Thursday, November 19, 2009

பாசிசம்.தமிழ்தேசியம்.திராவிடம்.

பதிவின் தலைப்பில் குறித்திருப்பதைப் போலவேதான்
இன்றைக்கு தமிழ்தேசியம் என்கிற கருத்தியல் மற்றும்
கோரிக்கை பாசிசத்துக்கும்,திராவிடத்துக்கும்
இடையில் சிக்கிக் கொண்ட நிலையில் இருக்கிறது.
சமகால அரசியல் புரிதல்களோ,தத்துவார்த்த
வழிகாட்டுதல்களோ இல்லாதவர்கள் பாசிச
உள்ளடகத்துடன் தமிழ் தேசியக் கோரிக்கையை
கையில் எடுத்து செயல்பட துவங்கி இருக்கிறார்கள்.
மற்றோர் புறம் பெரியாரின் திராவிட அரசியலை
உயர்த்திப் பிடிக்கும் தோழர்களின் செயல்பாடுகள்,
இந்திய தேசிய விமர்சனம்,பார்ப்பன,பனியா இந்திய
அதிகார வர்க்கத்தை அம்பலப்படுத்தும் விதமாக
இருந்தாலும் அதை தேசிய இன விடுதலைக்
கோரிக்கையுடன் இணைக்கத் தவறுவதால் சரியான
வழிகாட்டிகளாக அவர்களாலும் மாற இயலாத
நிலையே இருக்கிறது.இந்திய நிலப்பரப்பு முழுவதும் தாராளமய கொள்கைகள்
அமலாக்கப்பட்டதன் பின்னனியில் எழுந்த இந்துதுவ
பாசிசத்தின் கூறுகள் தமிழகத்தில் எழுந்த தேசிய இன
கோரிக்கையிலும் தனது அடையாளங்களை பதித்தை
நாம் கண்டு வந்திருக்கிறோம்.தங்களை மார்க்சிய
சார்பாளர்களாக சித்தரித்தகொண்டவர்களிடையேயும்
அந்தக் கூறுகள் காணப்பட்டதையும்,தமிழ்ச் சாதிகள்
என்றெல்லாம் பேச்சுகள் எழுந்ததையும்,நிலப்பிரபுதுவ
மன்னர் கால எச்சங்களை வீரம் என்று தூக்கிப்
பிடிக்கும் போக்குகளும் எழுந்து இன்றளவும் நீடித்து
கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.காலப் போக்கில்,சரியான பார்வையைக் கொண்ட மார்க்சிய
வழிமுறையை,போராட்டப் பாதையை முன் வைக்கும்
ஏதேனும் ஒரு தமிழ் தேசிய அமைப்பு மக்கள் மத்தியில்
பரவலாக தனது செல்வாக்கைச் செலுத்த துவங்கும்போது
இந்தப் போக்குகள் களையப்பட்டு விடும் என்ற நம்பிக்கை
இருந்தது.இனியும் இருக்கிறது.பெரியாரின் கொள்கைகளுக்கு வாரிசாக இருக்கிற பெரியார்
திராடவிட கழகத்தையும்,சீமானையும் மையப்படுத்தி
சில விசயங்களை நாம் பேச வேண்டி இருக்கிறது.
பெரியார் திராவிட கழகத்தாரிடம் நாம் எழுப்ப வேண்டிய
சில கேள்விகள் இருக்கின்றன.அவற்றில் அடிப்படையானது,
காலம் கடந்தாலும் பெரியார் தனது வாழ்வின் இறுதியில்
வந்து சேர்ந்த தமிழ் தேசிய இன விடுதலையின் ஊடாகவே
சாதிய ஒழிப்பை நிகழ்த்த முடியும் என்கிற பாதைக்கு
நீங்கள் வர இன்னும் எத்துனை ஆண்டுகள் எடுத்துக்கொள்ள
போகிறீர்கள்? தமிழ்நாடு தமிழருக்கே என்று தனது இறுதி
பேருரையில் பெரியார் பேசியதே வரலாறாக இருக்க
தமிழன், தமிழன்,என்று பேசுவது சரியல்ல என்று
பார்ப்பனர்களின் குரலாக பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு
சரியாக இருக்க முடியும்.பெரியாரின் மரணம் என்கிற வரலாற்று சோகம் தமிழ் சமூக
வாழ்வில் நிகழ்ந்திராவிட்டால்,தமிழக விடுதலைக்காக
அவர் கட்டமைத்திருக்க கூடிய போராட்டங்களை அவரது
வாரிசுகள் என்ற முறையில் நீங்கள் செய்யப் போவது
எப்போது? பெரியாருக்கு பிறகான திராவிடர் கழக
அரசியல் என்பதையே,திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கு
வால் பிடிப்பதாக மாற்றிவிட்ட வீரமணியிடம் இருந்து
முறித்துக் கொண்டு வந்த நீங்கள் இன்னும் அதே திராவிட
கட்சிகள் சார்பு அரசியலையே தொடரப் போகிறீர்களா?நம்மிடையே இருக்கும் சாதி மத வேறுபாடுகளை களைந்து
கொள்ள,தமிழர்கள் என்கிற அடையாளத்தை முன்நிறுத்த
கோரிய தோழன் முத்துக்குமார் வார்த்தைகள் உங்களுக்கும்
நினைவூட்ட வேண்டி வந்தது வருத்தம் அளிக்கிறது.
உண்மையில் பெரியார் வழியிலான போராட்ட முறை
தமிழ் தேசிய கோரிகையோடு இணக்கபட்டிருந்தால்
இன்றைக்கு தமிழ் தேசிய ஆற்றல்கள் மத்தியில் பரவ
துவங்கியிருக்கும் பாசிச சார்பான கருத்துகள் எழும்பியே
இருக்காது என்பதை உணர்கிறீர்களா?


சாதி ஒழிப்பையும்,சமூக நீதியையும்,தேசிய விடுதலைக்கு
முன் நிபன்தனையாக்கிய பெரியாரே,இந்திய தேசிய
கட்டமைப்பை புரிந்துகொண்டு தமிழ் தேச மீட்புப்
பாதைக்கு வந்து சேர்ந்துவிட்டபோதும்,சாதிய ஒழிப்பில்
தேசிய அடையாளம் வகிக்கும் முக்கியத்துவத்தை புரிந்து
கொண்ட பிறகும்,நீங்கள் ஏன் இன்னும் புரிந்துகொள்ள
மறுக்கிறீர்கள்?


பெரியாருக்கு பிறகான அண்ணாவின் திராவிட அரசியல்
என்பது,தமிழக முதலாளிகளின் டெல்லிக்கான
பிரதிநிதிகள் என்பதில் இருந்து மாறி இன்றைக்கு டெல்லி
முதலாளிகளாகவே மாறி விட்ட கருணாநிதி ஈழ
மக்களுக்கு இழைத்த துரோகத்தை பார்த்த பிறகும்,
மார்க்சியத்தின் முக்கியத்துவத்தை மறுக்கத்தான்
போகிறீர்களா? கருணாநிதியின் அரசியல் குள்ள
நரித்தனங்களை சாணக்கியத்தனம் என்று சுப்ரமணிய
சாமி சொல்கிறார்.சாணக்கியன் என்கிற பார்பனன்
தந்திரங்களை கையாண்ட,கையாண்டு கொண்டு
இருக்கிற கருணாநிதி மட்டும் எப்படி திராவிடனாக
இருக்க முடியும்,இனியும் பிறப்பை மட்டுமே அளவு
கோலாக வைத்து பார்ப்பனியத்தை தீர்மானிக்கும்
முறையை என்று மாற்றிக்கொள்ள போகிறீர்கள்?


திராவிடன் என்று எழுதி அடைப்புக் குறிக்குள் தமிழன்
என்றும் பெரியார் எழுதியை சுட்டிகாட்டும் நீங்கள்
இன்றைக்கு தமிழன் என்று எழுதி அடைப்புகுறிக்குள்
திராவிடன் என்று எழுதலாமே,என்ன பெரிய இழப்பு
அதில் உங்களுக்கு.இறுதியாக ஒன்று தோழர்களே ! கடந்த ஒரு வருடமாக
தனது சொந்த தேசிய இன அடையாளம் பற்றி
உணர்வே இல்லாத தமிழர்களிடம்,ஈழப் போராட்டம்
உருவாக்கிய தேசிய அடையாளம் பற்றிய பிரக்ஞையை
அழிந்து போக விட்டுவிடாதீர்கள்.


தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் காணப்படும் பாசிச,
இந்துதுவ சார்பான கருத்துக்களை முறியடிக்க
பெரியாரியம் என்னும் ஆயுதத்தையும்,சாதிய எதிர்பு
போராட்டதினால் நீங்கள் பெற்ற அனுவபத்தையும்
கொடுத்து தமிழ்தேசியத்தை வளப்படுத்துங்கள்.சமூக
இயக்கத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த உதவியாக
இருங்கள் என்பதையே தமிழ் சமூகம் இன்று
உங்களிடம் கோருகிறது.

அடுத்ததாக இன்றைய சமகால உலக அரசியல் சூழலில்
தேசிய இனவிடுதலைப் போராட்டங்கள்,இடதுசாரி
புரட்சிகர எழுச்சிகள் ஆகிவைகளில் ஆயுதமேந்திய
போராட்டங்களின் சாத்தியம்.ஆயுதபோராட்டங்கள்
வகிக்க வேண்டிய பாத்திரம்,வடிவங்கள் பற்றி
எல்லாம் எழுத வேண்டும் என்று கை அரித்தாலும்,
ஓட்டுபொறுக்கி அரசியலுக்குள் புதிதாக நுழைய
தீர்மானித்திருக்கும் சீமானை பற்றி பேசுவதாக
சொல்லிவிட்டதால் சீமானுக்கு போகலாம்.மும்பையில் நின்று கொண்டு ராஜ்தாக்கரேவைப் பார்த்து
தமிழர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சீமான்
பேசியபோதே நமக்கு ஒரு கேள்வி எழும்பியது.வட
இந்தியர்களை தாக்கும் ராஜ்தாக்கரே மும்பையில் வாழும்
தமிழர்களை தாக்கும்படி சொன்னால் சீமானால் இப்படி
பேச முடியுமா?போதாக்குறைக்கு தனது ஓட்டு பொறுக்கி அரசியலுக்கு
செல்லுக்கும் முடிவுக்கு ஏற்ப முத்துராமலிங்கதின்
சிலைக்கு மாலை போடுகிற வேலையையும் செய்து
விட்டார்.வழிகாட்டியான பெரியாருக்கு வைத்திருகிற
சிலைக்கு மாலை போட்ட கைகளால்,வழிபாட்டுக்கு
வைத்திருக்கும் தேவர் சிலைக்கு மாலை போடும்
சீமானின் பகுத்தறிவை என்னவென்று சொல்வது?பரவலாக விமர்சனங்கள் எழுப்பபட்ட உடன் சீமான்
பின்னால் செல்ல ஆரம்பித்திருக்கும் ரசிகர்கள்
திருமாவளவன் விடுமுறை அறிவிக்க கோரிக்கை
வைக்கவில்லையா,கிருஸ்ணசாமி மாலை
அணிவிக்கவில்லயா என்றெல்லாம் கேட்க
துவங்கியிருக்கின்றனர்.திருமாவளவன்,கிருஸ்னசாமி
போலவே சீமானும் பிழைப்புவாதிதான் என்று
ஒப்புக்கொள்கிறீர்களா நண்பர்களே?முத்துக்குமாரின் உடலை கருணாநிதியிடம் விலை பேசி
விற்ற திருமாவளவன் பாதையில்தான் சீமானும் செல்ல
போகிறார் அவ்வாறுதான் நடப்போம் என்று அறிவிக்க
போகிறீர்களா? இல்லை தெரியாமல்தான் கேட்கிறோம்
இன்றைக்கு ஓட்டுகாக தேவரின் சிலைக்கு மாலை
போடும் சீமான் ஒரு கற்பனைக்கு வைத்துக் கொள்வோம்
நாளை நாற்பது பாராளுமன்ற உறுபினர்களை பெற்றபின்
இன்னொரு கருணாநிதியாக மாற மாட்டார் என்பதும்.
ஈழ தமிழர்களுக்கும்,தமிழக தமிழர்களுக்கும் துரோகம்
இழைக்க மாட்டார் என்பதற்கும் என்ன உத்திரவாதம்
இருக்கிறது?
போதாக்குறைக்கு அவரது வட்டத்தில் ராஜபக்ஸே தனது
இனத்துக்கு நேர்மையாக இருந்தான்,ஹிட்லர் தனது
இனதுக்கு நேர்மையாக இருந்தான் என்றெல்லாம் பேச்சு
கிளம்ப ஆரம்பித்திருக்கிறது.இவர்கள் எல்லாம் தங்களை
ஈழ ஆதரவாளர்கள் என்று அடையாளபடுத்த துவங்கி
இருப்பது நம்மையும் ஈழ விடுதலை ஆதரவாளர் என்று
சொல்லிக் கொள்ளவதை தடைசெய்து விடுமோ என்று
பயப்பட வேண்டி இருக்கிறது.அடிப்படையில் ஈழ விடுதலைக் கோரிக்கை என்பது தன்
அளவிலேயே,பெரும்பானமை சிங்கள உழைக்கும்
மக்களின் அரசியல்,சமூக விடுதலைக்கும் வழி
ஏற்படுத்தி தருவதாகத்தான் அமைந்திருந்தது.


நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடகு வைத்தும்,சிங்கள
மக்களின் உழைப்பை சுரண்டியும் வந்த சிங்கள் ஆளும்
வர்க்கம்,சிங்கள் மக்கள் மத்தியில் தங்களுக்கு எழும்
எதிர்ப்பை சமாளிக்கவும் திசை திருப்பவுமே தமிழர்களுகு
எதிரான இனவெறியை கிளப்பி வந்தது.


அதற்கு பெரும்பானமை சிங்கள சமூகம் பலியான நிலையில்
தனது விடுதலையை பெறுவதன் மூலம்,சிங்கள் மக்கள்
தங்கள் எதிரிகளை அடையாளம் கண்டு எதிர்த்து போராட
உதவுவதாகவே தமிழீழ கோரிக்கை அன்றும் இன்றும்
இருக்கிறது.இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள
இளைஞர்களை பலியாகவும்,ஆயிரகனக்கான இளைஞர்கள்
ஊனமாகவும்,போர் செலவினங்கள் மூலம் சிங்கள
மக்களை கசக்கி பிழியவும் காரணமாக இருந்த ராஜபக்ஸே,
தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களர்களுக்கும் எதிரியே
என்கிற புரிதல் புலிகளுக்கு இருந்தது.உண்மையான
ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.சீமானுக்கு?
கோவையில் வசிப்பவன் என்கிற முறையில் ஒரு
விசயத்தையும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருந்த
கட்சிகளுக்கு கோவை பகுதியில் அதிக அள்வு
செல்வாக்கு இல்லாதபோதும்,அவர்கள் அழைப்பு
விடுத்த வேலை நிறுத்ததின்போது மலையாளிகள்
வட இந்தியர்களின் வணிக நிறுவனங்கள் கூட
மூடப்பட்டே இருந்தன.அதை பயத்தினால்
நிகழ்ந்த ஒன்றாக கருத எந்த அடிப்படையும்
இல்லை.அது முத்துக்குமரன் என்கிற மகத்தான
மனிதன் தனது தியாகத்தினால் ஏற்படுத்தியது.சீமானுக்கு இவைகள் பற்றி எல்லாம் அக்கறை இருக்க
முடியாது என்றே தோன்றுகிறது.ஓட்டுகட்சி அரசியல்
நிகழ்த்தும் சீரழிவுக்குள் தன்னையும் நுழைத்துக்
கொள்ள தயாராகிவிட்ட நபரிடம் போய்,தமிழகதில்
வாழும் சக தேசிய இனத்தவர்களில் உள்ள உழைக்கும்
மக்களிடம் நட்பு சக்திகளை தேட சொல்வது,தமிழ்
தேசிய விடுதலையை தேடிக் கொடு.பெரியாரின்
அரசியல் வழியில் போராடு என்றெல்லாம்
சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில்
மட்டுமே முடியும்.தனது நிலத்தில் விளைந்த கத்தரிக்காயில் நல்லதை எல்லாம்
பொறுக்கி சந்தைக்கு அனுப்பிவிட்டு,சொத்தை கத்திரிகாயில்
கெட்டுப்போகாத பகுதிகளை குழம்பு வைத்துச் சாப்பிட்ட ஒரு
விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளைஞன்,
தனக்குள் இருக்கும் உழைக்கும் வர்க்க மனிதனை
மீட்டுகொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்பதே நமது
எதிர்பார்ப்பு.இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்த
பெரியாரின் பேரனாக,பிரபாகரனின் தம்பியாகவே
சுயவிமர்சனம் செய்துகொண்டு திரும்பி
வருவீர்களா சீமான்?

4 comments:

ஸ்டாலின் குரு said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஒருபுறம் 'தன்னார்வ நிறுவனங்கள் ஏகாதிபத்திய கைக்கூலிகள்' என்று புத்தகம் போட்டு தமிழக உழைக்கும் மக்களிடம் காசு கறந்து கொண்டு, இன்னொரு புறம தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரான கலையரசனோடு இணைந்து கொண்டும், வினவு - ம.க.இ.க கும்பல் நடத்தும் புரட்சி சூர்ப்பரோ சூப்பர்.. இதனை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திறகாக ம.க.இ.கவின் பிரான்ஸ் முகவரான இரயாகரன் மூலமாக 'இனியொரு' இணையத்தின் மீது தாக்குதல் நடத்துவது அதனினும் சூப்பர். ச்சீ இதுவும் ஒரு பிழைப்பா?

http://inioru.com/?p=7440

Anonymous said...

ஒருபுறம் ‘தன்னார்வ நிறுவனங்கள் ஏகாதிபத்திய கைக்கூலிகள்’ என்று புத்தகம் போட்டு தமிழக உழைக்கும் மக்களிடம் காசு கறந்து கொண்டு, இன்னொரு புறம தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரான கலையரசனோடு இணைந்து கொண்டும், வினவு – ம.க.இ.க கும்பல் நடத்தும் புரட்சி சூர்ப்பரோ சூப்பர்.. இதனை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திறகாக ம.க.இ.கவின் பிரான்ஸ் முகவரான இரயாகரன் மூலமாக ‘இனியொரு’ இணையத்தின் மீது தாக்குதல் நடத்துவது அதனினும் சூப்பர். ச்சீ இதுவும் ஒரு பிழைப்பா?

ஸ்டாலின் குரு said...

மக இக.இரயாகரன் போன்றவர்களுக்கு எந்த
அரசியல் நேர்மையும் இல்லை என்பது
நாம் அறிந்ததுதானே அனானி நண்பா

வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

Post a Comment