Thursday, February 25, 2010

மீண்டும் பனிப்போருக்குள் உலகம்

இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே சர்வதேச சூழலில்
ராணுவ மேலாதிக்கம் கொண்ட நாடுதான் அரசியல்,
பொருளாதாரரீதியான மேலாதிக்கத்திலும் ஆதிக்கம்
செலுத்த முடியும் என்பது நாம் அறிந்ததுதான்.அந்த
வகையில் இன்றைய நிலையில் ராணுவ பலத்தில் ரசியா
முதலிடத்தில் இருக்கிறது.அமெரிக்காவும்,சீனாவும் சம
வலிமை கொண்ட நாடுகளாக இருக்கின்றன.
இவைகளோடு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்
தகுதி கூட அற்றதாகத்தான் இந்தியா இருக்கிறது.
எதிரி நாடுகளின் அணு ஆயுத ஏவுகணைகளை
வானிலேயே தடுத்து அழிக்கும் தொழில்நுட்பம்
கொண்ட நாடுகளாகவும்,அணுஆயுதங்களின்
தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு பெற்ற
நாடுகளாகவும்,ரசியா,சீனா,அமெரிக்கா
ஆகிய மூன்று நாடுகளே இருந்த நிலை மாறி
வானில் தங்கள் ஏவுகனைகளை தடுக்கும்
எதிரி நாட்டு ஏவுகணைகளிடம் சிக்காமல்
சென்று தாக்கும் டோபோல் ஆர் எஸ் எம் 12
என்கிற ஏவுகணையை ரசியா வெற்றிகரமாக
சோதித்து,தன் ராணுவத்தில் சேர்த்து மூன்று
ஆண்டுகளாகிவிட்டது.அதன் மூலம்
முதலிடத்துக்கு முன்னேறிவிட்டது ரசியா.அமெரிக்காவிடமும்,சீனாவிடமும் அதுபோன்ற
தொழில்நுட்பம் இல்லாத நிலையிலும் ராணுவ
வலுவில் சமநிலையில் உள்ளன.சீனாவின்
எந்தப் பகுதியையும் தாக்கும் நிலையில்,
அமெரிக்காவும்,அமெரிக்காவின் எந்தப்
பகுதியையும் தாக்கும் நிலையில் சீனாவும்
உள்ளன.மேலும் விண்ணுக்குசெயற்கைக்
கோளை அனுப்பி பூமியில் இருந்து தாக்கி
அதனை அழிக்கும் சோதனையையும் சீனா
வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.
முக்கி,முக்கி இப்போதுதான் இந்தியா 3500கிலோ
மீட்டர்கள் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை
சோதித்து வெற்றி கண்டிருக்கிறது.இந்தியாவின்
எந்த மூலையையும் தாக்கக்கூடிய சீன அரசின்
ஏவுகணைகளின் முன் பாதுகாப்பு எதுமில்லாமல்
இந்தியா நின்று கொண்டிருக்கிறது.அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலுடனும் இந்திய அதிகாரவர்க்கம்
ஏவுகணைகள் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு
ஒப்பந்தம் செய்திருக்கிறது என்பது உண்மைதான்
என்றாலும்,அந்த நாடுகள் இந்தியாவின் சார்பில்
தலையிடுவார்கள் என்று கருத முடியாது.
காலை வாரிவிடுவத்ற்கான வாய்ப்புகளே அதிகம்.
சீண்டிப்பார்த்தால் மென்னியைத் திருகி விடும்
சீனா என்பது இந்திய அதிகாரவர்க்கத்துக்கே
நன்கு தெரிந்த ஒன்றுதான்.மேலும் இன்னொரு தகவலையும் பார்க்க வேண்டி
இருக்கிறது.இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு
முன்பாக,அமெரிக்காவின் விமானப்படையில்
இருந்து கழட்டிவிடப்பட்ட மூன்றாம் தலைமுறை
போர் விமானமான F 16 ரக விமானங்களை
கொள்முதல் செய்வதில் நாய்ச்சண்டையில்
ஈடுபட்டிருந்த இந்திய,பாகிஸ்தான் அரசுகள்.
சென்ற வருட இறுதியில் ஐந்தாம் தலைமுறை
அமெரிக்கப் போர்விமானங்களுக்கு இணையான
J 10 ரக போர்விமானங்களை சீன அரசு
பாகிஸ்தானுக்கு விற்றபின்,தன் விமானப்படை
பலத்தை இழந்த இந்திய அரசு அவசரமாக
ரசியாவிடம் மிக் 29 ரக விமானங்களை
கொள்முதல் செய்தபின்பே ஆசுவாச மூச்சு விட
முடிந்தது.நேரடி களங்களாக இல்லாமல்
அமெரிக்காவை,ஈரான் வாயிலாகவும்,
வடகொரியா வாயிலாகவும் கையாளுவது
போல இந்தியாவை,பாகிஸ்தான் வாயிலாக
கையாளுவதே சீனாவுக்கு போதுமானதாக
இருக்கும்.
மொத்தத்தில் சீனாவுக்கு எதிரியாக இருக்கும் தகுதி
இந்தியாவுக்கு இல்லை என்பதுதான் புரிந்துகொள்ள
வேண்டிய உண்மை.அதோடு இந்தியமுதலாளிகள்
தரகு முதலாளிகள்.அடிக்கிற கொள்ளையில்
உனக்கு 60 % எனக்கு 40 % என்பதுதான்
எப்பொழுதும் இவர்களின் குணமாக இருந்து
வந்திருக்கிறது.அந்த வகையில்தான்
இலங்கையை,ஈழத்தை சீன,இந்திய ஆளும்
வர்க்கங்கள் பங்கிட்டுக்கொண்டு கொள்ளை
அடித்துக்கொண்டு இருக்கின்றன.ஏற்கனவே
சொன்னது போல ரசிய சீன சார்புடனும்,
ஓரளவு தற்சார்பு நிலையிலுமே இந்திய
அதிகாரவர்க்கம் இயங்குகிறது என்பதுதான்
தற்போதைய நிலை.ஏறக்குறைய இரண்டாம் கட்ட பனிப்போருக்கு உலகம்
முகம் கொடுக்கத்துவங்கி விட்டது.சம பலமற்ற
நிலையிலும்,எதிரியை புறக்கணித்துவிட்டு தனது
ஆதிக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் பாணியில்,
போலந்தில் அணுஆயுத ஏவுகணைகளை நிறுத்தி
ரசியாவை,முற்றுகையில் வைக்கும் திட்டத்தை
மீண்டும் தொடரப்போவதாக அமெரிக்கா
அறிவித்திருக்கிறது.ஈரான் மீதான அமெரிக்க,
இஸ்ரேலிய விமானப்படைகளின் தாக்குதலை
செல்லாக்காசாக்கிவிடும் திறன் கொண்ட S 300
என்கிற அதிநவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை,
ஈரானுக்கு விற்பனை செய்யப்போவதாக அறிவித்து
பதிலடி கொடுத்திருக்கிறது ரசியா.மேலும் மேலும்
நெருக்கடியான காலகட்டங்களுக்கு முகம்
கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டு
இருக்கிறோம் நாம்.


தொடர்புடைய பதிவுகள்

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_1271.html
http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_17.html
http://stalinguru.blogspot.com/2009/11/blog-post_11.html
http://stalinguru.blogspot.com/2010/02/1_16.html
http://stalinguru.blogspot.com/2010/02/2.html

15 comments:

Rathi said...

குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடி வீர விளையாட்டு காட்டும், வர்ணிக்கும் பதிவுகளை படித்தும், பின்னூட்டமிட்டும் உண்மையிலேயே நொந்து போனேன். அலுப்போடு உங்கள் தளத்தில் ஒதுங்கினேன். உற்சாகமாக இருக்கிறது. உலகை சூழ்ந்துள்ள பனிப்போர் படலம் பற்றி சுருக்கமாக விளக்கியிருக்கிறீர்கள். ஆனால், இந்த புதிய பனிப்போரில் ஈழத்தின் விடியல் என்ன பாடுபடப்போகிறதோ தெரியவில்லை.

//இவைகளோடு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் தகுதி கூட அற்றதாகத்தான் இந்தியா இருக்கிறது.// இந்தியா விரைவில் வல்லரசாக மாறிவிடும் என்றெல்லாம் சொல்கிறார்கள். நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்?

blackpages said...

அருமையான அலசல்

ஸ்டாலின் குரு said...

உங்களின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொள்கிறது
நன்றி ரதி.

ஸ்டாலின் குரு said...

ஈழம் மட்டுமல்ல உலகத்தின் ஒடுக்கப்படும்,சுரண்டப்படும்
மனித குலமே என்ன பாபடும் என்று தெரியவில்லை.

http://stalinguru.blogspot.com/2010/02/1_16.html

http://stalinguru.blogspot.com/2010/02/2.html


இந்த தலைப்புகளில் ஓரளவு ஒடுக்கப்படும் மக்களின்
இருத்தலுக்கான போராட்டங்களின் வடிவம் பற்றி
விவாதிக்க முயற்சித்திருக்கிறேன்.

ஸ்டாலின் குரு said...

இவைகளோடு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்
தகுதி கூட அற்றதாகத்தான் இந்தியா இருக்கிறது.
// இந்தியா விரைவில் வல்லரசாக மாறிவிடும்
என்றெல்லாம் சொல்கிறார்கள்.நீங்கள் இப்படி
சொல்கிறீர்கள்?///

ராணுவ ரீதியான பலவீனத்தைத்தான் சொல்லி
இருக்கிறேன்.உலகில் ஆதிக்கம் செலுத்தும்
நாடுகளின் பக்கம் சேர்ந்து 60/ க்கு 40
என்கிற விதத்தில் கொள்ளையடிப்பதை
வைத்து தெற்கு ஆசிய பிராந்தியத்தில்
பொருளாதாரரீதியாக கொஞ்சம்
வலிமையாகத்தான் இருக்கிறது.

இந்த நிலையிலும் கூட,ஒரு பத்து பன்னாட்டு
நிறுவனங்களின் சர்வதேச ஓராண்டு
வணிகம் இந்தியாவின் ஓராண்டு
GDP(மொத்த உற்பத்தி) ஐ
விட அதிகமாகவே இருக்கிறது.

ஸ்டாலின் குரு said...

இந்தியா விரைவில் வல்லரசாக மாறிவிடும் என்றெல்லாம் சொல்கிறார்கள்///
முஸ்லிம் அத்வானி அப்துல்கலாமின்
வல்லரசு கனவு,கனவாக மட்டுமே
இருக்கும் என்பதே என் கருத்து.

பித்தன் said...

பித்தன் நல்ல பதிவு தோழர் நன்றிகள்.

ஸ்டாலின் குரு said...

நன்றி பித்தன்

blackpages said...

சீனாவுக்கு மேலாதிக்க நோக்கம் இல்லை என்ற
இந்து என்.ராமின் கருத்தை வழிமொழிந்து
தங்கள் புதிய ஜனநாயகம் இதழில்
மக இக வினர் எழுதி இருந்ததைச் சுட்டிக்
காட்டினீர்கள்.


சீனாவால் இந்தியாவுக்கு அபாயம் என்று
சொல்லிக்கொண்டிருந்த ஈழ ஆதரவாளர்களை
கிண்டல் செய்து மக இக வினர் எழுதி
வந்திருக்கிறார்கள்.


கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்,சீனாவை
சார்ந்து தங்கள் இலாபவேட்டையை
அதிகரித்துக்கொள்வது என்கிற நிலையில்
இருந்த இந்திய முதலாளிகளின்
நோக்கத்துக்கு இடையூறு
செய்யும் விதமாக ஈழ ஆதரவாளர்கள்
முன்னெடுக்கும் சீன அபாயம் பற்றிய
பரப்புரை அமைந்துவிடும் என்பதாலேயே
இவர்கள் ஈழ ஆதரவாளர்களை கிண்டல்
செய்து எழுதினார்கள் என்று கருதலாம்
இல்லையா?

blackpages said...

மேலும்,இவர்களின் அமெரிக்க எதிர்ப்புக் கருத்துப்பரப்பல்
ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடிப்படையில் அமைந்ததா?
இல்லை ரசிய,சீன முகாமைச் சார்ந்து செயல்படும்
இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கையை
நியாயப்படுத்த உதவியாக பரப்புரை முன்னெடுக்கபடுகிறதா?

blackpages said...

ஈழம் தொடர்பான இவர்களின் கருத்துக்களோடு
முழுக்க ஒத்துப்போகும் அ.மார்க்ஸ் சமீப
காலங்களில் ஏன் சீனாவை எல்லோரும்
திட்டுறீர்கள் என்று கேட்பதும்,சீனாவுக்கு ஆதரவாக
குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பதும்
எதைக் காட்டுகிறது?

ஸ்டாலின் குரு said...

பதில்களுக்காக கேள்விகள் எழுப்புவது வேறு.
பதில்களைத்த் தெரிந்துகொண்டே கேள்வி
எழுப்புவது வேறு.உங்களின் கேள்விகள்
ஊடாகவே நீங்கள் பதிலையும்
தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று
உணர முடுகிறது. :)

Anonymous said...

ஒன்னும் புரியலை :)

siva said...

உண்மையில் சர்வதேச அரசியல் அரங்கில் எந்த
நாடு ஆதிக்கம் செலுத்தும் என்பதைக் கணித்து
காய நகர்த்துவதில் சிங்கள பேரினவாதிகள்
தெளிவாகவே இருக்கின்றனர்.அதிபர்
பதவியேற்ற இரண்டே வாரத்தில் ரசியாவுக்குச்
சென்று உறவுகளை மேம்படுத்தும் பல
ஒப்பந்தங்களைச் செய்துகொணடதோடு
மட்டுமல்லாமல்,இலஙகை ராணுவத்துக்கான ஆயுதங்களை ரசியாவில் இருந்து கொள்முதல்
செய்வதற்கான செயல்பாடுகளையும் மேற்கொண்டு
திரும்பிவிட்டார் மகிந்த.

ஸ்டாலின் குரு said...

உண்மைதான் சிவா.

ஆனால் அவர்களின் ராஜதந்திரங்கள் எல்லாம்
தமிழர்கள் மீதான இனப்படுகொலையைத்
தீவிரப்படுத்தவும்,தமிழர்களின் உரிமைப்
போராட்டத்தை ஒடுக்கவுமே பயன்பட்டு
வருகின்றன.பச்சை சுயநலத்தின்
அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமான
ஒடுக்குமுறையை தமிழர்கள் மீதும்,ஏன்
சிங்கள் மக்கள் மீதும் கூட நிகழ்த்தும்
மனிததன்மையற்ற பிறவிகள்தானே
மகிந்தவும் அவரின் கூட்டமும்.
வரலாறு அவர்களின் முகங்களில்
காறி உமிழவே செய்யும்.

Post a Comment