ஒரு முரண்பாடு.அவன் பிரக்ஞையின்
மிக மிகச் சிறிய துகள்,ஓர் அனு,மிகவும் அனுவானவன்.
ஆனால் அதே சமயம் அவன் பரந்ததைக் கொண்டிருக்கிறான்.
முழு ஆகாயமும் அவனுள் அடங்கியுள்ளது.

புரிதல் இல்லாத நிலையே யோசனை.
உங்களுக்கு புரியாததால்தான் நீங்கள் யோசிக்கிறீர்கள்.
புரிதல் எழும்போது யோசனை மறைந்துவிடும்.


உங்கள் சொந்த வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்.
இந்த முழு பிரபஞ்ச இருப்பும் கொண்டாட்டத்திலிருப்பதைப்
பாருங்கள்.இந்த மரங்கள் கடினபாவத்தில் இல்லை.
ஆறுகளும் கடல்களும் தங்கள் போக்கில் உள்ளன.
எல்லா இடங்களிலும் வேடிக்கை இருக்கிறது.
எங்கும் மகிழ்ச்சியும் சந்தோசமுமாய் இருக்கிறது.
பிரபஞ்ச இருப்பைப் பாருங்கள்,பிரபஞ்ச இருப்பை காது கொடுத்துக் கேளுங்கள்,அதன் பாகமாய் மாறிவிடுங்கள்.

3 comments:

Anonymous said...

ஸ்டாலின் படு பந்தாவாக இருக்கும் ஓசோவின் பேச்சில் உள்ளீடு ஏதுமில்லை

சமூக விடுதலைஅல்லாதா தனிமனித விடுதலை பொருளற்றது .

தொடர்ந்து மார்க்சிய பார்வையில் செல்லுங்கள் -தியாகு

dr.tj vadivukkarasi said...

nice post. keep reading osho,esp. his works on awareness and freedom.i feel it is only the individual that matters. society is only a convenience.otherwise even i dont encourage getting identified with Oshoism.but the stuff will soften us.

ஸ்டாலின் குரு said...

நீங்கள்தான் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் தியாகு.
எனது மார்க்சியத்தை வளப்படுத்தியது ஓஷோவின் சிந்தனைகளும்தான் ...

சமூக விடுதலைக்கு தயாராகும் மனிதர்களை சரியாக தயாரிக்க ஓஷோவும்
உதவுவார்....

Post a Comment