Wednesday, November 11, 2009

அணு ஆயுத உலகில் புரட்சிகர போராட்டங்கள்
மீண்டும் மீண்டும் புலிகளுக்கு எதிரான அரசியல் விமர்சனங்கள்
என்கிற பெயரில் அரசியல் உள்ளடக்கமற்ற,ஆய்வுக்
கண்ணோட்டம் அற்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுக்
கொண்டே இருக்கின்றன. உலகின் தலை சிறந்த
புரட்சியாளர்களான ம.க.இ.க வினர்அந்த வகையில் தோழர்
சிவசேகரத்தின் நேர்காணலை கடந்த இரு மாதங்களாக
புதிய ஜனநாயகம் இதழில் வெளியிட்டிருந்தனர்.
இவர்களுக்கு பதில் அளித்துக்கொண்டே இருப்பது நமது
சக்தியை வீணடிக்கும் செயல் என்றாலும் வேறு
வழியில்லாமல் எதிர்வினைகள்
ஆற்ற வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.அந்த நேர்காணலை மிக விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய
அவசியம் நமக்கு இல்லை.ஒரு அடிப்படைத் தவறை மட்டுமே
சுட்டிக்காட்டி நிறுத்திக் கொள்ளலாம்.நேர்காணலின் இறுதியில்
புலிகளின் பொருளாதார அமைப்பை பற்றி கூற வருகையில்,
இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துக்கு பிறகு ஒரு வகையான
சுயாதீன பொருளாதாரத்தை புலிகள் கட்டமைத்ததாகவும் 2002
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பிறகு அதைக் கைவிட்டுவிட்டு
நுகர்வு பொருளாதாரத்துக்கு மாறிக்கொண்டதாகவும் கூறிவிட்டு
யாழ்ப்பாணத்தில் கொக்கோ கோலா நிறுவனங்கள் செயல்பட
அணுமதி கொடுத்ததாக சொல்கிறார்.1995 ஆம் ஆண்டிலிருந்தே சிங்கள ராணுவத்தின் முழுக்
கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் 2002 ஆம்
ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி புலிகள்
கொக்கோ கோலா நிறுவனத்தை செயல்பட அனுமதித்தார்கள்
என்று கூறுவதை கேட்கையில் எதைக் கொண்டு சிரிப்பது
என்று தெரியவில்லை.உலகத்துக்கே தெரியாத புலிகளின்
யாழ்ப்பாண மீட்பை தெரிந்த ஒற்றை மனிதராக சிவசேகரம்
இருப்பதை இந்த நூற்றாண்டின் அதிசயமாக கருதுவதில்
தவறுகள் இருப்பதாக தெரியவில்லை.அடுத்ததாக ஏகாதிபத்தியங்களை விமர்சிக்காமல் தவிர்ப்பது,
ஏகாதிபத்தியங்களை பகைப்பது நல்லதல்ல என்ற
கண்ணோட்டமே புலிகளிடம் நிலவியதாக கூறும் அவரது
கூற்றும் யதார்த்த உலகம் பற்றிய எந்த புரிதலும் அவரிடம்
இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.ஒப்புக்கொள்கிற
நேர்மையும் துணிச்சலும் இருந்தால் 1949 ஆம் ஆண்டில்
சோவியத் யூனியன் நடத்திய வெற்றிகரமான அணு ஆயுத
சோதனைதான் சீன புரட்சியை பாதுகாக்கும் காரணியாக
விளங்கியது என்பதை உணரலாம்.சோவியத் அணு
ஆயுதங்கள் என்கிற பாதுகாப்பு இருந்திருக்காவிட்டால்
சீன புரட்சியை அன்றைக்கே புதைகுழிக்கு அனுப்பியிருக்கும்
அமெரிக்கா என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.ஏகாதிபத்தியங்களின் குவிமையமாக,அவைகளுக்கிடையான
மோதலின் களமாக விளங்கிய இலங்கைத்தீவில் ஒரு
ஒடுக்கப்பட்டதேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை
முன்னெடுக்கும்அமைப்பு என்பது சாய்வு நாற்காலி மார்க்சியர்களின் ஏகாதிபத்தியஎதிர்ப்பு பஜனைகளை உருப்போடும் மடமாக இருக்க
இயலாது என்பதுதான் யதார்த்தம்.களத்தில் ராணுவ ரீதியாக ஏகாதிபத்தியங்களை எதிர்கொண்டு போராடுவது போதாது என்று
ஏகாதிபத்திய எதிர்ப்பு கோசங்களையும் புலிகள் முழங்கிக்
கொண்டிருந்திருக்க வேண்டும் என்று கோருவது எந்தவகை
புத்திசாலித்தனம் என்று தெரியவில்லை.உலகின் மூன்றில்
இரண்டு பகுதிகளில் செங்கொடி பறந்து கொண்டிருப்பதைப்
போலவும்,புரட்சிகர மக்கள் எழுச்சி உலகமெங்கிலும் நிகழ்ந்துகொண்டிருப்பதாகவும் கனவு கண்டு கொண்டு
இருப்பவர்களால் மட்டுமே இது போன்று பேசிக்
கொண்டிருக்க முடியும்.முப்பது இலட்சம் ஈழ மக்களையும்
உலக புரட்சியின் பெயரால் பலியாடுகளாக கோருவது மட்டுமே
இவர்களின் அரசியல் உள்ளடக்கமாக இருக்கிறது.மேலும் இலங்கைப் புரட்சி என்று பேசிக்கொண்டிருக்கும்
இவர்கள் ஒருகேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்.
தங்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி இலங்கை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட போவதாக அறிவித்திருக்கின்றன.கடந்த மூன்று
வருடங்களாக சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைப் போர்
சிங்கள பெரும்பான்மை உழைக்கும் மக்களை கசக்கி பிழிந்த
போதெல்லாம இது போன்ற அறிவுப்புகளோ போராட்ட
முன்னெடுப்புகளோ ஏன் நிகழவில்லை என்பதற்கான
உங்களின் பதில் என்ன?சிங்கள பேரினவாதத்தால் வெறியேற்றப்பட்டிருந்த மக்களை
சரியான வழியில்திரட்டி,சிங்கள மக்களையும் தமிழர்களையும்
காக்க கையாலாகாதசிங்கள,தமிழ் இடதுசாரிகள்தான்
அன்றைக்கும் இன்றைக்கும் இலங்கை புரட்சி என்கிற
கற்பனையை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்
என்பதுதான் உறுதிபடுத்தப்படுகிறது.


புலிகளின் வீழ்ச்சி என்பது ஆயுத போராட்டங்கள் மூலம்
அரசு அதிகாரத்தை கைப்பற்றுவது.தேசிய விடுதலையை
அடைவது என்கிற மார்க்சிய கருத்தாக்கம்
காலாவதியாகிவிட்டது என்பதையும் உணர்த்துகிறது.
சமூக ஏகாதிபத்தியமாகமாறிய பிறகும் கூட மூன்றாம்
உலக நாடுகளில் நிகழ்ந்த மக்கள் போராட்டங்கள்
தேசிய விடுதலைக் கோரிக்கைகளுக்கு சோவியத்
கூட்டமைப்பு ஒரு விதத்தில்உதவிக்கொண்டிருந்தது
என்பதையும்,சோவியத் உடனான சித்தாந்த
போராட்டமே சீனா அணு ஆயுத பாதுகாப்பு பெற்ற நாடாக
தன்னை மாற்றிக்கொள்ள தூண்டியதுஎன்பதையும் நாம்
மறந்து விடலாகாது.என்பதுகளின் இறுதியில் சீனாவில்
மீளக் கொண்டுவரப்பட்ட முதலாளித்துவமும்,சோவியத்
யூனியனின் சிதைவும்,அமெரிக்க தலைமையிலான
ஒற்றைத் துருவ அரசாக உலக ஒழுங்கை மாற்றி
அமைத்தது வரலாறு.தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கவோ,
இடதுசாரிகள் ஆட்சிக்கு வருவதை ஆதரித்து நிற்கவோ
அணு ஆயுத வல்லமை கொண்ட ஒரு மூன்றாவது
மையம் இன்றைக்கு உலகத்தில் இல்லை என்பது ஒரு
யதார்த்த உண்மையாகும்.சீனா முழுக்க முதலாளித்துவ
பாதைக்கு திரும்பி உலக ஆதிக்கத்துக்கான போட்டியில்
அமெரிக்காவுடன் மோதிக் கொண்டிருக்கிறது.ரஸ்ய
முதலாளித்துவ அரசும் தனது பங்கைக் கோரி தனது
அசுரக் கரங்களை விரித்திருக்கிறது.தனது ராணுவ
மேலான்மை மூலம் உலக மேலாதிக்க சக்தியாக ரஸ்யா
மாறிக்கொண்டிருப்பதை ஒரு நிகழ்வின் மூலம் இங்கே
சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.இத்துணை காலமும் தனது விருப்பம் போல அரேபிய
நாடுகள் மீதுதாக்குதல் நிகழ்த்திகொண்டிருந்தது
இஸ்ரேலிய ஆளும் வர்க்கம்.காசாவில் ஆயிரம் பேரைக்
கொன்றுவிட்டோம்,ஐ.நா சபையில் யாரும் விசாரனை
கோரினால் அதை உனது வீட்டோ அதிகாரம் மூலம்
ரத்து செய் என்று அமெரிக்காவுக்கு சொல்லி
கொண்டிருந்தவர்கள்தான் அவர்கள்.ஆனால் இன்றைக்கு
என்ன நேர்ந்திருக்கிறது? ஈராணின் அணு உலைகளைத்
தேவைப்பட்டால் தாக்கும் தங்கள் திட்டங்களை,ரஸ்யாவின்
எஸ் - 300 என்கிற அதிநவீன விமான எதிர்ப்பு
ஏவுகணைகள் தவிடுபொடியாக்கி விடும் என்பதால் அதை
ஈராணுக்கு விற்பணை செய்ய வேண்டாம்
என்று முக்காடு போட்டுக்கொண்டு கிரெம்ளினின்
கதவுகளை தட்டிக்கொண்டிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர்.வழுவிழந்திருக்கும் அமெரிக்கா,எழுச்சிகொண்டிருக்கும்
ரஸ்யா,சீனா ஆகியவைகளுக்கிடையிலான முரண்பாடுகளே
இனி உலக ஒழுங்கைத் தீர்மாணிக்கும் விசயங்களாக
அமையப்போகின்றன.சரி,இனிமேல் உழைக்கும் வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக்
கைப்பற்றுவதோ,தேசிய விடுதலைப் போராட்டங்களில்
ஈடுபட விரும்பும் தேசிய இனங்கள் விடுதலை அடைவதோ
சாத்தியமில்லை என்று கைகளை கட்டிக்கொண்டு
உட்கார்ந்து விட வேண்டியதுதானா? நிச்சயமாக இல்லை
நேபாளம் வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.புரட்சி பற்றிய
பாரம்பரிய கண்ணோட்டங்களை கைவிட்டுவிட்டு சரியான
வழிமுறையைத் தேர்ந்தெடுத்திருக்கும் நேபாள
மாவோயிஸ்டுகளின் வழிமுறைகளே நமக்கு வழிகாட்டியாக
அமைய முடியும்.


இறுதி வெற்றிக்கான தருணத்தில் பின்வாங்கக் கோருகிற
டராட்ஸ்கியவாதத்தின் தன்மையாகவோ,
சீர்திருத்தவாதமாகவோ நேபாள மாவோயிஸ்டுகளின்
செயல்பாடுகளை புரிந்து கொள்வது இயங்கியல்
பார்வையை மறுப்பதாகும்.நேபாள மாவோயிஸ்டுகளை
சீர்திருத்தவாதிகள் என்று விமர்சிக்கும் இந்திய
மாவோயிஸ்டுகளின் விமர்சனத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.அத்தகைய விமர்சனம் புறநிலை
யதார்த்தம் பற்றிய பார்வைஇந்திய மாவோயிஸ்ட்டுகளுக்கு
இல்லை என்பதையே நமக்கு உணத்துகிறது.


1917 இல் லெனின் எதிர்கொண்ட,1940 களில் ஸ்டாலின்
எதிர்கொண்ட1980 களின் இறுதி வரை இடதுசாரிகளும்,
தேசிய விடுதலைப்போராட்ட குழுக்களும் எதிர்கொண்ட
முதலாளித்துவ இராணுவங்களை இன்று புரட்சிகர சக்திகள்
எதிர்கொண்டிருக்கவில்லை.ஆளில்லா உளவு விமானங்கள்
வானிலிருந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள்.
தினம் தினம்மேம்பாடுகள் அடைந்துகொண்டிருக்கும் அதி
நவீன ஆயுதங்களை வைத்திருக்கும்அரசுகளுக்கு எதிரான
கொரில்லா போராட்டமென்பது,அரசுகளை ஆட்சியில்
இருந்து அகற்றும் நிலை வரை முன்னேறுவது என்பதன்
சாத்தியங்கள் வெகு குறைவே.


துவக்கத்திலிருந்தே பாராளுமன்ற பாதையில் பயணித்து
இன்றைக்கு முதலாளித்து ஜனநாயகத்தை தாங்கிப்
பிடிக்கும் தூண்களாக,சரியானவார்த்தைகளில்
சொன்னால் அரசு சார்பற்ற நிறுவனங்களாக மாறிப்
போய்விட்ட சி.பி.எம். சி.பி.ஐ கட்சிகளை மட்டுமே
வைத்து இந்திய மாவோயிஸ்டுகள் நிரந்தர பாராளுமன்ற
புறக்கணிப்பு என்கிறமுடிவை எடுப்பதும்.ஆயுத
போராட்டத்தின் வழியே அரசை தூக்கி எறிந்து விட
முடியும் என்று கருதுவதும் பிழையாகவே அமையும்.


நேபாளத்தின் 80 சதவிகித நிலப்பரப்பில் தங்கள் அரசியல்
மேலான்மையைஉறுதிபடுத்திக்கொண்ட பிறகே நேபாள
மாவோயிஸ்டுகள் பாராளுமன்றநடவடிக்கைகளுக்கு
சென்றார்கள்.அத்தகைய நிலையை மேற்கொள்வதே
இந்திய மாவோயிஸ்டுகளும் இந்திய துணைக்கண்டத்தில்
புரட்சிகரஅரசியலை நிர்ணயிக்கும் பாத்திரத்தை
வகிக்க உதவும்.


இந்தியா போன்ற ஒரு பரந்து விருந்த நிலப்பரப்பில்
புரட்சி என்பதுஒற்றை பரிமாணத்தில் நிகழ்வது
சாத்தியமில்லை என்கிற புரிதல்இந்திய
மாவோயிஸ்டுகளுக்கு இருப்பதையே,மணிப்பூர்
நாகலாந்துபோன்ற வடகிழக்கு மாநிலங்களில்
செயல்படும் தேசிய விடுதலைக் குழுக்களோடு
அவர்கள் பேண விரும்பும் உறவு காட்டுகிறது.
தமிழகத்தில் எழுச்சி பெற்றிருக்கும் தேசிய இன
தன்னுனர்வும்,பரவலாக கவனத்தை பெற
துவங்கியிருக்கும் தமிழ்தேசிய கோரிகையையும்
கூட அவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள
வேண்டி இருக்கும்.சுருக்கமாக சொன்னால் சாத்தியமான வடிவங்களில்
ஆயுதப் போராட்டத்தைதொடர்ந்து தங்கள் தள
பிரதேசங்களை காத்துக் கொள்வது அல்லது நிழழ்
தளபிரதேசங்களாக மாற்றுவது.அரசியல் போராட்ட
வடிவங்களுக்கு முக்கியத்துவம்கொடுக்க ஆரம்பிப்பது,
முற்று முழுதான விடுதலை கோரும் தேசிய இன
போராட்ட குழுக்களோடு உறவுகளைப் பேணுவது.அந்த
குழுக்களால் அந்த தேசிய இனங்களில் முன்னெடுக்க்படும்
மக்கள் திரள் போராட்டங்கள் ஆதரித்து நிற்பது என்று
சாத்தியமான வழிகளில் எல்லாம் இந்திய பெரு நிலப்பரபில்
தங்கள் அரசியல் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வதே
இப்போதைய நிலையில் இந்திய மாவோயிஸ்டுகள்
முன் உள்ள கடைமையாகும்.ஏகாதிபத்தியங்களின் அணு ஆயுத மிரட்டல்களையோ
நேரடி ராணுவ நடவடிகைகளையோ தவிர்த்து இந்திய
புரட்சிகர அரசியலில் தங்கள்இடத்தை தக்க வைக்க,
பாராளுமன்றத்துக்குள் நுழைய நேர்கையில்
பெரும்பான்மை மக்களின் ஆதரவை தங்களுக்கு
இருக்குமாறு செய்யஇதுபோன்ற செயல்பாடுகளே
மாவோயிஸ்டுகளுக்கு உதவியாக அமையும்.அணு ஆயுதங்கள் கொண்ட,தேசிய இன விடுதலை
போராட்டங்களையும் இடதுசாரி புரட்சிகளையும்
ஆதரிக்க ஒரு நாடோ அல்லது நாடுகளின்
கூட்டமைப்போ உருவாகும்வரை,உலக புரட்சிகர
போராட்டத்தில் நேபாளத்தின் வழிமுறைகளே
பொருத்தமானதாகவும்,பெரும்பான்மை மக்களின்
ஆதரவுடன் பாராளுமன்றத்தை கைப்பற்றிய பிறகு
அமையும்சோசலிச சார்பான அரசுகள்
(லத்தீன் அமெரிக்க நாடுகள்)வடிவிலேயே
புரட்சிகள் நிகழ முடியும் என்பதையே அரசியல்
சூழல் உணர்துகிறது.

21 comments:

Anonymous said...

தம்மை புரட்சியாளர் என்று கருதி கொண்டிருக்கும் ம.க.இ.க.விக்கு நல்ல பதில் !!

முரளிதரன்

ரூபகாந்தன் said...

தோழரே நீங்கள் சொல்கிற ஓட்டு பொறிக்கி அரசியல் பார்வை ஒரு பக்கம் இருக்கட்டும்.விடுதலைப்புலிகளை நீங்கள் எப்படி கம்யுனிஸ்ட் புரட்சியாளர்களாக‌ பார்க்கிறீர்கள்.

ஸ்டாலின் குரு said...

கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கான உங்கள் வரையரையை தர இயலுமா தோழர் ?

ஸ்டாலின் குரு said...

என்னைப் பொறுத்தவரை ஈழ விடுதலைப் போராட்டம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு இடதுசாரிய உள்ளடக்கத்துடன்தான் நிகழும் என்பதிலும் அதை எந்த அமைப்பு முன்னெடுத்தாலும் மக்கள் நலனை
புறக்கனித்துவிட்டு இயங்க,ஈழத்தின்
புறநிலை சமூக சூழலே அனுமதிக்காது
என்பதிலும் தெளிவாக இருக்கிறேன்.
மற்றபடி புலிகளை முழுமையாக
கம்யூனிஸ்டுகள் என்று நிறுவ நான்
முயற்சிகவும் இல்லை,அதில் எனக்கு
உடன்பாடும் இல்லை.

அதே நேரத்தில் மரபான கட்சி மார்க்சியர்கள் கோரும் கம்யூனிஸ புரட்சியாளர்கள் என்ற வரையரைக்குள் உள்ளடக்க முடியாத அணைவரையும் நிராகரிப்பது
சாத்தியமல்ல என்பதும் என் கருத்து.

ரூபகாந்தன் said...

தோழரே என்னைப்பொறுத்தவரையில் கம்யுனிஸ்ட் புரட்சியாளன் என்பவன் மாக்சியக்கொள்கைப்படியும்,ஏற்கனவே தமது சமுக மாற்ற நிலையை கனவு என்கிற கற்பனைவாதத்துடன் நினைத்து,நடைமுறைச்சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் போராடுபவனே.அவனைத்தான் ஒரு கம்யுனிஸ்ட் ஆதரிப்பான். ஆனால் விடுதலைப்புலிகளிடம் அப்படி ஒன்றையுமே கண்டதில்லை.மதவாதம்,சாதி,முதலாளித்துவம்,அதிகாரவர்கம் இவற்றின் போராட்டம் கூட மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தெளிவான போராட்டத்தை முன்னெடுக்காதவர்கள் தான் விடுதலைப்புலிகள். இனப்படுகொலை கண்டிக்கப்படவேண்டியதுதான். ஆனால் தெளிவில்லாத ஒரு அமைப்பை எப்படி ஆதரிக்க‌ முடியும் தோழா.

ரூபகாந்தன் said...

தோழரே இனரிதியாக போராட்டத்தை நீங்கள் பார்க்கிறீர்களா? இனரிதியாக வெற்றிப்பெற்ற பல போராட்டங்கள்,முதலாளித்துவத்தை நோக்கிதான் சென்று இருக்கிறது. அங்கு முதல் எதிரியே கம்யுனிஸ்ட்தானே.

ஸ்டாலின் குரு said...

தோழரே என்னைப்பொறுத்தவரையில் கம்யுனிஸ்ட் புரட்சியாளன் என்பவன் மாக்சியக்கொள்கைப்படியும்,ஏற்கனவே தமது சமுக மாற்ற நிலையை கனவு என்கிற கற்பனைவாதத்துடன் நினைத்து,நடைமுறைச்சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் போராடுபவனே.அவனைத்தான் ஒரு கம்யுனிஸ்ட் ஆதரிப்பான். ஆனால் விடுதலைப்புலிகளிடம் அப்படி ஒன்றையுமே கண்டதில்லை//

எப்படி சொல்கிறீர்கள் ?

ஸ்டாலின் குரு said...

மதவாதம்,சாதி,முதலாளித்துவம்,அதிகாரவர்கம் இவற்றின் போராட்டம் கூட மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தெளிவான போராட்டத்தை முன்னெடுக்காதவர்கள் தான் விடுதலைப்புலிகள். இனப்படுகொலை கண்டிக்கப்படவேண்டியதுதான். ஆனால் தெளிவில்லாத ஒரு அமைப்பை எப்படி ஆதரிக்க‌ முடியும் தோழா.//

புலிகள் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு.நீங்கள் உங்கள் விமர்சனங்களையும் முன் வைத்தால் உரையாடலாம்

ஸ்டாலின் குரு said...

தோழரே இனரிதியாக போராட்டத்தை நீங்கள் பார்க்கிறீர்களா? இனரிதியாக வெற்றிப்பெற்ற பல போராட்டங்கள்,முதலாளித்துவத்தை நோக்கிதான் சென்று இருக்கிறது. அங்கு முதல் எதிரியே கம்யுனிஸ்ட்தானே.//

இன ரீதியாக நான் போராட்டத்தைப் பார்க்கவில்லை.
அடிப்படையில் இனபோராட்டத்திலும் வர்க்க
உள்ள்டக்கம் இருப்பதை மறுக்கிறீர்களா நீங்கள்

rubakanthan said...

தோழரே நீங்கள் முழுக்க முழுக்க விடுதலைப்புலி ஆதரவாளர் மாதிரி போலதான் உங்கள் பதிவுகள் இருக்கிறது. இதனால் உங்களுக்கு பாராட்டுக்கள் நிறையவே கிடைக்கும் என்று நினைக்கிறேன். அப்படி பாராட்டுபவர்கள் வேறு யாரும் அல்ல. இனத்தின் அடையாளத்தை தேடுபவர்கள்தான். இனரிதியான போராட்டம் வர்க்க போராட்டம் என்றால் சாதி என்பது என்ன தோழா? தனக்குள்ளே சாதி,மத‌ என்ற பிளவுக்கள் வைத்துக்கொண்டு எப்படி தோழா இனரியான போராட்டத்தை தொடங்கி வெற்றி பெற முடியும்.இப்பொழுது போர் முடிந்துவிட்டது.அவர்களுடைய காயத்துக்குத்தான் மருந்து தேவை.இப்பொழுது தூண்டுதல் தேவை இல்லை தோழா. இலங்கையில் வரும் காலத்தில் இனரிதியான போராட்டம்
தவிர்க்க முடியாதது என்றால் புலிகள் இந்த தோல்வியில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு தன்னுடைய தெளிவானப்போராட்டத்தை முன்னெடுக்கலாம். உங்களுடைய பதிவுகள் நன்றாக இருக்கிறது தோழா. அதை மற்றவர்களுக்கு ஆதரவாக கொடுத்துவிடாதிர்கள்.

Superlinks said...

தோழர் ரூபகாந்தன்,

புலி ரசிகர்களுக்கே ப்ரியவைக்க முடியவில்லை அப்படிப்பட்ட சூழலில் இவரைப்போன்ற புலி ரசிகர் மன்ற தலைவர்களை எல்லாம் நீங்கள் பேசி வெல்ல முடியுமா ? முடியவே முடியாது.

இதோ இந்த லிங்கை கொஞ்சம் படித்து பாருங்களேன்.

http://vrinternationalists.wordpress.com/2009/09/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/#comments

ஸ்டாலின் குரு said...

தோழரே நீங்கள் முழுக்க முழுக்க விடுதலைப்புலி ஆதரவாளர் மாதிரி போலதான் உங்கள் பதிவுகள் இருக்கிறது. இதனால் உங்களுக்கு பாராட்டுக்கள் நிறையவே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.//

மன்னிக்கவும் நண்பா பாராட்டுகளில் எனக்கு விருப்பம் இல்லை அக்கறையும் இல்லை.

அப்படி பாராட்டுபவர்கள் வேறு யாரும் அல்ல. இனத்தின் அடையாளத்தை தேடுபவர்கள்தான். இனரிதியான போராட்டம் வர்க்க போராட்டம் என்றால் சாதி என்பது என்ன தோழா? தனக்குள்ளே சாதி,மத‌ என்ற பிளவுக்கள் வைத்துக்கொண்டு எப்படி தோழா இனரியான போராட்டத்தை தொடங்கி வெற்றி பெற முடியும்.//

தேசிய தன்மை கொண்ட ஒரு போராட்டத்தில் தேசிய போராட்டம் என்னும் வடிவத்தை வர்க்கப் போராட்டம் பெறுகிறது - மாவோ

குறைந்தபட்ச அளவில் கூட மாவோவை கூட நீங்கள் படிக்கவில்லை எனறால் நான் என்ன செய்வது?


இனரிதியான போராட்டம் வர்க்க போராட்டம் என்றால் சாதி என்பது என்ன தோழா? தனக்குள்ளே சாதி,மத‌ என்ற பிளவுக்கள் வைத்துக்கொண்டு எப்படி தோழா இனரியான போராட்டத்தை தொடங்கி வெற்றி பெற முடியும்.// பெரியாரின் சாதி ஒழிப்பு போராட்டங்கள் மீதும் செயல்பாடுகள் மீதும் நீங்கள் மாறுபட்ட
கருத்துக்களை கொண்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் அவர் வந்து சேர்ந்த இடமும் தேசிய கோரிக்கையாகதான் இறுதியில் இருந்தது.

ஸ்டாலின் குரு said...

இப்பொழுது போர் முடிந்துவிட்டது.அவர்களுடைய காயத்துக்குத்தான் மருந்து தேவை.இப்பொழுது தூண்டுதல் தேவை இல்லை தோழா. இலங்கையில் வரும் காலத்தில் இனரிதியான போராட்டம்
தவிர்க்க முடியாதது என்றால் புலிகள் இந்த தோல்வியில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு தன்னுடைய தெளிவானப்போராட்டத்தை முன்னெடுக்கலாம்.//


விடுதலைப்புலிகள் தவறுகளே இழைக்காதவர்கள் என்றோ அவர்கள் மீது எனக்கு விமர்சனங்கள் இல்லை என்றோ நான் எங்கும்.குறிப்பிடவில்லை
எனது பழைய பதிவுகளில் புலிகள் மீதான் விமர்சனங்கள் உள்ளது.அது கொச்சைச்சதனமாக இருக்கது அவ்வளவுதான்.

ஆம் இந்த வீழச்சியிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டு போராட்டம் மீண்டெழும் ஈழ்ம் வெல்லும் என்கிற
நம்பிக்கையை உங்களோடு நானும் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேண்.

உங்களுடைய பதிவுகள் நன்றாக இருக்கிறது தோழா. அதை மற்றவர்களுக்கு ஆதரவாக கொடுத்துவிடாதிர்கள்.//

நன்றி எனது எழுத்தில் நான் விழிப்பாகவே இருக்கிறேண்

ஸ்டாலின் குரு said...

வாங்க சூப்பர் லிங்ஸ்

உனது வழியை,எழுத்தை,கருத்தை, உனது எதிரி மகிழ்சியோடு
ஆதரித்துப் பேசினால் தவறான வழியில் போய்க்கொண்டிருக்கிறாய்
என்று உணர்ந்துகொள்.மாறாக உனது வழி பற்றியும் எழுத்துக்கள்
கருத்துகள் பற்றியும் எதிரி கடுங்கோபத்துடன் விமர்சித்தால்
நீ சரியான வழியில் இருக்கிறாய் என்பதை புரிந்துகொண்டு
முன்னேறு - மாவோ

Rubakanthan said...

தேசிய தன்மை கொண்ட ஒரு போராட்டத்தில் தேசிய போராட்டம் என்னும் வடிவத்தை வர்க்கப் போராட்டம் பெறுகிறது - மாவோ

குறைந்தபட்ச அளவில் கூட மாவோவை கூட நீங்கள் படிக்கவில்லை எனறால் நான் என்ன செய்வது? ////


தோழா நிங்கள் மாவோவை படித்த அளவுக்கு நமது மக்களின் மனங்களை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். .சாதி என்ற ஒன்றுதான் அன்றில் இருந்து இன்று வரை வர்க்கப்போராட்டத்தை தடுத்துக்கொண்டு இருப்பதை நீங்கள் உணரவில்லையா. சாதியை ஒழிக்காமல் தேசியத்தை முன்னெடுத்தால் வெற்றிபெறமுடியுமா?முடியவே முடியாது தோழா.சாதி என்பது நமது எண்ணம், சிந்தனை, பண்பாடு, பழக்கவழக்கம்.சரி சாதியை விடுங்கள். புலிகள் என்றைக்கு ஒரே நிலையில் இருந்து இருக்கிறார்கள்.தன்னுடைய மக்களின் வலிமையை விட சதிகார நாட்டை நம்பியவர்கள்தான் புலிகள்.இந்த தோல்வியில் இருந்தாவது அந்த மக்கள் சாதி,மத,உணர்வில் இருந்து வெளியில் வரட்டும். அதிகாரத்தின் கோர முகத்தை புரிந்துக்கொள்ளட்டும். அன்றைக்கு பாட்டாளி மக்களை ஒன்றி திரட்டி போராட ஒரு அமைப்பு இல்லாமல் இருக்கலாம்.ஆனால் இன்று அந்த நிலை ஏற்பட சாத்தியமே இல்லை என்றே தோன்றுகிறது.

ஸ்டாலின் குரு said...

தோழா நிங்கள் மாவோவை படித்த அளவுக்கு நமது மக்களின் மனங்களை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். .சாதி என்ற ஒன்றுதான் அன்றில் இருந்து இன்று வரை வர்க்கப்போராட்டத்தை தடுத்துக்கொண்டு இருப்பதை நீங்கள் உணரவில்லையா. சாதியை ஒழிக்காமல் தேசியத்தை முன்னெடுத்தால் வெற்றிபெறமுடியுமா?முடியவே முடியாது தோழா.//

வர்க்க கண்ணோட்டத்துடன் முன்னெடுக்கப்படும் தேசிய போராட்டமும்
சாதி ஒழிப்பு போராட்டமும் ஒரே நேரத்தில்தான் நிகழ் முடியும்
இரண்டில் ஒன்றை முதலில் வைப்பது சாத்தியமல்ல

சாதி என்பது நமது எண்ணம், சிந்தனை, பண்பாடு, பழக்கவழக்கம்.சரி சாதியை விடுங்கள். புலிகள் என்றைக்கு ஒரே நிலையில் இருந்து இருக்கிறார்கள்.தன்னுடைய மக்களின் வலிமையை விட சதிகார நாட்டை நம்பியவர்கள்தான் புலிகள்.இந்த தோல்வியில் இருந்தாவது அந்த மக்கள் சாதி,மத,உணர்வில் இருந்து வெளியில் வரட்டும். அதிகாரத்தின் கோர முகத்தை புரிந்துக்கொள்ளட்டும். அன்றைக்கு பாட்டாளி மக்களை ஒன்றி திரட்டி போராட ஒரு அமைப்பு இல்லாமல் இருக்கலாம்.ஆனால் இன்று அந்த நிலை ஏற்பட சாத்தியமே இல்லை என்றே தோன்றுகிறது.
/// மன்னிகவும் தோழர் கொஞ்சம் புரிந்துகொள்கிற மாதிரி பேசுங்கள்

rubakanthan said...

வர்க்க கண்ணோட்டத்துடன் முன்னெடுக்கப்படும் தேசிய போராட்டமும்
சாதி ஒழிப்பு போராட்டமும் ஒரே நேரத்தில்தான் நிகழ் முடியும்
இரண்டில் ஒன்றை முதலில் வைப்பது சாத்தியமல்ல//

தோழரே சாதி விட்டு பாட்டாளி வர்க்கம் என்று வேண்டுமானாலும் ஒன்று சேர்வாங்களே தவிர இனரீதியாக ஒன்று சேர முடியாது தோழா.

ஸ்டாலின் குரு said...

தேசிய தன்மை கொண்ட ஒரு போராட்டத்தில் தேசிய போராட்டம் என்னும் வடிவத்தை வர்க்கப் போராட்டம் பெறுகிறது - மாவோ

பாட்டாளி வர்க்கம் தன்னையும் தேசத்தினுள் ஒரு பகுதியாக்கிகொள்ளாமல் தானும் தேசியத்தன்மை பெறாமல் (இச்சொல்லின் முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல)அது பலம் பெற முடியவில்லை உருவாக முடியவில்லை - லெனின்

rubakanthan said...

தோழ‌ரே நீங்க‌ள் மீண்டும் மீண்டும் மாவோவையும்,லெனினையும் இழுக்காதிர்க‌ள்.அவ‌ர்க‌ள் நாட்டில் சாதி என்ற‌ ஒன்று இருக்க‌வில்லை.மேலும் உங்க‌ள் கூற்றுப‌டியே பார்த்தாலும் த‌மிழ்நாடு இந்தியாவில் இருக்கும் வ‌ரை த‌னி ஈழ‌ம் என்ப‌து சாத்திய‌மே இல்லை.

ஸ்டாலின் குரு said...

தோழரே சாதி விட்டு பாட்டாளி வர்க்கம் என்று
வேண்டுமானாலும் ஒன்று சேர்வாங்களே தவிர
இனரீதியாக ஒன்று சேர முடியாது தோழா.//


இழப்பற்கு ஒன்றுமற்ற பாட்டாளி வர்க்கத்தை
சேர்ந்தவர்களிடமும் இழக்க இங்கே சாதி
பெருமிதம் இருக்கிறது என்பதை மறந்து
விடுகிறீர்கள்.

பாட்டாளி வர்க்க உணர்வு சாதி கடந்து இணைவதை
சாத்தியமாக்கும் எனறால் பாட்டாளி வர்க்கம்
தலைமை தாங்கும் தேசியப் போராட்டத்தில்
ஏன் சாதி கடந்து ஒரு தேசிய இனத்தை சேர்ந்த
மக்கள் இணைய முடியாது.

ஸ்டாலின் குரு said...

தோழ‌ரே நீங்க‌ள் மீண்டும் மீண்டும் மாவோவையும்,
லெனினையும் இழுக்காதிர்க‌ள்.அவ‌ர்க‌ள் நாட்டில்
சாதி என்ற‌ ஒன்று இருக்க‌வில்லை.//

நான் மறுக்கவில்லை அங்கே சாதிகள் இல்லை
என்பதை,மார்க்சியத்தை எல்லா பிரசணைகளுக்கும்
தீர்வுகளை எழுதி வைத்திருக்கும் வேத புத்தகமாக
நான் கருதவில்லை,ஆனால் மார்க்சிய வழிகாட்டலை
தவிர்த்துவிட்டு நாம் இயங்குவது சாத்தியமும் இல்லை


மேலும் உங்க‌ள் கூற்றுப‌டியே பார்த்தாலும் த‌மிழ்நாடு
இந்தியாவில் இருக்கும் வ‌ரை த‌னி ஈழ‌ம் என்ப‌து
சாத்திய‌மே இல்லை.//

இது என்ன புதுக் கதை?

மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் கொஞசம் புரிகிற
மாதிரி எழுதுங்கள்.

Post a Comment