Sunday, October 9, 2011

கவிதை

அரண்மனையை பார்வையிட்டு
அறிவித்தார்
பில்லி சூனியம்
ஏவல் ஏதுமில்லை


அடுத்தடுத்து பெண் பிள்ளை
பெறுபனுக்கு அடுத்தது
ஆண் என்றும் தன் பெயர்
வைக்க சொல்லி
அன்பு கட்டளையிட்டார்


அந்த கரைக்கும் இந்த கரைக்கும்
ஓடும் சாமியோடு ஓடி
அடிக்கிற பறை நிறுத்தி
அவன் கேட்டிருக்கலாம்


எப்போது நீக்குவாய்
என் ஜாதி இழிவையென்று


அப்பா
அரசு
அதிகாரத்தோடுதான்
அவருமென்றானபின்

நாத்திகனாகிறேன்

புதிய கடவுளாகவும்

3 comments:

பூங்குழலி said...

அப்பா
அரசு
அதிகாரத்தோடுதான்
அவருமென்றானபின்

நாத்திகனாகிறேன்

புதிய கடவுளாகவும்

நிறைய பொருளை ஒரு கவிதையில் பொருத்தியிருக்கிறீர்கள் ...அருமை

ஸ்டாலின் குரு said...
This comment has been removed by the author.
ஸ்டாலின் குரு said...

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் உங்களுக்கு

சில சமயங்களில் விரும்பி நிறைய அர்த்தங்களை சேர்க்கிறேன். விரும்பாமலும் கூட அப்படி வந்துவிடுகிறது.வார்த்தைகளை எடுத்துகொள்ளலாம் அர்த்தங்களைமுடியாததல்லவா :) பல பொருள் தரும்படி எழுதுவதையே விரும்புகிறேன்.

Post a Comment