Tuesday, February 16, 2010

இடதுசாரி,தேசிய போராட்டங்களின் இன்றைய வடிவம் - 2




தேசிய இனங்கள் பற்றிய நேபாள தோழர்களின் செயல்பாடுகளை
முழுக்க அப்படியே இங்கே பின்பற்ற முடியாது என்பதே
உண்மை.நம்மைப் பொறுத்தவரை,காஸ்மீர்,தமிழகம்,
நாகாலாந்து,அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு தேசிய இனங்கள்,
தங்களின் தேசிய விடுதலைக்கான போராட்டங்களை
தீவிரப்படுத்துவதன் வழியாகவே இந்திய புரட்சிகர
அரசியலுக்கு உதவ முடியும்.சாத்தியமான சர்வதேச சூழல்கள்
அமைந்தால் தேசங்களாக தங்களை அமைத்துக்கொளவது,
அல்லது நேபாள தோழர்களின் பாணியில் இந்திய
மாவோயிஸ்டுகள்,ஒரு குறிப்பிட்ட கால ஆயுதப்
போராட்டத்துக்குப் பிறகு,தங்களை நிராகரிக்க முடியாத
அரசியல்சக்திகளாக இந்தியப்பெருநிலப்பரப்பில் உறுதி
படுத்திக்கொண்டு,பாராளுமன்றத்துக்கு செல்லும்போது
அவர்களோடு ஒத்துழைப்பது போன்ற செயல்பாடுகளே
உதவியாக அமையும்.மேலும் நேபாளம் போன்ற மிகச்சிறிய
பிராந்தியமாக இந்தியா இல்லை என்பதையும் நாம் மறுக்க
முடியாது.நூறு கோடி பேர் கொண்ட சந்தையை இழக்க
நேரும் என்றால் அதை எந்த விலை கொடுத்தேனும் தடுக்க
ஏகாதிபத்தியங்கள் முயலவே செய்யும்,அணு ஆயுதத்தாக்குதல்
உட்பட எதையும் எதிர்பார்க்கலாம்.போராடும் களங்களை
சிறியதாக்குவதன் வழியாக மட்டுமே நாம் அந்த அபாயத்தை
தவிர்க்க முடியும்.அதே நேரம் ஆயுதங்கள் விற்பனைக்கான
களமாக தேசிய விடுதலைப்போர்க்களங்களை
பாவிப்பதன் மூலம் தங்களின் இலாபத்தை தக்க வைக்க
ஏகாதிபத்திய அரசுகள் முயலும் என்பதையும் மறுக்க
முடியாது.அதற்கான வாய்ப்பை மறுக்கும் விதத்திலேயே
தேசியவிடுதலைப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.



ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த
பிரதேசமாக இருந்த ஈழமும்,தமிழகத்தின் நிலைக்கு கொண்டு
வரப்பட்டுவிட்டது.ஏகாதிபத்தியங்கள் தங்கள் சூறையாடலை
ஈழ மண்ணில் நிகழ்த்த துவங்கி இருக்கின்றன.வளர்சித்
திட்டங்கள் என்கிற பெயரில் வாழ்வாதாரங்களை அழிப்பது,
சுற்றுச்சூழலை சீரழிப்பது என்கிற ஏகாதிபத்தியங்களின் எல்லா
நடவடிக்கைகளும் ஈழ மண்ணில் நடைபெறத் துவங்கி உள்ளன.
எந்த விட்டுக்கொடுப்புகளுமற்ற ஆயுதப்போராட்டத்தை நடத்திக்
கொண்டிருந்த விடுதலைப்புலிகளும் அகற்றப்பட்ட நிலையில்,
எந்த தடைகளும் இல்லாம் ஈழம் சூறையாடப்படும் நிலையே
இருக்கிறது.பொருளாதார ரீதியான சுரண்டலோடு,கலாச்சார
ஏகாதிபத்தியத்தின் கீழ் மக்களின் போராடும் உணர்வை
மழுங்கடிக்கும் நடைமுறைகள் எற்கனவே,புலிகள்
கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்த பிரதேசங்களில்
ஆரம்பிக்கபட்டிருந்தன.அது இனி தமிழீழத்தின் சகல
பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.போராடும் தேசிய இனங்கள்
தங்களுக்கான வழிமுறையாக ஏற்க வேண்டிய பொதுவான
அம்சங்களை பரிசீலிக்க முயலலாம்.



வெகுசன வன்முறையோடு இணைக்கப்பட்ட இருபத்தியோராம்
நூற்றாண்டுக்கான கெரில்லா யுத்தமே,இனி வரும்
காலங்களில் தேசிய விடுதலைப்போர்களுக்கான வழிமுறை
என்றாக முடியும்.வேலை நிறுத்தங்கள்,குஜ்ஜார்கள்,
காஸ்மீரிகள்,பாலஸ்தீன மக்களின் இண்டிபதா பாணி
வெகுசன வன்முறையே முதன்மை வழியாக மாற வேண்டும்.
அதோடு ஏகாதிபத்திய நாடுகளின் நுகர்பொருட்களான
சந்தையை,அந்நிய பொருட்களின் புறக்கணிப்பின் வழியாக
நிகழ்த்துவது.நிலங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்காத
நிலையிலும்,அரசுக்குள்ளேயே அரசாக இயங்கி சிறிய
அளவிலான தற்சார்பு பொருளாதாரத்தை கட்டமைக்க
முயற்சிப்பது போன்றவைகள் பற்றி எல்லாம் நாம்
சிந்திக்கத் துவங்க வேண்டும்.



ஆயுதப்போராட்ட வடிவங்கள் பற்றி விரிவாக பேசுவது
தேவையற்ற ஒன்றாக இருந்தாலும்,ஆயுதப்
போராட்டங்களின் தேவை மறைந்து விட்டது என்று
கூற இயலாது.ஒன்றை மட்டும் உறுதியாகக்
கூறலாம்.தேசியஇன விடுதலைப்போராளிகளோ,
இடதுசாரிகளோ யாராக இருப்பினும்,மரபுவழி படை
கட்டுமானங்களை உருவாக்கி கொள்வதன் தேவை
மறைந்து விட்டது.நாம் அந்த வரலாற்றுக் கட்டத்தை
தாண்டியாகி விட்டது என்பதே நிதர்சனம்.ஆட்சியை
கைப்பற்றிய பிறகும்,தேசியவிடுதலையை அடைந்த
பிறகும் கூட மரபுவழி படைக்கட்டுமானங்களை
உருவாக்குவது அவசியமற்ற ஒன்றாகவே
தோன்றுகிறது.ஈராக்,ஆப்கானிஸ்தான் அனுபங்கள்
அதையே காட்டுகின்றன.



கெரில்லா போராட்டதின் மூலமாகவும்,வெகுசன வன்முறை
மூலமாகவும் தங்களை நிராகரிக்க இயலாத சக்தியாக,
வளர்த்துக்கொண்ட பின்,சில விட்டுக்கொடுப்புகளுடன்
தேசத்தை அடைவது.சரியாக சொல்வதென்றால் தேசப்
பொருளாதாரத்தின் 50 % சதவிகித்தை கைப்பற்றுவது.
50% சதவிகிதத்தை கைப்பற்றுவது என்பதை தங்கள்
மண்ணில் இருக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களில் 50%
வெளியேற்றுவது என்று அர்த்தமாகும்.50% சதவிகிதத்தை
80 %சதவிகிதமாக மாற்றுவது,பிறகு முழுக்க
கைப்பற்றிக்கொள்வதை நோக்கி நகர வேண்டும்.கைகளில்
ஆயுதங்கள் இல்லாமல்,ஆட்சியதிகாரமும் இல்லாமல்
வெகுசன வன்முறை மூலமும்,அரசியல் போராட்டங்கள்
மூலமும் நேபாள,பொருளாதாரததின் 50 %
மாவோயிஸ்டுகள் கட்டுப்படுத்திக்கொண்டு இருப்பதை
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.ஆட்சியதிகாரத்தை
அடைகையில் அதை 80 % சதவிகிதமாக மாற்றிக்
கொள்வது அவர்களுக்கு சிரமமாக இருக்கப்போவதில்லை.
ஆயுத ரீதியிலான தலையீடுகளை ஏகாதிபத்திய அரசுகள்
நிகழ்த்தினால்,மீண்டும் அதே பாணியில் வெகுசன
வன்முறையோடு இணைக்கப்பட்ட 21 ஆம்
நூற்றாண்டுக்கான கெரில்லா யுத்தம் என்கிற வகையில்
ஆக்கிரமிப்பு அரசுகளை எதிர்த்து போராட முடியும்.ஒரு
தேசிய அரசின் கீழ் தாங்கள் அடைந்த நன்மைகளை,
இழக்காமல் இருக்க மக்கள் உற்சாகமாக போராட
முன்வருவார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.



கியூபா,வெனிசுலா,போன்ற தென் அமெரிக்க அரசுகள் போன்று
சோசலிசம் சார்பான அரசுகளின் எண்ணிக்கைகளை அதிகரித்துக்
கொண்டே செல்வதன் மூலமே சர்வதேச அரங்கில் முற்போக்கு
அரசியலுக்கான தளத்தை நம்மால் உருவாக்க முடியும்.அணு
ஆயுதங்கள் கொண்ட ஒரு இடதுசாரி அரசு உருவாகும்வரை
இதுபோன்ற போராட்ட முறைகளே சாத்தியமாகும்.
முதலாளித்துவம் தனது முதுகில் தனக்கான சவப்பெட்டியை
சுமந்துகொண்டு திரிகிறது என்று இனியும் கூற முடியும்
என்று தோன்றவில்லை.அது மனித குலத்துக்கான சவப்
பெட்டியை சுமந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
ஆலைகளில் திட்டமிடப்பட்ட உற்பத்தியையும்,சமூகத்தில்
அராஜக உற்பத்தியையும் நிகழ்த்திக்கொண்டுப்பதாக
கூறுவோம் முதலாளித்துவத்தைப் பற்றி கூற வருகையில்.
இன்றைய சூழலில் பார்த்தால்,தனது அதிநவீன தொழிழ்
நுட்பங்கள் வழியாக உற்பத்தியை நிகழ்த்தும்
முதலாளித்துவம்.தனது உற்பத்தி பொருட்களுக்கான
நுகர்வோராக இருப்பதற்கும்,உபரி மதிப்பை உற்பத்தி செய்து
கொடுப்பதற்கும்,தேவையான அளவு மனிதர்களை மட்டுமே
பூமியில் வாழ விடுவது என்கிற வகையில்,மனித
சமூகத்தின் எண்ணிக்கையையே ஒழுங்குபடுத்திக்கொண்டு
இருக்கிறதோ என்று எண்ணவே தோன்றுகிறது.நிலவில்
தண்ணீரையும்,செவ்வாயில் வசிப்பிடத்தையும் தேடி
முதலாளித்துவம் சென்று கொண்டிருக்கையில்,இன்றைய
யதார்த்த சூழலுக்கு ஏற்ப தத்துவங்களை வளர்க்காமல்
பன்முகப்பட்ட போராட்டங்களை மேற்கொள்ளாமல்.தத்துவ
சர்ச்சைகள் செய்து கொண்டிருக்க இது காலமல்ல என்பதை
புரட்சிகர சக்திகள் இனியேனும் உணர்ந்தால் நலம்.



தொடர்புடைய பதிவுகள்
http://stalinguru.blogspot.com/2009/12/3.html
http://stalinguru.blogspot.com/2009/12/4.html
http://stalinguru.blogspot.com/2009/11/blog-post_11.html

முடிந்தது.

20 comments:

Anonymous said...

யதார்த்தமான பார்வைவையை கொண்டிருக்கிறது பதிவு.வாழ்த்துக்கள்

ஸ்டாலின் குரு said...

நன்றி அனானி நண்பா

Vel Tharma said...

ஒரு மிகச் சிறந்த ஆய்வு

ஸ்டாலின் குரு said...
This comment has been removed by the author.
ஸ்டாலின் குரு said...

நன்றி நண்பர் வேல் தர்மா

Anonymous said...

வெகுசன வன்முறையோடு இணைக்கப்பட்ட இருபத்தியோராம்
நூற்றாண்டுக்கான கெரில்லா யுத்தமே,

யானையின் காதுக்குள் எரும்பு போன்றா :)

blackpages said...

பொதுவாகவே ஈழ ஆதரவாளர்களிடையே சீனாவை இந்தியாவின்
அபாயமாக சித்தரிக்கும் போக்குதான் இருக்கிறது நீங்கள்
மட்டும்தான் மாறுபடுகிறீர்கள் விளக்க முடியுமா

ஸ்டாலின் குரு said...

கண்டிப்பாக விளக்குகிறேன் நண்பா

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஸ்டாலின் குரு said...

பொதுவாகவே ஈழ ஆதரவாளர்களிடையே சீனாவை இந்தியாவின்
அபாயமாக சித்தரிக்கும் போக்குதான் இருக்கிறது நீங்கள்
மட்டும்தான் மாறுபடுகிறீர்கள் விளக்க முடியுமா


http://stalinguru.blogspot.com/2010/02/blog-post_25.html


பின்னூட்டமாகத்தான் எழுத துவங்கினேன்
பிறகு பதிவாகவே எழுதி விட்டேன்.
இதைப் பாருங்கள் தோழர்.

K.R.அதியமான் said...

///ஆயுதப் போராட்டங்களின் தேவை மறைந்து விட்டது என்று கூற இயலாது.///

அப்படியா ? ஒரு முன்னாள் மார்க்சிய போராளியின் கூற்று இது :

A new beginning : The emerging democratic paradigm in Latin America

http://www.hindu.com/mag/2009/12/13/stories/2009121350130400.htm

How Mujica, the guerilla fighter, climbed out of his prison well to become the President of Uruguay… The emerging democratic paradigm in Latin America has a particular relevance to the struggle of Maoists..

..Mujica has promised continuity of the pragmatic policies of the coalition government of the last five years. He has said that he would govern like President Lula, who has become the role model for the Latin American Leftists. In one of his campaign speeches, Mujica vowed to distance the Left from “the stupid ideologies that come from the 1970s — I refer to things like unconditional love of everything that is State-run, scorn for businessmen and intrinsic hate of the United States.” He said, “I'll shout it if they want: Down with isms! Up with a Left that is capable of thinking outside the box! In other words, I am more than completely cured of simplifications, of dividing the world into good and evil, of thinking in black and white. I have repented!”

ஸ்டாலின் குரு said...

அந்தக் கட்டுரையை நானும் படித்திருக்கிறேன்
அதியமான்.இலத்தீன அமெரிக்கச் சூழல் வேறு.
இங்கே நிலைமை வேறு.அதே நேரம் அவர்கள்
தேர்தலின் வழியாக ஆட்சியதிகாரத்துக்கு
வந்ததை நான் தவறு என்றும் கூறவில்லை.
உங்களைப் போல சோதிடம் எனக்கு தெரியாவிட்டாலும்,
சமூகத்தை புறநிலை யதார்த்தத்தின் அடிப்படையில்
ஆய்வு செய்பவன் என்கிற முறையில் ஒன்றைச்
சொல்ல முடியும்.அதிகபட்சம் இன்னும் ஐந்திலிருந்து
ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே இலத்தீன் அமெரிக்க
இடதுசார சார்பு அரசுகள்,ஏகாதிபத்தியங்களுக்கு
எதிராக தாக்குப்பிடிக்க முடியும்.அதன் பிறகு ஆயுதரீதியான
தலையீடுகள நிகழ்த்தும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு
எதிராக ஆயுதமேந்தி போராடும் நிலை வரவே செய்யும்.

ஸ்டாலின் குரு said...

கருத்துக்களுக்காக யாரோ ஒருவரின் மூளையில்
உள்ள விசயங்களுக்காக மக்கள் போராடவில்லை
என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
பொருளியல் நன்மைகளுக்காகாகவும்
அமைதியாகவும் மேன்மையாகவும்
வாழ்வதற்காகவும்,தங்களின் வாழ்வியல்
முன்னேற்றத்துக்காகவும்,தங்களின்
குழந்தைகளின் அமைதியான எதிகாலத்தை
உத்திரவாதபடுத்தவுமே அவர்கள்
போராடுகிறார்கள் - அமில்கர் கப்ரால்

ஸ்டாலின் குரு said...

மேலே உள்ளது கினியா பிஸோ தேசிய
விடுதலைபோராட்டத்தைமுன்னெடுத்து
வெற்றி பெற்ற தோழன் அமில்கர் கப்ராலின்
மேற்கோள். சிலியில் சாலவடார்
ஆலண்டேயைக் கொன்று ஆட்சிக்
கவிழ்ப்பை நிகழ்த்தியப் போலவே,2001
இல்ஹுயூகோ சாவேசைக் கொன்று
ஆட்சிக்கவிழ்ப்புக்கு முயன்ற
அமெரிக்காவை,சாவேசின் ஏகாதிபத்திய
எதிர்ப்புடன் இணைந்த நலத்திட்டங்களால்
பலனடைந்த மக்களும்,சாவேஸ் ஆதரவு
ராணுவப் படைப்பிரிவுகளுமே எதிர்த்து
நின்று முறியடித்தார்கள் என்பதை நாம்
மறந்துவிட முடியாது.இன்றைய சூழலில்
இரண்டுகட்டப்போராட்டமாகவே
ஏகாதிபத்திய எதிர்ப்பை நிகழ்த்த வேண்டிய
தேவை இருப்பதால்,ஒரு இடைக்கட்டத்தில்
கிடைக்கிறவாய்ப்பை பயன்படுத்திய
ஆட்சியதிகாரத்தின் வழியாக மக்களுக்கு
சாத்தியமான நன்மைகளைச் செய்வதன்
மூலம்,அவர்களை அடுத்த கட்டப்
போராடத்துக்கு உறுதியாக அணிதிரட்ட
முடியும்.அந்த வாய்ப்பை இலத்தீன்
அமெரிக்கநாடுகளின் இடதுசாரிகள்
புறக்கணிப்பது சரியாக இருக்க
முடியாது என்பதால் அவர்களின்
பாதையை நான் ஏற்கிறேன்.

K.R.அதியமான் said...

////இன்னும் ஐந்திலிருந்து
ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே இலத்தீன் அமெரிக்க இடதுசார சார்பு அரசுகள்,ஏகாதிபத்தியங்களுக்கு
எதிராக தாக்குப்பிடிக்க முடியும்.அதன் பிறகு ஆயுதரீதியான தலையீடுகள நிகழ்த்தும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு
எதிராக ஆயுதமேந்தி போராடும் நிலை வரவே செய்யும். ////

இதைதான் ஜோதிட ஆருடம் என்று சொல்லாம். :))

முதலில் நான் அளித்த சுட்டியில் உள்ள பேட்டியின் மைய விசியத்தையே நீங்க புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. தென் அமெரிக்கா 30 ஆண்டுகளில் பெரும் மாற்றம். ஆயுத போராட்டம் பற்றி அன்று இருந்த வேகம் இன்று அனேகமாக இல்லை. தேவையும் இல்லை. பெரு நாட்டிலும் பெரும் மாற்றம். ’இடதுசாரி’ அரசுகளும் யாரும் இதுவரை சந்தை பொருளாதார கொள்கைகளை ரிவேர்ஸ் செய்ய முயலவில்லை என்பதுதான் முக்கிய விசியம். ஏன் என்று சொல்லுங்களேன் ? வரலாற்று பாடம் கற்றவர்கள் அவர்கள். நாமும்தான். உலகில் எங்கும் 80களுக்கு முன் முயலபட்ட இடதுசாரி கொள்கைகளை மீண்டும் கடுமையாக கொண்டுவர முயற்சி கூட செய்யவில்லை.

சாவேஸை கவிழ்க்க நடந்த சதிகள் வேறு விசியம். ஆனால் சாவேஸ் காஸ்ட்ரோவோ, சேவோ கிடையாது. அவர் ஒரு இடதுசாரி அரசியல்வாதி.
வெனிஸுலாவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துக்களை இதுவரை தேசியமயமாக்க முயலவில்லை. பொருளாதார கொள்கைகளில் பெரிய மாற்றம் இல்லை. எண்ணை ஏற்றுமதி மூலம் கிடைக்கும் பெரும் ராயல்ட்டியில், பல மக்கள் நலதிட்டங்களையும், உதவிகளையும்
செய்கிறார். (பாரட்டப்பட வேண்டிய விசியம் தான்). ஆனால் ஊழலும் இதில் உருவாகும் என்பதே அடிப்படை விதி. பல ‘தோழர்கள்’ BMW சொகுசு கார்களில் பவணி வருகிறார்கள். நல்ல ‘சம்பாத்தியம்’ ; செம்புரட்சிக்கான பாதை கண்டிப்பாக இது அல்ல.

அதனால் உங்கள் ஆருடம் பலிக்காது. 7 வருடம் கழித்து பார்போம். எங்க போயரபோறோம்.

ஸ்டாலின் குரு said...

இதைதான் ஜோதிட ஆருடம் என்று சொல்லாம். :))//



உங்களோடு விவாதிப்பதால் அப்படி ஆகி இருக்கலாம் :)

ஸ்டாலின் குரு said...

முதலில் நான் அளித்த சுட்டியில் உள்ள பேட்டியின் மைய விசியத்தையே நீங்க புரிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது. தென் அமெரிக்கா 30 ஆண்டுகளில் பெரும் மாற்றம். ஆயுத போராட்டம் பற்றி அன்று இருந்த வேகம் இன்று அனேகமாக இல்லை. தேவையும் இல்லை. பெரு நாட்டிலும் பெரும் மாற்றம். ’இடதுசாரி’ அரசுகளும் யாரும் இதுவரை சந்தை பொருளாதார கொள்கைகளை ரிவேர்ஸ் செய்ய முயலவில்லை என்பதுதான் முக்கிய விசியம். ஏன் என்று சொல்லுங்களேன் ? வரலாற்று பாடம் கற்றவர்கள் அவர்கள். நாமும்தான். உலகில் எங்கும் 80களுக்கு முன் முயலபட்ட இடதுசாரி கொள்கைகளை மீண்டும் கடுமையாக கொண்டுவர முயற்சி கூட செய்யவில்லை///


ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக அமெரிக்காவின்
சுரண்டலால் பாதிக்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க
நாடுகளின் மக்கள்,உலகமயமால என்கிற
பெயரால் வாழ்வே வழியற்ற நிலையை நோக்கி
தாங்கள் தள்ளப்படுவதைத் தடுக்கவே இடதுசாரி
சார்பானவர்களை ஆட்சியதிகாரத்தில்
அமர்த்தினார்கள் என்பதுதா உண்மை.

ஸ்டாலின் குரு said...

சாவேஸை கவிழ்க்க நடந்த சதிகள் வேறு விசியம்.
ஆனால் சாவேஸ் காஸ்ட்ரோவோ,
சேவோ கிடையாது. அவர் ஒரு இடதுசாரி
அரசியல்வாதி.வெனிஸுலாவில் இருக்கும்
பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துக்களை
இதுவரை தேசியமயமாக்க முயலவில்லை.
பொருளாதார கொள்கைகளில் பெரிய
மாற்றம் இல்லை.//


தெரிந்தே பொய் சொல்கிறவர்களிடம் பேசி என்ன பயன்?
எண்ணெய்,சுரங்கம்,மேலும் பெரும்பாலான துறைகளை
வெனிசுலா அரசுடைமையாக்கி நீண்ட நாட்களாகிவிட்டது.
தங்களின் நிறுவனங்களை சாவேஸ் வெளியேற்றுவதைத்
தடுக்கவே அமெரிக்கா அவரை ஆட்சியில் இருந்து
அகற்ற முயற்சித்தது என்கிற உண்மையை பச்சையாக
மறைக்கிறீர்கள் அப்புறம் உங்களிடம் எப்படி விவாதிப்பது?
அந்நிய முதலீடுகள் வெனிசுலாவில் இருந்தாலும்,வெனிசுலா
அரசு விதிக்கிற நிபந்தனைகளையும்,கட்டுப்பாடுகளையும்
ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்பட முடியும் என்பதே
அங்கு யதார்த்தமாக இருக்கிறது.


சமீபத்திய உதாரணம் மலைபகுதிகளில் பயணத்துக்கு
உதவும் விதமாக பதினாறு பேர் அமரும் விதத்தில்
வாகனங்களை உற்பத்தி செய்ய டொயோட்டா
நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டது வெனிசுலா அரசு.
தயாரித்து தர முடியாவிட்டால் வெளியேறுங்கள்
என்கிறது.பெரும்பாலான இலத்தீன் அமெரிக்க நாடுகளில்
இதுதான் நிலைமை.இறையானமையையும்,தேசிய
பொருளாதாரத்தையும் தங்களின் கட்டுப்பாட்டில்
வைத்துக்கொண்டு அந்நிய முதலீடுகளை சரியாக
கையாண்டு கொண்டு இருக்கின்றன இலத்தீன்
அமெரிக்க நாடுகள்.

ஸ்டாலின் குரு said...

எண்ணை ஏற்றுமதி மூலம் கிடைக்கும் பெரும்
ராயல்ட்டியில், பல மக்கள் நலதிட்டங்களையும்,
உதவிகளையும்செய்கிறார். (பாரட்டப்பட
வேண்டிய விசியம் தான்)./// ஆம்


ஆனால் ஊழலும் இதில் உருவாகும் என்பதே அடிப்படை
விதி. பல ‘தோழர்கள்’ BMW சொகுசு கார்களில் பவணி
வருகிறார்கள். நல்ல ‘சம்பாத்தியம்’ ;
செம்புரட்சிக்கான பாதை கண்டிப்பாக இது அல்ல.//

அதைத்தான் நானும் சொல்கிறேன்.மீண்டும்
போராட்டங்கள் நிகழுமென்று.

அதனால் உங்கள் ஆருடம் பலிக்காது. 7
வருடம் கழித்து பார்போம். எங்க
போயரபோறோம்.//

கண்டிப்பாக பார்க்கலாம்.

Anonymous said...

wr is athiyaman ?

Post a Comment