Tuesday, December 8, 2009

அடையாள அரசியலா? அவல அரசியலா?

இந்தப் பதிவை எழுதத் துவங்கும்போதே மாவோவின்
விமர்சனம் பற்றிய மேற்கோள் ஒன்று நினைவுக்கு
வந்து தொலைத்தது.விமர்சனம் என்பது பூனை தன்
குட்டியைக் கவ்வுவது போல இருக்க வேண்டுமே
தவிர நாய் பூனைக்குட்டியை கவ்வுவது போல
இருக்கக் கூடாது என்கிற மேற்கோள்தான் அது.
என்னசெய்வது அந்த மேற்கோளை கடைபிடிப்பது
சாத்தியமில்லையோ என்கிற சந்தேகத்துடனேயே
இந்தபதிவை துவங்க வேண்டியிருக்கிறது.காரணம்
சமீபத்தில் படிக்க நேர்ந்த சீமானின் நேர்காணல்.



கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்சியாக
நிகழ்ந்து வந்த ஈழம் தொடர்பான போராட்டங்கள்
காரணமாக தங்கள் மீது சுமத்தப்பட்ட இந்திய
அடையாளம் பற்றிய மாயை மறைந்து,தங்கள்
சொந்ததேசிய இனம் பற்றிய விழிப்புணர்வு தமிழ்ச்
சமூகத்தில் குறிப்பாக இளைய சமுதாயத்திடம்
மெதுவாக பரவத் தொடங்கி இருந்தது.நினைவில்
இருக்கும் ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்ள
வேண்டி இருக்கிறது இந்த இடத்தில். தோழன்
முத்துக்குமாரின் தியாகத்தால் தமிழகமே எழுச்சி
பெற்றிருந்த நேரத்தில் ஓட்டுக் கட்சிகளால்
அமைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு
இயக்கம் கோவையில் ஒரு பேரணியை
நடத்தியது.



தொடர்சியாக ஈழம் தொடர்பான போராட்டங்களை
கவனிப்பவன் என்கிற முறையில் அந்த
நிகழ்சிக்கும் சென்றபோது ஏராளமான புதிய
இளைஞர்கள் அதில் கலந்துகொண்டிருந்தனர்.
ஆனால்பேரணி நிறைவடைந்து கூட்டத்தில் ஓட்டு
கட்சிகளின் தலைவர்கள் பேசத் துவங்கையில்
அந்தஇளைஞர்களில் பெரும்பாலானவர்கள்
கலைந்து போகத் தொடங்கிவிட்டனர்.
முத்துக்குமார் விளைவு என்றே அதனைச்
சொல்லலாம்.நாங்கள் ஈழ மக்களுக்கான எங்கள்
ஆதரவை தெரிவிக்க நீங்கள் நடத்துகிற இந்த
நிகழ்வில் பங்குகொள்கிறோமே தவிர உங்கள் மீது
எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று
ஒட்டுகட்சித் தலைவர்களின் முகங்களில்
முன்னால் தமிழக இளைஞர்கள் பிரகடனம்
செய்தது போல இருந்தது அதைப் பார்க்கையில்.



இன்றைக்கு அந்த இளையதலைமுறை எங்கே இருக்கிறதோ?
அவர்களுக்கான வழிகாட்டிகளாக அமைவதற்கும் தலைமை
தாங்குவதற்கும் யாருமல்லாத வெற்றிடம் இன்றுவரை
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.கடந்த இரு
தசாப்தங்களாக,உலக மயத்துக்குப் பிறகானகட்டத்தில்
தமிழகத்தில் அணைத்துத் தரப்பு மக்களும்
பங்கு கொண்ட ஒரு போராட்டமாக நிகழ்ந்தது ஈழத்
தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிரான
போராட்டங்கள் மட்டுமே என்பதை யார் மறுக்க முடியும்.



அந்த போராட்டத்தின் விளைவாக உருவான அரசியல்
உணர்வையும் தேசிய உணர்வையும் கொண்ட
இளைஞர்களை தக்க வைத்துக் கொள்வதுதான்
நிகழவில்லை என்றால்,எஞ்சி இருப்பவர்களையும்
தவறாக வழிநடத்துவதற்க்கான முயற்சிகளுக்கு
மட்டும் குறைவே இல்லாமல் இருக்கிறது.மாற்று
அரசியலுக்கான கருவாக மலர வேண்டியவர்களை
மந்தைகளாக்கும் முயற்சிதான் நடந்து வருகிறது.
அந்த வேலையை தமிழ் இன அடையாளத்தின்
பெயரால் சமீபத்தில் கையிலெடுத்திருக்கிறார் சீமான்.



முத்துராமமலிங்கத்தின் ஜெயந்தி விழாவில் கலந்து
கொண்டதைப்பற்றி நிருபர் எழுப்பிய கேள்விவிக்கு
சீமான் அளித்திருக்கும் பதில்தான் நாம் இனியும்
சீமான் மேல் நமபிக்கைகொள்ள எந்த
அடிப்படையும் நமக்கு விட்டுவைக்கப்படவில்லை
என்பதை தெளிவுபடுத்த உதவுகிறது.
முத்துராமலிங்க தேவர் என்ன மராட்டியரா?
மார்வாடியா?குஜராத்தியா ? மலையாளியா?
என்று ஆவேசமாக கேள்வி எழுப்பும் சீமான் அடுத்து
எச்.ராஜா,இல.கனேசன்,இராமகோபாலன் எல்லாம்
மலையாளியா? மார்வாடியா? தமிழர்கள்தானே
என்று கேள்வி எழுப்புவார் என்றே நம்பலாம்.



சாதிய அமைப்பை ஒழிக்க போராடிய அம்பேத்கருக்கும்,
இம்மானுவேல் சேகரனுக்கும்,ரெட்டைமலை
சீனிவாசனுக்கும் வீரவணக்கம் செலுத்தியபோது வராத
சாதியம் முத்துராமலிங்கத்திடம் மட்டும் ஏன் வந்து
என்றுஅருமையாக கேள்வி எழுப்புகிறார் சீமான்.சாதி
ஒழிப்புக்கு பாடுபட்டவர்களுக்கும் வீரவணக்கம்
சாதிய ஒடுக்குமுறைய காப்பாற்ற பாடுபட்ட நபருக்கும்
வீரவணக்கம்? என்ன பெருந்ததன்மை என்ன விவேகம்
சீமான் உங்களுக்கு? சாதி ஒழிப்பில் காட்டிய
வீரத்துக்காக அம்பேத்கருக்கும்,ரெட்டமலை
சீனிவாசனுக்கும் இம்மானுவேல் சேகரனுக்கும் வீர
வணக்கம்.சாதியைப் பாதுகாக்கும் போராட்டத்தில்
வீரம்??? காட்டிய முத்துராமலிங்கத்துக்கும் வீர
வணக்கம்? தயவுசெய்து இனிமேலும் பகுத்தறிவு
முத்திரையை மாட்டிகொள்ளாதீர்கள் சீமான்.
பிரபாகரனோடு குழுக்கிய கைகளை ராஜபட்சேவோடு
குழுக்கிய திருமாவளனுக்கு அடுத்த இடத்தில்
நீங்களும் இடம்பெறும் நாள் வெகுதொலையில்
இல்லை என்றே தோன்றுகிறது.



தீரன்சின்னமலைக்கும், காமராஜருக்கும், வீரநங்கை
வேலு நாச்சியாருக்கும், மருது பாண்டியருக்கும்
வீரவணக்கம் செலுத்தினாலும் சாதியம் பார்ப்பீர்களா?
மதுரை வீரனுக்கு வீரவணக்கம் செலுத்தினால்
அந்த சாதியைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று
சொல்வீர்களா? என்றெல்லாம் அதிபுத்திசாலித்தனமாக
கேட்கும் சீமானிடம் நாமும் ஒரு கேள்வியை
முன்வைக்கலாம்.தீரன் சின்னமலையை,காமராஜரை
வேலுநாச்சியாரை,மருதுபாண்டியர்களை அவர்களின்
சொந்த சாதிய அடையாளத்தின் கீழ்கொண்டு வந்து
அதை வாக்கு வங்கி அரசியலாக்கி பதவி பிடிக்க
அலையும் கூட்டம் பேசும் நியாயத்துக்கும் உங்கள்
பேச்சுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்று
விளக்க முடியுமா உங்களால்?



என் பின்னால் வந்த தேவர் தம்பிமார்கள் இம்மானுவேல்
சேகரனுக்கும்,பள்ளர் சமூக தம்பிமார் முத்து
ராமலிங்கத்துக்கும் வீரவணக்கம் செலுத்தினார்கள்
என்று வெட்கமில்லாமல் சொல்லும் சீமான் அவர்களே
அந்த தம்பிமார்களைக் கூட்டிபோகும்போதே சாதியை
கேட்டுவிட்டுத்தான் கூட்டி சென்றீர்களா? பள்ளர்
பறையர் சக்கிலியர் நாடார் முதலியார் என்று என்
முன்னால் இருப்பவர்களை பார்க்க மாட்டேன்
அணைவரையும் தமிழர்களாகத்தான் பார்ப்பேன் என்று
விட்டு கூட வருபவர்களின் சாதிகளைக் கேட்டு
தெரிந்து கொண்டது எதற்காக?



ஓட்டுபொறுக்குவதற்க்காக படம் காட்டுவதற்கா அல்லது
அவர்கள் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிச்
சிறுபான்மை சாதிகளை சேர்ந்தவர்களா என்று கண்டு
பிடிபதற்க்காகவா? அது சரி சீமான் அவர்களே
உங்களுக்கு அதே முக்குலத்தோர் சாதிகளில் இருந்து
பெரியாரின் பின்னால் வந்த இளைஞர்கள்
இம்மானுவேல் சேகரனுக்கு மட்டுமே வீரவணக்கம்
செலுத்துவது தெரியுமா? ஆதிக்கசாதி
பஞ்சாயத்துக்களில் தலித்துகளுக்கு தண்டனையாக
ஆதிக்கசாதியைச் சேர்ந்த நபர்களின் கால்களில்
விழவைப்பதற்கும் நீங்கள் முத்துராமலிங்கத்தின்
சமாதியில்தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை
வீரவணக்கம்என்ற பெயரில் விழ வைத்ததற்கும் என்ன
வேறுபாடு இருக்கிறது? தயவு செய்து பெரியாரை
கைவிட்டதுபோலவே பிரபாகரனையும் கைவிட்டு
விடுங்கள் சீமான் தங்களின் சுயமரியாதைக்கும்
வீரத்துக்கும் சமரசமற்ற போராட்டத்துக்கும்
பிரபாகரனிடம் இருந்து தமிழக(தலித்)
இளைய சமூகம் கற்றுகொள்ள நிறைய இருக்கிறது.



உங்களிடம் ஒரு வேண்டுகோளும் வைக்க வேண்டி
இருக்கிறது.தயவு செய்து முத்துராமலிங்கம்
போன்றவர்களைக்குறிக்க போராளி என்கிற
வார்த்தையை பயன்படுத்தி ஈழப்போராளிகளை
அவமானப்படுத்தாதீர்கள்.முக்குலத்தோருக்கு
போடப்பட்ட வாய்ப்பூட்டுச்சட்டத்தை எதிர்த்துப்
போராடிய முத்துராமலிங்கம்,தனது சாதியை
சேர்ந்தவர்களால்வாய்ப்பூட்டு போடப்பட்டுக் கிடந்த
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக என்ன
போராட்டங்களை நடத்திக் கிழித்தார்.ஆதரவாக
போராடத்தான் வேண்டாம்.வாய்ப்பூட்டையும்
அடிமைத்தனத்தையும் எதிர்க்க முனைந்த அந்த
மக்களை ஒடுக்க அல்லவா வரிந்துகட்டிக்கொண்டு
நின்றார்.நீங்கள் சாதி வெறியனா இல்லையா
என்பதை காலம் சொல்வது இருக்கட்டும் ஒரு
அப்பட்டமான ஒட்டுபொறுக்கி அரசியல்வாதிக்கு
தேவையான எல்லா விசயங்களையும் பெற்றுக்
கொண்டு வருகிறீர்கள்.



அது தமிழர் நலனுக்கா சொந்த நலனுக்கா என்பதைத்தான்
காலம் உணர்த்தப் போகிறது.எம் ஜி ஆர் போல்
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தோ அல்லது,
பாராளுமன்றத்துக்கு நாற்பது உறுப்பினர்களை
அனுப்பியோ நீங்கள் ஈழம் வாங்கிக் கொடுப்பீர்கள் என்று
தமிழர்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா
சீமான்? கனவுகளை விற்கும் உங்கள் சினிமா உலகம்
அல்ல இது என்பது உங்கள் பின்னால் இருக்கும் ரசிகர்கள்
வேண்டுமானால் உணராமல் இருக்கலாம்.பெரும்பாலான
இளைஞர்கள் தெளிவாகவே இருக்கின்றனர் எந்த விதத்தில்
போராடுவது எப்படிப் போராடுவது தமிழ்ச் சமூக
விடுதலைக்கு என்று.அவர்களின் எழுச்சியும் உங்கள்
காலத்திலேயே நிச்சயம் நிகழத்தான் போகிறது.



ஓட்டு பொருக்குவதற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும்
செய்யலாம் என்கிறநிலைக்கு போய்விட்டதைத்தான்
உங்களின் தனித்தமிழ்நாடு கோர மாட்டோம் என்கிற
அறிவிப்பின் மூலம் எங்களுக்குபுரிய வருகிறது.தனித்
தமிழ்நாடு கோர மாட்டீர்கள் அப்புறம் எதற்கு
தமிழ்த்தேசியம் உங்களுக்கு? உண்மையான எதிரிகளான
ஏகாதிபத்தியத்துக்கும் இந்திய அதிகாரவர்க்கத்துக்கும்
எதிராக தமிழர்கள் போராடுவதை திசை திருப்பி
அவர்களை சட்டமன்ற பாராளுமன்ற அரசியலுக்குள்
தக்க வைப்பதற்காகவா? ஏகாதிபத்தியங்களையோ அல்லது
இந்திய அதிகாரவர்க்கத்தையோ எதிர்த்து பேசாமல் அல்லது
பேச்சில் மட்டுமே எதிர்ப்பை வைத்துக்கொண்டு தமிழகத்தில்
இருக்கும் மொழி சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமே
நீங்கள் கட்டமைக்கும் தேசியம் யாருடைய நலனைக்
காப்பாற்ற? உலக,இந்திய,தமிழக,முதலாளித்துவ
ஆதிக்கசாதி வட்டங்களைச் சார்ந்த ஒட்டுண்ணிகளை
காப்பாற்றத்தானே உங்கள் தேசியம் பயன்படும்.ஆனாலும்
உங்களுக்கு அதிர்ஸ்டம் குறைவு என்றுதான் தோன்றுகிறது
சீமான்.பணம் கொடுத்து வாக்குகளை அறுவடை செய்கிற
நிலை அமோகமாக வளர்ந்துவிட்ட தமிழகத்தில் நீங்கள்
எவ்வளவு தூரம் சமரசமாகப் போனாலும் உங்கள்
அரசியல் எதிர்காலத்துக்கான வாய்ப்பு குறைவாகத்தான்
இருக்கிறது.



தலித்துகளுக்கு பிரபாகரனின் சுயமரியாதை தேவை இல்லை
தமிழர்களுக்கு பிரபாகரனின் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேவை
இல்லை.வெறும் உங்கள் உணர்சிப்பேச்சுக்களுக்கு கை
தட்டும் வாக்களிக்கும் கூட்டமாக மட்டும் தமிழர்கள் போதும்
அப்படித்தானே சீமான்? திட்டமிட்ட செயல்பாடுகளுடன்
தமிழர் நிலப்பரப்பில் இந்திய பார்ப்பன பனியா அதிகார
வர்க்கம் மேற்க்கொண்டு வரும் பிற மாநிலத்தவரை குடி
ஏற்றுவது,வேலை வாய்ப்புகளைப் பறிப்பது போன்ற
செயல்பாடுகளையும்,நீண்ட கால நடவடிக்கைகளாக இந்து
இந்தி இந்தியா என்கிற கட்டமைப்புக்குள் தமிழ் தேசிய
இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயல்பாடுகளை
நாம் குறைத்து மதிப்பிடுகிறோம் என்றோ அல்லது
புறக்கணிக்கிறோம் என்றோ அர்த்தம் கிடையாது.நமது
நோக்கமெல்லாம் தமிழ்த்தேசிய கோரிக்கை என்பதும்,
தமிழ்தேச விடுதலை என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பிலும்
சாதிய ஒழிப்பிலும் நேர்மையாக இருக்கும் வர்க்க
கண்ணோட்டம் கொண்டவர்களால் முன்னெடுக்கப்பட
வேண்டும் என்பது மட்டுமே.



சீமானையே அதிகம் பேசியாகிவிட்டது.கொஞ்சம் சீமான்
எதிர்ப்பாளர்களையும் கவனிக்க வேண்டி உள்ளது.
ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவான அரசு சாரா
நிறுவனங்களின் (N.G.O) சித்தாந்தத்தை தமிழகத்தில்
மொத்தக் குத்தகைக்கு எடுத்து விநியோகித்துக்கொண்டு
இருப்பவர் அ.மார்க்ஸ்.அந்த வேலைக்கு காந்தியை
தாராளமாக பயன்படுத்துவார் அதில் நமக்கு
பிரச்சணைகள் இல்லை.பெரியாரையும் அம்பேத்கரையும்
தனது ஏகாதிபத்திய ஆதரவு அரசியலுக்கு ஏற்ப இவர்
பயன்படுத்திக்கொள்வதை இவரது எழுத்துக்களை சரியாக
கவனிப்பவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடியும்.
அதுதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயம்.
சரி அது ஒரு புறம் இருக்கட்டும்.இவரது ரசிகர் சுகுணா
திவாகர் சீமானுக்கு எதிராக வைத்த விமர்சனங்களில்
இருக்கும் அரசியலையும் நாம் கவனிக்க வேண்டி
இருக்கிறது.



ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய
அடையாளம் வகிக்கும் முக்கியத்துவத்தை நீர்த்துப்
போகச் செய்வதில் மக வினர் மற்றும் பின்
நவீனத்துவவாதிகள் என்று இரண்டு பிரிவினரே தமிழக
அரசியல் பரப்பில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.
தமிழ் தேசியம் என்கிற கருத்தியலை முன்வைக்கும்
பிழைப்புவாதிகள்,சித்தாந்த வழிகாட்டல் அற்றவர்கள்
செய்கிற தவறுகளைப் பொதுமைப்படுத்தி
தமிழ்த்தேசியம் என்கிற கருத்தியலையே சிதைப்பது
என்பதைத்தாண்டி இவர்களுக்கு வேறு நோக்கங்கள்
இருப்பதாக நமக்கு தெரியவில்லை.



என்ன சொல்லியிருந்தார் சுகுணா தனது கட்டுரையில்
திருமாவளவன் தமிழகத்தில் ஒரு மக்கள் பிரதிநிதி
அவர் வேற்றுநாட்டு அதிபரைச் சந்திக்கப் போகும்
போது அரசு ஒழுங்குகளுக்கு உட்பட்ட
வழக்கங்களுடன்தான் நடக்க முடியும்.
ராஜபக்ஷேவின் மூக்கில் குத்து விட்டு பஞ்ச் டயலாக்
பேசுவதோ, அல்லது ராஜபக்ஷேவின் நாற்காலிக்குக்
கீழே டைம்பாம் வைப்பதோ, குண்டூசி செருகுவதோ
ரஜினி படங்களில் மட்டும்தான் சாத்தியம்.சரி இந்தக்
கருத்தை ஒப்புக்கொள்ளலாம்,ஆனால் ஒட்டுமொத்த
இலங்கைத்தீவின் உழைக்கும் மக்களின் சமூக
அரசியல் விடுதலைக்குமான போராட்டத்தை ஈழ
விடுதலைப்போராட்டத்தின் வழியாக நடத்திக்
கொண்டுருந்த பிரபாகரன்,மிக சுலபமாக இந்திய
இராணுவத்தின் முழு ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு
வரப்படக் கூடிய இலங்கையில் இருந்துகொண்டு
தினமும் இந்தியாவை எதிர்த்து பத்து அறிக்கைகளை
விட வேண்டும் இல்லை என்றால் அவர்கள் இந்திய
சார்பாளர்கள்,ஏகாதிபத்திய சார்பாளர்கள்,வலதுசாரிகள்
என்றெல்லாம் முத்திரை குத்த எங்களுக்கு உரிமை
உண்டு என்று எண்ணி செயல்பட்டதை என்னவென்று
சொல்ல ? புலிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக
இந்தியாவை எதிர்த்து களத்தில் சமராடித்தான்
மறைந்தார்கள் என்பது வேறு விடயம்.




தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்து தமிழுணர்வு,
பகுத்தறிவு, இன உணர்வு ஆகிய அரசியல் களங்களில்
குறிப்பிட்ட காலம் வரையிலாவது அர்ப்பணிப்பு
உணர்வோடும் லட்சிய வேட்கையோடும் தீவிரமாகப்
பங்களித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு என்றும்
எழுதியிருந்தார்,பெரியாருக்கு பிறகான திராவிட அரசியல்
என்பதை எவ்வாறு காண்பது என்பதில் தனது வசதிக்கு
ஏற்ற முறையைகடைபிடிக்கும் சுகுணா திவாகரை நாம்
மறுக்க வேண்டி இருக்கிறது.பகுத்தறிவு,தமிழுணர்வு,இன
உண்ர்வு ஆகியவைகள் மட்டுமே போதுமென்றால்
அண்ணாவும்,கருணாநிதியும் பெரியாரிடமிருந்து பிரிந்து
இருக்க வேண்டிய அவசியமே இல்லை ஐயா. தமிழக
முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கும் பதவி அதிகாரத்தை
சுவைப்பதற்கும் ஒடி வந்த கூட்டம் அதன் இயல்பாகவே
ஈழ்த்தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது.தந்தைக்கு
துரோகம் செய்தவர்களுக்கு தம்பிக்கு துரோகம் செய்வது
கடினமா என்ன ? தமிழுணர்வு.பகுதறிவு.இன உணர்வு
எல்லாம் இவர்கள் தங்களின் உண்மை முகத்தை
மறைத்து மக்கள் முன் நடிப்பதற்காக உபயோகித்த
விடயங்கள்தான்.



திமுகவை விட குறுகிய காலத்திலேயே தேர்தல்
அரசியலில் நீர்த்துப்போன திருமாவளைவை
தூக்கிப் பிடிக்கலாம் அவரது கடந்த காலத்தைக்
காட்டி,தமிழக ராஜபட்ஸெவான கருணாநிதியை
தூக்கிப் பிடிக்கலாம் அவரது கடந்த காலத்தை
காட்டி என்பவர்கள் சீமான் மீது விமர்சனம்
வைப்பதை என்ன சொல்ல? என்னவாக
இருந்தார்கள் என்பதை வைத்து ? என்னவாக
இருக்கிறார்களோ அதை நியாயப்படுத்த
இயலுமென்றால் சீமானை நியாய
படுத்துவதற்குமான காரணங்களும் உற்பத்தி
செய்யபடுவது இயல்பானதாகி
விடும் இல்லையா?



தேவர் ஜெயந்தி வரலாற்றின் அவமானம் என்கிற
கட்டுரையில் கருணாநிதி தேவர் சிலைக்கு
மாலை அணிவிக்கபோகாததை பெரிய
முற்போக்காக சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல்,
தன்னுடைய கருத்தியல் அடிப்படைகளை
கொஞ்சம் கொஞ்சமாக நழுவ விடுகிற திமுக
சாதி ஒட்டுக்காக எந்த சமரசத்தையும் செய்து
கொள்ள தயாராகத்தானிருக்கும் என்று
முடிக்கிறார்.இதுவரை சாதி ஒட்டுக்காக திமுக
சமரசம் செய்துகொண்டது இல்லையோ
கேட்கையில் எதைக் கொண்டு சிரிப்பது என்றே
தெரியவில்லை.ஒரு தொகுதியில் எந்த
சாதி பெரும்பான்மையாக இருக்கிறதோ அந்த
சாதி வேட்பாளரையே நிறுத்துவது என்கிற
முறை தமிழக தேர்தல் வரலாற்றில் தோன்றி
பல காலமாகி விட்டதே.அதற்கு சி.பி.ஐ
சி.பி.எம் என்று மார்க்சிய முகமூடி மாட்டிக்
கொண்டவர்களே விதிவிலக்கு இல்லை
என்னும்போது திமுக எந்த மூலைக்கு? அது
சரி சி பி எம் மின் வரதராஜன் தேவர் சிலைக்கு
மாலை போட்டதற்கு பிறகும் கூட காம்ரேட்
என்று அழைக்க தகுதியானவர்தானா?




இன்னொன்றையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்
பத்தாயிரம் கோடிகளுக்கும் மேல் செலவு
செய்யப்படாமல் இருந்த தகவல் வெளியாகி
சர்ச்சை கிளம்பியது. மாநில அளவிலும்
மாவட்டங்கள் தோறும் வன்கொடுமை தடுப்புச்
சட்டங்களின் கீழ் வழக்குகள் முறையாக
பதிவு செய்யப்படுகிறதா என்பதை
கண்காணிக்கவும்.நடவடிக்கை எடுக்கவும் அரசு
சார்பாக குழுவை அமைக்க வேண்டும் என்ற
உச்சநீதிமன்றத்தில் உத்தரவை அமல்படுத்தால்
வைத்திருக்கிறது கருணாநிதி அரசு.ஆதிக்க
சாதியினர் வன்கொடுமைகளுக்கு எதிராக
தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தால் ஒட்டு
வங்கி பறிபோய் விடும் என்பதற்காக
கண்டுகொள்ளாமல் இருக்கும் கருணாநிதியை
ஆதரிப்பதற்கு காரணம் கண்டுபிடிக்க
முயலுபவர்களுக்கு சீமான் மீது விமர்சனம்
செய்ய தகுதி உள்ளதா என்பதை அவர்களே
கேட்டுக் கொள்ளட்டும்.இன்னும் விரிவாக
எல்லாம் எழுத விருப்பமில்லை.



தங்களின் சொந்த சுயநலம் சார்ந்த வாழ்வியல் நலன்களுக்காக
திருமாவையும்,கருணாநிதியையும் ஆதரிப்பவர்கள்,இந்திய,
தமிழக அரசுகள் என்பது ஆதிக்கசக்திகளுக்கு சேவை
செய்யவே உருவாக்கப்பட்ட கருவிகள் என்பதை மறைத்து
புனிதபடுத்தி,இந்தசுரண்டல் சமூக அமைப்புக்குள்ளேயே
தீர்வுகளைக் கண்டுவிடலாம் என்கிற அரசுசாரா
நிறுவனங்களின் அரசியலை முன்னெடுபவர்கள் சமூகத்துக்கு
உதவிகரமானவர்களாக அமைவது சாத்தியமில்லை
என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான்.



சில நாட்களுக்கு முன்னால் சிரஞ்ஜீவி கட்சி துவங்கி
இருப்பதையும்,விஜயகாந்த் கட்சி துவங்கி
இருப்பதையும் இந்திய ஜனநாயகத்தின்
சாதனையாகக் காட்டி தன் வாசகருக்கு பதில்
அளித்திருந்தார் ஜெயமோகன்.நாம் அதை எவ்வாறு
பார்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க
வேண்டும்.ஒவ்வொரு கட்சியின் பின்னும் அமைப்பின்
பின்னும் திரளும் மக்கள் கூட்டதின் பெரும்பாலானோர்
ரசிக மனபான்மை கொண்டவர்களாகவே தேங்கிப்
போய்விடுவதும்.தலைமையை வழிபட்டுக்
கொண்டிருப்பதும்தான் இயல்பாக நடக்கிறது.
சாதிய அடையாளம்.மத அடையாளங்கள் கீழான
கட்சிகளை தவிர்த்த இதுபோன்ற நடிகர்களின்
கட்சிகளில் சேரும் கூட்டங்களும் வர்க்க
அரசியலிலிருந்து அந்நியபடுத்தபடுவதே நடக்கிறது.




வர்க்க அரசியலை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவது
என்கிற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின்
அடிப்படையில்தான் இது போன்ற கட்சிகள் முளைக்க
வைக்கப்படுகின்றன.மத சாதி அடையாள கட்சிகளின்
எல்லை தாண்டி சினிமா நடிகர்களின் பின்னால்
இருப்பவர்களும் நிறுவனபடுத்தப் படுவது அதிகார
வர்க்கத்துக்கு உதவியாகவே அமையும் என்பதை
நாம் கவனத்தில்கொள்ள வேண்டி இருக்கிறது.
தலித்திய அடையாள அரசியலிலும் கூட இன்றைக்கு
கட்சியை மையப்படுத்தி உருவான தலைமை அதன்
கீழ் இரண்டாம் மட்டத்தில் இருப்பவர்கள் தவிர மற்ற
பெரும்பாலான மக்கள் தங்களுக்கும் தலைமைக்குமான
வர்க்க வேறுபாடுகளை அடையாளம் கண்டுகொள்ளும்
நிலையை அடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
இந்த நிலையில்சீமான் கட்சி ஆரம்பித்தால் இன
அடையாளத்தின் கீழ் ரசிக மன்ற அரசியல்தான்
உருவாகுமே தவிர வேறு உருப்படியான விசயங்களை
எதிர்பார்க்க முடியாது.இறுதியாக ஒரு கேள்வியுடன்
இந்த பதிவை முடித்துக் கொள்ளலாம்.



தமிழகத்தில் இருக்கும் திமுக,அதிமுக.சிபிஐ.சிபிம்.மதிமுக.
பாமக.விசி,நாம் தமிழர்,சில போலி மார்க்சிய லெனிய
கட்சிகள்,அறிவுஜீவிகள் பின்னாலும் மற்றும் ஏதேனும்
அமைப்புகளிலும் கட்சிகளிலும் இருந்துகொண்டு சுயத்தை
அடகுவைத்துவிட்டு ரசிகனாக மட்டுமே இருக்கும் நாம்
அணைவரும் நாகரிகமான மனிதர்களாக,தமிழர்களாக
இணைவதற்கு இன்னும் எத்தனை முத்துக்குமார்களை
தீக்குளிக்க வைக்கப் போகிறோம்?

ஸ்டாலின்குரு
stalinguru@gmail.com

46 comments:

நாய் சேகர் said...

ஸ்டாலின் குரு அருமையான பதிவு

eezha muthukumaran said...

//ஆனால் ஒட்டுமொத்த
இலங்கைத்தீவின் உழைக்கும் மக்களின் சமூக
அரசியல் விடுதலைக்குமான போராட்டத்தை ஈழ
விடுதலைப்போராட்டத்தின் வழியாக நடத்திக்
கொண்டுருந்த பிரபாகரன்,மிக சுலபமாக இந்திய
இராணுவத்தின் முழு ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு
வரப்படக் கூடிய இலங்கையில் இருந்துகொண்டு
தினமும் இந்தியாவை எதிர்த்து பத்து அறிக்கைகளை
விட வேண்டும் இல்லை என்றால் அவர்கள் இந்திய
சார்பாளர்கள்,ஏகாதிபத்திய சார்பாளர்கள்,வலதுசாரிகள்
என்றெல்லாம் முத்திரை குத்த எங்களுக்கு உரிமை
உண்டு என்று எண்ணி செயல்பட்டதை என்னவென்று
சொல்ல ? புலிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக
இந்தியாவை எதிர்த்து களத்தில் சமராடித்தான்
மறைந்தார்கள் என்பது வேறு விடயம்.//

azhuthamaaga solla pada vendiya visayam.. katturaikku vaazhthukkal thozhar.

ஈழமுத்துக்குமரன் said...

தமிழக அரசியல் பரப்பில் ராஜீவ் காந்தி மரணத்தை கொண்டு ஒப்பாரி வைக்கும் சில ஓட்டரசியல் கட்சிகளை தாண்டி, புலியெதிர்பு அரசியலில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் நீங்கள் குறிப்பிடும் இரண்டு தரப்புகளான பின்னவீத்துவவாதிகளும், ம.க.இ.கவினரும்தான். சிங்களப் பேரினவாத அரசும் அவர்களது அடியார்களும் புலிகளைப் பற்றி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையே, இலக்கியம் என்ற பெயரிலும், மார்க்சிய பார்வை என்ற பெயரிலும் தமிழக அரசியற் பரப்பில் இவர்கள் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள், இவற்றுக்கெதிரான உடனுக்குடனான வலுவான விமர்சணங்களை நாம் இது போன்ற பொது வெளியில் நாம் தொடர்ந்து எழுப்பவேண்டும். அதனை நீங்கள் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். நன்றி!!

தோழமையுடன்
ஈழமுத்துக்குமரன்

K.R.அதியமான் said...

///ஆனால் ஒட்டுமொத்த
இலங்கைத்தீவின் உழைக்கும் மக்களின் சமூக
அரசியல் விடுதலைக்குமா.ன போராட்டத்தை ஈழ
விடுதலைப்போராட்டத்தின் வழியாக நடத்திக்
கொண்டுருந்த பிரபாகரன்,////

Biggest joke of the year, Comrade. பிரபாகரன் உழைக்கும் வர்கத்திற்காக போராடவில்லை. அவர் ஒரு வலதுசாரி, ஃபாசிஸ்ட். இதை உணர உமக்கு வயதும், அனுபவமும், வாசிப்பனுபவம் பத்தாது. மயக்கத்தில் இருக்கிறீர்.

http://www.kalachuvadu.com/issue-116/page47.asp

கட்டுரை

வன்னியில் என்ன நடந்தது?

களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு

ஈழப்போரின் இறுதி நாட்கள்

காலச்சுவடு கட்டுரை ஈழப்போரின் இறுதி நாட்களை விரிவாக சொல்கிறது. அதில்
விவரிக்கப்பட்ட நிகழ்வுகள், தகவல்கள் எல்லாம் பொய்யானவை என்று எதிர்காலத்தில்
நிறுபிக்கப்பட்டால், நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார். ஆனால் அவை உண்மைகள் என்று நிறுபனமானால், நீங்க மன்னிப்பு கேட்கத் தயாரா ?

ஈழ போரில் சிக்குண்ட பல லச்சம் ஈழ மக்களின் சாட்சியங்கள், எதிர்காலத்தில் (ஒரு 5 வருடங்களுக்குள்) பதிவாகும் ; வெளியாகும். அப்ப தெரியும், எது உண்மை, எது பொய் என்று.

ஸ்டாலின் குரு said...

நன்றி நாய் சேகர்

ஸ்டாலின் குரு said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஈழமுத்துக்குமரன்

கண்டிப்பாக இவர்களை அம்பலப்படுத்துவதை தொடர்வோம்

ஸ்டாலின் குரு said...

Biggest joke of the year, Comrade.//


உங்களை சிரிக்க வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான் :))


பிரபாகரன் உழைக்கும் வர்கத்திற்காக போராடவில்லை.
அவர் ஒரு வலதுசாரி, ஃபாசிஸ்ட்.இதை உணர உமக்கு
வயதும், அனுபவமும், வாசிப்பனுபவம் பத்தாது.
மயக்கத்தில் இருக்கிறீர்.//

அப்புறம் he he .என்ன சொல்றதுனே புரியலை
ஈழம் என்றும் புலிகள் என்றும் வந்துவிட்டால்
அடித்துக்கொள்கிற அ.மார்க்ஸ் அன் கோவும்
காலச்சுவடும் ஒன்றாகி விடுகிறார்கள்.
வெளிப்படையாக முதலாளித்துவவாதி என்று
உங்க்ளை வெளிப்படுத்திக்கொள்ளும் நீங்களும்
மக இக வினரும் ஒன்றாகி விடுகிறீர்கள்
உண்மையில் புலிகள் மிகப் பெரிய சாதனையத்தான்
செய்திருக்கிறார்கள் இந்துதுவா அடிவருடிகள்,இந்துதுவா
எதிர்ப்பாளர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்கள்,
முதலாளித்துவவாதிகள்,இடதுசாரிகளாக தங்களையும்
காட்டிக்கொள்ப்வர்கள் என்று இத்துணைபேரை ஒன்றாக்கி
விட்டார்களே

ஸ்டாலின் குரு said...

பிரபாகரன் உழைக்கும் வர்கத்திற்காக போராடவில்லை.
அவர் ஒரு வலதுசாரி, ஃபாசிஸ்ட்.இதை உணர உமக்கு
வயதும், அனுபவமும், வாசிப்பனுபவம் பத்தாது.
மயக்கத்தில் இருக்கிறீர்.

நீங்களாவது என்னை யூத் என்று சொல்லினீர்களே நன்றி :)
எனது வாசிப்பனுபவம் குறைவுதான் கண்டிப்பாக உங்கள்
அளவு படிக்கவில்லை.மயக்கமெல்லாம் வாரம் ஒரு
தடவையோ அல்லது இரு வாரத்துக்கு ஒரு முறையோதான் :)

ஸ்டாலின் குரு said...

http://www.kalachuvadu.com/issue-116/page47.asp

கட்டுரை

வன்னியில் என்ன நடந்தது?

களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு

ஈழப்போரின் இறுதி நாட்கள்//


http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_18.html

அந்த காலச்சுவடு கட்டுரைக்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்

ஸ்டாலின் குரு said...

காலச்சுவடு கட்டுரை ஈழப்போரின் இறுதி நாட்களை விரிவாக சொல்கிறது. அதில்
விவரிக்கப்பட்ட நிகழ்வுகள், தகவல்கள் எல்லாம் பொய்யானவை என்று எதிர்காலத்தில்
நிறுபிக்கப்பட்டால், நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார்.
ஆனால் அவை உண்மைகள் என்று நிறுபனமானால், நீங்க மன்னிப்பு கேட்கத் தயாரா ?

தாராளமாக மன்னிப்பு கேட்பேன்

ஸ்டாலின் குரு said...

ஈழ போரில் சிக்குண்ட பல லச்சம் ஈழ மக்களின் சாட்சியங்கள்,
எதிர்காலத்தில் (ஒரு 5 வருடங்களுக்குள்) பதிவாகும் ;
வெளியாகும். அப்ப தெரியும், எது உண்மை, எது பொய் என்று.//

அவ்வளவு நாள் ஏன் காத்திருக்க வேண்டும் அதியமான்?

அமெரிக்காவின் செயற்கைகோள்களாலும்,ஐக்கிய நாடுகள்
சபையின் செயற்கைகோள்களாலும் வன்னியின் இறுதிப்
போர்க்களம் முழுமையாக வானில் இருந்து படம்
பிடிக்கபட்டது.போதாக்குறைக்கு இரண்டு முறை
அமெரிக்க அழுத்தங்களால் தள்ளி வைக்கப்பட்ட
இந்தியாவின் உளவு செயற்கைகோளும்
ஏப்ரல் மாத துவக்கத்தில் விண்ணுக்கு அனுப்பபட்டு
வன்னிப் போர்க்களம் பதிவு செய்யப்பட்டது.

புலிகள் மக்கள் மேல் தாக்குதல் நடத்தியிருந்தால்
அந்தப் பதிவுகளை இந்த நாடுகள் தாராளமாக
வெளியிடலாமே யார் தடுத்தது?

முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படும்
புலிகளின் மீது போர்க்குற்றம் சுமத்தி ஐந்து
ஆண்டுகள் தடையை நீட்டிக்கும் அளவுக்கு
அமெரிக்காவுக்கு புலிகள் ஏற்ப்படுத்தியிருக்கும்
கோபத்தின் பின்னால் இருக்கும் அவர்களின்
ஏகாதிபத்திய எதிர்ப்பு சில .......... புரியும்
என்று நாம் எதிர்பார்க்கவில்லை

K.R.அதியமான் said...

///ஈழம் என்றும் புலிகள் என்றும் வந்துவிட்டால்
அடித்துக்கொள்கிற அ.மார்க்ஸ் அன் கோவும்
காலச்சுவடும் ஒன்றாகி விடுகிறார்கள்.
வெளிப்படையாக முதலாளித்துவவாதி என்று
உங்க்ளை வெளிப்படுத்திக்கொள்ளும் நீங்களும்
மக இக வினரும் ஒன்றாகி விடுகிறீர்கள்
உண்மையில் புலிகள் மிகப் பெரிய சாதனையத்தான்
செய்திருக்கிறார்கள் இந்துதுவா அடிவருடிகள்,இந்துதுவா
எதிர்ப்பாளர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்கள்,
முதலாளித்துவவாதிகள்,இடதுசாரிகளாக தங்களையும்
காட்டிக்கொள்ப்வர்கள் என்று இத்துணைபேரை ஒன்றாக்கி
விட்டார்களே
///

ஆம். மிக எளிமையான காரணம் : இவர்கள் அனைவரும் உண்மைகளை தேடுகிறார்கள். while you refuse to look at facts and reality. that is all.

K.R.அதியமான் said...

முகாம்களில் இருப்பவர்கள், இப்போதே வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். இன்னும் சில மாதங்களில் முகாம்கள் இருக்காது. தேர்தலுக்கா சில டிராமா. அதனால் தான் இத்தனை மாதங்கள் முகாம்கள் தொடர்கின்றன.

போசோனியா, ரவாண்டா, நாசி ஜெர்மனி, ஸ்டாலினின் ரஸ்ஸியா, போல் பொட்டின் கம்போதியா, பினாச்சேவின் சிலி போன்ற பல்வேறு நாடுகளில் அடக்குமுறை காலங்களில் நடந்த நிகழ்வுகள் பல பத்தாண்டுகள் கழித்து, விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு, முழு உண்மைகள் இன்று வெளியாகிவிட்டன. அனைத்து தரப்பினராலும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள். அதே போல எதிர்காலத்தில் ஈழப்பகுதிகளில் நடந்த நிகழ்வுகள், மீறல்கள் பற்றிய முழு உண்மைகளும் வெளிவரும். சந்தேகமில்லை. இலங்கையில் இன்று போல என்றும் ஒரு ஃபாசிச அதிபர் ஆளப்போவதில்லை. எதிர்காலத்தில் மாற்றம் வரும். Rajapakse may win this time but may be replaced in next elections ' Executive Presidency may be abolished in future by a moderate and non-chauvunisitic govt. and a Truth and Reconciallation Commission (on the model of other nations emerging from civil war) may be formed to bring out truth.

and Eelam Tamils who may loose their fear of LTTE and Sinhala govts, in future will record their observations in future. many accounts will emerge. wait and see. ok.

ராஜபக்செ said...

super maamu ... Athiyaman...nandraaga kanavu kaangiraar. Kollywood-il kathai aasiriyarkalukku demand...thayavu seithu varavum.... athiyamaan nijamalume stories-manufacturing seikiraar. Please send him to cast vote to Srilankan presidential elections. Josiathil Athiyamaan eppothu saavar endru date & time solla sollungal paarkalaam

ஸ்டாலின் குரு said...

ஆம். மிக எளிமையான காரணம் : இவர்கள் அனைவரும் உண்மைகளை தேடுகிறார்கள். while you refuse to look at facts and reality. that is all.//


:)

ஸ்டாலின் குரு said...

ஆமாம் முதலாளித்துவ ஜனநாயகம் என்றால்
என்ன என்றே தெரியாத ஆனால் கல்லூரி நாட்களில்
மிக பெரிய மார்க்சியவாதியாக இருந்த
நீங்கள்,இந்துதுவ பயஙகரவாதத்தை தூக்கிப் பிடிக்கும்
காலச்சுவடு வகையறாக்கள்.கம்யூனிஸ்டு கட்சி
அறிக்கையை கூட படிக்காமல் மன்நெருக்கடிக்கு
உள்ளான மார்க்சியர்களின் எழுத்துக்களுக்கு
தாவியவர்கள்.தமிழகத்த்ல் இந்திய புரட்சி
செய்துகொண்டிரு இருப்பவர்கள் எல்லாம்
உண்மையை தேடுங்கள்.கண்டிப்பாக
கிடைக்கும்.

ஸ்டாலின் குரு said...

முதலாளித்துவ நலனைக் காப்பது.ஏகாதிபத்தியங்களுக்கு
சேவை செய்வது.இந்திய அதிகார வர்க்கத்துக்கு துணை
நிற்பது ஆகிய புள்ளிகளில் இவர்கள் அணைவரும்
இனைந்து நிற்கிறார்கள் என்பதுதான் இவர்களின்
புலிகள் எதிர்ப்பின் வழியே எளிதில் புரிந்து
கொள்ளக் கூடிய விசயம்.

K.R.அதியமான் said...

///முதலாளித்துவ நலனைக் காப்பது.ஏகாதிபத்தியங்களுக்கு
சேவை செய்வது.இந்திய அதிகார வர்க்கத்துக்கு துணை
நிற்பது ஆகிய புள்ளிகளில் இவர்கள் அணைவரும்
இனைந்து நிற்கிறார்கள் என்பதுதான் இவர்களின்
புலிகள் எதிர்ப்பின் வழியே எளிதில் புரிந்து
கொள்ளக் கூடிய விசயம்.

//

that is your over simplification and very crazy assesment. Those who can analyse facts and info will know the truth. ok.

நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் அறிவீலிகள், ஆனால் நீங்கள் மட்டும் தான் எல்லாம் அறிந்த மேதை என்ற
delusion தான் உங்க பதிலில் இருந்து தெரிகிறது. ok. continue.

சாந்தி said...

கட்சிகளும் அரசியல் சக்திகளும் தங்கள் நலன்களுக்காக அவலப்பட்ட இனத்தின் மீதேறி அரசியல் செய்வது தமிழர் வரலாற்றில் புதுமையில்லையே.

சாந்தி

சாந்தி நேசக்கரம் said...

K.R.அதியமான் said...
போசோனியா, ரவாண்டா, நாசி ஜெர்மனி, ஸ்டாலினின் ரஸ்ஸியா, போல் பொட்டின் கம்போதியா, பினாச்சேவின் சிலி போன்ற பல்வேறு நாடுகளில் அடக்குமுறை காலங்களில் நடந்த நிகழ்வுகள் பல பத்தாண்டுகள் கழித்து, விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு, முழு உண்மைகள் இன்று வெளியாகிவிட்டன. அனைத்து தரப்பினராலும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள். அதே போல எதிர்காலத்தில் ஈழப்பகுதிகளில் நடந்த நிகழ்வுகள், மீறல்கள் பற்றிய முழு உண்மைகளும் வெளிவரும். சந்தேகமில்லை.
*************************************

வரலாறுகள் ஆவணப்படுத்தப்படும் உண்மைகள் வெளிவரும். நாங்கள் இழந்தவற்றை மீளப்பெறமுடியாதல்லவா அதியமான் ?

Anonymous said...

//நாம்
அணைவரும் நாகரிகமான மனிதர்களாக,தமிழர்களாக
இணைவதற்கு இன்னும் எத்தனை முத்துக்குமார்களை
தீக்குளிக்க வைக்கப் போகிறோம்?//

மிகத்துயரமான ஒரு வினா...
சிறப்பான கட்டுரை ஸ்டாலின்.
-மயில்வண்ணன்.

K.R.அதியமான் said...

சாந்தி ரமேஷ்,

////வரலாறுகள் ஆவணப்படுத்தப்படும் உண்மைகள் வெளிவரும். நாங்கள் இழந்தவற்றை மீளப்பெறமுடியாதல்லவா அதியமான் ?
////

ஆம், இழந்தவற்றை மீளப்பெறமுடியாதுதான். அதற்க்கு நீங்க புலி தலைமையை தான் blame செய்ய வேண்டும். பார்கவும் :

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39363

Lost opportunities for the Tamils

eezha muthukumaran said...

Hi Com,

Please read the discussions going on in the below link in, 'inioru'.

http://inioru.com/?p=7741

Eeezha Muthukumaran

ஸ்டாலின் குரு said...

முகாம்களில் இருப்பவர்கள், இப்போதே வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். இன்னும் சில மாதங்களில் முகாம்கள் இருக்காது. தேர்தலுக்கா சில டிராமா. அதனால் தான் இத்தனை மாதங்கள் முகாம்கள் தொடர்கின்றன.

போசோனியா, ரவாண்டா, நாசி ஜெர்மனி, ஸ்டாலினின் ரஸ்ஸியா, போல் பொட்டின் கம்போதியா, பினாச்சேவின் சிலி போன்ற பல்வேறு நாடுகளில் அடக்குமுறை காலங்களில் நடந்த நிகழ்வுகள் பல பத்தாண்டுகள் கழித்து, விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு, முழு உண்மைகள் இன்று வெளியாகிவிட்டன. அனைத்து தரப்பினராலும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள். அதே போல எதிர்காலத்தில் ஈழப்பகுதிகளில் நடந்த நிகழ்வுகள், மீறல்கள் பற்றிய முழு உண்மைகளும் வெளிவரும். சந்தேகமில்லை. இலங்கையில் இன்று போல என்றும் ஒரு ஃபாசிச அதிபர் ஆளப்போவதில்லை. எதிர்காலத்தில் மாற்றம் வரும். Rajapakse may win this time but may be replaced in next elections ' Executive Presidency may be abolished in future by a moderate and non-chauvunisitic govt. and a Truth and Reconciallation Commission (on the model of other nations emerging from civil war) may be formed to bring out truth.

and Eelam Tamils who may loose their fear of LTTE and Sinhala govts, in future will record their observations in future. many accounts will emerge. wait and see. ok.//

ம்ம் (கதை கேட்கறப்போ எங்க பாட்டி ம்ம கொட்ட
சொல்லி இருக்காங்க) :)

ஸ்டாலின் குரு said...

///முதலாளித்துவ நலனைக் காப்பது.ஏகாதிபத்தியங்களுக்கு
சேவை செய்வது.இந்திய அதிகார வர்க்கத்துக்கு துணை
நிற்பது ஆகிய புள்ளிகளில் இவர்கள் அணைவரும்
இனைந்து நிற்கிறார்கள் என்பதுதான் இவர்களின்
புலிகள் எதிர்ப்பின் வழியே எளிதில் புரிந்து
கொள்ளக் கூடிய விசயம்.

//

that is your over simplification and very
crazy assesment. Those who can analyse
facts and info will know the truth. ok

சரி

ஸ்டாலின் குரு said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் அறிவீலிகள்,
ஆனால் நீங்கள் மட்டும் தான் எல்லாம் அறிந்த
மேதை என்ற delusion தான் உங்க பதிலில்
இருந்து தெரிகிறது. ok. continue.//


நான் அப்படிக் என்னைக் கருதிக்கொள்ளவில்லை

ஸ்டாலின் குரு said...

கட்சிகளும் அரசியல் சக்திகளும் தங்கள் நலன்களுக்காக அவலப்பட்ட இனத்தின் மீதேறி அரசியல் செய்வது தமிழர் வரலாற்றில் புதுமையில்லையே.

சாந்தி


ஆம் தோழி

ஸ்டாலின் குரு said...

//நாம்
அணைவரும் நாகரிகமான மனிதர்களாக,தமிழர்களாக
இணைவதற்கு இன்னும் எத்தனை முத்துக்குமார்களை
தீக்குளிக்க வைக்கப் போகிறோம்?//

மிகத்துயரமான ஒரு வினா...
சிறப்பான கட்டுரை ஸ்டாலின்.
-மயில்வண்ணன்.



வருகைக்கு நன்றி மயில்வண்ணன்

ஸ்டாலின் குரு said...

eezha muthukumaran said...
Hi Com,

Please read the discussions going on in the below link in, 'inioru'.

http://inioru.com/?p=7741

Eeezha Muthukumaran



இணையத்தில் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை
ஈழ முத்துக்குமரன்.அந்த விவாதத்தை காபி செய்து
வீட்டில் வைத்து படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்

ஸ்டாலின் குரு said...

ஒரு விடயம் மறந்துவிட்டேன் அதியமான்

அமெரிக்க இந்திய செயறகைகோள்களில் இருந்து
வன்னி போர்க்கள பதிவுகளை மகிந்தரால் பெற
முடியாது சரி.சிங்கள ராணுவத்தின் ஆளில்லா
உளவு விமானங்களில் இருந்து பெற்ற பதிவுகள்
இருக்குமே.புலிகள் மக்கள் மீது தாக்குதல்
நடத்தி இருந்தால் அந்த பதிவுகளை தமிழ்
மக்களிடம் போட்டுக் காண்பித்து பார்த்தீர்களா
எப்படிபட்டவர்களிடம் இருந்து உங்களைக்
காப்பாற்றி இருக்கிறேன் என்று சொல்லி
வாக்கு கேட்கலாமே மகிந்தர்

செருப்படிதான் மக்களிடமிருந்து கிடைக்கும்
இல்லையா?

K.R.அதியமான் said...

அப்படி ஒரு வீடியோ சில மாதங்கள் முன்பு ஆர்குட்டில் பதித்தேன். சுட்டி தர முயல்கிறேன்.

புலிகள் எந்த தவறும், மீறல்களும் செய்யாது புனித போராளிகளா என்ன ?
இளம் சிறார்களை வலுக்கட்டாயாம இழுத்துச் சென்று தம்முடன் சேர்த்தல்,
தப்பி செல்ல முயன்ற ஈழ மக்களை அச்சுறுத்துதல், அவர்களை சுட்டது :
பாதுகாப்பு வளையத்தில் ஆர்டிலரி பீரங்ககிகளை நிறுவி ஷெல் அடித்தது (அதற்க்கு எதிர்வினை உருவாக வழி செய்தது) : இவை எல்லாம் நடக்கவில்லை என்று உறுதியாக, கோவையில் இருந்து கொண்டு நீங்க நம்பலாம். ஆனால் ஏற்கெனவே பல சாட்சியங்கள் உள்ளன. எதிர்காலத்தில் மேலும் பல ஆயிரம் சாட்சிகள் இதை உறுதி செய்தால் என்ன செய்வீர் ?

சிங்கள ராணுவத்தின் வன்கொடுமைகள், மீறலகள் பற்றி மாற்று கருத்தில்லை. ஆனால் புலிகளின் செயல்களை deny செய்கிறீர்கள்.

ஈழ மக்களுக்கு தெரியும் நடந்தது என்ன வென்று.

ஸ்டாலின் குரு said...

வழக்கமான உங்கள் பாணியிலான
வேலையை ஆரம்பித்துவிட்டீர்கள்
அந்த காலசுவடு கட்டுரையிலேயே நான்
போதுமான விளங்க்கங்களை அளித்து
விட்டதாக கருதுகிறேன்
இனிமேலும் உங்களுக்கு பதில் அளிக்க
விரும்பவில்லை

மன்னிக்கவும்

K.R.அதியமான் said...

NO FIRE ZONE VIEDEO : (SL AIRFORCE DRONE CLPG)
Srilankan Civilians held hostage by LTTE

http://www.youtube.com/watch?v=-yWUA-_xjzk

I welcome anyone to disprove this above video.

watch that one carefully.
crowds in a open space will NOT nornally confine to a pakka rectangle like area but the fringes will be blurred with all milling about casually.

here humans are herded like cattles by gun wielding
men. unless the people feel threatened, they will
not stand in straingh lines. anyway no need for such a 'dispiline' on a beach.

this video was taken three days back and given to all media.

truth will emerge soon when lacs of Tamils emerge from the present trauma

K.R.அதியமான் said...

that was my orkut post in May 09

K.R.அதியமான் said...

ஒரு மறத்தமிழச்சியின் பேட்டி :
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8013016.stm
'I thought, I won't survive'

Athavan said...

மிக நல்ல அலசல்.
இன்றைய நிலைமை, கீற்றில் கூறியது போல், முதலீடு இல்லாத புலி எதிர்ப்பு வருமானம் சேர்க்கும் காலம். புலி எதிர்ப்பில் இவர்கள் காட்டுவது நெடுங்காலம் தேக்கி வைத்திருந்த சிங்களப் புகைச்சல் தான். இவர்கள் இன்னும் நிறையக் குப்பைகளைக் குவிப்பார்கள்.

சீமானைப் பற்றி எனது கருத்து:
சீமான், ஒரு கருணாநிதி போலவோ, திருமா போலவோ வர வேண்டாம். ஒரு எம்ஜிஆரைப் போல் வரட்டுமே.

K.R.அதியமான் said...

////அந்த காலசுவடு கட்டுரையிலேயே நான்
போதுமான விளங்க்கங்களை அளித்து
விட்டதாக கருதுகிறேன்
இனிமேலும் உங்களுக்கு பதில் அளிக்க
விரும்பவில்லை

மன்னிக்கவும்
///

ஆம். எனக்கும், புலிகளை பற்றி இனியும் தொடர்ந்து விமர்சிக்க விருப்பமில்லைதான். ஆனால் உங்களை போன்றவர்கள் தொடர்து உண்மைகளை இணையத்தில் மறுக்கும் போது, படிப்பவர்களுக்கு விளக்கவே சுட்டிகளையும், தரவுகளையும் அளிக்க முயல்கிறேன்.

பிரபாகரன் கம்யூனிஸ்டாக என்றும் இருந்ததில்லை. மார்கிசிசம் பற்றிய போதுமான அறிவோ அல்லது அதன் மீது நம்பிக்கையோ கொண்டிருக்க்குவில்லை. வர்கம், சுரண்டல், பாட்டாளிவர்கம் : இவை பற்ற் எல்லாம் அவருக்கு அக்கரையோ, தெளிவான சித்தாந்தமோ என்றும் இருந்ததில்லை.
ஒரு வேளை அவர் ஈழம் வென்றிருந்தாலும், ஒரு வலதுசாரி சர்வாதிகாரத்தைதான் நிலைநாட்டியிருப்பார். பன்னாட்டு நிறுவனங்களை ‘தாராளமாக’ ஈழத்திற்க்கு அனுமதித்திற்பார்.

புலிகள் ஃபாசிசவாதிகளாக பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன என்பதை நிறுபிக்க ஒரு இறுதி சுட்டி :
(இதில் விவரிக்கப்ட்ட நிகழ்வுகள் நடந்ததுள்ளன. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் accurate ஆக இல்லாமல், மிகை படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் நிகழ்வுகள் உண்மைதான் :

LTTE murders and genocide :

http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE

and LTTE's methods to raise funds included arms, drugs
smuggling for anyone ; extortion from Eelam diaspora,etc
also they forced recruited boys.

See these too :

USD200 million profit margins maintain sophisticated Tamil Tiger war
http://www.janes.com/press/press/pc070719_1.shtml

from Jane's Defence Weekly :
http://www.janes.com/security/international_security/news/jwit/jwit070327_1_n.shtml

---------------------

சரி, இருக்கட்டும். சீமான் பற்றி உங்கள் கருத்துகள் சரிதான். ஏற்க்கிறேன். அவருக்கு ஆழமான வாசிப்பனுபவமோ, தெளிவான அரசியல் சித்தாந்தமோ இல்லை என்று தெரிகிறது.

ஆனால், இந்த ஒட்டு பொறுக்கி அரசியல் என்ற பிரயோகம் ஏற்க்கமுடியாது. இந்தியாவில் இருக்கும் தேர்தல் மற்றும் அரசியல் நிலைமைய மட்டும் கொண்டு பாராளுமன்ற அரசியல் அமைப்பையே கேள்விக்குள்ளாக்குவது சரியல்ல. மே.அய்ரோப்பா, கனடா போன்ற நாடுகளில் நிலவும் ‘ஒட்டு பொறுக்கி’ அரசியல் அமைப்பே சரியானது. அதை விட சிறந்த அமைப்பை மனிதன் இது வரை கண்டுபிடிக்கவில்லை.

மாவோ மற்றும் ஸ்டாலின் ஆட்சிகளில் ’ஓட்டு பொறுக்கி’ அரசியல் இல்லை தான். அதை தான் நீங்க ஏற்பீர்கள். ஆனால் விசியம் அறிந்தவர்கள் அப்படி நம்புவதில்லை.
ஜனனாயக முறைகளின் அருமை, அதை இழந்த பிறகுதான் புரியும்.

ஸ்டாலின் குரு said...

அந்த வீடியோ பதிவைத்தான் நான்
எனது காலசுவடு பற்றிய கட்டுரையில்
தர்க்கரீதியாக மறுத்திருக்கிறேன்.

ஸ்டாலின் குரு said...

உங்கள் ஈழம் தொடர்பான மொக்கைகளுக்கு
ஏற்கனவே ஆர்குட்டில் பதில் அளித்துவிட்டேன்
ஈழம் அமைந்திருந்தால் சோசலிச சார்பான
மக்கள் நல அரசு என்கிற வடிவத்திலான
க்யூப மாதிரிதான் அமையும் என்று பதில்
அளித்திருந்தேன்

சரி இனி உங்களுக்கு என் பதில் வராது

ஸ்டாலின் குரு said...

மிக நல்ல அலசல்.
இன்றைய நிலைமை, கீற்றில் கூறியது போல், முதலீடு இல்லாத புலி எதிர்ப்பு வருமானம் சேர்க்கும் காலம். புலி எதிர்ப்பில் இவர்கள் காட்டுவது நெடுங்காலம் தேக்கி வைத்திருந்த சிங்களப் புகைச்சல் தான். இவர்கள் இன்னும் நிறையக் குப்பைகளைக் குவிப்பார்கள்.

சீமானைப் பற்றி எனது கருத்து:
சீமான், ஒரு கருணாநிதி போலவோ, திருமா போலவோ வர வேண்டாம். ஒரு எம்ஜிஆரைப் போல் வரட்டுமே.//



கனவு காண்பதற்கான உங்கள்
உரிமையை மதிக்கிறேன் ஆதவன்
வேறென்ன சொல்ல

ஸ்டாலின் குரு said...

மிக நல்ல அலசல்.
இன்றைய நிலைமை, கீற்றில் கூறியது போல், முதலீடு இல்லாத புலி எதிர்ப்பு வருமானம் சேர்க்கும் காலம். புலி எதிர்ப்பில் இவர்கள் காட்டுவது நெடுங்காலம் தேக்கி வைத்திருந்த சிங்களப் புகைச்சல் தான். இவர்கள் இன்னும் நிறையக் குப்பைகளைக் குவிப்பார்கள்.//

ஆம் ஆதவன் நம்மால் முடிந்தவரை சுத்தப்படுத்தும்
பணியை செய்யலாம்

blackpages said...

இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் தந்தையே
இவர்களை மன்னியும் என்று இயேசு பானியில்
தான் அதியாமனை நாம் கருத வேண்டும் போல்
இருக்கிறது குரு



பிரபாகரன் கம்யூனிஸ்டாக என்றும் இருந்ததில்லை.
மார்கிசிசம் பற்றிய போதுமான அறிவோ அல்லது
அதன் மீது நம்பிக்கையோ கொண்டிருக்க்குவில்லை.
வர்கம், சுரண்டல், பாட்டாளிவர்கம் : இவை
பற்ற் எல்லாம் அவருக்கு அக்கரையோ,
தெளிவான சித்தாந்தமோ என்றும் இருந்ததில்லை.
ஒரு வேளை அவர் ஈழம் வென்றிருந்தாலும்,
ஒரு வலதுசாரி சர்வாதிகாரத்தைதான் நிலை
நாட்டியிருப்பார். பன்னாட்டு நிறுவனங்களை
‘தாராளமாக’ ஈழத்திற்க்கு அனுமதித்திற்பார்//

தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில்
பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க
பிரபாகரன் ஒப்புக்கொண்டிருந்தால் இந்த
இன அழிப்புப்போரை நிகழ்த்த இலங்கை
அரசை சர்வதேச முதலாளித்துவ
நாடுகள் அனுமதித்தே இருக்காது
என்கிற அடிப்படையைக் கூட மறந்து
விட்டு பேசுகிறார் பாவம்.

ஸ்டாலின் குரு said...

முற்றுப் புள்ளி வைத்த விவாதத்துக்கு
கமா போட்டுவிடாதீர்கள் நண்பா :)

K.R.அதியமான் said...

blackpages,

நான் அளித்த சுட்டிகள் அனைத்தும் ‘மொக்கை’ என்று ஒரே வார்த்தையில் நிராகரிக்கும் ஸ்டாலின் குருவின் பார்வைதான் சரி என்று நம்பும் உங்களை தான் பரமபிதா மன்னிக்க வேண்டும் !!!

Janes Defence Weekly மற்றும் இதர தரவுகள் பலவும், புலிகள் ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டு நிதி நிறுவன investments and shell companies and a network for smuggling arms, narcotics and any contraband for any group for a fee என்பதை நிறுபிக்கிறது. தமிழகத்திலும், இந்தியாவிலும் திருட்டு வி.சி.டிக்களை தயாரித்து விற்க்கும் ‘தொழிலிலும்’ முன்னோடிகள் என்று ஒரு தகவல் அறிந்தேன். you name it, they got it என்ற வகையில், அனைத்து வித ‘தொழில்களையும்’ செய்து, நிதி திரட்டி, தம் போராட்டத்தை தொடர்ந்தனர். and the gentleman who was arrested in Malaya some months back (thanks to the prompt info from our own IB) Mr.KP @ Padmanadhan : he was the kingpin of the network and no one know exactly how many millions or billions he controlled in countless numbered accounts from Cayman Islands to Swiss to Carribean and Eastern Europe and Thailand. All these milions or billion had a corrupting effect. and their internation enterprise would have put any MNC to a shame.

if, repeat, If Eelam was won, LTTE would operate all kinds of legal and illegal business enterprises and certainly collude with ethical and unethical MNCs and other 'bourgeouise' elements. They were already neck deep into it for decades, covertly.

I can only pity your naive attitutes.

by the way, i am posting this for the benefit of the readers of this blog and not for S.Guru or his Comrades who are too young and naive to loose their illusions about reality.

K.R.அதியமான் said...

திருட்டு வி.சி.டி தயாரித்து பெரிய அளவில் மார்கெட்டிங் செய்தன் byprodcut பற்றி ஒரு இணை தகவல்.
பிரபாகரன் புத்தங்கள் அதிகம் படித்ததை விட பன்னாட்டு படங்கள் (ராம்போ போன்ற போர் பாடங்கள்) மிக மிக அதிகம் பார்த்தவர். பெரிய கலெக்சன் வைத்திருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழக சினிமா இயக்குனர் பாரதிராஜா, வன்னி பகுதிகளுக்கு ஒரு திக் விஜயம் செய்தார். (அதை பற்றி 2005இல் ஒரு குமுதம் இதழில் சொல்லியிருந்தார்). பிராபகரனை சந்திதார். விடை பெறும் போது, தலைவர் பிரபாகரன் ஒரு பெரிய கலெக்சன் (சுமார் 100 குறுந்தகடுகள்) கொண்ட படங்களை பாரதிராஜவிற்கு பரிசளித்தார். (இதையும் அந்த பேட்டியில் சொல்லியிருந்தார்).
பெரிய முரண்நகை இது.

நாய் சேகர் said...
This comment has been removed by the author.

Post a Comment