Saturday, March 27, 2010

புரட்சிகர மனுவாதிகள்

நீண்ட நாட்களாக பதிவுகள் எழுதாமல் இருந்து விட்டால்
பதிவர் உலகம் மறந்து விடுமே என்கிற கவலை சில
நாட்களாகவே வந்து கொண்டிருந்தது.சரி இனியேனும்
எதையாவது உருப்படியாக :) எழுத முயற்சிக்கலாம்
என்று பார்த்தால் விட மாட்டார்கள் போல இருக்கிறது.
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் இணையப்
புரட்சியாளர்கள.புலிகள் மீது வைக்கப்பட்ட
விமர்சனங்கள்,இறுதி போர்க்காலகட்டத்தில் நிகழ்ந்த
விசயங்களை எல்லாம் தர்க்கரீதியாக அலசி ஒரு
பதிவிடலாம் என்று நீண்ட நாட்களாக எண்ணம்
இருந்தாலும்,அது மருதையரின் நேர்காணலைப்
படித்த பிறகே சாத்தியமானது.நம்ம ராசி அப்படி
போல.பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள்
என்று இரண்டு பகுதிகளாக அந்த இடுகையை
பதிவிட்டிருந்தேன்.இப்பொழுதும் அப்படியே
இவர்களுக்கான எதிர்வினையூடாகவே சில
விசயங்களை முன் வைக்க முயலுகிறேன்.

சில நாட்களுக்கு முன்னால் ஜெயமோகன் டோண்டு
ராகவன்களின் மேட்டிமைத் திமிர் என்றோரு பதிவு
வந்திருந்தது வினவு இணையத்தில்.அப்படியே
வாசித்துக்கொண்டு வந்தபோது நரம்புகள் எல்லாம்
சிலிர்த்தன.வர்க்க உணர்வு பொங்கியது.ஏதோ
என்னுடைய அடிப்படை மார்க்சிய அறிவைக்
கொண்டு தமிழ்த்தேசிய விடுதலையே சமூக
மாற்றத்துக்கான வழி என்கிற முடிவுக்கு
வந்திருந்தாலும்,அடிப்படையில் நானும் ஒரு
மார்க்சியன்.இந்திய தேசிய இனங்களுக்கு
இடையிலான தோழமையை நேசிப்பவன்
என்பதால் சேட்டன்களின் உபசரிப்பைப் பற்றி
படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து வாசித்துக்கொண்டு வந்தபோது வழக்கம்
போலவே பூணூல் நிரடியது.இந்திய அதிகாரவர்க்க
ஆதரவு அரசியல் பல்லிளித்தது.குறைந்த கூலிக்கு
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மக்களை
இறக்குமதி செய்வதை கேரள ஓட்டல்களில்
இருக்கும் தொழிலாளர்களின் சங்கங்கள்
தடுத்து வருகின்றன என்று எழுதி இருக்கிறார்கள்.
வாயைக் கொடுத்து வாயில் புண்ணோடுதான்
ஊர்போய்ச் சேருவேன் என்று வடிவேலு போல்
அடம் பிடித்தால் நான் என்ன செய்ய?

மறுகாலனியத்தின் விளைவு என்றாலும் உழைக்கும்
மக்கள் தங்கள் தேசிய இன அடையாளங்களைக்
கடந்து இணைவதை நாம் கொண்டாட வேண்டும்.
இனிய ராகம் பாட வேண்டும் என்றெல்லாம்
போதிக்கும் இந்த புரட்சியாளர்களுக்கு,உழைத்துப்
பிழைக்க வந்த வடகிழக்கு மக்களை,கேரள
தொழிற்சங்கங்கள் துரத்துவது ஏன் இனவாதமாக
தெரியவில்லை? தமிழர்கள் செய்தால் இனவாதம்.
மலையாளிகள் செய்தால் புரட்சியா?சாதிக்கொரு
நீதிதானே மனுதர்மம்,இனத்துக்கொரு நீதி
வழங்கி சாதனையே படைக்கிறார்கள் நம்
புரட்சிக்காரகள் அடடா ! மேலும் இதனை
வெறுமனே தற்செயல் கருத்து என்று கருத
முடியும் என்று தோன்றவில்லை.எந்த இசத்தின்
லேபிளைக் கொண்டு மூடினாலும் இந்திய
ஒருமைப்பாடு என்பதை பார்ப்பன
ஒருமைப்பாட்டிலிருந்தும்,இந்திய தேசபக்தியை
பார்ப்பன பக்தியிலிருந்தும் பிரித்துப் பார்ப்பது
சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

இந்திய தேசபக்தியிலும்,இந்திய ஒருமைப்பாட்டிலும்
மட்டுமே சாத்தியமாகக் கூடிய பார்ப்பன
மேலாதிக்கத்தை எதிர்த்து மூன்று தசாப்தங்களாக
அஸ்ஸாம்,நாகாலாந்து,மணிப்பூர் உள்ளிட்ட
வடகிழக்கு தேசிய இனங்களின் மக்கள்
போராடிக் கொண்டிருக்கிறார்கள்.தங்களின்
தேசிய இன அடையாளத்தை தக்கவைத்து,
இந்திய அடையாளத்துக்குள் கரைந்து போக
மறுப்பதால்,இந்திய அரச பயஙகரவாதத்தின்
கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இந்திய ஒருமைப்பாட்டையும்,இந்திய தேச
பக்தியையும் நிராகரிக்கும் வடகிழக்கு தேசிய
இனங்களின் மீது பார்ப்பனர்களுக்கும்,இந்திய
அதிகாரவர்க்கத்துக்கும் இருக்கும் வன்மமும்,
கோபமும்தான் இவர்களின் எழுத்திலும்
வெளிப்படுகிறது என்று புரிந்துகொள்வது
தவறாக இருக்காது.அப்பட்டமான பார்ப்பன
வன்மத்தை வடகிழக்கு தேசிய இனங்கள்
மீது காட்டும் இவர்கள் நெடுமாறனும்,
வைகோவும் அந்த மக்களுக்காக குரல்
கொடுக்கவில்லை நாங்கள்தான் குரல்
கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்று
படம் காட்டுகிற கொடுமையை என்னவென்பது?
உண்மையில் இவர்களின் இருபத்தைதாண்டு
கால புதிய ஜனநாயக இதழ்களில் தேடினால்
அதிகபட்சம் பத்து கட்டுரைகள் கூட வட
கிழக்கு தேசிய இன மக்களின் பிரச்சனைகளை
பேசியதாக இருக்காது என்பதே உண்மை.

மேம்போக்கான அரசியல் பார்வைகளை தவிர்த்துவிட்டு
பார்த்தால் தமிழர்கள் மீது சத்தமில்லாமல் ஒரு
உளவியல் போரையே இந்திய அதிகாரவர்க்கம்
நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
காஷ்மீரையும்,வடகிழக்கு மாநிலங்களையும் தவிர
இந்திய பார்ப்பனிய அதிகாரவர்க்கத்துக்கு சிக்கல்
தரும் இனங்களாக தமிழர்களும்,சீக்கியர்களுமே
இருக்கிறார்கள்.இரண்டு தரப்பையும் உளவியல்
ரீதியாக ஊனப்படுத்திக்கொண்டே இருக்க
முயற்சி செய்து வருகிறது இந்திய அரசு.சீக்கிய
மக்களுக்கு எதிராக சர்தார்ஜி ஜோக்குகள் என்கிற
பெயரில் கழிசடைத்தனமான கலாச்சாரம் ஒன்று
கட்டமைக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து
கொண்டிருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
மேலும் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த
ஒரு நிகழ்வையும் இங்கே மறுபடியும் நினைவு
படுத்த வேண்டி இருக்கிறது.


1984 இல் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த இனப்
படுகொலையில் தொடர்புடைய சஜ்ஜன் குமார்,
மற்றும் ஜகதீஸ் டைட்லருக்கு தேர்தலில் போட்டி
இட காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்ததை எதிர்த்து
சீக்கியர்கள் மிகத் தீவிரமாக போராடிக்கொண்டு
இருந்தனர்.ஏறக்குறைய மீண்டும் ஒரு தேசிய
எழுச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது
பஞ்சாப்.அந்த நேரத்தில் தாழ்த்தப்பட்ட
சீக்கியர்களின் தேரா சச்சா செளதா பிரிவின்
தலைவர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில்
வைத்துக் கொல்லப்பட்டார்.சீக்கியர்களின்
அந்த எழுச்சி முழுக்க திசை திருப்பபட்டது.
இணைந்து போராடிக்கொண்டிருந்த சீக்கியர்கள்
தங்களுக்குள் மோதிக்கொள்ளத் துவங்கினர்.


இவைகளை இங்கே பதிந்ததற்கு காரணமே தமிழர்கள்
தங்களின் மேம்போக்கான அரசியல் பார்வைகளை
மாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
ஏற்கனவே பின்னூட்டத்தில் சொல்லி இருந்த ஒரு
விசயத்தையே மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.
தினமும் பேருந்தில் இரண்டு,மூன்று குரல்களை
கேட்க முடிகிறது.150,200 ரூபாய் வாங்கிக்
கொண்டிருந்த இடத்தில் வட இந்தியாவில் இருந்து
வேலைக்கு ஆட்கள் வர ஆரம்பித்த பிறகு 90
ரூபாய்கும் 80ரூபாய்க்கும் வேலை செய்ய
வேண்டி இருக்கிறது என்கிற விசன குரல்களை.
கொத்தடிமை உழைப்புக்கு தயாராக இருக்கும்
வட இந்திய தொழிலாளர்களால் தமிழ் உதிரிப்
பாட்டாளிகள் குறை கூலிக்கு வேலை செய்ய
வேண்டிய நிலை தோன்றி இருக்கிறது.
மேலும் தமிழகத்தின் உதிரிப்பாட்டாளிகள்
யார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை
பெரும்பாலும் சாதிய ஒடுக்குமுறை
தாங்காமல் கிராமங்களை விட்டு வெளியேறிய
தலித்துகள்.விவசாயத்தை அழிக்கும் அரசுகளின்
கொள்கையாலும்,தமிழகத்துக்கே உரிய
பிரத்தியேகமான நதிநீர் சிக்கலகளாலும்
வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் என்கிற
இரண்டு தரப்பினரே உதிரிப் பாட்டாளிகளாக
உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


வட இந்திய தொழிலாளர்களின் வருகையால் தமிழகத்தின்
உதிரிப்பாட்டாளிகள் சிக்கலை சந்திக்க துவங்கி
இருக்கின்றனர்.எந்த ஒரு தேசிய இனத்திலும்
பிற தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள சேர்ந்து
வசிப்பது இயல்பான ஒன்றுதான்.அதே நேரம்
சமீப காலங்களில் தமிழகத்துக்கு பிற தேசிய
இனத்தவரின் வருகை மிக அதிகமாகி இருக்கிறது
என்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.
இவைகளெல்லாம் பிரச்சனைகள்தான்.ஆனால்
இவைகள் மட்டுமே முதன்மையான பிரச்சனைகள்
என்று கூறப்படுவதை ஏற்க முடியாது.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களை,வளங்களைச்
சூறையாடும் ஏகாதிபத்தியங்களை எதிர்ப்பது,
சாதி வெறியர்களால் தாழ்த்தப்பட்டவர்கள் மீது
நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளை எதிர்ப்பது
போன்ற கடைமைகளை புறக்கணித்துவிட்டு
தமிழ்த்தேசியர்களாக தங்களைக் கூறிகொள்பவர்கள்
இயங்குவது ஏற்க முடியாத விசயமாகும்.
வர்க்கப் பார்வையற்ற,பாசிச மற்றும் இனவாதப்
பண்புகளைக் கொண்டவர்கள் முன்நிறுத்தும்,
ராஜ்தாக்கரே பாணியிலான தேசியத்தை
முறியடிக்க வேண்டிய கடமையும் உண்மையான
தமிழ்த்தேசியவாதிகளின் தோள்களில்
சுமத்தப்பட்டிருக்கிறது.


மீண்டும் மக இக வினருக்கே வரலாம்.பலமுறை
இவர்களின் போலி வர்க்க அரசியலையும்,
பார்ப்பன விசமத்தையும் அம்பலப்படுத்தி எழுதி
விட்டேன்.இறுதியாக சொல்வது ஒன்றுதான்.
சமூகத்தில் சரியான விசயங்களுக்கான தேடல்
இருக்கும் போது,பல இடங்களில் இருந்தும்
சரியான கருத்துக்கள் வரவே செய்யும்.அந்தக்
கருத்துக்களை முன் வைப்பவர்கள் நேர்மையான
ஆட்களா என்பதை அவர்களின் செயல்களை
வைத்து மட்டுமே மதிப்பிட முடியும்.
தோற்றத்தில் என்னவாக காட்டிக்
கொள்கிறார்கள் என்பது அக்கறைக்குரியதல்ல.
கண்ணால் காண்பதும் பொய் காதால்
கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்
என்கிற பழமொழியோடு இந்த பதிவை
நிறைவு செய்து விடலாம்.

46 comments:

ஸ்டாலின் குரு said...

சோதைனைப் பின்னூட்டமாக எதை இடலாம் என்று
யோசித்தேன்.சில தினங்களுக்கு முன் எழுத்தாளர்
ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் நித்தியானந்தம் என்கிற
இளைஞன் என்கிற பதிவுக்கு அனுப்பிய
பின்னூட்டத்தை அவர் பிரசுரிக்கவில்லை.
கட்சி நடவடிக்கை எடுத்துவிடும் என்று நினைத்தாரா
தெரியவில்லை.

அதை வெளியிடுகிறேன்.


பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார்
வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல.//


அப்படியே கம்யூனிஸ்டுகள் வேசம் போட்டிருப்பதால்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம்
விரிக்கும் உரிமை சிபிஎம் க்கு மறுக்கப்படுவது
சரியல்ல என்றும் எழுதிவிடுங்கள்.

blackpages said...

நல்ல பதிவு தோழர்

ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு நாங்கள் அரசின்
கடும் ஒடுக்குமுறைகளை சந்தித்தோம்,பயஙகரமாக
போராடினோம் என்றேல்லாம் மக இக வினர்
சொல்லி இருந்தது நினைவு இருக்கிறதா தோழர்.

நேற்றுதான் எனக்கு ஒரு விசயம் நியாபகத்துக்கு
வந்தது.


இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக தேனி
மாவட்டம் பெரியகுளம் அருகே ஆயுதப்பயிற்சி
எடுக்க வந்தார்கள் என்கிற குற்றசாட்டின் கீழ
சில தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
அப்போது கைப்புள்ள ரேன்ஞ்சுக்கு பம்ம்மியதைப்
பார்த்து மார்க்சிய லெனினிய அரசியல் பேசுபவர்கள்
எல்லாம் கைகொட்டி சிரித்தார்கள்.

கைது செய்யபட்டவர்களுக்கும் எங்களுக்கும் எந்த
தொடர்பும் இல்லை நாங்களாம் ரொம்ப
நல்லவஙக,வாயில மட்டும்தான் புரட்சி
பேசுவோம் என்று ஆளும் வர்க்கத்துக்கு
முன்னால் அறிக்கை கொடுத்தவர்கள்தான்
இவர்கள்.

எப்படிச் சரியாகச் சொல்ல

நம்ம எதிர்ப்பு அரசியலின் ஏகப்பிரதிநிதி ஷோபாசக்தி
ராமேஸ்வரத்தில் போலிஸ்காரர்களைப் பார்த்து
கை எடுத்துக்கும்பிட்டு விட்டுவிடுங்கள் என்று
கதறியது போலத்தான் இவர்களும் கதறினார்கள்.

blackpages said...

இவர்கள் ராஜிவ் கொலைக்கு பிறகு கடும் அடக்குமுறைகளை சந்தித்து போராடினார்கள்
என்று சொல்வதைக் கேட்டால் வாயில் சிரிக்க
கூடாது.

blackpages said...

1984 இல் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த இனப்
படுகொலையில் தொடர்புடைய சஜ்ஜன் குமார்,
மற்றும் ஜகதீஸ் டைட்லருக்கு தேர்தலில் போட்டி
இட காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்ததை எதிர்த்து
சீக்கியர்கள் மிகத் தீவிரமாக போராடிக்கொண்டு
இருந்தனர்.ஏறக்குறைய மீண்டும் ஒரு தேசிய
எழுச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது
பஞ்சாப்.அந்த நேரத்தில் தாழ்த்தப்பட்ட
சீக்கியர்களின் தேரா சச்சா செளதா பிரிவின்
தலைவர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில்
வைத்துக் கொல்லப்பட்டார்.சீக்கியர்களின்
அந்த எழுச்சி முழுக்க திசை திருப்பபட்டது.
இணைந்து போராடிக்கொண்டிருந்த சீக்கியர்கள்
தங்களுக்குள் மோதிக்கொள்ளத் துவங்கினர்.//

ஹைதராபாத்தில் இந்துதுவ பயஙகரவாதிகள்
முஸ்லீம்களோடு திட்டமிட்டு மோதலைத்
துவக்கி இரண்டு பேர் பலியாகி இருக்கின்றனர்.
இரண்டு மூன்று நாட்களாக ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த சில
மாதங்களாக மக்களின் மகத்தான எழுச்சியோடும்
ஆதரவோடும் நடந்து வந்த தெலுங்கானா
போராட்டம் திசை திருப்பப்பட்டிருக்கிறது.
ஆளும் வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும்
மாமா வேலை பார்ப்பதில் இந்துத்துவ கும்பலுக்கு
யாரும் இணை இல்லை என்பது மீண்டும்
நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

blackpages said...

தமிழர்கள் செய்தால் இனவாதம்.
மலையாளிகள் செய்தால் புரட்சியா?சாதிக்கொரு
நீதிதானே மனுதர்மம்,இனத்துக்கொரு நீதி
வழங்கி சாதனையே படைக்கிறார்கள் நம்
புரட்சிக்காரகள் அடடா ! //

கோவிலில் மணி அடிக்கிற பார்ப்பானை நம்பினாலும்
நம்பலாம் லௌகீக பார்ப்பனர்களை,கம்யூனிஸ்டுகள்
என்று சொல்கிற பார்ப்பனர்களை நமபவே கூடாது
என்ற பெரியாரின் எச்சரிக்கையைத்தான் அடிக்கடி
நினைவில் கொள்ள வேண்டி இருக்கிறது.

உண்மையாகவே மக்களோடு இணைந்து போராட
வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட பிறப்பால
மட்டுமே பார்ப்பனர்களாக இருப்பவர்கள் கூட
இவர்களைப் போன்றவர்களால் மக்களின்
வெறுப்புக்கு ஆளாக நேரிடுகிறது.


பால்தாக்கரேயின்,இந்துதுவ பயஙகரவாதிகளின்,
ராஜ்தாக்கரேயின் பாசிசத்தை எல்லாம் இவர்கள்
கேள்வி கேட்பது உண்மைதானா என்பதோடு,
கேள்வி கேட்பதற்கான தகுதி கூட இவர்களுக்கு
இருக்கிறது என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை.

blackpages said...

இந்திய ஒருமைப்பாட்டையும்,இந்திய தேச
பக்தியையும் நிராகரிக்கும் வடகிழக்கு தேசிய
இனங்களின் மீது பார்ப்பனர்களுக்கும்,இந்திய
அதிகாரவர்க்கத்துக்கும் இருக்கும் வன்மமும்,
கோபமும்தான் இவர்களின் எழுத்திலும்
வெளிப்படுகிறது என்று புரிந்துகொள்வது
தவறாக இருக்காது.//

உன்மைதான். சிங்கள் குடியேற்றங்களைத் தடுத்தால்
புலிகள் குறுந்தேசியவாதிகள்,தங்களின் தேசிய
நிலப்ப்ரப்பில் தாங்கள் பெரும்பானையாக தொடர
விரும்பினால் தமிழக தமிழர்கள் இனவாதிகள்.
நல்லாத்தான் இருக்குயா பார்ப்பன நியாயம்.

blackpages said...

வர்க்கப் பார்வையற்ற,பாசிச மற்றும் இனவாதப்
பண்புகளைக் கொண்டவர்கள் முன்நிறுத்தும்,
ராஜ்தாக்கரே பாணியிலான தேசியத்தை
முறியடிக்க வேண்டிய கடமையும் உண்மையான
தமிழ்த்தேசியவாதிகளின் தோள்களில்
சுமத்தப்பட்டிருக்கிறது.//


தனி இருக்கையில் உக்கார வைத்து தனிக்குவளையில்
தேநீர் கொடுத்த தங்களுக்கு எதிராக,அருந்ததிய
தோழனையும் கடைக்குள் அழைத்து தேநீர்
கொடுத்த மலையாளிகளை வெளியேற்ற
வேண்டும் என்று சொல்லும் அரைவேக்காடுகளைத்தான்
சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் மேலே சொல்லி இருக்கிற ஹைதராபாத
நிகழ்வைப்போலவே உண்மையான எதிரிகளுக்கு
எதிராக மக்கள் போராடுவதை தடுக்கவே இவர்கள்
பயன்படுகிறார்கள்.

நீங்கள் சொன்னதுபோலவே இவர்களுக்கு எதிராகவும்
போராட வேண்டும்தான்.

ஸ்டாலின் குரு said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தோழர்


என்னைப் பொறுத்தவரை தமிழ்த்தேசிய விடுதலைப்
போராட்டத்தோடு வர்க்க ரீதியாக இணைந்து
கொள்ள விரும்பும் தமிழகத்தில் வாழும்,
மொழிச்சிறுபான்மையினரையும் இணைத்துக்கொண்டு
போராடுவதே சரியான வழி என்று கருதுகிறேன்.

ஸ்டாலின் குரு said...

தோழர் மாவோ புரட்சிக்குப் பின் பிற நாடுகளில் வாழும்
சீனர்களை பார்த்துச் சொன்னதை நினைவுபடுத்த
விரும்புகிறேன்.


பிற நாடுகளில் இருக்கும் சீனர்களுக்கு மூன்று மாதங்கள்
கால அவகாசம் கொடுத்து அதற்குள் சீனாவுக்கு
வர விரும்பினால்வாருங்கள் இல்லாவிட்டால்,நீங்கள்
வாழும் தேசத்துக்குஉண்மையாக அங்கேயே
இருந்து கொள்ளுங்கள் என்றார்.


பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள்,தமிழகத்தில்
வாழும் பிற மாநிலத்தவர்கள் அணைவர் விசயத்திலும்
இந்த முறையே கடைபிடிக்க ஏற்ற ஒன்றாக இருக்கா
முடியும்.

muki; said...

தனி இருக்கையில் உக்கார வைத்து தனிக்குவளையில்
தேநீர் கொடுத்த தங்களுக்கு எதிராக,அருந்ததிய
தோழனையும் கடைக்குள் அழைத்து தேநீர்
கொடுத்த மலையாளிகளை வெளியேற்ற
வேண்டும் என்று சொல்லும் அரைவேக்காடுகளைத்தான்
சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.///


தேநீர் கொடுப்பது இருக்கட்டும் தோழர்,கோவையில் நீண்ட
நாட்களாக ஒரு கோரிக்கை இருந்து வருகிறது.சிறுவாணி
அணையின் உயரத்தை ஐந்து அடிகள் உயர்த்தினால் பலகோடி
லிட்டர் நீர் கிடைக்கும்.ஒவ்வொரு வருடமும் வீணாகும்
நீரை கோவையின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்த முடியும்.
கோவையில் அதிகமாக வசிக்கும் மலையாளிகளைக் கூட
கருத்தில் கொள்ளாமல் அணையின் உயரத்தை அதிகரிக்க
மறுக்கும் மலையாள மார்க்சிஸ்டுகளின் இனவெறியை
எங்கே போய் சொல்வது?

ஸ்டாலின் குரு said...

விடுங்க பாஸு இதுக்கு இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

பிலிஸ்டைன் (அற்பவாத) கலாசாரத்தில் மூழ்கி கிடக்கும்
தமிழர்களை முன்னேற்ற,கேரள மக்களின் பண்பட்ட
கலாசாரத்தை தமிழர்களுக்கு கற்றுக்கொடுக்க வந்திருக்கும்,
கேரளாவின் அம்பாசடர் சாரு நிவேதிதாவுக்கு ஒரு
கோரிக்கை வைத்தால் போதும்.நாளையே அச்சுதானந்தன்
அன் கோ சிறுவாணி அணையின் உயரத்தை உயர்த்தி விடுவார்கள்.
:)

பித்தன் said...

தோழரே நான் உங்கள் பதிவுக்கு பின்னோட்டம் இடவேண்டாம் என்றுதான் தோன்றுகிறது.ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது.நீங்கள் இன்னும் இனவாத அடிப்படையிலேயே இருக்கிறீர்கள்.அறிவியலில் அசுரவளர்ச்சியும்,உலகமயம்,தாராளமயம்,தனியார்மயம் என்று எல்லாமே முதலாளித்துவம், ஏகாதியபத்தியமாக மாறிக்கொண்டு இருக்கும் போது,நீங்கள் இன்னும் அயர்லாந்து விடுதலையை காரல்மார்க்ஸ் ஆதரித்த காலத்திலேயே இருங்கள்.

ஸ்டாலின் குரு said...

என்ன பித்தரே இப்படி சொல்லிட்டீங்க

நானே 1917 லிலேயே நின்றுவிட்டவர்களை எப்படிடா நிகழ்காலத்துக்கு
கொண்டுவருவதுன்னு போராடிக்கிட்டு இருக்கேன்

blackpages said...

பிளிஸ்டைன் தனத்தைப் பற்றி சாரு பேசுவதுதான் கொடுமையாக
இருக்கிறது தோழர்.ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதி செய்த
துரோகத்தைப் பற்றி வருடக்கணக்கில் மௌனமாக
இருந்துவிட்டு,டெல்லியில் நின்றுகொண்டு கருணாநிதியை
யார் திட்டினாலும் அங்கே இருப்பவர்கள் அதை ரசிப்பார்கள்
என்று நன்றாகத் தெரிந்து கொண்டு,அங்கே கருணாநிதிக்கு
எதிராக பேசி சீன் போடுகிறார்.ஒரு அற்பவாதியே
அற்பவாதம் பற்றி பாடம் எடுப்பது நல்ல வேடிக்கை.

ஸ்டாலின் குரு said...

பிளிஸ்டைன் தனத்தைப் பற்றி சாரு பேசுவதுதான் கொடுமையாக
இருக்கிறது தோழர்.ஈழத் தமிழர்களுக்கு கருணாநிதி செய்த
துரோகத்தைப் பற்றி வருடக்கணக்கில் மௌனமாக
இருந்துவிட்டு,டெல்லியில் நின்றுகொண்டு கருணாநிதியை
யார் திட்டினாலும் அங்கே இருப்பவர்கள் அதை ரசிப்பார்கள்
என்று நன்றாகத் தெரிந்து கொண்டு,அங்கே கருணாநிதிக்கு
எதிராக பேசி சீன் போடுகிறார்.ஒரு அற்பவாதியே
அற்பவாதம் பற்றி பாடம் எடுப்பது நல்ல வேடிக்கை. :)

ஸ்டாலின் குரு said...

நீங்கள் இன்னும் இனவாத அடிப்படையிலேயே இருக்கிறீர்கள்//

பாத்துங்க... இங்கே இனவாதி,சந்தர்ப்பவாதி,பிழைப்புவாதி,
வார்த்தைகளுக்கெல்லாம் காப்புரிமை பெற்றிருப்பதோடு,
அந்த வார்த்தைகளில் லேபிள் செய்து வைத்துக்கொண்டு,
எல்லோரின் நெற்றியிலும் ஒட்டுவதற்கென்றே சில
`புரட்சிகாரர்கள்’ இருக்கிறார்கள்.எங்கள்
அனுமதியில்லாமல் எப்படி அந்த வார்த்தையை
பயன்படுத்துகிறாய் என்று சண்டைக்கு
வந்துவிடப்போகிறார்கள்.:)

ஸ்டாலின் குரு said...

தோழரே நான் உங்கள் பதிவுக்கு பின்னோட்டம் இடவேண்டாம் என்றுதான் தோன்றுகிறது.ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது//


வீட்டைக் கொள்ளையிட வந்த அந்நியர்கள்(அந்நிய நாட்டு
நிறுவனங்கள்),வீட்டுக்கு காவல்காரன் என்கிற பெயரில்
இருப்பவர்களோடு(முதலாளிகள்,அரசு,அரசியல்வாதிகள்,
அதிகாரவர்க்கம்...) கொள்ளையில் பங்கு கொடுப்பதாக
உடன்பாடு செய்துகொண்டு,வீட்டைச் சூறையாடி
கொள்ளையிட்டுக்கொண்டும்,வீட்டில் இருக்கும்
பெண்களை Rape செய்துகொண்டும்(வளங்களை,
உழைப்புச்சக்தியை,சுற்றுச்சூழலை சுரண்டுவது,சீரழிப்பது)
இருக்கிறார்கள்.எதிர்ப்பவர்களை ஈவு இரக்கமில்லாமல்
கொலையும் செய்து வருகிறார்கள்.வீட்டில்
இருந்தவர்களில் தங்களோடு ஒத்துழைத்தவர்களுக்கும்,
தேமே என்று பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கும்
கைச்செலவுக்கு வைத்துக்கொள் என்று கொள்ளையர்கள்
வீசுகிற சில்லறைகளை பொறுக்கிக்கொண்டு
நான் வளர்கிறேனே மம்மி என்று பேசுபவர்களைப்
பார்த்தால் எனக்கும் மனசு கேட்க மாடேங்குது

blackpages said...

தோழர் யாருக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்

உங்களுக்கு இனவாதி பட்டம் சூட்டியது,நீங்கள்
எப்பொழுதோ கடந்து வந்துவிட்ட விசயங்களை
எல்லாம் மறந்துவிட்டு நாங்கள்தான் மார்க்சியம்
கற்றுத்தர வந்த மாமேதைகள் என்பதுபோல பேசஸ்
துவங்கியதிலிருந்தே தெரியவில்லையா பித்தன்,
மக இக வினால் பித்தன் ஆக்கப்பட்டவர் என்று.




மக இக வினரால் உருவாக்கப்படும் Hallucination நோயாளிகளை
நினைக்க பரிதாபம்தான் மிஞ்சுகிறது.

ஸ்டாலின் குரு said...

பதிவு எழுதுகிற மனநிலையே இல்லை.எதையாவது அவ்வப்போது போடலாம் என்றால் அதில் ஓரளவுக்கு மேல் எழுத இயலாத நிலை இருப்பதால் சில
விசயங்களை இந்த பதிவின் பின்னூட்டத்திலேயே எழுதி விடலாம் என்று
கருதுகிறேன்.

ஸ்டாலின் குரு said...

முதலாவதாக அ மார்க்ஸ் என்கிற அறிவுஜீவி ஈழப்போராட்டம்
முழுவதுமாக முடங்கிபோக வேண்டுமென்று கருதுகிறவர்களின்
குரலை ஈழத்தமிழர்களின் குரல் என்பதாக பேசி இருந்தார்.
அதாவது உரிமையாவது கத்திரிக்காயாவது எங்களை விவசாயம்
செய்து வாழ அனுமதித்தால் போதும் என்று ஈழத்தமிழர்கள் கூறுவதாக
சொல்லி இருந்தார்.இஸ்லாமியர்களின் பாதுகாப்பாளராக
தன்னை கருதிக்கொள்ளும் அவர் 2002 ஆம் ஆண்டு மோடியால் படுகொலை
செய்யப்பட குஜராத முஸ்லிம்களின் உறவினர்களிடம் போய் நீதியாவது
வெங்காயமாவது எல்லாம் மோடியின் காலைக் கழுவி பிழைத்துக்கொள்ளுங்கள்
என்று சொல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்டாலின் குரு said...

கடந்த சில நாட்களாக இணையத்தில் மக இக வினரின் படம் 70 mm
இல் ஓடிக்கொண்டிருக்கிறது.சில மாதங்களுக்கு முன்னாள்
இரயாகரனுக்கும் தங்களுக்கும் எதோ மாபெரும் சண்டை என்பது
போல ஒரு படம் ஓட்டினார்கள்.ஈழ பிரச்சனையில் இவர்களின்
ராவான முகமே கிழிந்து தொங்கியபோது ஜகத் கஸ்பாரின் துரோகத்தை
பற்றி பேசி ஒரு படம் ஓட்டினார்கள்.அந்த வகையில் தன்னை
பெண்ணியவாதியாக நிறுவ விரும்புகிற லீனாவுக்கு எதிராக,தங்களை
மார்க்சியவாதிகளாக நிறுவ வேண்டி இருக்கிற இவர்கள் ஓட்டுகிற
படமும் நன்றாகவே ஓடுகிறது.அமெரிக்காவும் அல்கைதாவும் எதிரிகள்
என்றால் எப்படி சிரிப்போமா அப்படியே லீனாவுக்கும் மக இக வுக்குமான
இந்த அக்கப்போரையும் சிரித்துவிட்டு கடந்து செல்வது புத்திசாலித்தனம்
என்பதே என் கருத்து என்றாலும் சில விமர்சனங்களை முன் வைக்க
வேண்டி இருக்கிறது.

ஸ்டாலின் குரு said...

http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_12.html
இந்த தலைப்பில் இரயாகரன் என்கிற மனசிதைவுக்கு
உள்ளான நபர்,தமிழீழ தேசியத்தலைவரை கைதுசெய்து
நிர்வாணமாக கடற்கரையில் ஓடவிட்டு அடித்தார்கள்
என்று எழுதியதை எடுத்துப்போட்டு
இருந்தனர்.எதிர்த்தரப்பை
கோபபடுத்துவதன் மூலம் விவாதத்தில் வெற்றி
அடைய முயற்சிக்கும் தந்திரம் என்பது தெரிந்தாலும்
கோபப்பட்டேன்.உடனே ரசிக மனப்பான்மை என்றும்
புலி ரசிகன் என்றெல்லாம் ஊளையிட்டனர்.
தாங்கள் மதிக்காத பிரபாகரனை இழிவு செய்வதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று கருதுவார்களேயானால் தான் மதிக்காத மார்க்சிய
ஆசான்களை இழிவு செய்வதற்கு லீனாவுக்கு
இருக்கும் உரிமையையும் மக இக புர்ச்ச்சசிகாரர்கள்
அங்கீகரிப்பார்களா?

ஸ்டாலின் குரு said...

தங்கள் மீதான எதிர்வினைகளுக்காக மருதையனை
மெரினாவில் நிர்வாணமாக ஓடவிட்டு அடிக்க வேண்டும்
என்று யாராவது எழுதினால் இவர்களுக்கு கோபம் வருகிறதா
இல்லை என்று பார்க்க வேண்டும் :)

ஸ்டாலின் குரு said...

தமிழீழ தேசியத்தலைவரை இந்த அளவு கேவலமாக
எழுதிய பிறகும் கூட இவர்களை எதுவும் செய்யாத
தமிழின உணர்வாளர்கள் பாசிஸ்டுகலாம்,இந்த கொடுமையை
எங்கே போய் சொல்ல

Anonymous said...

இந்தியாவில் உள்ள அத்தனை தொழிலாளர்களுக்கும் விமோசனம் விடுதலை என்று புறப்பட்டால் ஒன்றும் புடுங்க முடியாது. தமிழ்நாடு என்கிற அளவோடயே தற்போதைக்கு நாம நிக்கோணும். நம்ம வீடு எரிஞ்சிட்டிருக்கு அடுத்தவன் கூரய அணைக்கிறதுல நாம் பக்கா கில்லாடிங்க. ரொம்பப் பெரிய மனசு நம்மளுக்கு. சுத்தியிருக்கிறவன் தண்ணிய விடுறான் இல்ல. தற்கொல செய்ற விவசாயிகள் போக மீதிபேர் எலிய சுட்டு தின்னிட்டிருக்கானுக. அதுவும் போதலைன்னு மலையாளிங்க அங்க இருந்து வந்து டீக் கடையில ஆரம்பிச்சு சுத்தமா சுருட்டுறானுவ. சேட்டுகள் சுருட்டுறானுவ. பத்தலைன்னு இப்போ படையெடுத்து வந்திட்டிருக்கானுவ. தமிழ்நாட்டில இருக்கிற நிலக்கரி வளம் எல்லாத்தையும் மத்திய அரசு கண்ரோல்ல வைச்சிருக்கு. எப்படித்தான் திங் பண்ணினாலும் தமிழ்நாட்ட குட்டிச்சுவராக்கிட்டு இருக்கானுக. இந்தியாவுல முதலாவத இத்துப்போகபோகிற மாநிலம் தமிழ்நாடுதான். இதுக்கு பல காரணம் இருக்கு. இது திட்டமிட்டே நடக்கிறது. அப்துல் கலாம் சிதம்பரம் இன்னும் தமிழங்க இந்தியாவ வல்லரசா தூக்கி நிறுத்தினானுங்க என்னு துளியாவது மதிக்கிறாங்களா மத்தவங்க? நாய விட கேவலமா இல்ல மலயாளியும் நார்த் இண்டியனும் நடத்துறாங்க. நாம நாயா இருக்கும் வரைக்கும் நம்மோட அரசியல் தலமைகள் நக்கி பிழப்பு நடத்துவம் வரைக்கும் பத்தலைன்னு இந்தியா முழுவதுக்கும் போராட புறப்படும் கம்னியுஸ்டுகளும் இருக்கும் வரைக்கும் என்னைக்குமே விமோசனம் கிடையாது. தமிழ்நாட்டில இருக்கிற வறிய மக்கள் சாக வேண்டியதுதான்

ஸ்டாலின் குரு said...

தனியாகச் சென்று லீனாவைக் கூட சந்திக்கிற தைரியம் தங்களுக்கு
இல்லை என்று ஒப்புக்கொள்ளும் மக இக வினர்,ராஜிவ்காந்தி கொலையில் தங்களை தொடர்புபடுத்தி கிட்டு பேசினார் என்றும்,
பல்லாவரம் பக்கத்தில் ஆயுத பயிற்சி எடுப்பதாக சிபிம் எம் தங்களை
பற்றி பேசுவதாகவும் சொல்லி படம் காட்டுவது கொஞ்சம் ஓவராக இல்லை

ஸ்டாலின் குரு said...

இது மக இக வினரின் வார்த்தைகள்.

//உன் வாதம் என்ன? உன் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. அல்லது நீ விரும்புகிற முறையில் விமரிசிக்க வேண்டும் என்பதுதானே! இதுதான் உண்மையான பாசிசம்.//


http://stalinguru.blogspot.com/2010/03/2.html


இந்த தலைப்பின் பின்னூட்டத்தில் இவர்களின் கருத்துக்கு மறுப்பு சொல்லக்கூடாது அல்லது இவர்கள் விரும்புகிற முறையில் விமர்சிக்க
வேண்டும் என்று என்னிடம் கோரியிருக்கிறார்கள். பாசிசம் பற்றி யார் பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டது

ஸ்டாலின் குரு said...

நீங்கள் விவாதிக்கும் மனநிலையில் பதிவுகள் எழுதுவது போல தெரியவில்லை. ஏற்கனவே நடந்த விவாதங்களில் நீங்கள் நடந்து கொண்ட
விதமும் அதையே நிரூபிக்கிறது. நிலையாக ஒரு நிலையைப் பற்றி நின்று இயங்கியல் ரீதியாக விவாதிக்கும் ஒரு முறையை நீங்கள் கற்றுத்
தேறாத போதாமை நன்றாகவே வெளிப்படுகிறது. த.நா.ம.லெ.கவின் அரசியல் வகுப்புகளில் இயங்கியலைக் கற்றுக் கொடுக்கவில்லையா என்ன?
போகட்டும்.. அரசியலைக் கோட்பாட்டு ரீதியில் கற்றுத் தேறாவிட்டாலும் - மக்களிடையே வேலை செய்யும் ஒரு சக மா.லெ அமைப்பு மேல்
ஒரு மார்க்சிய விரோதிக்கு இணையான வன்மத்தைக் கக்குவது ஏன்? அதுவும் விவாதத்துக்கான கதவுகளை அடைத்து வைத்துக் கொண்டே
இதைச் செய்வது ஏன்?

கல்லடி வாங்கிய நாய் தெருமுனைக்கு ஓடிப்போய் திரும்பி நின்று குலைப்பதைப் போல் இருக்கிறது நீங்கள் நடந்து கொள்ளும் முறை.

எத்தனை மறைத்தாலும் நீங்கள் மக்களிடமிருந்து விலகி நடைமுறையில் இல்லாதவரிடம் இருக்கும் ஒரு வரட்டுத்தனத்தோடு தனிமைப்பட்டு நிற்கும் தனிமையுணர்ச்சி உங்கள் எழுத்துக்களில் தெறிக்கிறது. நடைமுறையில் இருக்கும் மா.அ.க மேலான காழ்ப்பு நடைமுறையில் இல்லாத உங்கள்
கையாலாகத்தனத்தின் அடைப்படையிலிருந்தே கிளர்ந்தெழுகிறது.//
இதுதான் அந்த பின்னூட்டம்.தங்களுக்கு ஒரு நீதியும்
பிறர்க்கு ஒன்றும் சொல்லும் மனுவாதிகள் என்பதற்கு இந்த
பின்னூட்டமே சாட்சி

Anonymous said...

கருணாநிதியை பார்ப்பனர்கள் எதிர்ப்பது போலவும் ,பார்ப்பனர்களை
கருணாநிதி எதிர்ப்பது போலவும் அவ்வப்போது தமிழகத்தில் ஒரு
தோற்றம் உருவாக்கப்படும். அதன் பின்னணியில் உண்மையான பார்ப்பன
எதிர்ப்பு நடவடிக்கைகள் குழப்பப்பட்டு விடும்.இரு தரப்பும் ஒருவரின் தேவையை
மற்றொருவர் நிறைவு செய்து கொள்வார்கள்.லீனாவுக்கும் மக இக வுக்குமான
இந்த சண்டையும் அப்படிப்பட்டதுதான். இருவரின் நோக்கமுமே உண்மையான எதிர்ப்பு அரசியல் பக்கம் மக்கள் சென்று விடக்கூடாது என்பதுதான்.

Anonymous said...

இரயாவுடன் சமரசத்துக்கு வந்தது போலவும்,சில காட்டமான
கட்டுரைகளுக்கு பிறகு ஜகத்துக்கு மறைமுகமாக பச்சைக்கொடி
காட்டியது போலவும் புலி எதிர்ப்பு அரசியலுக்கு முதுகு சொறிந்து
கொள்ள ஒருவருக்கொருவர் தேவை என்கிற அடிப்படையில் சமரசத்துக்கு
வந்து விடுவார்கள் என்று நம்பலாம்.

Anonymous said...

கருணாநிதியை பார்ப்பனர்கள் எதிர்ப்பது போலவும் ,பார்ப்பனர்களை
கருணாநிதி எதிர்ப்பது போலவும் அவ்வப்போது தமிழகத்தில் ஒரு
தோற்றம் உருவாக்கப்படும். அதன் பின்னணியில் உண்மையான பார்ப்பன
எதிர்ப்பு நடவடிக்கைகள் குழப்பப்பட்டு விடும்//


மருதையனுக்கு எதிரான சுப்ரமணிசாமியின் எதிர்ப்பு,
மற்றும் சுப்ரமணிசாமிக்கு எதிர்நான மருதையனின்
எதிர்ப்பு போலவா :)

Anonymous said...

எனக்கென்னவோ சோபாசக்தி ராமேஸ்வரத்தில் நாறிய உடனேயே
புலி எதிர்ப்பு அரசியலுக்கு இனியும் ஷோபசக்தித்யை துணைக்கு அழைக்க
முடியாது என்கிற முடிவுக்கு வந்திருந்த மக இகவினர் .லீனாவின்
கவிதைகள் பிறகு அடிக்க ஆரம்பித்துள்ளனர் என்று தோன்றுகிறது

ஸ்டாலின் குரு said...

எனது மூன்று காத்திரமான பின்னூட்டங்களை வெளியிடாத இனியொரு தளத்தின் கருத்து சுதந்திரத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்

-/பெயரிலி. said...

/சில தினங்களுக்கு முன் எழுத்தாளர்
ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் நித்தியானந்தம் என்கிற
இளைஞன் என்கிற பதிவுக்கு அனுப்பிய
பின்னூட்டத்தை அவர் பிரசுரிக்கவில்லை./

உங்கள் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் எல்லையே இல்லையா? ;-)

-/பெயரிலி. said...

/எனது மூன்று காத்திரமான பின்னூட்டங்களை வெளியிடாத இனியொரு தளத்தின் கருத்து சுதந்திரத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்/

இதிலே ஏமாற்றம் வராமலிருக்கவேண்டுமானால், ரயாகரனின் தமிழ்சேக்கிள், ஜெயபாலன் & கொன்ஸ்ரன்ரைனின் தேசம், ராகவன் & கோவின் கும்மியடிக்கும் புகலி இப்படியான தளங்களிலே முதலிலே பின்னூட்ட முட்டையிட்டுப் பொரிக்குமா என்று காத்திருந்து பார்க்கப் பழகவேண்டும். இந்து, புரொண்ட் லைன் ஆசிரியருக்கு பிராமணர், ஆங்கிலோ இந்தியன், உருதுமுஸ்லீம் ஆகிய குடிக்குழுப்பெயர்களிலே இல்லாமல் எழுதும் கடிதங்கள்கூடப் பிரசுரமாகலாம். ஆனால், இவர்களிடையே அதுகூடச் சாத்தியமாகாது. இப்படியான கருத்துச்சுதந்திரக்கும்பல்களெல்லாம் விடுதலைப்புலிகளின் கருத்துச்சுதந்திரம் பற்றிக் கருத்துக்குறட்டைவிடும் பாருங்கள். அது!

-/பெயரிலி. said...

/சில தினங்களுக்கு முன் எழுத்தாளர்
ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் ...கட்சி நடவடிக்கை எடுத்துவிடும் என்று நினைத்தாரா
தெரியவில்லை./

கட்சியாய் வந்து தமிழ்மணத்திலே உள்ளூர் வட்டத்தலைபதிவுக்கு 'வாசிக்கார் பரிந்துரை'ப்போராட்டம் செய்து பலஸ் ஏற்றும் பாட்டாளிகள்கூட்டம் இது. ஒன்றுபட்டால் உண்டு மூச்செடுக்க வால்வு. உங்களுக்கேன் எரியுது! ;-)

-/பெயரிலி. said...

(இப்போது பார்க்கையிலே) உங்கள் பின்னூட்டங்கள் இனியொருவிலே அனுமதிக்கப்பட்டிருக்கின்றன(வெனத் தெரிகின்றது). ஒருவேளை உடனடியாக அவர்களுக்கு அனுமதிக்கமுடியாதிருந்திருக்கலாம்.

blackpages said...

கடந்த இரண்டு இதழ்களுக்கு முந்தைய புதுவிசையில் மனிதன் காலி மிருகம் பாதி
என்கிற தலைப்பில் ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றிய ஒரு விமர்சனம் வந்திருந்தது.
சமூகத்தில் தாங்கள் குப்பைகளாக கருதுபவர்களைப் கொன்றொழித்து தூய்மை செய்பவர்கள்
பட்டியலில் கொலம்பஸ் கோட்சே அத்வானி மோடி ஜார்ஜ் புஷ் என்கிற வரிசையில்
ராஜபக்சேவின் பெயர் மட்டும் மிஸ்ஸிங்.இத்தனைக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின்
மிகக்கோரமான இனப்படுகொலையை ராஜபக்சே நிகழ்த்தி சில மாதங்கள் கூட
ஆகியிருக்கவில்லை. அது வெறுமே கவனக்குறைவா இல்லை ஆதவன் தீட்சன்யர் தான்
ராஜபக்சேயிடம் கவ்விய எழும்புதுண்டுக்கு காட்டிய விசுவாசமா? விவரமரிஞ்ச யாராச்சும்
சொல்லுங்கப்பா

ஸ்டாலின் குரு said...

எனக்கு அவ்வளவு விவரம் பத்தாது blackpages :)

ஸ்டாலின் குரு said...

அ,மார்க்ஸ் பற்றிய என பின்னூட்டத்துக்கு பிந்தைய மூன்று
பின்னூட்டங்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை தோழர்
பெயரிலி.

ஸ்டாலின் குரு said...

கட்சியாய் வந்து தமிழ்மணத்திலே உள்ளூர் வட்டத்தலைபதிவுக்கு 'வாசிக்கார் பரிந்துரை'ப்போராட்டம் செய்து பலஸ் ஏற்றும் பாட்டாளிகள்கூட்டம் இது. ஒன்றுபட்டால் உண்டு மூச்செடுக்க வால்வு. உங்களுக்கேன் எரியுது! ;-)

என் வழி தனி வழி. நான் ஒன்னும் feel ஆவள

ஸ்டாலின் குரு said...

உங்கள் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் எல்லையே இல்லையா? ;-)


தமிழகத்தின் தலைசிறந்த அறிவுஜீவிகளில் ஒருவரிடம்
குறைந்தபட்ச கருத்துசுதந்திரத்தை எதிர்பார்த்தது என்
தவறா தோழர்

ஸ்டாலின் குரு said...

இதிலே ஏமாற்றம் வராமலிருக்கவேண்டுமானால், ரயாகரனின் தமிழ்சேக்கிள், ஜெயபாலன் & கொன்ஸ்ரன்ரைனின் தேசம், ராகவன் & கோவின் கும்மியடிக்கும் புகலி இப்படியான தளங்களிலே முதலிலே பின்னூட்ட முட்டையிட்டுப் பொரிக்குமா என்று காத்திருந்து பார்க்கப் பழகவேண்டும்.

நல்வாய்ப்பாக அது போன்ற வேளைகளில் நான் இறங்குவதே இல்லை :)

ஸ்டாலின் குரு said...

இந்து, புரொண்ட் லைன் ஆசிரியருக்கு பிராமணர், ஆங்கிலோ இந்தியன், உருதுமுஸ்லீம் ஆகிய குடிக்குழுப்பெயர்களிலே இல்லாமல் எழுதும் கடிதங்கள்கூடப் பிரசுரமாகலாம். ஆனால், இவர்களிடையே அதுகூடச் சாத்தியமாகாது. இப்படியான கருத்துச்சுதந்திரக்கும்பல்களெல்லாம் விடுதலைப்புலிகளின் கருத்துச்சுதந்திரம் பற்றிக் கருத்துக்குறட்டைவிடும் பாருங்கள். அது!//

உண்மைதான் காலக்கொடுமைடா சாமி என்றுதான் தோன்றுகிறது

blackpages said...

அது எப்படினே தெரியலை ? அக்மார்க் புரட்சியாளர்களாக வேசம்
போடும் மக இக வினர்,கொலை மறுப்பு அரசியலாளர்களாக
வன்முறையில் நம்பிக்கையே இல்லாத அகிம்சாமூர்த்திகளாக,
சாதி,மத,பால் ஒடுக்குமுறைகளை எதிர்த்து விளிம்புநிலை
மக்களுக்கான அரசியல் பேசுபவர்களாக தங்களை சித்தரித்துக்
கொள்ளும் அ.மார்க்ஸ், ஷோபாசக்தி,சுகன்,
ஆதவன் தீட்சனியன்....etc என்று அத்தனை பேரும்
விதிவிலக்கில்லாமல் போலிகளாகவே இருக்கிறார்கள்.



இதில், போதாக்குறைக்கு ஆதவன் தலித் என்பதாக வேறு ஒரு
புரளி கிளப்பிவிடப்பட்டிருக்கிறது கீற்றில்.ஷோபாசகதியைப்
போலவே ஆதவனும் தலித் அல்லாத தலித்தியர்தான் என்கிற
உண்மையை யாராவது உலகுக்கு உரத்துச் சொல்லுங்கப்பா.

blackpages said...

சமீப காலங்களாக மிக அருமையான அரசியல் கட்டுரைகளை
எழுதிக்கொண்டிருந்தார் யமுனா ராஜேந்திரன்.படிக்கும்போது
அவர் மீது மரியாதை கூடியது.சமீபத்தில் லீனா
விவகாரத்தில் அவர் எழுதிய கடிதத்தை படித்தபோது
சப்பென்று ஆகிவிட்டது.அவங்கெல்லாம் கெட்ட பசங்க
அவங்க கூட எல்லாம் சேராதே என்று விசமக்கார தங்கைக்கு
டி.ராஜேந்தர் போல செண்டிமெண்டில் உருகி மடல் தீட்டி
இருக்கிறார்.என்ன கொடுமை சார் இது !!


விசயத்தையே மறந்துவிட்டேன்.இனியொருவை யமுனாவும்
நிர்வகிப்பதாக ஒரு தகவல்.அது உண்மையானால் உங்கள்
பின்னூட்டங்களை வெளியிட அவரும் மறுத்திருக்கிறாரா?
ஒன்றும் புரியவில்லை.

Post a Comment