Wednesday, August 12, 2009

மனித நாகரிகம் தோற்றுப்போகும் இடம்

தமிழக சிற்றிதழ் பரப்பில் சில மாதங்கள் முன்புவரை இருந்த புலிகளை தவிர்த்துவிட்டே ஈழ அரசியல் பேசவேண்டும் என்கிற போக்கும்,புலிகளின் போராட்ட முறையில் நிகழ்ந்த தவறுகளுக்கும் ஒரு விதத்தில் காரணியாக அமைந்த,சிங்கள அரச பயங்கரவாதம் உருவாக்கிய சூழலை விமர்சிப்பதை தவிர்க்கும் போக்கும் மறைந்து வெளிப்படையாகவே இன்று புலிகள் மீது அவதூறுகளை பரப்புவதன் மூலம்,சர்வதேச நாடுகள் குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கம் இழைத்த குற்றங்களை மூடி மறைத்து பாதுகாக்கும் நிலை தோன்றி இருக்கிறது.

ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிய புறநிலை
மதிப்பீடுகளையோ நேர்மையான விமர்சனங்களையோ
கொண்டிராத நபர்களின் நேர்காணல்களை தமிழக
சிற்றிதழ்கள் தொடர்சியாக வெளியிட்டு வருவதைப்
பார்க்கையில் நம்மால் இந்த முடிவுக்குத்தான் வந்து
சேர முடிகிறது.அந்த வகையில் இம்மாத தீராநதி
இதழ் சுகனை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது.

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு பற்றிய கேள்விக்கு
எல்லோரும் தமிழர்கள் என்று சொல்வது எவ்வாறு படு
அபத்தமோ,அவ்வாறே இன்று எல்லோருக்குமான
அரசியல் தீர்வு என்பதும்.மகிந்த எவற்றை முன்
வைக்கிறாரோ அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு
போவதுதான் மதி என்றும்,இயல்பு வாழ்க்கை அபிவிருத்தி
இதுவே இன்றைய அரசியலின் பிரதான சவால் என்றும்
கிழக்கு மாகாணம் யுத்தத்தின் பிடியிலிருந்து தன்னை
புத்திசாலித்தனமாக விடுவித்துக்கொண்டிருப்பதாகவும்
தனது மக்களைக் காக்க சரணடையும் மன்னனை பற்றிய
சூழ்நிலை ஒன்றை லா.சா.ரா தனது சிறுகதை
ஒன்றில் ஆழமாக சொல்லியிருப்பதாகவும் சுகன்
அளிக்கும் பதிலில் இருந்து பலவிடயங்களை
நாம் புரிந்துகொள்ள முடிகிறது.


வரிசையாக அந்த விடயங்களை பரிசீலிப்போம்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மே மாதம் இருபதாம்
தேதியோடு மகிந்த நிறைவு செய்து இரண்டு மாதங்களுக்கும்
மேலாகிவிட்டது.மகிந்த எந்த தீர்வுத்திட்டத்தையும் முன்
வைத்ததாக தெரியவில்லை.அறுபது ஆண்டுகளாக சிங்கள்
ஆளும்வர்க்கங்கள் முன்வைத்ததாகவோ அல்லது நடைமுறைப்
படுத்தியதாகவோ எந்த ஒரு தீர்வையும் சுட்டிக்காட்ட இயலாத
நிலைதான் இன்று வரை தொடர்கிறது.தவம் இயற்றி
மகிந்தவிடம் வரம் பெறுகிற வாய்பை தனக்கானதாக மட்டும்
சுகன் வைத்துக்கொள்வதில் நமக்கு ஆட்சேபனைகள் இல்லை.
எல்லோரையும் அப்படி செய்ய சொல்கிற வேலையை மட்டும்
அவர் நிறுத்திக்கொண்டால் நல்லது.

அமெரிக்கா,இந்தியா,சீனா,பாகிஸ்தான்,ஜப்பான்,ரஸ்யா
மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வணிக சூறையாடலுக்கும்,
ராணுவ மேலாதிக்க நடவடிகைகளுக்கும் ஈழ மண்ணை
திறந்துவிட்டு மகிந்த கொடுக்கப்போகும் இயல்பு வாழ்க்கை
பற்றியும் அபிவிருத்தி பற்றியும் முதலாளித்துவ
அடிவருடிகளின் மகிழ்சியை நம்மால் புரிந்துகொள்ள
முடியும்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் என்கிற இடதுசாரிக் கண்ணோட்டம்
கொண்ட அமைப்பை சாதிய நோக்கில் புலிகள் அழித்ததாக
சரடு விடும்,கம்யூனிஸ காதலரான சுகனுக்கு மகிந்தவின்
ஏகாதிபத்திய ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள் மகிழ்சியை
கொடுப்பதன் மர்மம்தான் புரிந்துகொள்ள இயலாததாக இருக்கிறது.

அந்த மர்மத்துக்கான பதிலை,மேலும் சில பத்திகளின் பின்
ஏகாதிபத்தியத்தின் குறியீடான செல்போன் விளம்பரத்தை
கண்டு ஒரு ஈழக்கவிஞன் கொள்ளும் நியாயமான கோபத்தை
அந்த கவிஞன் போருக்காகவும்,செம்மணிக்காகவும் ஏங்குவதாக
கூறி தான் ஒரு அப்பட்டமான ஏகாதிபத்திய அடிவருடிதான்
என்று அவரே தந்துவிடுகிறார்.

கிழக்கு மாகாணம் யுத்தத்தின் பிடியில் இருந்து தன்னை
விடுவித்துக்கொண்டிருப்பதாக கூறும் சுகனுக்கு,இந்திய
மற்றும் பிற நாடுகளின் வணிக நிறுவனங்கள்,மற்றும்
தமிழர் தாயகபரப்பின் தொடர்ச்சியை சிதைக்கும் நோக்கில்
சிங்கள் அரசால் கொண்டுவரப்படும் திட்டங்களின்
முற்றுகையில் கிழக்கு மாகாணம் கொண்டுவரப்பட்டிருப்பது
மட்டும் தெரியாமல் போனது ஏனோ?

இடதுசாரிய,தலித்திய,மனித உரிமை முகமூடிகளுடன்
புலி எதிர்ப்பில் ஈடுபட்டிக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ்
ஷோபசக்தி குழுவினை சேர்ந்தவர்களுக்கு இருக்கும்
செலக்டிவ் அம்னீசியா நாம் அறிந்த விடயம் என்பதால்
மற்ற விடயங்களை பரிசீலிக்கலாம்.

ஆயுதங்களை கைவிட்டு புலிகள் சரணடந்திருந்தால் இவ்வளவு
மக்களை படுகொலை செய்து புலிகளை பணிய வைக்கும்
நிலைக்கு ஏகாதிபத்திய நாடுகளும்,ராஜபக்ஸேவும்
இறங்கியிருக்க மாட்டார்கள் என்று வன்மத்தை சுகன்
வார்த்தைகளாக்கி இருப்பதைத்தான் மக்களைக் காக்க
சரணடைந்த மன்னன் பற்றிய அவரது கருத்து காட்டுகிறது.

1995 ஆம் ஆண்டு முதல் சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில்
இருக்கும் யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த சாதிய
ஒடுக்குதல் நிகழ்வை சுட்டிக்காட்டியதன் மூலம்,புலிகளின்
கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் சாதிய ஒதுக்கலுக்கு
எதிராக புலிகள் தீவிரமான நடவடிக்கைகளை
எடுத்துகொண்டிருந்தார்கள் என்பதை நமக்கு
மறைமுகமாகவேனும் உணர்த்தியதற்காக சுகனுக்கு
நன்றிகளை உரித்தாக்குவோம்.


ஒரு மூன்றாம் உலக நாட்டில் ஜாதி ஒழிப்பு பற்றி ஒரு
தேசிய விடுதலை அமைப்பின் திட்டமென்பது,அமைப்பில்
சாதியத்தை முற்றாக நிராகரிப்பது,சாதியத்துக்கு எதிரான
கருத்தியல் பரப்பலை சமூகத்தில் மேற்கொள்வது,நீண்டகால
பொருளாதார நிர்மாண திட்டங்களை மேற்கொண்டு
நிலபிரபுத்துவ உறவுகளை ஒழிப்பதன் மூலம் சாதிய
நிலவுதலுக்கான வெளியை ஒழிப்பது ஆகியவைகளாகத்தான்
இருக்க முடியும்.

அந்த வகையில் புலிகள் சாதி,மத,தாலி மறுப்புத்
திருமணங்களை அமைப்புக்குள்ளும் சமூகத்திலும்
நடத்திவைத்தும் ஊக்குவித்து வந்திருக்கிறார்கள்,கருத்துப்
பரப்பலை மேற்கொள்வதில் புலிகள் தீவிரமாக ஈடுபடவில்லை
என்பதும் அதில் போதாமைகள் நிலவின என்கிற குற்றசாட்டை
ஒப்புக்கொள்ளலாம்.

தேசப்பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்
கொள்ளும் நோக்கத்திலேயே கடைசிவரை புலிகள்
போராடிக்கொண்டிருந்தார்கள் என்பது மிக தெளிவாக
இன்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது.இது சாதிய ஒதுக்கலுக்கு
எதிரான விடயங்களில் பொருளாதாரக் கட்டுமானம் செலுத்தும்
பாத்திரம் பற்றிய புரிதல் புலிகளுக்கு இருந்ததையே
காட்டுகிறது.கட்டளையிட்டோ,சட்டங்கள் இயற்றியோ
உடனடியாக தீர்த்துவிடமுடியாத சாதிய ஒழிப்பில்,
சாத்தியமான ஒரு திட்டம் இத்தகைய கூறுகளையே
கொண்டிருக்க முடியும்.

அந்த வகையில் புலிகள் சரியான திசையில் சென்றதையும்
தனி ஈழம் தலித்துகளுக்கான சிறையாக மாற முடியும்
என்பது போன்ற கற்பனாவாத கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு
எதிராக செயல்ரீதியான பதிலை அவர்கள் வழங்கிக்
கொண்டிருந்தார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

மாறாக கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட சாதி எதிர்ப்பு
போராட்டங்கள் ஈழ விடுதலைப் போராலும் புலிகளாலும்
முடக்கப்பட்டதாக கூறும் சுகன் முன்வைக்கும் சாதி ஒழிப்பு
திட்டம் என்பது எவ்வாறு இருக்க முடியும் என்பதை அவரது
வார்த்தைகளில் இருந்தே நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

மூன்றாம் உலக நாடுகளின் சாதிய நிலபிரபுத்துவ அமைப்பை
பேணிக்காப்பதன் மூலம் தங்கள் பொருளாதார சுரண்டலை
பாதுகாத்துக்கொள்ளும் ஏகாதிபத்திய நாடுகளின் திட்டங்களுக்கு
வால் பிடிக்கும் மகிந்த அமல்படுத்தப்போகும் அபிவிருத்தி
திட்டங்கள் மூலம் சாதிய ஒழிப்பை முன்னெடுக்க முனையும்
சுகனின் திட்டம் புல்லரிப்பை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற அப்பட்டமான ஒட்டுண்ணி அரசியல் ஒன்றும்
நமக்கு புதியதல்ல,ஏகாதிபத்தியத்தை முதன்மை பகை
இலக்காக நிறுத்தாத பெரியார்,அம்பேத்கரின் மிக சிறிய
பகுதியை மட்டுமே முன்நிறுத்தி அவர்களின் வர்க்க,தேசிய
சார்பு கருத்துக்களை பின்னுக்கு தள்ளி,அப்பட்டமான
காலனித்துவ முகமூடியான காந்தியோடு அவர்களை
இணைத்து வைப்பதன் மூலம் நவகாலனித்துவ சுரண்டலுக்கு
தத்துவார்த்த தளத்தில் வேலை செய்யும் அ.மார்க்ஸின்
இலங்கை பிரதிநிதியான சுகனிடம் இது எதிர்பார்க்க
கூடிய விடயம்தான.

மலைய மக்களை தமிழ் தேசிய அரசியலுக்கு கொண்டுவர
புலிகள் மலையகத்தில் குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியதாக
அவதூறு செய்யும் சுகனுக்கு கலவரம் என்கிற பெயரில் சிங்கள
பேரினவாதிகள் மலையகத்தில் நிகழ்த்திய படுகொலைகள்
தெரியாமல் போவது,தமிழக அகதிகள் முகாமின் அவலத்தை
பேசும் அவருக்கு மூன்று இலட்சம் மக்கள் கைதிகளாக
அடைக்கப்பட்டிரும் ஈழத்தின் முகாம்களும் அங்கே நிகழ்ந்து
கொண்டிருக்கும் ஈவு இரக்கமற்ற மனித உரிமை மீறல்களும்
பேசப்பட கூடாத விசயமாக இருப்பது எல்லாம்
காட்டுவது ஒன்றைத்தான்.

நாம் வாசித்துக்கொண்டிருந்த நேர்காணல் ஒரு
தமிழனுடையதோ,தலித்தினுடையதோ ஒரு
சாரசரி சிங்களனுடையதோ கூட அல்ல மாறாக,
தங்கள் சுயநல வாழ்வுக்காக ஏகாதிபத்தியங்களுக்கு
நாட்டை அடகு வைத்துக்கொண்டு அதன் காரணமாக
சிங்கள உழைக்கும் மக்களிடம் ஏற்படும் கோபத்தை
தமிழர்கள் மேல் திருப்பிவிட்டு ரத்தப்பலியெடுத்த
ராஜபக்ஸேயின் சகோதரனுடையது என்ற முடிவுக்கே
வர முடிகிறது.

தமிழக மீனவர்களும் கட்சதீவு மீட்பர்களும் நிரந்தர
போர் நிறுத்தத்தை ஏன் வலியுறுத்தவில்லை என்று
கேள்வி கேட்கும் சுகனிடம் போர் நின்று இரண்டு
மாதங்கள் ஆகியும் இப்பொழுதும் ஏன் தமிழக மீனவர்கள்
தாக்கப்படுகிறார்கள் என்கிற கேள்விக்கு என்ன
பதில் இருக்கும்?

மனித நாகரிகம் தோற்றுப்போகும் இடம் தமிழக,ஈழ அகதிகள்
முகாம்கள் மட்டுமல்ல,அடிப்படை நேர்மையும் குறைந்தபட்ச
மனிதத்துவமும் கூட இல்லாத சுகன் போன்றவர்களிடமே அது
மிக மோசமாக தோற்றுப்போகிறது.

44 comments:

bagat said...

உங்களுடன் விவாதிக்க வேண்டும் ஸ்டாலின் குரு அவர்களே
விவாதத்தை துவங்கலாமா ?
உங்களுடைய தளத்திலேயே விவாதிக்கலாமா ?
உங்க‌ளுடைய விருப்பப்படியே பதிலுக்கு காத்திருக்கிறோம்.

ஸ்டாலின் குரு said...

தாராளமாக இங்கேயே விவாதிப்போம்

சர்வதேசியவாதிகள் said...

இந்த பதிலை தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தோம்
அதாவது இங்கேயே விவாதிப்போம் என்கிற‌ பதிலை.
உங்களுடன் விவாதிக்கலாம் தான் ஆனால் அதை
எமது தளத்தில் வைத்துக்கொள்வதே நல்லது என்று கருதுகிறோம்.
ஏனெனில் 2007 ம் ஆண்டு ஆர்குட்டில் உங்களுடன் விவாதித்த‌
எங்களுடைய தோழர் ரஞ்சித் ஸ்டாலினுடைய அனைத்து
ஸ்கிராப்புகளையும் நீங்கள் நீக்கியுள்ளீர்கள்.
இல்லை அவ்வாறு நீக்கவில்லை என்றால் அந்த ஸ்க்ராப்களை
காட்ட முடியுமா ?
எனவே தற்போதைய இந்த விவாதத்ததிலும் அதுபோல எதுவும்
நடக்க வேண்டாம் என நாங்கள் விரும்புகிறோம்.அதனால் இந்த‌
விவாதத்தை எமது தளத்தில் நடத்துவதே சரி என்று கருதுகிறோம்.
உங்கள் கருத்து என்ன என்பதை சொல்லுங்கள்.
விவாதத்தை துவக்குவோம்.

http://vrinternationalists.wordpress.com

ஸ்டாலின் குரு said...

ஸ்டாலின் ரஞ்சித்துடன் நான் ஸ்க்ராப் புக்கில் விவாதித்தேனா? எப்பொழுது அந்த சம்பவம் நடந்தது என்று சொன்னால் நன்றாக இருக்கும்

ஸ்க்ராப் புக்கில் உரையாட மட்டுமே செய்தோம்.எனது பதிவுகளைத் தவிர என் ஸ்க்ராபில் எந்த உரையாடலையும் நான் வைத்துகொள்வதில்லை,எனது ஸ்க்ராபில் எதை வைப்பது எதை நீக்குவது என்பது எனது விருப்பம்.

ஸ்க்ராப் புக்கை கண்காணிப்பு செய்யும் மக்கள் கமிசாராக உங்களை யார் நியமித்தது என்று அறியலாமா?

அது சரி புரளி பேசும் போலி தமிழ்தேசியவாதிகள் என்கிற தலைப்பில் என்னோடு விவாதித்த அசுரன் எனது கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாதபோது விவாதிக்க நேரம் இல்லை என்று சொல்லிய பிறகு தனது பிளாக்கில் எந்த பதிவுகளையும் இடாமல்தான் இருந்தாரா?

சிபிஎம் கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட நிலைப்பாடும் டவுசர் கழண்ட சந்திப்பும்
என்கிற தலைப்பில் நான் இட்ட பின்னூட்டங்களை இரண்டு நாட்கள் கழித்தே பிரசுரித்தாரே அப்பொழுது நான் ஏதும் கேள்விகள் கேட்டேனா உங்களை ?

அவ்வளவு பயத்துடன் வந்து என்னுடன் விவாதிக்குமாறு உங்களை வருந்தி அழைக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை நீங்கள் தாராளமாக உங்கள் அன்பு
சர்வதேசியவாதிகளுடனே கூடிக் குலாவிக் கொண்டிருங்கள்

சர்வதேசவாதிகள் said...

ரஞ்சித் ஸ்டாலினுடன் நீங்கள் விவாதிக்கவே இல்லை
அப்படி ஒன்று நடக்கவே இல்லை இல்லையா ?
நல்லது,சரி அது போகட்டும்.

உங்களுடைய பிளாக்கிலேயே விவாதம் செய்வோம் ஆனால் அப்போது ரஞ்சித் ஸ்டாலினுடன் நீங்கள் 'சும்மா பேசியதை'ஸ்கிராப் புக்கில் டெலிட் செய்ததை போல தற்போது உங்கள்
பிளாக்கில் நடக்கும் விவாத பின்ணூட்டங்களை அழிக்க மாட்டீர்களே?


அசுரன் இரண்டு நாட்கள் கழித்து பின்ணூட்டங்களை வெளியிட்டார்,இருந்தும் நான் எதுவும் கேள்வி கேட்டேனா என்று கேட்கிறீர்கள்
இதற்கு என்ன அர்த்தம் ? நான் கேள்வி கேட்கவில்லை அதனால நீங்களும் கேட்காதீங்கன்னு
சொல்ல வர்றீங்களா ?
உங்கள் கேள்விகளுக்கு அசுரன் பதிலளிக்கவில்லை என்றால் ஏன் பதில் சொல்லவில்லை என்று நீங்கள் தான் கேட்டிருக்க வேண்டும்.
நீங்கள் அப்படி கேட்டும் எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது எனவே விவாதிக்க முடியவில்லை என்று அவர் பதிலளித்திருந்தால்,அப்படியானால் மற்ற பதிவுகளை மட்டும் எப்படி எழுதுகிறீர்கள் என்று நீங்கள் தான் அவரை விடாமல் கேட்டிருக்க வேண்டும்.உங்களைப்பார்த்து அவர் பயந்து ஓடுகிறார்
என்றால் நீங்களும் ஏன் அதை அனுமதித்தீர்கள்.
அசுரன் விவாதிக்க வரவே முடியாது என்று சொல்லியிருந்தாலும் நீங்கள் அவரை அம்பலப்படுத்தி ஒரு பதிவு எழுதி அவரை பொது மேடைக்கு இழுத்திருக்க வேண்டியது தானே ?

இதையெல்லாம் நீங்கள் செய்தீர்களா ?
செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை ?
சரி பாவம் பொழச்சிபோகட்டும்ன்னு
பெருந்தன்மையோடு விட்டுட்டீங்களா!

ஆனால் எங்களையும் அப்படி பெருந்தன்மையுடன்
துரத்திவிடாதீர்கள்.
உங்களைப் போன்ற பெரியவர்களை கண்டு சின்னப்பசங்களான‌ எங்களுக்கு சற்று அச்சம் தான்,எனினும் உங்களிடமிருந்து துணிவை
கற்றுக்கொள்ள நாங்கள் முன் வருகிறோம்.

அசுரனிடம் நீங்கள் கேட்டு அவர் பதிலளிக்காமல் போன கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிக்கிறோம்.

விவாதத்தை துவங்கலாமா ?

ஸ்டாலின் குரு said...

உங்களோடு விவாதத்தை தவிர்க்க விரும்பும் என்னுடைய
கோழைத்தனத்தை அம்பலபடுத்தி ஒரு பதிவு இடும்
வாய்ப்பை உங்களுக்கு அளிப்பதிலேயே எமக்கு விருப்பம்

)))))))

ஸ்டாலின் குரு said...

உங்கள் பதிலகளை எல்லாம் பதிவாக்கி போடுங்கள்
பிறகு நான் அதற்கு எனது பிளாக்கில் பதில்
அளிக்க முயலுகிறேன்

இருவருக்கும் பிரச்சணைகள் இல்லை இந்த முறையில்

சர்வதேசவாதிகள் said...

என்ன சொல்றீங்க‌ ஸ்டாலின் குரு
இப்படி ஒரு அதிர்சியை அள்ளி வீசிட்டீங்களே?

சரி விசயத்திற்கு வ‌ருகிறேன்
வார்த்தைகளில் விளையாடவேண்டாம்.
காமெடி பன்னி கவனத்தை திசை திருப்ப
வேண்டாம்.
விவாதத்தை துவக்கலாமா ?

ஸ்டாலின் குரு said...

பிரபாகரனின் உள்ளாடை இது ஆண்குறி இது
என்று வட்டமிட்டு படம் காட்டிக் கொண்டு
இருக்கும் வன்மம் பிடித்த இரயாகரன்
தலைமையில் அலரி மாளிகையிலும்,
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழ்நாட்டுக்குள்ளேயே இந்திய மார்க்சிய
லெனினிய கட்சியை நடத்திக்கொண்டிருக்கும்
மக இக வின் மருதையன் தலைமையில்
டெல்லி செங்கோட்டையிலும் செங்கொடி
ஏற்றுவதை புலிகள் குறுக்கே விழுந்து
கையைக் காலை உதைத்து அழுது தடுத்து
விட்டதாக ஓவர் பிலடப் கொடுக்கும்
அதிபுத்திசாலிகளிடம் ஒரு புலி ஆதரவாளன்
விவாதிக்க பயம் கொள்வதன் நியாயம்
புரியவில்லையா பிரதர் உங்களுக்கு

சர்வதேசவாதிகள் said...

நீங்கள் குறிப்பிடும் ரயாகரனுடைய புகைப்பட பதிவு
பிரபாகரனை எங்கும் இழிவுபடுத்தவில்லை,மாறாக‌
சிங்கள பாசிஸ்டுகள் பிரபாகரனை எவ்வாறெல்லாம்
இழிவு படுத்தினார்கள் என்பதை தான் விளக்குகிறது.
எனவே பிரச்சனை தோழர் ரயாகரனிடம் இல்லை
பிரபாகரனுடைய ரசிக மனதில் தான் பிரச்சனை.

செங்கோட்டையிலிருந்து இந்தியதேசியவாதிகள் தமது
புலிக்கொடியை ஏற்றிவிட மாட்டார்களா என்று
அரசியலற்ற மூடத்தனத்தில் மூழ்கிக்கிடந்தவர்கள்,
ஏங்கிக்கிடந்தவர்கள் ம.க.இ.க வினர் அல்ல‌
புலிகள் தான் என்பதை மறந்துவிட்டீர்களா ?

tamilanban said...

வாழ்த்துக்கள் ஸ்டாலின் குரு!

தீராநதியில் "மனித நாகரிகம் தோற்றுப்போகும் இடம் " படித்த உடனே சுகனுக்கு காட்டமான கட்டுரை வரைய வேண்டும் என்று இருந்தேன். உங்களின் கட்டுரை படித்தவுடன் உண்மையிலேயே நம்மைபோல ஒருவன் என்ற ஆனந்தம் அடைந்தேன். உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் தோழர்!

சுமன் போகிற போக்கில் அப்படியே அம்பேத்கார் மற்றும் காந்தி வழியில் முன்னெடுப்போம் என்று சொல்லிட்டு போயிருக்கிறார். அது என்ன வழி என்று அவருக்குத்தான் வெளிச்சம். காந்தி வழி என்றால் ராமராட்சியமா என்று சுமன் விளக்க வேண்டும்.

உயர்சாதியினர் புலிகளிடம் பணம் கொடுத்து வெளிநாடு தப்பினர் என்று சொல்லும் சுமன் எப்படி பிரான்சு போனார் என்று தெரியப்படுத்திடவும் வேண்டும்.

குழுமமாக புணர்வது(Group Sex) ஆபாசமா? என்றுவேறு கேக்கிறாரம் இந்த இலக்கியவாதி? இடதுசாரி தோழர்கள் குழுமபுணர்வு பத்தி கொஞ்சம் விளக்குவார்களா?

சுமன் கொஞ்சம் தாமதப்படுத்தி விட்டார்விரைவாக வந்திருந்தால் மகிந்தாவின் நன்மதிப்பை பெற்று கருணாவின் இடத்தில் இருந்து இருப்பார்.

அன்புடன்
தமிழன்பன்

சர்வதேசவாதிகள் said...

ஸ்டாலின் குரு, இது தான் உங்கள் விவாதத்தின் நேர்மையா?
எங்கள் கடைசி பதிவை போடாமல் உங்கள் பிளாகிற்கு முக்காடு போடும் இந்த விதத்தை என்ன சொல்லி சமாளிக்க போகிறீர்கள்?
உங்கள் ஸ்கிராபில் எதை வைப்பது எதை நீக்குவது என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவெண்டும் எனும் பாணியில் உங்கள் பிளாகிலும் எதை வைப்பது எதை நீக்குவது என்பதையும் நான் தான் முடிவு செய்வேன் என்று வீர வசனம் பேசபோகிறீர்களா? உங்களை விவாதிக்க அழைத்தபோது ”தாராளமாக இங்கே விவாதிக்கலாம்” என்று விவாதிக்க இதனால் தான் உங்கள் தளத்தில் அழைத்தீர்களா?

ஸ்டாலின் குரு said...

வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி தமிழன்பன்

சுகனை சுமன் என்று குறித்திருக்கிறீர்கள் எழுத்துபிழையைத்
தவிர்க்கவும்.

நன்றி

ஸ்டாலின் குரு said...

சுகனை தலித்தியவாதி என்றோ இடதுசாரி என்றோ
அடையாளப்படுத்துவதும் தவறுதான் தமிழன்பன்
அவர் தன்னை ஒரு பின்னவீனத்துவவாதி என்றே
அடையாளைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் குரு said...

அ.மார்க்ஸின் அரசியலை எப்படி புரிந்துகொள்வது
என்பதில் நாம் தெளிவாக இருந்தால் சுகனையும்
புரிந்துகொள்வது நமக்கு சுலபமாக இருக்கும்
தமிழன்பன்

பெரியாரும்,அம்பேதகரும் தங்களது முதன்மை
பகை இலக்குகளாக அன்றைக்கு ஆங்கில
ஏகாதிபத்திய ஆட்சியை நிறுத்தவில்லை
அவர்களின் அந்த முடிவுக்கு பின்னால்
இருக்கும் நியாயம் நிராகரிக்கபட முடியாதது
என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால் இன்றைக்கும் அவ்வாறே ஏகாதிபத்திய
சுரண்டல் முதன்மை பகை இலக்காக இல்லை
என்பதாக காட்டுவதற்க்காக பெரியாரையும்
அம்பேத்கரையும் அ.மார்க்ஸ் பயன்படுத்திக்
கொள்கிறார்.

பெரியார்.அம்பேத்கரின் கருத்துக்களை படித்து
வாழ்வில் கடைபிடிப்பது,பரப்புவது,அவர்களின்
வழியில் போராடுவது வேறு,அவர்களின்
கருத்துக்களை தங்கள் பிழைப்புவாத அரசியலுக்கு
பயன்படுத்திக் கொள்வது வேறு.

அ.மார்க்ஸ் பயன்படுத்திக் கொள்ள மட்டுமே
செய்கிறார்.

ஸ்டாலின் குரு said...

ஸ்டாலின் குரு, இது தான் உங்கள் விவாதத்தின் நேர்மையா?
எங்கள் கடைசி பதிவை போடாமல் உங்கள் பிளாகிற்கு முக்காடு
போடும் இந்த விதத்தை என்ன சொல்லி சமாளிக்க போகிறீர்கள்?//

என்ன முக்காடு போட்டேன்

என்னால் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று மணிநேரத்துக்கு மேல்
இணையத்தில் செலவிட முடியாது என்பதால் உங்கள் பின்னூட்டங்களை
நான் ஆன்லைனில் இருக்கும்போது மட்டுமே வெளியிட முடியும்.

வழக்கம்போலவே ஆரம்பித்துவிட்டீர்களா?

ஸ்டாலின் குரு said...

செங்கோட்டையிலிருந்து இந்தியதேசியவாதிகள் தமது
புலிக்கொடியை ஏற்றிவிட மாட்டார்களா என்று
அரசியலற்ற மூடத்தனத்தில் மூழ்கிக்கிடந்தவர்கள்,
ஏங்கிக்கிடந்தவர்கள் ம.க.இ.க வினர் அல்ல‌
புலிகள் தான் என்பதை மறந்துவிட்டீர்களா ?///


யார் அந்த இந்திய தேசியவாதிகள்?

இந்திய ஆளும் வர்க்கமா?


http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_6001.html

இந்த பதிவில் ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன்

என்னும்போது உங்கள் அமைப்போடு தொடபுபடாத வேறு
ஒரு தலைப்பை நீங்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்

ஸ்டாலின் குரு said...

நீங்கள் குறிப்பிடும் ரயாகரனுடைய புகைப்பட பதிவு
பிரபாகரனை எங்கும் இழிவுபடுத்தவில்லை,மாறாக‌
சிங்கள பாசிஸ்டுகள் பிரபாகரனை எவ்வாறெல்லாம்
இழிவு படுத்தினார்கள் என்பதை தான் விளக்குகிறது.
எனவே பிரச்சனை தோழர் ரயாகரனிடம் இல்லை
பிரபாகரனுடைய ரசிக மனதில் தான் பிரச்சனை.///

இழிவுபடுத்துவதை கண்டு கோபம் கொள்வது
வேறு,ரசிப்பது வேறு,இதில் இரயாகரன் எந்த
பகக்த்தில் இருந்து அந்த பதிவை பதிந்திருப்பார்
என்பதை புரிந்துகொள்வதில் ஒன்றும் சிரமமில்லை
எமக்கு

சர்வதேசவாதிகள் said...

நீங்கள் குறிப்பிடும்படி தோழர் ரயகரனுடைய பதிவு இல்லை.
எமது பார்வைக்கு அப்படி படவில்லை.
கம்யூனிஸ்டின் பார்வைக்கும் தமிழ்தேசிய புலி ரசிகனுடைய‌
பார்வைக்கு நிச்சயம் வேறுபாடு இருக்கும்.‌

அவை இருக்கட்டு


இந்திய‌ அரசு தம்மை கரை ஏற்றி விடும் என்று புலிகள் காத்துக்கிடந்தார்களா இல்லையா ?
இந்தியாவை நட்பு சக்தியாக கருதினார்களா இல்லையா?


அதே போல அமெரிக்காவையும் அனுகினார்கள்.
இது உண்மையா இல்லையா ?

இதற்கு பதில் சொல்லுங்கள் குரு ?

ஸ்டாலின் குரு said...

இந்திய‌ அரசு தம்மை கரை ஏற்றி விடும் என்று புலிகள் காத்துக்கிடந்தார்களா இல்லையா ?
இந்தியாவை நட்பு சக்தியாக கருதினார்களா இல்லையா?

இல்லை

அதே போல அமெரிக்காவையும் அனுகினார்கள்.
இது உண்மையா இல்லையா ?//

அணுகினார்கள் என்பது உண்மை அதற்காக என்ன
விலை கொடுக்க முன்வந்தார்கள் என்பதுதான் கேள்வி

ஸ்டாலின் குரு said...

நீங்கள் குறிப்பிடும்படி தோழர் ரயகரனுடைய பதிவு இல்லை.
எமது பார்வைக்கு அப்படி படவில்லை.
கம்யூனிஸ்டின் பார்வைக்கும் தமிழ்தேசிய புலி ரசிகனுடைய‌
பார்வைக்கு நிச்சயம் வேறுபாடு இருக்கும்.‌///

எமது பார்வைக்கு, உங்கள் தலைவரையே இந்த கதிக்கு ஆளாக்கிய எங்களால்
உங்களையும் போராட்டததையும என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை
புரிந்துகொள்ளுங்கள் என்று தமிழ் மக்களை மிரட்ட சிங்கள ராணுவம் பயன்படுத்திய
இந்த விசயத்துக்கு இரயாகரனும் துணை போகிறார் என்று தெரிகிறது என்ன செய்ய

சர்வதேசவாதிகள் said...

உங்களுக்கான தோழர் ரயாகரனுடைய பதிலை எமது தளத்தில் பின்ணுட்டமாக
போட்டுள்ளார் இதோ அந்த பதில்‌.


தமிழ் அரங்கம்
11:30 பிற்பகல் இல் ஆகஸ்ட்23, 2009

தங்கள் தலைவர் அவர் அல்ல என்று வித்தைகாட்ட, அந்த தலைவனின் ஆண் உறுப்பை இழிவாடியவர்கள் பேரினவாதிகள். கிடைக்கின்ற தகவல்கள் படி, புலித் தலைவனை நிர்வணமாக்கி கடற்கரையில், ஓடவிட்டு தடி விளறுகால் அடித்ததாக கூறப்படுகின்றது. தங்கள் தலைவன் இழிவுப்படுத்தப்பட்டதையிட்டு அலட்டிக்கொள்ளாத தேசியம், இப்படி பிழைப்புத்தனமாகியது. இப்படி தங்கள் தலைவனை சரணடைய வைத்து காட்டிக் கொடுத்த அந்த துரோகிகளை, இந்த துரோக அரசியலை இனம்கான எந்த தேசியத்துக்கு வக்கில்லை.

சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களை ஓடுக்கி, அவர்கள் பாசிசத்தை எவியவர்கள் தான் இந்த தமிழ் தேசிய பாசிட்டுகள். தங்கள் இலட்சியத்துக்காக போராடி மடியாமல், சரணடைந்து கேவலமாக மரணமாகியது புலித் தேசியம். இப்படி துரோகம் செய்து கூட்டம் தான், இந்த தமிழ் பாசிசக் தேசிய கூட்டம்

இதற்கேற்ற அதிரடியன் என்ற லுசு கீற்றில் புலம்பியுள்ளது. அது இல்லாத ஒன்று பற்றிய வெற்று உளறல். செத்துப் போன புலிப் பாசிசத்திற்கு வைக்கும் ஓப்பாரியுடன் கூடிய அரட்டலும் புலம்பலும்.

பி.இரயா

சர்வதேசவாதிகள் said...

இந்தியாவை புலிகள் தமது நட்பு சக்தியாக கருதவில்லையா ?
நெஞ்சே வெடித்து விடுவதைப் போன்ற கடுமையான அதிர்ச்சி
தரும் செய்திகளையெல்லாம் கூட நீங்கள் மிகவும் சிம்பிளாக‌
தருகிறீர்கள் !

புலிக்கு தத்துவ விளக்க நூல் எழுதியதும் அதையே அனைத்து இடங்களிலும் பேசியதும் நீங்களா இல்லை ஆன்டன் பாலசிங்கமா ?
புலிகளுடைய அரசியலுக்கு அவர்களுக்கே புரியாத‌ புதிய விளக்கம் தருகிறீர்கள்.

உங்க‌ளுடைய கூற்றுக்கு என்ன ஆதார‌ம் ?

புலிகள் இந்தியாவுக்கு வால் பிடித்தார்கள் என்பதை ஆன்டன் பாலசிங்கத்தினுடைய பேச்சிலும் பிரபாகரனுடைய மவீரர் நாள்
உரையிலும் நீங்கள் கேட்கலாம்.

இதோ இணைப்புகள்.

http://www.orunews.com/?p=2793

http://www.pulikalinkural.com/

அமெரிக்காவை நட்பு சக்தியாகவும்,அவர்கள் தம்மை கரை ஏற்றி
விடுவார்கள் என்றும் கூட‌ ஒரு கூட்டம் நம்புகிறது என்றால்
அவர்களுடைய அரசியல் தரம் எவ்வளவு கேவலமானதாக இருக்க வேண்டும் ?
ஏகாதிபத்தியத்தை நட்பு சக்தியாக கருதும் ஒரு கூட்டத்தை தேசிய‌ விடுதலைப் போராளிகள் என்று அழைக்க முடியுமா ?

விடுதலைப் புலிகள் மாவீரர் உரை இந்தியா நட்பு சக்தி

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml

ஸ்டாலின் குரு said...

தமிழ் அரங்கம்
11:30 பிற்பகல் இல் ஆகஸ்ட்23, 2009

தங்கள் தலைவர் அவர் அல்ல என்று வித்தைகாட்ட, அந்த தலைவனின் ஆண் உறுப்பை இழிவாடியவர்கள் பேரினவாதிகள். கிடைக்கின்ற தகவல்கள் படி, புலித் தலைவனை நிர்வணமாக்கி கடற்கரையில், ஓடவிட்டு தடி விளறுகால் அடித்ததாக கூறப்படுகின்றது. தங்கள் தலைவன் இழிவுப்படுத்தப்பட்டதையிட்டு அலட்டிக்கொள்ளாத தேசியம், இப்படி பிழைப்புத்தனமாகியது. இப்படி தங்கள் தலைவனை சரணடைய வைத்து காட்டிக் கொடுத்த அந்த துரோகிகளை, இந்த துரோக அரசியலை இனம்கான எந்த தேசியத்துக்கு வக்கில்லை.

சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை மட்டுமல்ல, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களை ஓடுக்கி, அவர்கள் பாசிசத்தை எவியவர்கள் தான் இந்த தமிழ் தேசிய பாசிட்டுகள். தங்கள் இலட்சியத்துக்காக போராடி மடியாமல், சரணடைந்து கேவலமாக மரணமாகியது புலித் தேசியம். இப்படி துரோகம் செய்து கூட்டம் தான், இந்த தமிழ் பாசிசக் தேசிய கூட்டம்

இதற்கேற்ற அதிரடியன் என்ற லுசு கீற்றில் புலம்பியுள்ளது. அது இல்லாத ஒன்று பற்றிய வெற்று உளறல். செத்துப் போன புலிப் பாசிசத்திற்கு வைக்கும் ஓப்பாரியுடன் கூடிய அரட்டலும் புலம்பலும்.

பி.இரயா///


நல்ல மனநல மருத்துவரை பார்க்கச் சொல்லவும்

ஸ்டாலின் குரு said...

அமெரிக்காவை நட்பு சக்தியாகவும்,அவர்கள் தம்மை கரை ஏற்றி
விடுவார்கள் என்றும் கூட‌ ஒரு கூட்டம் நம்புகிறது என்றால்
அவர்களுடைய அரசியல் தரம் எவ்வளவு கேவலமானதாக இருக்க வேண்டும் ?
ஏகாதிபத்தியத்தை நட்பு சக்தியாக கருதும் ஒரு கூட்டத்தை தேசிய‌ விடுதலைப் போராளிகள் என்று அழைக்க முடியுமா ?///


சோவியத் யூனியனின் பொருளாதார உதவி மறுப்புகளையும்
ராணுவ மிரட்டல்களையும் சமாளிக்க,இருபத்தைந்து இலட்சம்
வியட்நாமிய உயிர்களை கொன்ற ரத்தக்கறை படிந்த அமெரிக்க
அதிபர் நிக்சனோடு கைகுழுக்கிய மாவோ கூடத்தான் உங்கள்
பார்வையில் கம்யூனிஸ்ட் ஆக இருக்க முடியாது

)))))))

ஸ்டாலின் குரு said...

ஏகாதிபத்தியத்தை புலிகள் நட்புச்சக்தியாக
கருதினார்களாம் அடடா என்ன கண்டுபிடிப்பு

ஈழத்தின் புல்மோட்டையில் இருந்து இலிமனைட்
தாதுப்பொருளை ஏற்றிகொண்டு சென்ற அமெரிக்க
கப்பலை கடற்புலிகள் தாக்கி அழித்ததை தொடர்ந்தே
புலிகளை அமெரிக்கா தடை செய்திருந்தது.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையே உள்ள
முரண்பாடுகளை பயன்படுத்திக்கொள்ளவே
புலிகள் விழைந்தார்கள்.

ஸ்டாலின் குரு said...

http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_04.html


அப்பா சாமிகளா வடிவேலு பாணியில் கண்ணைக்
கட்டுதே என்று கூற சொல்ல முடியவில்லை
அதையும் தாண்டி மயக்கமே வருகிறது

உங்கள் அதிபுத்திசாலித்தனத்தை கண்டு

நீங்கள் கேட்டிருருக்கிற கேள்விகளுக்கு எல்லாம்
நான் எழுதியிருக்கிற பதிவுகளில் ஏற்கனவே
நிறைய பதில் சொல்லி ஆகிவிட்டது.

காணாமல் போய்விட்டேன் பயந்து ஓடிவிட்டார்
போலி தமிழ்த்தேசியவாதி என்று என்ன இழவை
வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்

உங்களைப் போன்ற மொக்கையர்களோடு
குடும்பம் நடத்த என்னால் இயலாது.

ஸ்டாலின் குரு said...

மக இக வினர்க்கு அனுமதி இல்லை என்று
எனது பிளாக்கின் முகப்பில் எழுதி
வைக்காததற்க்காக மன்னிப்பு கூட கேட்டுக்
கொள்கிறேன்

தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள்

விவாதிக்க ஒப்புகொண்டதற்காகவும்
வேண்டுமானால் இன்னுமொரு
மன்னிப்பை வைத்துக்கொள்ளுங்கள்

Anonymous said...

தோழர் ஸ்டாலின்குரு,

இரயாகரன் வெளியிட்ட புலித்தலைவர் பிரபாகரனின் புகைப்படம் உண்மையா? அதில் காட்டப்பட்டிருக்கும் உடல் புலித்தலைவர் பிரபாகரனுடையதுதானா? என்பதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள். பிரபாகரனின் மரணம் உண்மையெனும் அந்த அதிர்ச்சிகரமான பதில் என்னை முடக்கிவிடும் என்பது மட்டும் உண்மை. இருப்பினும் உண்மையை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

- இளங்குமரன்.

சர்வதேசவாதிகள் said...
This comment has been removed by the author.
சர்வதேசவாதிகள் said...

/////////சோவியத் யூனியனின் பொருளாதார உதவி மறுப்புகளையும்
ராணுவ மிரட்டல்களையும் சமாளிக்க,இருபத்தைந்து இலட்சம்
வியட்நாமிய உயிர்களை கொன்ற ரத்தக்கறை படிந்த அமெரிக்க
அதிபர் நிக்சனோடு கைகுழுக்கிய மாவோ கூடத்தான் உங்கள்
பார்வையில் கம்யூனிஸ்ட் ஆக இருக்க முடியாது.////////////


உண்மை தான் ஆனால் மாவோ போய் நிக்சனை சந்திக்கவில்லை மாறாக நிக்சன் தான் சினாவிற்கு வந்த போது மாவோவை சந்தித்தார்.
மேலும் மாவோ நிக்சனிடம் போய் எங்களுக்கு மக்கள் சீனத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றோ,அல்லது எமது புரட்சிக்கு கரம் நீட்டி உதவுங்கள் என்றோ ம‌ன்றாடிக்கொண்டிருக்கவில்லை.

அமெரிக்கா என்பது யார்,அதனுடைய தன்மை என்ன அது சீன மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலக மக்களுக்குமே எதிரி என்பதை மாவோ தீர்க்கமாக எழுதியும் பேசியும் இருக்கிறார்.
அதன் படி தான் அவர் அமெரிக்காவை அனுகினார்.

பிரபாகரன் எங்கேயாவது அமெரிக்காவுக்கு எதிராக எழுதியிருக்கிறாரா அல்லது பேசியிருக்கிறாரா ? அப்படி எழுதியோ பேசியோ இருப்பின் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறாரா ?

சர்வதேசவாதிகள் said...
This comment has been removed by the author.
சர்வதேசவாதிகள் said...

///////////////////////////////////////////////////////////////////////
http://stalinguru.blogspot.com/2009/07/blog-post_04.html


அப்பா சாமிகளா வடிவேலு பாணியில் கண்ணைக்
கட்டுதே என்று கூற சொல்ல முடியவில்லை
அதையும் தாண்டி மயக்கமே வருகிறது
உங்கள் அதிபுத்திசாலித்தனத்தை கண்டு

நீங்கள் கேட்டிருருக்கிற கேள்விகளுக்கு எல்லாம்
நான் எழுதியிருக்கிற பதிவுகளில் ஏற்கனவே
நிறைய பதில் சொல்லி ஆகிவிட்டது.

காணாமல் போய்விட்டேன் பயந்து ஓடிவிட்டார்
போலி தமிழ்த்தேசியவாதி என்று என்ன இழவை
வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்

உங்களைப் போன்ற மொக்கையர்களோடு
குடும்பம் நடத்த என்னால் இயலாது.
////////////////////////////////////////////////////////////////////////


கேட்கிற கேள்விக்கு நாணயமா பதில் சொல்லிப்பழகுங்க‌
மயக்கம் உடனே தெளிந்து விடும்.


நேற்று எழுதியது,முந்தின நாள் எழுதியது எல்லாம் எதற்கு
விவாதம் நடப்பது இன்று,அதே பதிலை இன்றைக்கு சொல்லுங்களேன்.
ஏன் ஒரு கருத்தை ஒரு முறைக்கு மேல் சொல்ல மாட்டீங்களோ ?


உங்களுடைய தேவயற்ற மொக்கை பதிலுக்கு
பதில் சொல்லி நான் விவாதத்திற்கு வெளியே செல்ல‌
விரும்பவில்லை.

அதனால நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லுங்க.

சர்வதேசவாதிகள் said...

//////////////////////////////////////////////////////////////////////////
மக இக வினர்க்கு அனுமதி இல்லை என்று
எனது பிளாக்கின் முகப்பில் எழுதி
வைக்காததற்க்காக மன்னிப்பு கூட கேட்டுக்
கொள்கிறேன்

தயவு செய்து இந்த பக்கம் வந்து விடாதீர்கள்

விவாதிக்க ஒப்புகொண்டதற்காகவும்
வேண்டுமானால் இன்னுமொரு
மன்னிப்பை வைத்துக்கொள்ளுங்கள்.
//////////////////////////////////////////////////////////////////////////

அஹா என்னே ஒரு ஜனநாயக பண்பு.
எமது அமைப்பை பற்றி அவதூறாக‌
எழுதுவாராம்,அதற்கு பதில் சொல்வதற்கு
நாம் வர முடியாதபடி தடை போடுவாராம்.
இதுவே ஒரு போலி ஜனநாயக நாடு இந்த நாட்டில்
ஒரு தமிழ்தேசியவாதி வாழ்ந்தால் ஜனநாயகம் பற்றி
கேட்கவா வேண்டும்.

நல்லது
இருக்கட்டும்,இருக்கட்டும்..
கேள்விக்கு பதிலைச் சொல்லுங்க.
எல்லோரும் பார்த்திட்ருக்காங்க :)

ஸ்டாலின் குரு said...

உண்மை தான் ஆனால் மாவோ போய் நிக்சனை சந்திக்கவில்லை மாறாக நிக்சன் தான் சினாவிற்கு வந்த போது மாவோவை சந்தித்தார்.//

அழைப்பு இல்லாமல் திறந்த வீட்டுக்குள் நாய் நுழைந்தது போல நுழைந்தார் என்று சொல்ல வருகிறீர்களா?

ஸ்டாலின் குரு said...

மேலும் மாவோ நிக்சனிடம் போய் எங்களுக்கு மக்கள் சீனத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றோ,அல்லது எமது புரட்சிக்கு கரம் நீட்டி உதவுங்கள் என்றோ ம‌ன்றாடிக்கொண்டிருக்கவில்லை.//

மொக்கை கும்பல் என்று எத்தனை தடவைதான் நிரூபிப்பீர்கள்

அமெரிக்கா என்பது யார்? அதன் தன்மை என்ன? அது சீன மக்களுக்கு மட்டுமல்ல்
ஒட்டுமொத்த உலக மக்களுக்கே எதிரி என்பதை அழுத்தமாகவும்,தீர்க்கமாகவும்
பேசிவந்த மாவோ,சோவியத்தின் பொருளாதார உதவி மறுப்புகளும்,ராணுவ
அச்சுறுத்தல்களும் புரட்சியால் சீனா பெற்ற பலன்களை குலைத்துவிடும் என்பத்ற்காக
அமெரிகாவுடன் கை குழுக்குவது தப்பில்லையாம்.

கடைசிவரை ஈழத்தின் இறையான்மையை விலை பேசாமல் ஐக்கிய நாடுகள் சபையின்
ஏதோ ஒரு வீட்டோ அதிகாரம் கொண்ட நாடு அங்கீகரித்தால் மட்டுமே தேசத்துக்கு
அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காக மட்டுமே அமெரிக்காவை புலிகள் அனுகுவது
மட்டும் மாபெரும் குற்றமாம்.

நல்லா இருக்குயா உங்க நியாயம்.

ஸ்டாலின் குரு said...

பிரபாகரன் எங்கேயாவது அமெரிக்காவுக்கு எதிராக எழுதியிருக்கிறாரா அல்லது பேசியிருக்கிறாரா ?
அப்படி எழுதியோ பேசியோ இருப்பின் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறாரா ?//

தொண்டை கிழிய கத்தி,உங்களைப்போல அமெரிக்கா ஏகாதிபத்தியம் ஒழிக இந்திய முதலாளித்துவம் ஒழிக
என்று 35 ஆண்டுகளாக வாயிலேயே ஏகாதிபத்திய எதிர்ப்பை நடத்திகொண்டிருக்காமல்
களத்தில் எதிர்கொண்டு போராடிய புலிகளை எல்லாம் விமர்சனம் செய்ய ஒரு தகுதி
வேண்டும்.

என்ன பேசுகிறான் என்ன நினைக்கிறான் என்பதைக்கொண்டு ஒருவனின் வர்க்கச் சார்பை முடிவு செய்யக் கூடாது
அவனது நடத்தையை வைத்தே முடிவு செய்ய வேண்டும் என்று சொன்ன லெனினின் வார்த்தைகளை
திரும்ப திரும்ப நினைவுபடுத்திகொண்டிருக்க முடியாது.


குளைக்கிற நாய் கடிக்காது என்பது யாருக்கு பொருந்துமோ இல்லையோ நிச்சயம் உங்களுக்கு பொருந்தும்.

ஸ்டாலின் குரு said...

நேற்று எழுதியது,முந்தின நாள் எழுதியது எல்லாம் எதற்கு
விவாதம் நடப்பது இன்று,அதே பதிலை இன்றைக்கு சொல்லுங்களேன்.
ஏன் ஒரு கருத்தை ஒரு முறைக்கு மேல் சொல்ல மாட்டீங்களோ ?//

ஆமாம் முடியாது.

ஸ்டாலின் குரு said...

அஹா என்னே ஒரு ஜனநாயக பண்பு.
எமது அமைப்பை பற்றி அவதூறாக‌
எழுதுவாராம்,அதற்கு பதில் சொல்வதற்கு
நாம் வர முடியாதபடி தடை போடுவாராம்.
இதுவே ஒரு போலி ஜனநாயக நாடு இந்த நாட்டில்
ஒரு தமிழ்தேசியவாதி வாழ்ந்தால் ஜனநாயகம் பற்றி
கேட்கவா வேண்டும்.//

என் அவதூறுகளுக்கு எல்லாம் பதிவாக பதில் எழுதி
உங்கள் பிளாக்கில் போட்டு பதிவின் இணைப்பை
இங்கே கொடுத்துவிடவும்

ஸ்டாலின் குரு said...

இனி உங்கள் பதிவுகளுக்கு என் பதில் வராது

பி.கு.

ஒட்டுமொத்தமாகவே உங்கள் குழுவில்
அணைவரும் நல்ல மனநல மருத்துவரை
அனுகி சிகிச்சை பெறுவது நலம் என்பது
என் தாழ்மையான கருத்து.

ஸ்டாலின் குரு said...

தோழர் ஸ்டாலின்குரு,

இரயாகரன் வெளியிட்ட புலித்தலைவர் பிரபாகரனின் புகைப்படம் உண்மையா? அதில் காட்டப்பட்டிருக்கும் உடல் புலித்தலைவர் பிரபாகரனுடையதுதானா? என்பதைக் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள். பிரபாகரனின் மரணம் உண்மையெனும் அந்த அதிர்ச்சிகரமான பதில் என்னை முடக்கிவிடும் என்பது மட்டும் உண்மை. இருப்பினும் உண்மையை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

- இளங்குமரன்.

இல்லை நண்பரே! பிரபாகரன் இறந்துவிட்டாரா இல்லையா என்கிற் கேள்விக்கு
என்னால் சரியான பதிலை அளிக்க முடியாவிட்டாலும்,சிங்கள ராணுவம்
பிரபாகரனின் உடல் என்று காட்டியது அவருடையது இல்லை என்பதை
மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

sitharthan said...
This comment has been removed by the author.
sitharthan said...
This comment has been removed by the author.
sitharthan said...

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் பார்ப்பனீயம்!

http://vrinternationalists.wordpress.com/2009/09/10/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA/#comment-176

Post a Comment