Tuesday, July 14, 2009

பார்ப்பன புதிய ஜனநாயகத்தின் தமிழின பகை

தமிழீழ விடுதலைக்காக சமரசமற்று கடைசி வரை போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பை பற்றியும் அதன் தலைமை பற்றியும் தினந்தோறும் வெளியாகும் முரண்பட்ட தகவல்களால் பெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கும் உலக தமிழர்களுக்கு உதவும் பொருட்டும்,அவர்களை குழப்பத்தில் இருந்து மீட்க்கும் பொருட்டும்,தமிழகத்தின் மிக சிறந்த புரட்சிகர இதழான புதிய ஜனநாயகம் ''புலித்தலைமை படுகொலை சதிகாரர்களும் துரோகிகளும்'' என்றொரு மிக சிறப்பான கட்டுரையை வெளியிட்டுருக்கிறது.


தர்க்கரீதியாக தகவல்களை தொகுத்து கொடுக்க முனைந்த அவர்களின் முயற்சியில் இருக்கும் தர்க்க பொருத்தமற்ற விசயங்களை நாம் சற்று அலச வேண்டியிருக்கிறது.



தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தி கிளிநொச்சியை கைப்பற்றிய இலங்கை ராணுவம்,புலிகள் அடுத்ததாக நிலைகொண்டிருந்த முல்லைத்தீவையும் புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிய பிறகு பிரபாகரன் சார்லஸ் ஆண்டனி பொட்டு அம்மான் சூசை நடேசன் ஆகிய தலைவர்களோடும் தளபதிகளோடும் இருந்த இரண்டாயிரம் போராளிகளை முல்லிவாய்காலுக்குள் தப்பி செல்ல முடியாதபடி முடக்கி வைத்திருந்ததாகவும் கூறி செல்லும் புதிய ஜனநாயகம்.


அந்த நிலையிலேயே இறுதிதாக்குதலை நடத்தி புலிகளை முற்றுமுழுதாக ஒழிக்க வாய்ப்பிருந்தபோதும் இந்திய தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் விருப்படி தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு இறுதி தாக்குதலை நடத்தி, புலித்தலைமை உட்ப்பட புலிப்படை போராளிகள் அனைவரையும் இலங்கை ராணுவம் கொன்றொழித்துவிட்டடதாக கூறுகிறது.


தர்க்கரீதியாக நாம் சில கேள்விகளை இங்கே எழுப்ப வேண்டியிருக்கிறது.

இலங்கை ராணுவத்தாலேயே இன்னும் உறுதிபடுத்தப்படாத பொட்டு அம்மானின் இறப்பை வலியுறுத்தி கூறுவதில் இவர்களுக்கு என்ன அக்கறை ?


கிளிநொச்சியை கைபற்றுவது இலங்கை ராணுவத்துக்கு கனவாகவே அமையும் என்று தனது 2008 ஆண்டின் மாவீரர் தின உரையில் பிரபாகரன் அவர்களே குறிப்பிட்ட பிறகும், சில தினங்களுக்குள் பின்வாங்கி செல்லும் முடிவை எடுத்த புலிகள் தங்கள் மரபுவழி ராணுவ கட்டமைப்புகளை கலைத்துவிட்டு ஆயுதங்களையும் ஆளணிகளையும் பரவலாக்கிவிட்டே பின்வாங்கினர் என்கிற உண்மையை ஏன் இவர்கள் மறைக்க வேண்டும்?

தமிழக அரசியல்வாதிகள்,அமெரிக்கா, இந்தியா,இந்திய தேர்தல் முடிவு ஆகியவைகள் தங்களை மீட்க்கும் என்கிற நம்பிக்கையோடு பொந்தில் பதுங்கி இரையாகி போவது என்கிற என்கிற சுய அழிவு முடிவை புலித்தலைமை தேர்ந்தெடுத்து அழிந்துவிட்டதாக ரொம்பவும் விசனப்பட்டு கொள்ளகிறது புதிய ஜனநாயகம்.

புலிகள் ஆதரவாளர்களால் நடத்தப்படும் புதினம் இணையதளத்தின் செய்தியாளர் தனது வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருந்துகொண்டு அனுப்பிய செய்தியையும் தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்திகொள்கிறார்கள் இவர்கள்.

புதினம் செய்தியாளரின் வார்த்தைகளையே நானும் கீழே தருகிறேன்.

“பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன. கனரக மற்றும் சிறுரக துப்பாக்கிச் சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன. தாக்குதல் நிகழும் இந்தப் பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின், மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன. விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சோல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும், சிறீலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களிலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்; கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரினது உடல்களும் நாலாபுறமும் சிதறிக் கிடக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடல்கள் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அகற்றப்படாத காரணத்தினால், அந்தப் பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறீலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர். படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதியெங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர். படுமோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள், அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக் கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர். அதேபோல காயமடைந்து சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள், தமது ‘சயனைட்’ வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர். பதுங்குக் குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடல்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்கா பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது. “இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண் முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டு விடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சோல்லிவிட்ட பின்பு, யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும்போது – மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது? என்று தழுதழுத்த குரலில் கேள்வி எழுப்பினார்.”



புதினம் செய்தியாளரின் வார்த்தைகளில் இருந்தே நாம் சில தகவல்களை பெற முடியும்.

ஏறக்குறைய எழுபதாயிரம் மக்கள் இரண்டரை கிலோ மீட்டருக்கும் குறைவான இடத்துக்குள் அடைபட்டு கிடக்கும்போது அதில் புலிகளின் தலைவரும் தளபதிகளும் மக்களுக்கு மத்தியில் காணப்படாமல் எங்கேயும் சென்றிருக்க முடியாது என்பது யதார்த்தமான விசயம்.

புதினம் செய்தியாளரின் செய்தியில் அது பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை.

தனது மகனையும் மகளையும் போராட்டகளத்திற்கு அர்ப்பணிக்கும் முடிவை எடுத்திருந்த தமிழீழ தேசிய தலைவரை வெகு காலத்திற்கு முன்பே பாதுகாப்பான பகுதிக்கு புலிகள் நகர்த்தியிருந்தார்கள் என்கிற முடிவைத்தான் நாம் இந்த செய்திகளின் ஊடாக புரிந்துகொள்ள முடிகிறது.


பல ஆயிரம் தமிழர்களை கொன்ற அவப்பெயர் தமக்கும் கடைசிவரை போராடி மறைந்த பெருமை புலித்தலைமைக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக,அமெரிக்க இந்திய நார்வே நாட்டுச் சதிகாரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தால் பொதுமன்னிப்பு என்கிற தூண்டிலை புலிகள் முன்பு வீசியதாகவும்.அதை புலிகள் ஏற்றுக்கொண்டு சரணடைய முன் வந்ததாகவும் பார்ப்பன வன்மத்தை கொட்டித்தீர்த்திருக்கிறது புதிய ஜனநாயகம்.



அமெரிக்க இந்திய நார்வே நாட்டு சதிகாரர்கள் பற்றி புலிகளுக்கு எந்த அரசியல் அறிவும் இல்லை என்பதாக சித்தரிக்கும் இவர்கள் கீழே முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு பதில் தருவது நலம்.

2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையில் புலிகளும் சிங்கள அரசும் கையெழுத்திட்ட பிறகு,இலங்கை கடற்படை தனக்கு தேவையான தாக்குதல் படகுகளை கொள்வனவு செய்வதற்காக வெளியிட்ட டெண்டரில் கலந்துகொண்ட நாடுகளில் நார்வேயும் இருந்தது.

போரின் இறுதி நாட்களில் தனது கடற்படையையே களத்தில் இறக்கி புலிகளை அழிக்கும் திட்டத்தை வைத்திருந்தது அமெரிக்கா.


இந்திய அரசை பற்றி சொல்லவே தேவை இல்லை.


சிங்கள அரசுக்கு முழுபின்னணியில் இருந்து போரை நடத்தியதே அதுதான்.

சிங்கள அரசு தங்களுக்கு எந்த உரிமைகளையும் தரபோவதில்லை என்கிற முடிவோடு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகும் முடிவை எடுத்த பிரிகேடியர் தமிழ்செல்வனிடம் உங்களின் இந்த முடிவை அமெரிக்கா ஏற்காது என்று மிரட்டிய எரிக் சொல்கைம் வழியாக சரணடைதல் தூண்டிலை அமெரிக்க இந்திய நார்வே சதிகாரர்கள் வீசியதாகவும் அதை புலிகள் பற்றிகொண்டதாகவும் எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்பது இவர்களுக்கே வெளிச்சம்.


இந்த தகவல்களின் ஊடாக வெளிப்படும், போர்களத்தின் கடைசி நாட்க்களில் புலிகளின் நடவடிக்கைளில் காணப்பட்ட அமெரிக்க சார்பு என்பது கூட வெறும் தோற்றமே என்பதும் அவர்கள் தங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு கடைமையில் கடைசி வரை உறுதியாகவே இருந்தார்கள் என்கிற உண்மை நமக்கு பெருமிதத்தை கொடுக்கிறது.


மற்றபடி இவர்கள் தமிழீழ தேசிய தலைவரை பற்றி வெளியிட்டிருக்கும் கீழ்த்தரமான கருத்துகளில் பார்ப்பன கொழுப்பைத்தவிர வேறு ஒன்றையும் நம்மால் காண இயலவில்லை.



பிரபாகரனையும் புலிகளையும் கோழைகளாக சித்தரிக்கும் நோக்கத்தை தவிர வேறு எந்த நோக்கங்களும் இவர்களுக்கு இல்லை என்பதைத்தான் கட்டுரையின் பின்பகுதிகளில் காணப்படும் யாழ் பேராசிரியர்கள் அறிக்கை பற்றிய தகவலும்,சிங்கள ராணுவத்தின் தத்துவார்த்த தளமான இரயாகரனின் தமிழ்சர்க்கிள் இணையதளத்திற்கு இவர்கள் தேடிக்கொடுக்க முனையும் விளம்பரமும் நமக்கு உணர்த்துகிறது.


லால்காரில் இருந்து பின்வாங்கிய மாவோயிஸ்ட் தளபதிகளையும் இவர்கள் இதே பார்ப்பன கொழுப்புடன் நக்கலடிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவைகள் மட்டுமல்லாமல் சென்ற மாதம் தங்கள் இதழில் மக்களை புலிகள் மனிதகேடயங்களாக பிடித்துவைத்திருந்ததாக கூறிய இவர்கள் இந்த மாதம் மக்கள் விசுவாசத்தோடு புலிகளோடு பதுங்கி இருந்ததாக எழுதி அந்தர் பல்டி அடித்தது ஏன் என்கிற கேள்விக்கு பதில் அறியும் உரிமை உலக தமிழர்களுக்கு உண்டு.

நாம் ஈழத்தின் களநிலவரங்களை நமது சிற்றறிவுக்கு எட்டியவரை ஆய்வு செய்ததில்,சர்வதேச இந்திய இலங்கை அரசுகளின் உளவுத்துறையினர் மிக நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் புலிகளின் அரசியல் ராணுவ தளங்களில் ஈழத்திலும்,புலம் பெயர் வட்டங்களிலும் ஊடுருவி வேலை செய்ததன் விளைவாக புலிகள் தங்கள் படையணிகளிலும், தளபதிகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு இழந்திருக்கின்றனர் என்பது உண்மைதான் என்றாலும் கூட புலிகளின் ஒட்டுமொத்த தலைமையும் தலைவரும் முல்லிவாய்காளில் அழிக்கப்பட்டுவிட்டனர் என்று கூற எந்த அடிப்படையும் இல்லை.



போர் நடைபெற்ற காலங்களில் தங்கள படையணிகளுக்கு சேர்த்துக்கொண்டவர்களின் உயிரையும் அப்பாவி பொதுமக்களின் உயிரையும் காப்பாற்றுவதற்காகவும், அரசியல் வழியிலான போராட்டங்களில் மக்களை அணிதிரட்டுவதற்கான தங்கள் நீண்டகால திட்டத்துக்கு வாய்ப்பாக சரணடையும் முடிவை மேற்கொண்ட நடேசன் மீது (அவர் இலங்கை இடதுசாரி அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்கிற விசயமும் குறிப்பிடதக்கது.) இவர்கள் பொழியும் அவதூறு சகிக்க இயலாததாக இருக்கிறது.



அரசியல் ரீதியான மக்கள் திரள் போராட்டங்களை மேற்கொள்வதையும் இயக்கத்தை மீள்கட்டமைப்பு செய்வதையும் வாய்ப்பான நேரம் வருகையில் தமிழீழத்தை மீட்ப்பதற்கான ஆயுத நடவடிக்களை எடுக்கவும் புலிகளின் தலைமை எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை சமீப காலங்களில் நம்மால் அதிகம் உணர முடிகிறது.


சமீபத்தில் புலனாய்வுத்துறை போராளியின் கடிதம் என்கிற பெயரில் இணையதளங்களில் உலவவிடப்பட்ட அறிக்கை ஒன்றில்,போர்ப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் என்றும் அதனால்தான் உயிரிழப்பு குறைந்தது என்று கூறப்பட்டிருந்தது.


அப்பாவி மக்களை போர்பயிற்சி பெற்றவர்களாக சித்தரித்ததன் வாயிலாக அவர்கள் கொல்லப்பட்டதை மறைமுகமாக நியாப்படுத்த வாய்ப்பளித்திருந்த அந்த அறிக்கையில் கிழக்கு பகுதி மற்றும் மலையக தமிழர்களை துரோகிகளாகவும் சித்தரித்திருந்தனர்.


தினம் தினம் இவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் மீது தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.


மனிதகுல நேசத்துக்கும் விடுதலைக்குமான தத்துவமான மார்க்சியத்தின் பின்னால் நின்று கொண்டு செயல்படும் இந்த அற்பவாத கும்பல் எழுதியிருக்கும் இந்த கட்டுரையின் தலைப்பை மக இக தலைமை சதிகாரர்களும் துரோகிகளும் என்று திருத்தி எழுதினால் மிக பொருத்தமாயிருக்கும்.

5 comments:

Anonymous said...

nalla alasal. Nanri.

- Kiri

Suresh Kumar said...

அருமையான அலசல் மகஇக எப்போதுமே துரோகிகளும் சதிகாரர்க்களுமாக தான் இருந்திருக்கிறார்கள் . தமிழ் மக்கள் இவர்களை அடையாளம் காண வேண்டும்

ரவி said...

தினம் தினம் இவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் மீது தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

Anonymous said...

ஸ்டாலின்குரு,

நல்ல அலசல், எனினும் வன்மத்தை எழுத்தாய் வடித்து எழுதப்பட்ட அந்த கட்டுரையில் அலசுவதற்கும், ம.க.இ.க கும்பலை அம்பலப்படுத்துவதற்கும் இன்னும் ஏராளமான விசயங்கள் இருக்கின்றன என்பது என் கருத்து.... நேரம் வாய்க்கும் போது இந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

தோழமையுடன்
ஈழ முத்துக்குமரன்

ஸ்டாலின் குரு said...

வருகைக்கு நன்றி முத்துக்குமரன்

இப்பொழுதுதான் எழுத துவங்கி இருப்பதால் என்னால் முழுமையாக விசயங்களை எழுத்தில் கொண்டுவவர இயலவில்லை.

எழுதிய அத்துணை தலைப்புகளிலுமே போதாமையை நானும் உணர்கிறேன்.

இனி இது போல் நிகழாமல் இருக்க முயற்சி எடுத்துக்கொள்வேன்.

Post a Comment