Tuesday, July 28, 2009

இந்திய தேசியம்

இந்திய தேசியம்,இந்திய தேசிய ஒருமைபாடு.பாரத தேசம்
என்ற கூச்சல்கள் இடைவிடாது நமது செவிகளை தாக்கும்
வண்ணம் எழுப்பப்பட்டு வருகின்றன பல்தேசிய அரசு
சமூகமான இந்தியாவை ஒரு தேசிய சமூகமாக ஒரு பழமை
வாய்ந்த தேசமாக காட்டும் முயற்சியில் 3500 ஆண்டுகளுக்கு
முன் சிந்துவெளியில் வந்து குடியேறிய ஆரிய இனக்குழு
தலைவன் ஒருவன் பெயரால் பாரத தேசம் என்று பெயரிட்டு
அரசியல் சட்டத்திலும் பொறித்து கொண்டிருக்கிறார்கள் .

ஆனால் இந்தியா ஒரு தேசிய சமூகம் அல்ல என்பது
மட்டுமின்றி அது ஒரு அரசு சமூகமாக கூட இன்றைய
எல்லைகலுடன் 1947 க்கு முன் இருந்தது இல்லை
என்பதுதான் வரலாற்று உண்மையாகும் வெள்ளையர்
காலனிய ஆதிக்கத்துக்கு முன் இந்தியாவில் இருந்த மிகப்
பெரிய பேரசுகள் அசோக பேரரசு.துக்ளக் பேரரசு.ஒவுரங்கசிப்
பேரரசு ஆகியவையே.இப்பேரரசுகள் கூட இந்தியாவின்
இன்றைய பகுதிகள் அணைத்தையும் கொண்டிருக்கவில்லை.
அசாம் மற்றும் வட கிழக்கு பிரதேசங்களும் தென்னிந்தியாவின்
சில பகுதிகலும் இப்பேரரசுகளுக்கு உட்பட்டிருக்கவில்லை.
இந்திய வரலாற்றில் இப்பேரரசுகளின் காலமும் குருகியதே.
மற்ற பேரரசுகள் வ்ட இந்தியாவின் சில பகுதிகளிலோ,
தென்னிந்தியாவின் சில பகுதிகளிலோ மட்டுமே இருந்தன.


ஆங்கிலேயர் ஆட்சியில் பங்களாதேஸ்,நேபாளம்,பூட்டான்,
சிக்கிம்.பர்மா,பாகிஸ்தான்.இலங்கை ஆகிய நாடுகலும்
சேர்ந்தே இந்தியாவாக இருந்தது, அசோகர் அக்பர் பேரரசுகளில் ஆப்கானிஸ்தானும் இருந்தது.வெள்ளையர்கலுக்கு முன்பு
எந்த பேரரசிலும் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு
பிரதேசங்களிருக்கவில்லை.


எனவே 1947க்க் பிந்திய இந்திய நாடு அதற்க்கு முன்
இன்றைய எல்லைகலுடன் கூடிய அரசு சமூகமாக கூட
இருந்தததில்லை.உண்மை இவ்வாறிருக்க இந்தியா ஒரு
பழம் பெரும் தேசிய சமூகம் எனக் காட்டும் முயற்ச்சியில்
தரகு முதலாளித்துவ பார்ப்பனிய சக்திகள் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்,அவர்கலுக்கு வெவ்வெறு காரனங்களுக்காக
இந்தியாவை ஒரு தேசிய சமூகமாக காட்டுவது அவசியமாகிறது.


தரகு முதலாளிகளை பொறுத்தவரை அவர்கள்
ஏகாதிபத்தியங்களுடன் கூடி குலவிக்கொண்டிருக்கும்
வர்க்கம் அவர்களுக்கு நாட்டு நலன் மக்கள் நலன் என்பதைவிட
தமது பணப்பையின் நலன்தான் எப்பொழுதும் முக்கியமானது.
1857இல் நடை பெற்ற மாபெரும் கிளர்ச்சியில் படை வீரர்களும்
விவசாயிகளும் குறுநில மன்னர்களும்ம் ஈடுபட்டு
கொண்டிருந்தபோது சேட்டுகளும் தாக்கூர்களும் ஏகாதிபத்திய
கம்பெனிகலுடன் கூடி குலாவிக்கொண்டிருந்தததை
வரலாறு கூறுகிறது.


இந்த லேவாதேவி வணிக கும்பலை சேர்ந்த தரகர்கள் தாம்
பின்னர் ஏகாதிபத்தியங்களுடன் சேர்ந்து இந்தியாவின்
தொழில் துறையில் இறங்கினர்,ஏகாதிபத்தியத்தை சார்ந்து
இவர்கள் தொடங்கிய தொழில்கள் மற்றோரு வகையில்
கொள்ளை லாபம் ஈட்டி தரும் தொழிழ்களே என்பதால்
இவர்களின் தரகுதனமை மாறிவிடவில்லை.
இவர்களுடைய நலன் எப்போதும் நாட்டு நலன் மக்கள்
நலன்களுடனன்றி ஏகாதிபத்தியங்களுடனே
பிணைகப்பட்டிருக்கிறது.

இவ்வாறு தோன்றிய தரகு முதலாளிகளில்
மிகப்பெரும்பாலோனோர் இந்து மேல்தட்டு சாதிகளை
சார்ந்தவர்களாக இருந்தார்கள்.இவர்கள் யாவருமேதேனும்
ஒரு தேசிய இனத்துடன் கட்டுப்பட்ட சந்தை கொண்டவர்களாக
இல்லை.மாறாக அணத்திந்திய சந்தை கொண்டவர்கள்
இவர்களுடைய சந்தை நலன் பாதுகாக்கப்படுவதற்க்கு
அணைத்திந்திய ஒற்றுமை பாதுகாக்கப்படுவது
அவசியமாக இருக்கிறது.

இதற்க்கு மாறாக பார்ப்பனிய சக்திகள் பார்ப்பன -சத்ரிய
கூட்டின் மூலம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகலுக்கும்
மேலாக சாதிமுறை சமுதாய அமைப்பையும் அதில் தமது தலைமையாதிக்கத்தையும் ஒட்டுண்ணி வாழ்க்கையையும்
இந்தியா முழுவதும் கட்டிக்காத்து வந்துள்ளனர்.இதுவரை
ஆட்சியில் இருந்து வந்துள்ள எல்லா மன்னர்களுமே
அவர்கL இந்து மதத்தினறாயினும் வேற்று மதத்தவறாயினும் படையெடுத்துவந்து ஆட்சியை கைபற்றியவர்கலாயினும்
சரி எல்லோருமே பார்ப்பனர்கலுடன் சேர்ந்து இந்து வர்ண் சாதி
தர்மத்தையும் அதில் பார்ப்பனிய தலைமையாதிக்கத்தையும் ஒட்டுண்ணித்தனத்தையும் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.


இதை பாதுகாப்பதில் மவுரியர் ஆட்சியிலிருந்து நிலவிய குப்தர்
சார்வாகனர் முகலாயர்.மராட்டியர் விஜயநகர அரசுகள் சேர
சோழ பாண்டியர்கள் வெள்ளையர்கள் வரை யாரும்
விதிவிலக்காயில்லை சுல்தான்கள் ஆட்சியில் முஸ்லிம்
மதத்துக்கு மாறிய சூத்திரர்கள்தொடர்ந்தும் சூத்திரர்களாகவே மதிக்கப்பட்டார்கள்.ஷாஷகான் வேதங்களும் கீதையும் குரான்
போலவே இறை வழங்கிய மறைகள் எனக்கூறி மொழிபெயர்த்து பரப்பினார்.வெள்ளையர் ஆட்சி இதற்க்கு சற்றும் குறைந்ததல்ல
வாரன் கேஸ்டிங்ஸ் சாதி கோர்ட்டுகளை நிருவினார்.

மனு நூல் 1794 இல் இந்து சட்டம் என ஏற்றுக்கொள்ளப்பட்டது
இவ்வாறு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக
ஆட்சியாளர்களுடன் கூட்டமைத்துக்கொண்டு தொடர்ந்து
சாதியாதிக்க சமூக அமைப்பையும் அதில் தமது தலைமையாதிக்க
ஒட்டுண்ணி வாழ்க்கையையும் பாதுகாத்து வந்துள்ள பார்ப்பன
சக்திகளுக்கு இனியும் அதை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ள
இந்து மதமும் அதன் அடிப்படையிலான இந்திய ஒற்றுமையும் பாதுகாக்கப்படுவது அவசியமாக படுகிறது.


மொழிவழி அமைந்த மக்கள் சமூகங்கள்,தேசிய இனங்கள்
எழுச்சியுற்று அரசுரிமை பெற்ற நவீன தேசங்களாக அமைந்து
விடுமானால் அதில் ஒன்றுபட்ட இந்திய அரசியல் அமைப்பு
மட்டுமல்ல இந்து பார்ப்பனிய மதமும் புதைகுழிக்கு சென்றுவிடும்
அது அணைத்து இந்திய சந்தை கொண்ட தரகுமுதலாளிய
வர்க்கத்தையும் இந்து பார்ப்பனிய சக்திகளையும் புதைகுழிக்கு
அனுப்பிவிடும் எனவேதான் தரகு முதலாளிதுவ சக்திகளும்
பார்ப்பனிய சக்திகளும் இடைவிடாது இந்திய தேசம் இந்திய
தேசிய ஒருமைபாடு பழம்பெரும் பாரத தேசம் என்றெல்லாம்
இடைவிடாது கூச்சலிட்டு வருகிறார்கள்.

அவர்கள் கூறுவதுபோல் இந்திய மக்களையெல்லாம்
பிணைத்திருக்கும் அந்த ஒருமித்த பண்பாடு கலாசார
ஒருமைபாடு என்பதுதான் என்ன ?????கூட்டி கழித்து
பார்த்தால் பார்ப்பன சாதியை தலைமையிடமாக
கொண்ட பலபடித்தான சாதியாதிக்க சமூக அமைப்பு
அன்றி வேறல்ல.இந்தியாவில் இச்சாதிய அமைப்பு தலை
முதல் கால் வரை பரவியுள்ளது.அதை போலவே இச்சாதிய
அமைப்புக்கு புணிதமளிக்கும் கீதையும் புராணங்களும்
இந்தியா முழுவதும் பரவியுள்ளது.


பார்ப்பனர் தலைமையிலான சாதியாதிக்க சமூக அமைப்புதான்
பார்பனிய சமூக அமைப்பு.இச்சமூக அமைப்பு தெய்வீக தனமை
பொருந்தியது.மீற முடியாதது.மீறக்கூடாதது என்ற விதிகளை
ஆதாரமாக கொண்டு மனு,நாரதர் போன்றவர்கள் எழுதிய தர்ம
சாத்திரங்கள் போதிக்கின்றன.இத்தர்ம சாத்திரங்களே சமுதாய சட்டங்கள்,சாதியாதிக்க நெறியை விதிக்கும்இச்சமுதாய
சட்டங்களில் தலைமையிடம் வகிக்கும் பார்ப்பனர் மன்னுலக
தேவர்.இச்சட்டங்களை செயல்படுத்தும் மன்னர் கடவுளின்
அவதாரம் என்று பிரச்சாரம் செய்கின்றவையே புராணங்களும்
இதிகாசங்களும் இவைதாம் இந்து மதத்தின் இலக்கியங்கள்.
இந்த இலக்கியங்கள் மக்களை பார்ப்பனர்,சத்திரியர்,வைசியர்,
சூத்திரர் என்று நாண்கு வர்ணங்களாகவும் எண்ணற்ற
சாதிகளாகவும் பிரிக்கின்றன.இதில் பார்ப்பான் எல்லோருக்கும் முதன்மையானவன்.சூத்திரனும் வர்ணமற்றவர்களான
சண்டாளர்களும் எல்லோருக்கும் தாழ்ந்தவர்.

முதல் மூன்று வருணத்தாரும் இருபிறப்பாளர்கள்.சூத்திரர்கள்
அவர்களுக்கு அடிமை சேவகம் செய்யவே பிறந்தவர்கள்,இழி பிறவிகள்.அதனினும் இழி பிறவி சண்டாளன்,அதாவது
சமுதாயத்தின் ஒட்டுண்ணிகள் உயர்பிறவிகள்.உழைக்கும்
மக்கள் இழி பிறவிகள்,இவை எல்லாம் இந்து இலக்கியங்கள்
போதிக்கும் தர்ம நெறிகள்.இந்து இலக்கியங்கள் போதிக்கும்
இந்த பார்ப்பனிய வரண சாதி தர்ம நெறிகளே இந்து பண்பாடு.
இவைதாம் இந்திய மக்களை பிணைத்திருக்கும் கலாசார ஒருமைப்பாடு.ஒருமித்த கலாசாரம் என்பதெல்லாம் இதுதான்.
இதுதான் இந்திய பண்பாடு இந்திய தேசிய பண்பாடு,
பாரத பண்பாடு என்றெல்லாம் போற்றி புகழப்படுகிறது.

இந்திய தேசிய தலைவர்கள் என்பவர்களே இதை
ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.இந்திய தேசியத்தின்
தந்தை காந்தி கூறினார் 'நான் ஒரு சனாதன இந்து .
ஏனெனில் முதலாவதாக வேதங்களை நம்புகிறேன்
புராணங்களை நம்புகிறேன் மற்றும் எல்லா இந்து மத
ஆதார நூல்களையும் நம்புகிறேன்,இரண்டாவதாக நான்
வருணாசிரமத்தையும் இன்றைய வடிவத்தில் அன்றி
வேதங்கள் கூறி இருப்பதுபோல நம்புகிறேன்.மூன்றாவதாக
நான் பசுவதை தடையை நம்புகிறேன்.நானகவதாக
உருவ வழிபாட்டில் நான் நம்பிக்கையற்றவனாக இல்லை.
தேச்சத்தந்தையின் நம்பிக்கைகளுக்கும் விருப்பத்துக்கும்
மாராகவா ஒரு தேசம் உருவாகிவிட முடியும்?
இந்திய தேசத்தின் சாரமே இந்து பார்ப்பனியம் என்பதை
எல்லா இந்திய தேசிய தலைவர்களுமே ஒப்புகொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மொழியை
திணித்ததும் இந்த தரகு முதலாளித்துவ - பார்ப்பனிய ஆதிக்க
கூட்டே.தரகு முதலாளிகளுக்கு தமது அனைத்திந்திய சந்தை
நலனை காக்கும் பொருளாதார காரணங்களுக்காகஒரு பொது
மொழி அவசியம்,அதே நேரத்தில் அந்த மொழி இந்து பார்ப்பனிய
பண்பாட்டை பாதுகாக்ககூடியதாக இருப்பதும் அவசியம்.இந்து
பார்ப்பனிய பண்பாட்டின் மொழியாக கடந்த இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் மொழி சமஸ்கிருதம்.
அது பார்ப்பனர்களால் பார்ப்பனிய சமுதாயத்தினை
கட்டிகாப்பதற்காக உருவாக்கப்பட்ட மொழி. சமஸ்கிருதம்
என்றாலே செய்யப்பட்டது என்றுதான் பொருள்.இருபிறப்பாலர்களுக்காவே உருவாக்கப்பட்ட இந்த மொழி
எப்பொழுதுமே மக்கள் மொழியாக இருந்ததில்லை.
பார்ப்பனர்கள் மண்ணுலக தேவர்கள் என்றும்
சத்திரியர்கள் கடவுளின் அவதாரங்கள் என்றும் தமக்கு தாமே
கூறிகொண்டதுபோல அவர்களுக்காகவே அவர்கள் உருவாக்கிக்
கொண்ட சமஸ்கிருத மொழிக்கு தேவ மொழி என்றும் அதன்
எழதுததுவடிவுக்குதேவநாகரி என்றும் பெயர் வைத்துகொண்டனர்.
உழைக்கும் மக்களை சூத்திரர் சண்டாளர் என்று இழிவுபடுத்தி
ஒடுக்கி வந்தது போலவே அவர்கள் பேசும் மொழிகளை சூத்திரபசை
என்றும் நீச பாசை எனறும் இழிவுபடுத்தி ஓடுக்கினர்.


தரகு-முதலாளித்துவ பார்ப்பனிய சக்திகள் மேலை
ஏகாதிபத்திய - பார்ப்பனிய கலாசாரத்தின் மேலாண்மையை
நிறுவி தேசிய மக்களின் மொழி.கலை.இலக்கியம்.
கலாசாரத்தினை நசுக்கி வருகின்றன,தரகு முதலாளித்துவ
-நிலபிரபுத்துவ வர்க்கங்களை சுற்றியுள்ள மிகசிறிய மேல்தட்டு சதவிகிதத்தினரின் கலாசாரம்தான் தரகு-பார்ப்பனிய கலாசாரம்,
மேலை ஏகாதிபத்திய கலாசாரமும் பண்பாடும் மொழியும்
வாழ்க்கைமுறையும் உயர்வாணவை விஞ்ஞானபூர்வமானவை.


பார்ப்பனிய வாழ்க்கைமுறையும் தேவ மொழியும் கலை
இலக்கியமும் நாகரிகமும் பண்பாடும் உயர்வானவை.
புனிதமானவை,போற்றபட வேண்டியவை.அதே நேரத்தில்
மிகபெரும்பான்மையாய் இருக்கும் தேசிய இன மக்களின்
(உழைக்கும்) மொழி கலை,இலக்கியம் பண்பாடு அணைத்தும்
இழிவானவை கைவிடபட வேண்டியவை,இது தரகு பார்ப்பனிய
கலாசாரத்தின் சாரம்.தரகு-பார்ப்பனிய நெறிகள் தமது
கலாசாரத்தின் ஆதிக்கத்தை நிருவியிர்ப்பதன் மூலம் தமது
சொந்த தேசிய வரலாறு,தத்துவம்.பண்பாடு,மொழி.இலக்கியம்
குறித்த அறியாமையையும்,தமது சொந்த தேசிய கலாசாரம்
குறித்த தாழ்வு மனபான்மையையும் அணைத்து தேசிய இன
மக்களிடையேயும் உருவாக்கி அவர்களை தமது கலாசார அடிமைகளாக்கியிருக்கின்றன.

தேசிய இன மக்களின் வரலாறும்,பண்பாடும் பார்ப்பனிய
வேத வரலாற்றின்.பண்பாட்டின் பகுதிகளாக கீழ்பட்டதாக ஆக்கபட்டிருக்கிறது,தேசிய மொழிகள் அனைத்தும்
பார்ப்பனிய தேவமொழிக்கு கீழ்பட்டதாக்கபட்டிருக்கிறது.
அனைத்து உழைக்கும் மக்களும் பார்பனர்களுக்கு கீழ்ப்பட்ட சாதிகளாக்கபட்டிருக்கிறார்கள்,வாழ்க்கைத்தரத்தில் கீழாகவும்
கல்வியறிவற்ற பாமரர்களாகவும் ஆக்கபட்டிருக்கிறார்கள்.

தேசிய அரசுரிமை எல்லைகள் இந்து பார்ப்பனிய அரசு
எல்லைகளால் விழுங்கபட்டுள்ளன, ஆங்கிலமும் இந்தி
மொழியும் ஆதிக்கபீடத்தில் இருக்க தேசிய மொழிகள்
பிராந்திய மொழிகளாக நசுக்கபடுகின்றன, தேசிய மொழிகளும்
கலை இலக்கியங்களும் ஆங்கில -பார்ப்பனிய மொழி
கலை இலக்கியங்களால் சிதைக்கபடுவதும்.ஆங்கில,
பார்ப்பனிய வாழ்க்கைமுறையை மேற்கொள்வதும் பெருமைக்குரியதாக்கபட்டிருக்கின்றன.


தேசிய இனமாக உருவாகி வரும் பழங்குடி மக்கள்
சமூகங்களில் இந்து பார்ப்பனிய கலாச்சாரத்தையும்.
இந்தி மொழி ஆதிக்கத்தையும் திணித்து அவர்களுடைய
மொழி கலாச்சாரத்தை ஒழித்து கட்டுவதன் மூலம்
அவர்களை இந்திய தேசியத்தின் அங்கமாக்கி வருகின்றன.
மொத்தத்தில் தரகு-பார்ப்பனிய சக்திகள் தேசிய இன மக்கள்
சமூகங்களை இந்திய தேசியத்தால் படிப்படியாக விழுங்கி
வருகின்றன,தேசிய இன மக்களின் தேசிய
தனித்தன்மைகளையும் உணர்வையும் அழித்து
அவற்றின் சுய வளர்ச்சியையும் தன்னம்பிக்கையையும்
முடமாக்கி அடிமைப்படுத்தி வருகின்றன.


தோழர் கார்முகில்

No comments:

Post a Comment