Tuesday, October 18, 2011

மே 17 க்கு சில கேள்விகளும் ஒரு எதிர்வினையும்

திருமுருகன் காந்தி மற்றும் சார்லஸ் அன்ரனி ஈழம் ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம் என்று கீற்றில் எழுதியிருக்கும் கட்டுரையில் நான் எழுப்பியிருக்கும் கேள்விகளும் ஒரு எதிவினையும் இங்கே

பின்வரும் தகவல்களை கூர்ந்து கவனித்தால் அமெரிக்கா எவ்வாறு இலங்கை அரசின்மூலமாக தனது போரை நடத்தியது என்பதை கவனிக்கலாம். இதன் அர்த்தம் இந்தியா இதில் பங்காற்றவில்லை என்பதல்ல. அமெரிக்காவின் நோக்கத்தில் இந்தியா தனது வக்கிரத்தையும் தமது தரகுமுதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும் இணைத்துக் கொண்டது. அமெரிக்கா மூலமாக தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள விரும்புகிறது.//

இப்படி முடிகிறது அந்த கட்டுரை

இந்த கட்டுரையை அடிப்படையாக வைத்து சில கேள்விகளை எழுப்பி நானே விவாதிக்கொண்ட விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.சில மாதங்களுக்கு முன் தனது முகப்பு புத்தகத்தில் ஈழத்தின் இனபடுகொலை நிகழ்ந்துகொண்டிருந்தபோது சிங்கள அதிகாரிகள் மூவருடன் இந்திய அதிகாரிகள் மூன்று பேர் நடத்திய பேச்சுகளை சிங்கள அதிகாரிகள் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அதை வைத்து இந்தியாவை தங்கள் நலன் பக்கம் வைத்துகொள்வதாகவும் எழுதி இருந்தார் திருமுருகன் காந்தி.தங்கள் கட்டளைகளை சிங்கள அதிகாரிகள் பதிவு செய்கிற அளவுக்கு விடுகிற முட்டாள்கள அல்ல இந்திய அதிகார வர்க்கம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.தன வசம் இருக்கிற அந்த பதிவுகளை திருமுருகனே வெளியிடுவார் என்று நினைத்து காத்திருந்தால் இந்த கட்டுரைதான் வந்திருக்கிறது.ஒருவேளை அவர் வசம் உள்ள அந்த ஆவணங்களை சூலியன் அசாஞ்சோ விக்கிலீக்சோ வருங்காலத்தில் கண்டுபிடித்து வெளிடுவார்கள் என்று நம்புவோம்.மேலும் இந்த கட்டுரை வந்திருக்கிற நேரம் கவனிக்கத்தக்கது.இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த அன்னிய நாடுகள் சதி செய்துகொண்டிருபதாக பிரதமர் பேசிக்கொண்டிருக்கிறார் சமீப காலங்களில் .....

தான் நடத்திய கருத்தரங்கத்தில் அரபுலகில் நடந்துகொண்டிருக்கிற எழுச்சிகளின் பின்னணியாக அமெரிக்கா செயல்படுகிறது அதன் தொடர்ச்சியாகவே அன்னா ஹசாரேவை நாம் பார்க்க வேண்டும் என்கிற பொருள்படும்படி பேசியிருந்தார்.தனது முழு விசுவாசியான இந்திய அதிகார வர்க்கத்துக்கு எதிராக அன்னா மூலமாக தொல்லை கொடுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி எழவே செய்கிறது.இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டில் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் அதற்கு அணு உலைகளை அமைக்கிற அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் பொறுபேற்க வேண்டும் என்கிற சட்டத்தை சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு நிறைவேற்றியது பாராளுமன்றத்தில்.தரகு முதலாளிகளின் தேசத்துக்கு தானாகவே முதுகெலும்பு முளைப்பது சாத்தியமாகாதது என்று நாம் அறிவோம்.ரஷ்ய சீன முதுகெலும்புகளை கடன் வாங்கி பொருத்திகொள்கிற சாத்தியம் தனக்கு இருக்கிறது.என்பதை காட்டி உலக பொருளாதார சுரண்டலில் தனது பங்கை அதிகரித்துகொள்கிற இந்திய நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே அந்த அமெரிக்க.மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான சட்டத்தை கூற முடியும்

அந்த கட்டுரையின் இறுதியில் சொல்லியுள்ள விஷயம் பொய் என்பது இப்போது எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

சில மாதங்களுக்கு முன் ஓட்ட கூத்தன் http://www.facebook.com/profile.php?id=100000162949157என்கிற அலாவுதினிடம் பேசிய பொது ஒரு விஷயத்தை சொன்னார்.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிண்டன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எரித்ரியா போராளிகளுக்கு புலிகள் பயிற்சி அளித்தார்கள் என்று.புலிகளுக்கு எதிராக ரூம் போட்டு யோசிக்கும் மருதையர் கலை இலக்கிய கும்பலுக்கு கூட இப்படி ஒரு அவதூறை கிளப்ப முடியுமா என்று தெரியவில்லை.மாங்குளத்தில் வைத்து அமெரிக்க green beret களை புலிகள் மண் கவ்வ வைத்து ஓட்டிய வரலாறு இருக்கிறது.சொன்னது சீமானுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.இருக்கிறவர் என்பதும் கவனிக்கத்தக்கது.மட்டுமல்லாம சீனாவின் முற்றுகையில் இந்தியா என்கிற உதவாக்கரை புத்தகத்தை உருவாக்கியவர் குழுவில் அவரும் இருந்திருக்கிறார்.

ஈழத்தில் நிகழ்ந்த இனபடுகொலையில் சர்வதேச நாடுகளின் பங்கு எவ்வளவு உள்ளதோ அவ்வளவு தூரம் புலத்து வாழ் அமெரிக்க சமரசத்துக்கு தயாராகிவிட்ட வலதுசாரிகளுக்கும் இருக்கவே செய்கிறது.களத்தில் இருந்த இடதுசாரி சமரசமற்ற தலைமைக்கு எதிராக புலத்து வலதுசாரிகள் நிகழ்த்திய கழுத்தறுப்பு பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து சேரமான் எழுதிக்கொண்டிருக்கிறார்.

புலத்தில் இருந்த துரோகிகள் மட்டுமே ஓட்ட கூத்தர் சொன்னதுபோன்ற புரளிகளுக்கு பின்னணியாக இருந்திருக்க கூடும்.

இப்போது இனபடுகொலை உச்சம் தொட்ட காலத்தை பார்க்கலாம்.

அமெரிக்காவின் பிராந்திய நலனுக்கான திட்டமும் நமது விடுதலையும் பிணைந்துள்ளன. //

என்று அந்த கட்டுரையில் வருகிற வரிகள் இது.தான் விலைக்கு வாங்கிய புலத்து மனிதர்கள் அவர்கள் விலைக்கு வாங்கிய களத்தில் இருந்த சில துரோகிகள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம்.புலிகளின் தலைமை தப்பி வெளியேறினாலும் தாங்கள் திணிக்கிற துரோக தலைமைக்கு எதிராக பிற்காலத்தில் அவர்கள் போராட கூடாது என்பதற்காகவே மக்கள் மீது தாங்கள் வாங்கிய துரோகிகள் மூலம் தாக்குதல் நிகழ்திருக்க கூடும் என்று புரிந்துகொள்வதில் தவறு இருக்க முடியாது.ஆக தன வசம் இருக்கிற புலத்து நபர்கள்.மூலம் வருங்கால போராட்டத்தை சிதைக்கிற வல்லமையில் இருந்த அமெரிக்கா அந்த இறுதிபடுகொலைகள் நிகழ்ந்த காலத்திலேயே தலையிடுவதை யார் தடுத்தது என்கிற கேள்விக்கு பதில் கண்டாக வேண்டும்.அந்த பதில் இந்திய அரசு என்பதாகத்தான் இருக்க முடியும்.சீன,ரஷ்ய பூச்சாண்டிகளை காட்டை அமெரிக்காவை தள்ளி நிறுத்தி உலக பொருளாதார சுரண்டலில் தனது பங்கையும்,பிராந்திய வல்லரசு நோக்கத்தையும் நிறைவேற்றிகொள்ள முயல்கிற இந்திய அரசு வெறுமனே ஏவலாள் என்கிற அளவுக்கு குறுக்குகிற கட்டுரையின் நோக்கம் அடிப்படையிலேயே தவறாக இருக்கிறது.


தொடர்புடைய விஷயங்கள்அடுத்த சில மாதங்களில் ஆட்சி மாற்றம் நிகழலாம் என்று பிரதமார் பதவிக்கு யாத்திரை துவக்குகிறார் அத்வானி. ஆட்சி மாற்றம் நிகழும் வரை கூடங்குளம் நிறுத்தி வைக்கப்படட்டும் என்று கருதுகிறார் அம்மையார்.அன்னா ஹசாரேவும் ஆட்சி மாற்றத்தை கோருகிறார்.அமெரி.க்க இந்திய முரண்பாடுகளால் ஆட்சி மாற்றம் நிகழ்கிறதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும் ஏதோ பாரதிய ஜனதா ஆட்சி வந்தால் இந்தா பிடி ஈழம் என்று தந்துவிடுவது போல கருதிக்கொண்டு மடத்தனமகா சீமானும் பேசிக் கொண்டிருபதுதான் வேடிக்கையாய் இருக்கிறது.அயலுறவு கொள்கையை தீர்மானிப்பது அதிகாரவர்க்கமும் முதலாளிகளின் நலனுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல என்பது கூட தெரியவில்லை மனிதருக்கு...தன்னை சுற்றி யார் இருக்கிறார்கள் தன்னை எந்த திசைக்கு நடத்துகிறார்கள் என்பது கூட புரியாமல் முள்ளிவாய்க்காலில் வைத்து மக்களையும் போராளிகளையும் கழுத்தறுத்த ,அமெரிக்க இந்திய கூலிகளான புலத்து துரோகிகள் வழிகாட்டுதலில் நடப்பது போராட்டத்துக்கு எந்தவிதத்தில் லாபம் என்பது அவருக்கே வெளிச்சம்...
நீடித்த நிலையான போராட்டங்களுக்கு தமிழக மக்களை தயாரிப்பது தனக்கு சாத்தியமில்லை என்றால் சீமான் பேசாமல் சும்மா இருப்பது நல்லது....


தங்களிடம் இருக்கிற இந்திய அதிகாரிகளின் பேச்சுகளை வைத்து இந்தியாவை மிரட்டுகிறது சிங்கள அதிகார வர்க்கம் என்று சொன்ன திருமுருகன்,இப்போது ராஜபக்சேவும் கூட்டாளிகளும் தண்டிக்கப்படலாம் என்று பேசுவதன் அர்த்தம் என்ன? ஒருவேளை இந்திய அதிகார வர்க்கம் அந்த உரையாடல் பதிவுகளை களவாடிக்கொண்டு வந்து விட்டதோ?


உண்மையில் பங்காளி அமெரிக்காதான் தனது பங்கை கூட பெற முடியாமல் போகிற நிலை வந்துவிட்டதே என்கிற கடும் எரிச்சலில் இருக்கிறது.அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிற பொருளாதார நெருக்கடியும் தனது விரிவாதிக்க கனவை இந்தியாவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறது என்கிற நிலையில் தனது பேரம் பேசும் திறனை விட்டுகொடுத்து அடியாள் வேலை மட்டுமே பார்க்கும் என்று கருதிக்கொண்டிருப்பது அடிமுட்டாள்தனம்.

தனது கைவசம் ஒரு துரோக தலைமையை போர் துவங்கிய காலத்திலிருந்த உருவாகிக்கொண்டிருந்தது அமெரிக்கா என்பதை ஈழ இணையங்களில் தொடர்ச்சியாக அமெரிக்கா தங்களுக்கு ஆதரவாக தலையிடும் என்ற கருதுபரப்பலில் இருந்த...ு புரிந்துகொள்ள கூடியதாக இருந்தது.தனது கைவசம் ஒரு தலைமையை வைத்திருந்ததோடு,களத்தில் சிங்கள ராணுவம் நிகழ்த்துகிற போர் குற்றங்களோடு புலிகளும் போர்குற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை உருவாக்க தனது ஆட்கள் மூலம் களத்தில் மக்களின் மீது தாக்குதலையும் நடத்தியிருந்தது அமெரிக்கா என்று புரிந்துகொள்ள முடியும் மார்ச் மாத துவக்கத்தில் ஐந்தாயிரம் ஆறாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் சிங்கள ராணுவமும் புலிகள் இருவர் மீதும் குற்றம் சுமத்துவதற்க்கான ஆதாரங்களை தங்கள் கைகளில் அமெரிக்காவும் மேற்குலகமும் வைத்துக்கொண்ட பிறகு பிரான்ஸ் ஒரு படையிறக்கத்துக்கு தயாராக இருந்தது.அதை இந்தியா தடுத்தது.மே மாத துவக்கத்தில் அமெரிக்க நிகழ்த்த விரும்பிய படையிறக்கத்தையும் இந்தியாவே தடுத்தது.அமெரிக்க படைகள் இறங்கிருந்தால் அந்த இறுதி படுகொலைகள் தடுக்கபட்டிருக்கும்.மக்கள் சிங்களர்களின் முகாம்களுக்கல்ல ஐநா அல்லது அமெரிக்க முகாம்களுக்கு சென்றிருப்பார்கள்.தனது கைவசம் இருந்த தலைமைகள் மூல புலிகளின் சமரசமற்ற தலைமையை ஆயுதங்களை கீழே போட சொல்லி நிர்பந்திப்பது அல்லது அந்த தலைமையை அழிக்கும் வேலையை அமெரிக்க படைகளே செய்வது என்கிற வேலை மட்டுமே நடந்திருக்கும்.அமெரிக்காவின் பிராந்திய நலன் நோக்கங்களின்படி அதன் ராணுவமும் இலங்கையில் கால் ஊன்றியிருக்கும்.தனது சந்தைகளை அமெரிக்காவுக்கு தர மாட்டேன் என்னை அழுத்தினால் சீனா பக்கம் சாய்வேன் என்று அமெரிக்காவை மிரட்டி இறுதிபடுகொலைகளை நிகழ்த்தியது இந்திய அரசு.4 comments:

ஸ்டாலின் குரு said...

பதில் வருமா?

ஸ்டாலின் குரு said...
This comment has been removed by the author.
ஸ்டாலின் குரு said...

இன்னும் பதில் வரவில்லை இந்த கேள்விகளையும் சேர்த்துக்கொள்கிறேன் . இந்தியாவின் போரை தான் நடத்தியதாக மகிந்தவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகும்,ஏற்படுகிற இழப்புகளை கருத்தில் கொண்டு கிளிநொச்சிக்கு பிறகு போரை தொடர்வதில் தனக்கு விருப்பமில்லை இந்திய அரசே தனன்னை தொடர்ந்து போரை நடத்தி முடித்து விடுமாறு உத்தரவிட்டதாகவும் பொன்சேகா சொல்லியபிறக்கும் அமெரிக்காவின் போரை மட்டுமே இந்தியா நடத்தியதாக பம்மாத்து பேசுவது எதற்கு?

ஸ்டாலின் குரு said...
This comment has been removed by the author.

Post a Comment