Tuesday, February 23, 2010

புரட்சிக்குள் ஒளியும் பார்ப்பன தேசிய பக்தர்கள்

இந்தியப் புரட்சி,மற்றும் மார்க்சிய லெனிய அரசியலின்
ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக தங்களைக் காட்டிக்
கொள்ளும் ‘மக்கள் கலை இலக்கிய கழகத்தின்’
இணையப் புரட்சியாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக
எழுதிக்கொண்டு இருக்கிறோம்.அந்த வகையில் இது
அடுத்த பதிவு.ஈழத்துக்கு எதிராகவும்,பொதுவாகவே
தமிழர்களுக்கு எதிராகவும்,பார்ப்பன வன்மத்தைக்
கொட்டும் இவர்களை கடுமையாகவே விமர்சிக்க
வேண்டி இருக்கிறது.புரட்சியின் மீதும்,மக்களின்
மீதும் உண்மையான நேசம் கொண்ட மனிதர்கள்
இவர்களின் கீழும் திரண்டிருப்பதை நாம் அறிந்தே
இருக்கிறோம்.இந்த பதிவுகளை அடிப்படையாக
வைத்து கேள்விகளை எழுப்பும் நிலையில் கூட
தங்களின் கீழ் இருக்கும் மனிதர்களை இவர்கள்
வைத்திருக்கமாட்டார்கள் என்பதும்,ஏறக்குறைய
ரஜினி ரசிகர்மன்ற உறுப்பினர்களைப் போலவே
அவர்களை தலைமை வழிநடத்தும் என்பதும் கூட
நாம் அறிந்ததுதான்.எனினும் உண்மையான
மக்கள் நேசம் கொண்ட மனிதர்கள்,இவைகளை
பரிசீலித்து தங்களை மாற்றிக்கொண்டால் அதுவே
நமக்கு கிடைத்த வெற்றிதான்.சில மாதங்களுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள்
தலைவர் திருமாவளவனை விமர்சித்து ஒரு கட்டுரை
இவர்களின் புதிய ஜனநாயகம் இதழில் வந்திருந்தது.
ஆர்வத்துடன் படித்தபோது அதில் ஒரு விசயம் மிகக்
கவனமாக தவிர்க்கப்பட்டிருந்தது.அப்போதைக்கே
அதை கவனித்தாலும் உடனடியாக எதிர்வினை எழுத
வேண்டாம் என்று கருதியதால் விட்டு விட்டோம்.
மீண்டும் சமீபத்தில் வினவு இணையத்தில் வந்த
முத்துக்குமார் தொடர்பான கட்டுரையில்தான் அந்த
விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.முத்துக்குமார்
மன்னித்து விடு ..சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள்
தோற்றுப்போனோம் என்ற கட்டுரையை வாசித்த
போது ஓநாய் வடிக்கும் கண்ணீர்தான் நினைவில்
வந்தது.சரி விசயத்துக்கு வந்துவிடலாம்.துவக்க
காலங்களில் திருமா தலித் மக்களிடம் வளர்த்த
சுயமரியாதை,அரசியல் உணர்வை எல்லாம்,
தூய வர்க்க அரசியலின் பெயரால் நிராகரிப்பது
சரியல்ல என்ற எண்ணமே இருந்து வந்தது.
அதையும் தாண்டி திருமாவளவனை கைவிட
வேண்டும் என்கிற முடிவுக்கு வரத் தூண்டியது
முத்துக்குமாருக்கும்,ஈழ மக்களுக்கும் அவர்
இழைத்த துரோகத்தின் பிறகுதான்.காலவரையறையின்றி,கல்லூரிகளை மூட உத்தரவிட்ட
தமிழகஅரசை எதிர்த்து,முத்துக்குமாரின் விருப்பப்படி
அவரது உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போராட
முடிவுசெய்து,சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள்
மீது,திருமா தனது கட்சியினரை வன்னியரசோடு
அனுப்பி,தாக்குதல் நடத்தியதும்,உடலைக் கைப்பற்றி
அடக்கம்செய்ததுமான துரோகம் நிகழ்ந்தேறிய பின்பே
முத்துக்குமார் விரும்பிய எழுச்சி நிகழாமல் போனது.
முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றும் முயற்சி
நடந்தபோது இந்த வீராதி வீரர்கள் எதைப் பிடுங்கிக்
கொண்டு இருந்தார்கள் என்பதுதான் நமது கேள்வி.
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு
இன்றைக்கு வந்து ஓநாய் கண்ணீர் வடிப்பவர்களை
என்ன செய்வது ? தெளிவாக புரிந்துகொண்டால்
முத்துக்குமார் விரும்பிய எழுச்சி நிகழாமல் போக
வேண்டும் என்று விரும்பியவர்களின் அணியில்,
ஆளும்வர்க்கத்தின் பக்கமே இவர்கள் நின்றார்கள்
என்பதை அறிய முடியும்.திருமாவின் துரோகத்தை
புதிய ஜனநாயகம் இதழில் எழுதாமல் விட்டுவிட்டு
இணையத்தில் மட்டும் எழுதும் உள் அரசியலும்
ஒன்றை தெளிவுபடுத்துகிறது.இதழில் எழுதினால் இவர்களின் கீழ் இருக்கும் மக்கள்,
ஏன் வன்னியரசை எதிர்த்துப் போராடவில்லை என்று
கேள்வி எழுப்புவார்கள்.இவர்களின் வீரம் சந்தி
சிரித்து விடும்.இணையத்தில் எழுதினால் கேள்வி
எழுப்புபவர்களை இவர்களின் வழக்கமான திசை
திருப்பல்,முத்திரை குத்தல்,மன உளைச்சலுக்கு
உள்ளாக்கல் பாணி விவாத முறையில் ஏமாற்ற
முடியும் என்பதுதானே இவர்களின் திட்டம்.
இவர்கள்தான் இந்திய அரசை எதிர்த்து ஆயுதப்
புரட்சி செய்யப்போகிறவர்கள் என்றால் எதைக்
கொண்டு சிரிப்பது? இவர்கள் செய்யப்போகும்
இந்திய புரட்சியின் நிலைதான் இப்படி சந்தி
சிரிக்கிறது என்றால்,அரசு சாரா நிறுவனங்களின்
(N.G.O) தவப்புதல்வர்களான சில புலம்பெயர்
தமிழர்களைக் கொண்டும்,சில இலங்கை
மார்க்சியர்களைக் கொண்டும் இவர்கள்
செய்ய விரும்பும் இலங்கைப் புரட்சியின்
நிலையை நினைத்தால் மயக்கமே வருகிறது.தேசிய இன உணர்வு இருந்தால் முல்லைத்தீவில் போர்
நடந்தபோது ஏன் யாழ்ப்பாணம் அமைதியாக இருந்தது
என்று ஒரு அடிமுட்டாள்தனமான கேள்வியை எழுப்பி
இருந்தார் சமீபத்தில் ஒரு விவாதத்தில் மக இக வை
சேர்ந்த ஒருவர்.அவர்களிடம் நாம் ஒரு கேள்வியை
கேட்க வேண்டி இருக்கிறது.முல்லைத்தீவில் போர்
நடந்தபோது உங்களின் தோழமைச்சக்திகளான,வர்க்க
அரசியலின் வாரிசுகளான இலங்கை மார்க்சியர்கள்,
புலிகள் கட்டுப்பாட்டில் இல்லாதிருந்த,கிழக்கு
பகுதியையும்,யாழ்ப்பாணத்தையும்,கொழும்பையும்
ஏன் அமைதியாகவே வைத்திருந்தனர் என்கிற
கேள்விக்கு பதில் என்ன? கருணாவை,டக்ளசை,
பேரினவாத சிங்கள அரசை எதிர்த்து,ஒரு
ஆர்பாட்டத்தைக் கூட நடத்த வக்கற்றவர்கள்,
சிங்களர்களோடு சேர்ந்து புரட்சி செய்ய போகிறார்கள்
என்றால் என்ன சொல்வது?திருமாவைக் கண்டு மான் கராத்தே காட்டிய மக இக
வும், இலங்கை அரச பயங்கரவாதிகள் முன்னால்
செயலற்று நின்றவர்களும்,இந்திய புரட்சியையும்,
இலங்கை புரட்சியையும் நடத்துவோம் என்று
சொல்வதைக் கேட்டால்,முடியல முடியல என்று
வடிவேழுவின் இம்சை அரசன் வசனத்தைதான்
சொல்ல வேண்டி இருக்கிறது.மேலும் இங்கே
ஒரு விசயத்தையும் பதிவு செய்யத் தோன்றுகிறது.
1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இழந்து
வெளியேறிய புலிகள்,2002 ஆம் ஆண்டு போர்
நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின் யாழ்ப்பாணத்துக்கு
வந்து கூட்டம் நடத்தியபோது 60.000 ஆயிரம்
மக்கள் புலிகளின் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
இந்த நிகழ்வை வைத்தே சொல்லி விடலாம்.
தமிழர்கள் தங்களின் பாதுகாவலர்களாகவும்,
தங்களின் உரிமைகளுக்காக நேர்மையாக
போராடுபவர்களாகவும் புலிகளை மட்டுமே
ஏற்கிறார்கள் என்று.சமீபத்தில் தோழர் விடுதலை இராசேந்திரன் இவர்களைப்
பற்றி எழுதிய கட்டுரையை படித்தபோதுதான் இவர்கள்
வழக்கமாகவே மான் கராத்தேகாரர்கள்தான் என்பது
புரிந்தது.மோடிக்கு எதிராக இவர்கள் நிகழ்த்திய
பாதுகாப்பான புரட்சி பற்றி படிக்கையில் புல்லரிப்பே
வந்துவிட்டது.ஒரு உண்மையும் கூட நினைவுக்கு
வந்தது.ஈழம் தொடர்பான போராட்டங்களில் மூன்று
பேரை சிறைக்கு அனுப்பிவிட்டு,ஆயிரக்கணக்கில்
எங்கள் தோழர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று
கூசாமல் பொய் சொன்னவர்கள்தானே இவர்கள்.
ஈழத் துரோகிகளான திராவிட முன்னேற்ற கழகத்திடம்
இருந்து நன்கொடை பெற்றார்கள் என்று பெரியார்
திராவிடர் கழகத்தின் மேல் கடுமையான
விமர்சனம் வைத்திருந்தார்கள் சமீபத்தில்.திமுக போலவே ஈழத் துரோகிகளான பாட்டாளி மக்கள்
கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரையும்,
விடுதலைச் சிறுத்தைகளின் மாநிலப் பொதுச்
செயலாளரையும் தில்லைக்கோவில் தொடர்பான
கூட்டதில் மேடையேற்றியது மட்டும் புரட்சிகர
நடவடிக்கையோ?பெரியாரிய தோழர்களுக்கு எதிரான
பார்ப்பன வன்மம்தானே விமர்சனம் என்கிற பெயரில்
வந்து விழுந்திருக்கிறது.சூத்திரனுக்கு ஒரு நீதி,
பார்ப்பானுக்கு ஒரு நீதி என்கிற மனுதர்ம வாரிசுகள்
தங்களுக்கு ஒரு நீதியும்,மற்றவர்களுக்கு ஒரு
நீதியும் வைத்திருப்பார்கள் என்பது இயல்புதானே.
சோவியத் வீழ்ந்தால் அமெரிக்கச்சதி காரணம்,
புலிகள் வீழந்தால் மட்டும் அகக்காரணஙகள் என்பது
வரை இவர்களின் நீதி இப்படித்தான் இருக்கிறது.
திமுகவோடு சேர்ந்துதான் தமிழின ஓர்மையை
காப்பாற்ற முடியும் என்கிற பெரியார் திராவிடர்
கழகத்தின் கருத்தோடு நாம் உடன்பட முடியாது
என்பதையும் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.இவர்களின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டு
இருப்பவர்களால் ஒரு விசயத்தை எளிதாக உணர
முடியும்.தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்துக்
கொண்டிருக்கும் தேசிய இன அடையாளம் பற்றிய
விழிப்புணர்வால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டிருக்கும்
இயல்பான பதற்றத்தை அதிலும் காண முடியும்.
ராமதாஸ் போன்ற அப்பட்டமான ஓட்டுப்பொறுக்கி
அரசியல்வாதியை தமிழ்த்தேசியவாதியாக்கி,தலித்
மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக கவிதை
எழுதுகிறோம் என்ற பெயரில்,தமிழ் அடையாளத்தை
இழிவு செய்த பார்ப்பன குயுக்தி மூளையின்
திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
இன்றைக்கு அதே ராமதாசின் கட்சியை சேர்ந்தவரை
மேடையில் ஏற்றுகையில் மட்டும் தலித்துகள் மீதான
அக்கறை காணாமல் போய் விடுகிறதே ஏன்?
மேலும் இவர்கள் என்றைக்காவது இந்திய அரசு,
இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் தேசிய
இனங்கள் மீது நிகழ்த்தும் தாக்குதலை வைத்துக்
கொண்டு,இந்திய தேசியத்தின் மீதும்,இந்தியன்
என்கிற அடையாளத்தின் மீதும் சேறடிக்கிற
வேலை செய்திருக்கிறார்களா என்றால்,இல்லை
என்பதே பதிலாக இருக்கிறது.அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.சுலபமாகச்
சொல்லி விடலாம்.இந்தியாவெங்கிலும் இருக்கிற
எல்லா தேசிய இன மக்களோடும் வசித்தாலும்,அந்த
மக்களில் இருந்து அந்நியப்பட்டவர்களாகவும்,அந்த
மக்களையே சாதி ஒடுக்குமுறையால் சுரண்டுபவர்
-களாகவும்,இந்தியா என்கிற கட்டமைப்பின் வழியாக
மட்டுமே தங்கள் மேலாதிக்கத்தை உறுதிபடுத்திக்
கொள்ள முடியும் என்கிற யதார்த்தத்திலும் இருக்கும்
பார்ப்பனர்கள் மணிரத்தினம் பட கதாநாயகன் போல
இந்தியப்பாசத்தில் பொங்குவது இயல்பான ஒன்றுதான்.
அந்த பார்ப்பன தேசிய பக்திக்கு எதிராக தேசிய இன
அடையாளம் பற்றிய விழிப்புணர்வு எங்கு எழுந்தாலும்
அதை சிறுமைப்படுத்துவதை,கம்யூனிஸ்ட் கட்சிகளில்
இருக்கும் பார்ப்பனர்கள் செய்துகொண்டுதான் உள்ளனர்.இந்தியதேசியத்தாலும்,இந்திய அடையாளத்தாலும்,இந்திய
நிலப்பரப்பில் இருக்கும்,தேசிய இனங்கள் தங்கள்
அடையாளத்தை இழந்துகொண்டிருப்பதை எப்படி ஏற்க
முடியும் என்கிற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை
இந்த பார்ப்பன தேச புரட்சியாளர்களிடமிருந்து.விட்டால்
இந்திராகாந்தி சோசலிசம் என்கிற வார்த்தையை
அரசியல் சட்டதின் முகப்பில் சேர்த்துவிட்டார்.அதனால்
நாம் சோசலிச கட்டத்தில் இருந்து பொதுவுடைமை
கட்டத்துக்கு போய்க்கொண்டு இருக்கிறோம்.அதனால்
தேசிய இன மொழி,பண்பாட்டு அடையாள அழிப்பைப்
பற்றி கவலைப்படை தேவையில்லை என்று பதில்
சொன்னாலும் சொல்வார்கள்.மொத்தத்தில் இந்திய
தேசிய இனங்கள் தங்களின் தேசிய விடுதலைக்கான
போராட்டங்களை முன்னெடுப்பதும்,தங்கள் தேசிய
இன அடையாளங்கள் உறுதிபடுத்திக்கொள்வதுமே
இப்போதைக்கு தேவையாக இருக்கிறது.இந்திய மாவோயிஸ்டுகளோடு இணைந்து நிறக வேண்டிய
தேவை வந்தாலும்,மீண்டும் இந்திய கட்டமைப்பில்
இணைய வேண்டி வந்தாலும் கூட தங்களின் தேசிய
அடையாளம் பற்றிய முழு விழிப்புணர்வு கொண்ட
தேசிய இனங்களால் மட்டுமே தங்களை காத்துக்
கொள்ள முடியும்.சாதியையும் மதத்தையும்
வைத்துக்கொண்டு என்னதான் பொதுவுடைமையக்
கொண்டு வந்தாலும்,அதிலும் பார்ப்பனர்கள் மததையும்
சாதியையும் கொண்டு வந்து தங்கள் மேலாதிக்கத்தை
நிலை நிறுத்திகொண்டு விடுவார்கள் என்கிற
பெரியாரின் எச்சரிக்கையை நினைவுபடுத்திக்கொள்ள
வேண்டி இருக்கிறது.இந்தியதேசியத்துக்கும்,இந்திய
அடையாளத்துக்கும் பார்பனியத்துக்கும் உள்ள
உறவை இயங்கியல் ரீதியாக புரிந்துகொண்டு,இந்திய
அடையாள நிராகரிப்போடு தேசிய இனங்கள்
இயங்குவது மட்டுமே சரியான விசயமாக இருக்க
முடியும்.இந்திய வரலாற்றில் நிலவிய எல்லா அரசு வடிவங்களிலும்
தங்களின் மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வதில் பார்ப்பன
சமூகம் காட்டி வந்திருக்கும் அதீத திறமையை வரலாறு
முழுக்க கண்டு வந்திருக்கிறோம் நாம்.சோசலிசத்தின்
பெயரால் இந்தியாவிலும் ஒரு அதிகாரவர்க்க ஆட்சி
நிறுவப்பட்டால் அதிலும் தங்களின் மேலாதிக்கத்தை
நிறுவிக்கொள்வதில் பார்ப்பனர்களுக்கு சிரமங்கள் இருக்க
போவதில்லை.அதே நேரம் மிகைப்படுத்தப்பட்ட
பார்ப்பன எதிர்ப்பையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டி
இருக்கிறது.பிறப்பின் அடிப்படையை வைத்து பார்ப்பனர்
என்று அவதூறு செய்யப்படும் கிஷன்ஜீயிடமிருந்தே
இந்திய இடதுசாரிகளிடம் இலகுவாக காண முடியாத
சோவியத் யூனியன் பற்றிய நேர்மையான விமர்சனங்கள்
வருகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது.
சோவியத் யூனியனில் அதிகாரவர்க்க ஆட்சியை
அமைக்க துணைபோனதாக லெனினையும்,அதிகார
வர்க்க ஆட்சியை அமைத்ததாக ஸ்டாலினையும்,
அவர் விமர்சித்திருப்பது.தங்கள் பிரதேசங்களில்
உருவாக்கி இருக்கும் மக்கள் புரட்சிகர கமிட்டிகளில்
ஜனநாயகபூர்வமான தேர்தல்களை நடத்துவது,நாங்களும்
தவறு செய்கிறவர்கள்தான் எங்களையும் எதிர்த்துப்போராட
கற்றுக்கொள்ளுங்கள் என்று மக்களுக்கு பயிற்றுவிப்பதை
எல்லாம் நாம் ஆரோக்கியமான முன்னெடுப்புகளாக
கருத முடியும்.இவர்களின் பார்ப்பன வன்மத்துக்கு உதாரணமாக மேலும்
சில விசயங்களைப் பார்த்துவிட்டு இந்தப் பதிவை
முடித்துக் கொள்ளலாம்.ஜெயராம் பற்றிய கட்டுரையில்
காகிதப்புலி சீமானின் தம்பிகள் போலிஸ் பாதுகாப்போடு
ஜெயராம் வீட்டைத் தாக்கியதாக எழுதி இருக்கிறார்கள்.
இந்தக் காகிதப்புலிகள் முத்துக்குமார் விசயத்தில்,
வன்னியரசிடம் மான் கராத்தே காட்டி ஓடியது ஒரு
புறம் இருக்கட்டும்.தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும்
அவ்வப்போது தமிழக போலிசை சந்திருந்தால் கூட
தமிழகப் போலிசைப் பற்றி இவர்களுக்குத் தெரிந்து
இருக்கும்.அரசிடம் அனுமதி பெற்று நடத்தும்
ஆர்ப்பாட்டங்களைத் தவிர வேறு எதுவும் செய்யாத
புரட்சியாளர்களாயிற்றே இவர்கள்.சேலம் ரயில்வேக்
கோட்டம்,முல்லைப்பெரியாறு,ஈழத்தமிழர்களுக்கான
போராட்டங்கள் எதிலாவது கலந்துகொண்டிருந்தால்
தமிழக போலிசின் இந்தியப்பாசம் புரிந்திருக்கும்.
சேலம் கோட்ட பிரச்சணையாகட்டும்,முல்லைப்
பெரியாறு பிரச்சனையாகட்டும் கேரள முதலமைச்சர்,
மத்திய அமைச்சர் யாருடைய கொடும்பாவிகளையும்,
ஏன் சிங்கள ராஜபக்ஸேவின் கொடும்பாவியைக்கூட
எரிக்க விட்டதில்லை தமிழக போலிஸ்.தள்ளுமுள்ளு
நடந்த பிறகே எரிக்க முடியும்.அதே நேரம் தமிழக
அமைச்சர்களின் கொடும்பாவிகள் கேராளாவில்
போலிஸ் பாதுகாப்புடன் எரிக்கப்படுவதை தொலைக்
காட்சிகளில் நன்றாகவே பார்க்க முடிந்தது.அரச
விசுவாசத்திலும்,இந்திய விசுவாசத்திலும் நாயினும்
கீழான தமிழகபோலிஸ் சீமானின் தம்பிகளுக்கு
பாதுகாப்பு கொடுத்தது என்று எழத புறநானூற்று
வீரம் தேவையில்லை பார்ப்பன சாணக்கியனின்
குயுக்தியே போதும் .மலையாளிகள் தமிழனது உருவத்தையும் வடிவத்தையும்
கேலி செய்வதற்க்கும்,தமிழர்கள் மலையாளிகளின்
ஆளுமையையும் பண்பையும் கேலி செய்வதற்கும்
பாரிய வேறுபாட்டை கண்டு பிடித்திருக்கிறார்கள்
முன்னது நகைச்சுவையாம்,பின்னது காழ்ப்புணர்வாம்.
எது நகைச்சுவை? தமிழர்களை சுத்தமற்றவர்களாக,
பிச்சை எடுப்பவர்களாக சித்தரிப்பது நகைசுவையா?
உருவத்திலும் வடிவத்திலும் தமிழர்களுக்கும்,
மலையாளிகலுக்கும்,என்ன வேறுபாடு உள்ளது.
நிறம்தான் வேறுபடும்.நிறத்தை வைத்துதான்
தமிழர்களை இழிவு செய்கிறார்கள் என்பதுதானே
உண்மை.அதை சொல்வதில் இருந்து எது
இவர்களைத் தடுக்கிறது.நிறத்தின் அடிப்படையிலும்
சுத்தத்தின் அடிப்படையிலும்,தீண்டத்தகாத மனநிலை
கொண்டு தமிழர்களை இழிவு செய்வதை,மலையாள
சமூகம் பார்ப்பன அடிமைத்தனத்தில் இருந்து
விடுபடாதன் நீட்சியாகப் பார்ப்பதுதானே சரியாக
இருக்க முடியும்.அதை வெறுமனே நகைச்சுவை
என்று எழுதி தங்களின் பார்ப்பன விசுவாசத்தை
காட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்தப்
புரட்ச்ச்ச்ச்யாளர்கள் என்பதுதான் உண்மை.
மேலும் தமிழர்களை கிண்டல் செய்வார்களாம்,
சித்தரிப்பார்களாம் என்று எதற்கெடுத்தாலும்
ளாம் போடுகிறார்கள்.ஏன் எதையும் அவர்கள்
செய்வதே இல்லையா? கிண்டல் செய்கிறார்கள்,
சித்தரிக்கிறார்கள் என்று கூட எழுத மறுக்கும்
இவர்கள்.அவற்றை வாதத்துக்காக உண்மையென்று
வைத்துக்கொண்டாலும் என்று எழுதி இருக்கிறார்கள்.
எந்த அளவுக்கு தமிழர்களை மடையர்களாக
பார்ப்பன குயுக்தி மூளை கருதுகிறது என்பதற்கு
இதுவே சாட்சியாகும்.ஜெயராம் பிரச்சனையில்
மிகச்சரியான நிலைப்பாடு ஏற்கனவே தமிழக
அரசியல் வழியாக சமூகத்தில் பரவலாககொண்டு
செல்லப்பட்டுவிட்டது என்பதால் இத்தோடு
நிறுத்திக்கொள்ளலாம்.மற்றபடி தமிழ்த்தேசியர்களாக இவர்களே ஒரு
பட்டியலை வைத்துக்கொண்டு அவர்கள் ஏன்
அதைச் செய்யவில்லை இவர்கள் ஏன் இதை
செய்யவில்லை என்றெல்லாம் கேட்பதற்கு
நம்மிடம் ஒரே பதில்தான் இருக்கிறது.
மார்க்சியம் பேசுவதாலேயே மக இக வினர்
மார்க்சியர் ஆகிவிட முடியாது என்பது
எத்தகைய உண்மையோ,அத்தகைய
உண்மைதான் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள்
எல்லோரும் தமிழ்த்தேசியவாதிகள் ஆக
முடியாது என்பதும் பலமுறை இவர்களை
விமர்சித்தாகிவிட்டது,புரட்சிகர அரசியல்,
ஈழம்,இடஒதுக்கீடு,எல்லாவற்றிலும்
இவர்கள் அம்பலப்பட்டு போயிருக்கிறார்கள்
என்பதால் மீண்டும் அதிகம் கிளற
வேண்டியதில்லை.தேனொழுகும்
வார்த்தைகளில் இந்திய தேசிய
இனங்களின் பாட்டாளிவர்க்க
ஒருங்கிணைவு பேசினாலும்,அதன்
உள்ளடக்கமாக பார்ப்பன ஒருங்கினைவும்,
மேலாதிக்கமும் நிலை நிறுத்தப்படும்
என்பதாலேயே எழுத்தாளர் ஞாநி
போன்றவர்கள் இவர்களை பாராட்டுகிறார்கள்
என்பதே போதும் இவர்களின் அரசியல்

தொடர்புடைய பதிவு
http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_28.html

37 comments:

Anonymous said...

அடுத்த தாக்குதலும் அருமை

ஸ்டாலின் குரு said...

நன்றி அனானி நண்பரே

blackpages said...

ஆண்களும் பெண்களும் முதியவர்களும் சிறுவர்களுமாக
நூற்றி ஐம்பதுபேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
பெண்கள் பாலியல் வண்புணர்சிக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பெண்ணின் கையில் இருந்த குழந்தை பிடுங்கப்பட்டு
கொதிக்கிற தாருக்குள் வீசப்பட்டது.ஒன்றரை
இலட்சம் பேர் அகதிகளாக துரத்தப்பட்டனர்.

இதெல்லாம் கேட்டால் ஈழம் தான் நினைவுக்கு வரும்.
உண்மையில் இதெல்லாம் காவிரி நடுவர்மன்ற இடைக்கால தீர்ப்பு வந்தபோது கர்நாடகாவில் இருந்த
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள்.

வெகு சுலபமாக சகோதரத்தும் பேசுபவர்களுக்கு
நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

மாரடைப்பில் மண்டையை போட்ட ராஜ்குமாருக்காக
50 கோடி மதிப்புள்ள தமிழர்களின் சொத்துக்களை
சூறையாடிய புனிதர்களுக்கு சர்வதேசம் கற்பிக்க
இவர்கள் எப்போது செல்லப்போகிறார்கள்.

ஸ்டாலின் குரு said...

அவசியமான நினைவூட்டலுக்கு நன்றி தோழர்

balaa said...

அருமையான கட்டுரை நண்பரே

ஸ்டாலின் குரு said...

நன்றி பாலா

blackpages said...

இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி இப்போது மலையாளிகள் தமிழர்களை இழிவுபடுத்துவதாக பலரும் ஆராய்ச்சி செய்கிறார்கள். மலையாளப்படங்களில் வேட்டி சட்டை அணிந்த தமிழ் பாத்திரத்தை வைத்து கிண்டல் செய்வார்களாம். பாண்டிக்காரர்கள் என்று பட்டப்பெயர் வைத்து தமிழர்களை காட்டான்கள் என்று சித்தரிப்பார்களாம். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் என்பதைத் தாண்டி என்ன முக்கியத்துவம்? இல்லை அவை உண்மையென்றே ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும் அதற்குப் பதில் தமிழ்ப்படங்கள் மலையாளிகளை எவ்வாறு சித்தரிக்கின்றன?//

blackpages said...

இல்லாததையும், பொல்லாததையும் இட்டுக்கட்டி இப்போது மலையாளிகள் தமிழர்களை இழிவுபடுத்துவதாக பலரும் ஆராய்ச்சி செய்கிறார்கள். மலையாளப்படங்களில் வேட்டி சட்டை அணிந்த தமிழ் பாத்திரத்தை வைத்து கிண்டல் செய்வார்களாம். பாண்டிக்காரர்கள் என்று பட்டப்பெயர் வைத்து தமிழர்களை காட்டான்கள் என்று சித்தரிப்பார்களாம். இவையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகள் என்பதைத் தாண்டி என்ன முக்கியத்துவம்? இல்லை அவை உண்மையென்றே ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும்//


வார்த்தைகளை கவனித்தீர்களா கடைசிவரை தமிழர் இழிவுபடுத்தப்படுகிறார்கள்

என்பதை இவர்கள் ஏற்க்கவே இல்லை

blackpages said...

ஊர்மேயும் தமிழ் ஆண் மனம் மலையாளப் பெண்களை கற்பனையில் வன்புணர்ச்சி செய்வதுதான் ஆகக் கேவலமான ஒன்று.//


எவ்வளவு வன்மம் இருக்க வேண்டும் இப்படி எழுதுவதற்கு?

அது தமிழ்ப்பெண்ணோ மலையாலப்பெண்ணோ மக வில்

இருக்கும் ஆண்கள் எல்லாம் எந்தப்பெண்ணையும்

நினைத்தும masterbation செய்ததே இல்லை என்று மருதையரின்

புகைப்படத்தின் மீது சத்தியம் செய்துவிட்டு வந்தவர்களோ

blackpages said...

மலையாளி பெண்களை பாலியல் நுகர்வுப்பொருட்களாக சித்தரிக்கும்
ஆபாசப்பட வியாபாரிகளின் செயலுக்கு தமிழர்கள் பலியானதாக
வைத்துக்கொண்டாலும் முதன்மையான விமர்சனம் என்பது
அந்த பட வியாபாரிகளுக்கு எதிராகத்தானே இருக்க வேண்டும்.
தமிழ் மனம் என்று எழுத எவ்வளவு துணிவு வேண்டும்.


முல்லைபெரியாறு பிரச்சனையில் அங்குள்ள அரசியல்வாதிகளின்
பேச்சுக்கு மலையாள மக்கள் இனவெறிக்கு பலியாகிவிட்டார்கள்.
காவிரி பிரச்சனயில் அங்குள்ள மக்கள் இனவெறிக்கு பலியாகிவிட்டார்கள்
என்றால் அங்கே எல்லாம் போய் அவர்களை இவர்கள் திருத்த
வேண்டியதுதானே.?

தாங்கள் கொண்டாடிய எழுத்தாளர் பால்சக்கரியா முல்லைப்பெரியாறு
பிரச்னையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசினார் என்பதற்காக அவர்
வீடு மீது கல் அடித்தார்கள் அங்குள்ள இனவெறியர்கள்.இவர்கள்
போனால் உதைபட்டுத்தான் திரும்புவார்கள்.இவர்கள்தான்
பாதுகாப்பான புரட்சியாளர்கள் ஆயிற்றே. அதுதான் பாதிக்கப்படும்
தமிழர்களிடமே பாடம் நடத்த வந்துவிடுகிறார்கள்.

வாயில் வீணீர் வடிய தனது குடும்ப வருமானத்துக்காக
அவர்கள் கொடுக்கும் இருக்கும் இடத்தில் இருக்கிறார்கள்
நாம் பெரும் இடத்தில் இருக்கிறோம் என்று பேசும்
கருணாநிதியின் வார்த்தைகலோடுதான் இவர்களும்
உடன்படுகிறார்கள் வேறு விதத்தில்.

ளிமாகோ said...

//மார்க்சியம் பேசுவதாலேயே மக இக வினர் மார்க்சியர் ஆகிவிட முடியாது என்பது எத்தகைய உண்மையோ,/////

அப்பாட...... மகஇக வினர் மார்க்சியம் தான் பேசுகிறார்கள் என்று இப்போதாவது மண்டையில் உரைத்ததே...

மார்க்சியம் பேசினாலும் மார்க்சியர் இல்லை, தமிழ் தேசியம் பேசினால் தான் மார்க்சியர்! சரியா ஸ்டாலின் குரு?

//தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள்
எல்லோரும் தமிழ்த்தேசியவாதிகள் ஆக முடியாது////

சொல்லிட்டாருப்பா... உண்மையான அக்மார்க் தமிழ்தேசியர், தமிழ் தேசியத்தின் தரச்சான்றிதல் அதிகாரி.

இனிமேல் தமிழ் தேசியம் பேசும் எவரும் நமது ஸ்டாலின் குருவிடம் சென்றுவிட்டு தர முத்திரை வாங்கிகொண்டு தான் வர வேண்டும்.

***

//முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றும் முயற்சி
நடந்தபோது இந்த வீராதி வீரர்கள் எதைப் பிடுங்கிக்
கொண்டு இருந்தார்கள் என்பதுதான் நமது கேள்வி//

உங்களிடம் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லையா குரு??


//திருமாவின் துரோகத்தை
புதிய ஜனநாயகம் இதழில் எழுதாமல் விட்டுவிட்டு
இணையத்தில் மட்டும் எழுதும் உள் அரசியலும்
ஒன்றை தெளிவுபடுத்துகிறது.//

உங்க காமெடிக்கு அளவே இல்லையா?

அவதூறுகள் உண்மையை தெரிந்து கொண்டே தான் வருகின்றன, வதந்திகளோ அவற்றையே உண்மையென்று நம்பி பரப்பப்படுகின்றன. :)

ளிமாகோ said...

ஏம்பா இவ்வளவு நீளாமாவா எழுதுறது?

ஈழ முத்துக்குமரன் said...

சிவப்பு போர்வையை விலக்கி உள்ளே ஒளிந்திருக்கும் நரியை சரியாக அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்.

முத்துக்குமாரின் மரண ஊர்வலத்தில், மக்கள் அதிகம் வசிக்காத பக்கம் ஊர்வலத்தை திருப்பக்கூடாது என்று சொல்லி சாலையில் அமர்ந்த மாணவர்களை விடுதலை சிறுத்தைகளின் வன்னியரசு இழுத்து தள்ளி தாக்க முனைந்தார், திருமாவளவனும், வேல்முருகனும்(பா.ம.க‌) பாதையை மறித்தபடி டாட்டா சுமோவை நிறுத்தி அதன் மீது ஏறி நின்று கொண்டு வன்னியரசுவையும், இன்னும் சில அல்லக்கைகளையும் தூண்டிக் கொண்டிருந்தனர். அந்த இடமே சலசலத்தது, அப்போது அந்த ஊர்வலத்தின் பின்னே நின்று கொண்டு அம்பானி, டாட்டாவுக்கு(அவர்களுக்காகத்தான் இந்தியா ஈழப் போரை நடத்துகிறதாம்) எதிராக கோஷம் போட்டுக் கொண்டிருந்த ம.க.இ.கவினர், இன்று வந்து சந்தர்ப்பவாதிகளிடம் தோற்றுவிட்டதாக நீலிக் கண்ணீர் வடிப்பது நல்ல வேடிக்கைதான்.

முத்துக்குமாருக்காக இன்று கட்டுரை எழுதி கண்ணீர் வடிக்கும் இந்த ம.க.இ.கவினருக்கு அவர் மீதோ அவர் ஏற்றுக் கொண்டிருந்த அரசியல் மீதோ எந்த விதமான அக்கறையோ, மரியாதையோ கிடையாது என்பதே உண்மை, முத்துக்குமாரினை தொடர்ந்து ஒரு எழுச்சிததீ பற்ற வேண்டுமென்றால் அது தமிழ் தேசியத்தை மய்யமாக கொண்டே இருக்கமுடியும். அப்படியொரு எழுச்சி உருவாகிவிட கூடாது என்பதற்காக வேலை செய்யும் ம.க.இ.கவினர் ஒருவகையில் முத்துக்குமாருக்கு எதிரானவர்களே, இப்படி இருப்பவர்களுக்கு முத்துக்குமார் மீது என்ன மரியாதை இருக்கமுடியும்.


எல்லோரைப் பற்றியும் தங்கள் மதிப்பீட்டை கூறி, போராளிகளுக்கான தரச்சான்றிதழ்களை தாங்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்று கூறிவரும் ம.க.இ.க. மார்க்சிய ஆதீனத்திற்கு, முத்துக்குமாரை பற்றியும், அவர் வெளியிட்ட பிரசுரம் பற்றியும் அரசியல் மதிப்பீட்டை வெளியிடும் துணிச்சல் இருக்கிறதா?

தமிழனை, மலையாளிகள் இழிவுபடுத்துவதை தட்டிக்கேட்டாலே தமிழினவெறி என்று கூச்சல் போடும் ம.க.இ.கவினர் 'வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.' என்று எழுதிய முத்துக்குமாரை பற்றி என்ன மதிப்பீடு வைத்திருப்பார்கள்?

தோழமையுடன்
ஈழ முத்துக்குமரன்

siva said...

ஆனால் சென்னையில் வெளியிடப்படும் நல்ல மலையாளப்படங்களை
மலையாளிகள் மட்டும்தான் பார்க்கிறார்கள்.பலான மலையாளப்
படங்களை மட்டும் தமிழர்கள் பார்க்கிறார்கள்.அதுவும் மாமனாரின்
இன்ப வெறி,காமக்கொடூரன் போன்று தமிழர்களை சுண்டி
இழுக்கும் சுத்தமான தமிழ்ப் பெயர்களுடன்.தமிழ்,
மலையாளத்தின் சினிமா கொடுக்கல் வாங்கலின் தரம்
இப்படித்தானே இருக்கிறது?///

அடப்பாவிகளா எவ்வளவு பச்சையாக புளுகுகிறார்கள்.
கேரளாவில் தங்கள் படங்கள் வெளியாகும்போது
ஷகீலாவின் படமும் வெளியானால் தங்கள்
படங்களின் வசூல் குறைகிறது என்று மம்முட்டி,
மோகன்லால்,ஜெயராம் போன்றவர்கள் குறைபட்டு,
சண்டை எல்லாம் கூட போட்டு இருக்கிறார்கள்.
உண்மை இப்படி இருக்க தமிழர்களை மட்டும்
காமத்துக்கு அலையும் பித்தர்களாக சித்தரிக்க
எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் இந்த
பார்ப்பன ......... களுக்கு.

siva said...

இப்படி தேசிய இனம் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றாகத்
திரளும் கண்கொள்ளாக் காட்சி மறுகாலனியாதிக்கத்தின்
விளைவு என்றாலும் இந்த ஒன்று கலப்பைக் கொண்டாட
வேண்டாமா? ஆனால் உழைத்துப்பிழைக்க வந்த இந்த
உழைப்பாளிகளைக் கூட தமிழின் பெயரால் வெறுப்புணர்வு
கொண்டு பார்க்கிறார்கள் என்றால் அவர்களை என்ன
செய்வது?///


இப்பொழுதுதான் இந்தப் புரட்ச்ச்ச்ச்ச்ச்சியாளர்கலுக்கு புலிகள்
மேல் இருக்கும் கடுப்பின் காரணம் புரிகிறது.
சிங்கள அரசின் இனவாதத்திட்டம் என்றாலும்
சிங்களர்கள் தமிழர்களின் தாயகமான
யாழ்ப்பாணத்திலும்,மட்டக்களப்பிலும்,வன்னியிலும்,
மன்னாரிலும்,அம்பாறையிலும்,திருகோணமலையிலும்
குடியேறுவதை வரவேற்று,அந்தக் கலப்பைக்
கொண்டாடி இருந்திருக்க வேண்டும் புலிகள்.
அதை விட்டுவிட்டு எதிர்த்துப்போராடினால் இந்தப்
புரட்ச்ச்சிச்சிக்காரர்களுக்கு எரிவது இயல்புதானே.

siva said...

ஊர்மேயும் தமிழ் ஆண் மனம் மலையாளப் பெண்களை கற்பனையில் வன்புணர்ச்சி செய்வதுதான் ஆகக் கேவலமான ஒன்று.//


எவ்வளவு வன்மம் இருக்க வேண்டும் இப்படி எழுதுவதற்கு?

அது தமிழ்ப்பெண்ணோ மலையாலப்பெண்ணோ மக வில்

இருக்கும் ஆண்கள் எல்லாம் எந்தப்பெண்ணையும்

நினைத்தும masterbation செய்ததே இல்லை என்று மருதையரின்

புகைப்படத்தின் மீது சத்தியம் செய்துவிட்டு வந்தவர்களோ//நல்ல வேளை இவர்கள் இத்தோடு நிறுத்திக்கொண்டார்கள்
என்று சந்தோசப்படுங்கள் தோழர்.சிங்களப் படையினர்
ஈழத்தமிழ்ப்பெண்களை வன்புணர்சி செய்வதை ஆராய
இவர்கள் புகுந்திருந்தால்,ஊர் மேயும் சிங்கள
படையினரின் உணர்ச்சியைத் தூண்டுவது போல
தமிழ்ப்பெண்கள் ஆடை உடுத்துகிறார்கள்.
அதனால்தான் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிறார்கள்
என்று சொல்லி இருப்பார்கள்.

சீனு said...

//காலவரையறையின்றி,கல்லூரிகளை மூட உத்தரவிட்ட தமிழகாரசை எதிர்த்து,முத்துக்குமாரின் விருப்பப்படி அவரது உடலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போராட முடிவுசெய்து,சாலைமறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது,திருமா தனது கட்சியினரை வன்னியரசோடு அனுப்பி,தாக்குதல் நடத்தியதும்,உடலைக் கைப்பற்றி அடக்கம்செய்ததுமான துரோகம் நிகழ்ந்தேறிய பின்பே முத்துக்குமார் விரும்பிய எழுச்சி நிகழாமல் போனது.//

'ஈ' பட இளைமேக்ஸ் காட்சி தான் நினைவுக்கு வந்தது.

//இவர்களின் வழக்கமான திசை திருப்பல்,முத்திரை குத்தல்,மன உளைச்சலுக்கு உள்ளாக்கல் பாணி விவாத முறையில் ஏமாற்ற முடியும் என்பதுதானே இவர்களின் திட்டம்.//

அது...

ஈழ முத்துக்குமரன் said...

ஈழப்போராட்டத்தை ஒழித்துக்கட்டுவதில் கங்கணம்கட்டிக்கொண்டு வேலை செய்த நாராயணன், சிவ சங்கர மேனன் போன்ற மலையாளிகளின் தமிழின வெறுப்பை பற்றி நாம் பேசினால், அரசு என்பது தனி வர்க்கம், அந்த வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு அதாவது, சிவசங்கர மேனன், நாராயணம் போன்றவர்களுக்கு (மலையாள)இனப்பற்றோ, (தமிழ்)இனவெறுப்போ இருப்பதில்லை என்று நமக்கு பாடம் எடுக்க கிளம்பிவிடுகிறார்கள் ம.க.இ.கவினர். ஆனால் உண்மையில் இந்தியாவின் அதிகார மையத்தில் இன்று இருப்பவர்கள் அத்தனை பேரும் மலையாளிகளே, அவர்கள் இனப்பற்று இல்லாமல் நடந்துகொள்ளவில்லை, அதன் வெளிப்பாடு முல்லை பெரியாறு. மைய அரசில் நிலவும் மலையாளிகளின் ஆதிக்கத்தை கண்டு ஒருமுறை கருணாநிதியே குறைபட்டுக்கொண்டார்.

இந்திய அரசதிகாரத்தில் மலையாளிகள் ஆதிக்கமேயில்லையென, சிவப்பு துண்டை போட்டு தாண்டும் ம.க.இ.கவினர் தமிழக அரசியல் என்ற வார இதழில் வெளியான‌ இந்த கட்டுரையை படித்தால் பயணுள்ளதாயிருக்கும்.

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=297&rid=15

ஸ்டாலின் குரு said...

வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சீனு.
ஈ படத்தில் போராட்டத்தை தொடர ஒரு நபராவது
இருந்தார்.நம்மால் அப்படி யாரையும் தமிழகத்தில் இன்றளவும் உருவாக்க முடியவில்லைதானே.

ஸ்டாலின் குரு said...

என்னால் இணையத்தில் அதிகமாக நேரம் செலவு
செய்ய இயலாத குறையை நீக்கும் விதமாக
இவர்களை அம்பலபடுத்தவும்.என் அள்வு
கோபத்துடன் எதிர்வினை ஆற்றாமல்
அரசியல் ரீதியாகவே இயன்ற அளவு கேள்வி
எழுப்புவதற்கும்,பங்களிப்பதற்கும் உங்களுக்கு
என் நன்றிகள் தோழர் ஈழ முத்துக்குமரன்

ஸ்டாலின் குரு said...

இந்த மலையாள அதிகாரிகள் பற்றிய
விசயத்தில் உங்களோடு சற்று
முரண்படுவேன் தோழர் முத்துகுமரன்.
இந்தோ லங்கா சேம்பர் அப் காமர்ஸின்
தலைமைப் பொறுப்பில் இருந்தது
சிதம்பரம் என்பதை மறக்க வேண்டும்.
நாராயனனுக்கும் மேனனுக்கும்
தமிழர்கள் மீது இனப்பகையும்,வெறுப்பும்
இல்லை என்பதை நான் மறுக்கவில்லை.
அதே சமயம் 100 சதவிகிதம் அது மட்டுமே
ஈழத்தமிழர்கள் மீதான இனபடுகொலைக்கு
காரணம் என்று கூற முடியாது.தங்கள்
பகையைக் காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக்கொண்டார்கள் அந்த இன
வெறியர்கள் என்று வேண்டுமானால்
சொல்லலாம்.ஒரு 20 சதவிகிதம்
இவர்களின் பங்களிப்பும் இருக்கவே
செய்கிறது.மேலும் எம்.கே நாராயணன் ஒரு
பார்ப்பான்.கேரள ஈழவர்களின் சுயமரியாதையையே
சகித்துக்கொள்ள முடியாதவர்,ஈழத்தமிழர்களின்
சுயமரியாதையை இந்தியாவுக்கு அடிபணிய
விரும்பாத போர்க்குணத்தை எப்படி
சகித்துக்கொள்வார்.மேனனும் ஆதிக்கசாதிதான்.
மேலும் நீங்கள் சொல்லி இருக்கிற பட்டியலில்
இருப்பவர்களும் பார்ப்பனர்களும்,ஆதிக்கசாதிகளாகவும்தான்
இருப்பார்கள் என்பது என் எண்ணம்.

ஸ்டாலின் குரு said...

நாராயனனுக்கும் மேனனுக்கும்
தமிழர்கள் மீது இனப்பகையும்,வெறுப்பும்
இல்லை என்பதை நான் மறுக்கவில்லை//

நாராயனனுக்கும் மேனனுக்கும்
தமிழர்கள் மீது இனப்பகையும்,
வெறுப்பும் உள்ளது என்பதை
நான் மறுக்கவில்லை என்று
எழுதியிருக்க வேண்டும்.

அவசரத்தில் தவறுதலாக பதிந்து
விட்டிருக்கிறேன் என்பதால்
இந்த விளக்கம்.

Robin said...

வினவின் பதிவிலிருந்து நான் புரிந்துகொண்டது, கேரளாவில் 'தோழர்கள்' அதிகம், எனவே மலையாளிகள் தமிழர்களை இழிபடுத்தினாலும் தவறில்லை!

ஸ்டாலின் குரு said...

கேரளாவில் தோழர்கள் அதிகம் இருக்கலாம் ரூபின்
ஆனால் இவர்களுக்கு இருப்பார்களா? இங்கேயே
இவர்களைச் சீண்ட ஆள் இல்லை :)

ஸ்டாலின் குரு said...

பார்ப்பன விசுவாசத்தின் காரணமாக தமிழர்களை
மலையாளிகள் இழிவுபடுத்துவதைத்தான்
வினவு வரவேற்கிறது என்பதே என் புரிதல்.
அதைத்தான் சொல்லி இருக்கிறேன்.

ஸ்டாலின் குரு said...

ஏம்பா இவ்வளவு நீளாமாவா எழுதுறது?//

என்ன செய்வது கோமாளி ஒரு Flow வில்
இருக்கும்போதே எழுதினால்தான் உண்டு.
இல்லாவிட்டால் சொல்ல வந்த விசயங்களை
பாதி சொல்வதற்குள் கியர் விழுந்துவிடுகிறது.
மேலும் பகுதி பகுதியாக எழுதினால்.முதல்
பதிவுக்கு அடுத்த பதிவை இணைத்தால்
உங்களின் இந்தப் பதிவு ஏற்கனவே
தமிழ்மணத்தில் இணைக்கபட்டுவிட்டது
என்று கேட்டு போடுகிறது தமிழ்மணம்

ஸ்டாலின் குரு said...

உங்களிடம் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லையா குரு??


நானும் குற்றவாளிதான்.ஒப்புக்கொள்கிறேன்.

நான் என்ன மக இக விலா இருக்கிறேன்.

எங்களைத்த் தவிர எல்லோரும் தவறானவர்கள்
என்று சொல்லிக்கொண்டு இருக்க.


சந்தர்ப்பவாதிகள்.இனவாதிகள் பிழைப்புவாதிகள்
என்று எல்லோரையும் கிழிக்கும்
புரட்சியாளர்கள் என்ன கிழித்தார்கள்
என்பதுதான் என் கேள்வி.

ஸ்டாலின் குரு said...

சொல்லிட்டாருப்பா... உண்மையான அக்மார்க்
தமிழ்தேசியர், தமிழ் தேசியத்தின்
தரச்சான்றிதல் அதிகாரி.

இனிமேல் தமிழ் தேசியம் பேசும் எவரும்
நமது ஸ்டாலின் குருவிடம் சென்றுவிட்டு
தர முத்திரை வாங்கிகொண்டு தான்
வர வேண்டும்.//

சான்றிதழ் அளிக்கும் வேலை எல்லாம் எனக்கு
வேண்டாம்.ஐந்து பகுதிகளாக தமிழ்த்தேசியத்தை
நோக்கி என்கிற பதிவை எழுதி இருக்கிறேன்.
தமிழ்த்தேசியவாதிகள என்று சொல்லி
அமைப்பு நடத்துபவர்கலள் எவரையும்
அங்கீகரிக்காமலும்,தவறான போக்குகளை
தயவுதாட்சணயமில்லாமல் விமர்சித்தும்தான்
எழுதி இருக்கிறேன்.

blackpages said...

வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சீனு.
ஈ படத்தில் போராட்டத்தை தொடர ஒரு நபராவது
இருந்தார்.நம்மால் அப்படி யாரையும் தமிழகத்தில் இன்றளவும் உருவாக்க முடியவில்லைதானே.//

இதைப் பாருங்கள் தோழர்


ஆனாலும் இவ்வளவு இருட்டடிப்புகளுக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கில் கூடி மறையாத முத்துக்குமாருக்காக நடுகல் நட்டிருக்கிறார்கள் திருநெல்வேலி இளைஞர்கள்.

எண்ணற்ற வழக்குரைஞர்கள் சேர்ந்து முத்துக்குமாரின் கனவை நனவாக்க உறுதி பூண்டிருக்கிறார்கள் மதுரையில்.

சென்னையிலும், கோவையிலும் பத்திரிகை உறவுகள் பலபேர் கூடி முத்துக்குமாரின் எண்ணங்களுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். இதில் விடுபட்ட ஊர்களும் பேர்களும் அநேகம். இவர்களே நமது நம்பிக்கைகள்.

அமைப்பிற்காகவோ….. ஆட்சிக்காகவோ……. கூட்டணி அதர்மங்களுக்காகவோ ஈழத்தை இரண்டாம்பட்சமாக்காத இளைஞர்கள் ஏராளம் இருக்கிறார்கள் என்பதற்கான நம்பிக்கைக் கீற்றினை நம்முள் எழுப்பியிருக்கிறார்கள்.
http://pamaran.wordpress.com/2010/02/10/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/

ஸ்டாலின் குரு said...

நம்பிக்கையை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி தோழர்

Anonymous said...

மேலும் இவர்கள் என்றைக்காவது இந்திய அரசு,
இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் தேசிய
இனங்கள் மீது நிகழ்த்தும் தாக்குதலை வைத்துக்
கொண்டு,இந்திய தேசியத்தின் மீதும்,இந்தியன்
என்கிற அடையாளத்தின் மீதும் சேறடிக்கிற
வேலை செய்திருக்கிறார்களா என்றால்,இல்லை
என்பதே பதிலாக இருக்கிறது.///
அது எப்படி இந்தியன் மீது சேறடிப்பார்கள்.?
தமிழன் என்றால் சூத்திரன்.இந்தியன் என்றால்
பார்ப்பான்.சூத்திரன் என்றால் இழிவு செய்யப்பட
வேண்டியவன்.பார்ப்பான் என்றால் அவனது
புனிதத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும்.
அப்படித்தானே சாத்திரங்கள் சொல்கிறது.
குலத்துக்கு ஒரு நீதியைச் சொல்லும்
மனுதர்மத்தின் காப்பாளர்கள் கம்யூனிஸத்துக்கு
பின்னால் ஒளிந்திருந்தாலும்,தங்கள்
வேலையை தெளிவாகவே செய்துகொண்டுதான்
இருக்கிறார்கள் என்பதைத்தான் இவர்கள்
இந்தியனின்(பார்ப்பானின்) புனிதத்தைக்
காப்பாற்றுவதில் காட்டும் அக்கறை
உணர்த்துகிறது.

ஸ்டாலின் குரு said...

அது எப்படி இந்தியன் மீது சேறடிப்பார்கள்.?
தமிழன் என்றால் சூத்திரன்.இந்தியன் என்றால்
பார்ப்பான்.சூத்திரன் என்றால் இழிவு செய்யப்பட
வேண்டியவன்.பார்ப்பான் என்றால் அவனது
புனிதத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும்.
அப்படித்தானே சாத்திரங்கள் சொல்கிறது.
குலத்துக்கு ஒரு நீதியைச் சொல்லும்
மனுதர்மத்தின் காப்பாளர்கள் கம்யூனிஸத்துக்கு
பின்னால் ஒளிந்திருந்தாலும்,தங்கள்
வேலையை தெளிவாகவே செய்துகொண்டுதான்
இருக்கிறார்கள் என்பதைத்தான் இவர்கள்
இந்தியனின்(பார்ப்பானின்) புனிதத்தைக்
காப்பாற்றுவதில் காட்டும் அக்கறை
உணர்த்துகிறது.//

உண்மைதான்

Anonymous said...

அப்பாட...... மகஇக வினர் மார்க்சியம் தான் பேசுகிறார்கள் என்று இப்போதாவது மண்டையில் உரைத்ததே...//


காந்தி கூடத்தான் தன்னை சோசலிஸ்ட் என்று
சொல்லிக் கொண்டார் ஹி ஹி

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

siva said...

1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை இழந்து
வெளியேறிய புலிகள்,2002 ஆம் ஆண்டு போர்
நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின் யாழ்ப்பாணத்துக்கு
வந்து கூட்டம் நடத்தியபோது 60.000 ஆயிரம்
மக்கள் புலிகளின் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
இந்த நிகழ்வை வைத்தே சொல்லி விடலாம்.
தமிழர்கள் தங்களின் பாதுகாவலர்களாகவும்,
தங்களின் உரிமைகளுக்காக நேர்மையாக
போராடுபவர்களாகவும் புலிகளை மட்டுமே
ஏற்கிறார்கள் என்று.///
தெருவில் இறங்கி போராடுவதற்கான வலிமையையும்,
தன்னம்பிக்கையையும் தமிழ் மக்களுக்கு புலிகளால்
மட்டுமே தர முடிந்தது என்றும் புரிந்து கொள்ளலாம்
இல்லையா தோழர்.

ஸ்டாலின் குரு said...

தெருவில் இறங்கி போராடுவதற்கான வலிமையையும்,
தன்னம்பிக்கையையும் தமிழ் மக்களுக்கு புலிகளால்
மட்டுமே தர முடிந்தது என்றும் புரிந்து கொள்ளலாம்
இல்லையா தோழர்.//


புரிந்து கொள்வதல்ல உண்மையும் அதுதான்

Anonymous said...

ஸ்டாலின் குரு அவர்களே,தனி தமிழ் குற நாடு,கொங்கு நாடு கிடைக்க, சென்னை பசங்களிடமிருந்து எம் மக்கள் விடுதலை பெற, குரல் கொடுப்பீர்களா?எம் மக்களுக்கு சேர சோழ பாண்டிய மக்களைக் கண்டாலே அலர்ஜி.

Post a Comment