Saturday, March 6, 2010

பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள் - 1


கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் அம்மா,ச்சே ச்சே
மருதையன்(ர்)வெளியிட்ட அறிக்கையை இனியொரு
இணையத்தில் வாசிக்க நேர்ந்தது.
http://inioru.com/?p=4726
தொடர்ச்சியாக இவர்களின் கட்டுரைகளுக்கு பதில்
அளித்துக்கொண்டு இருப்பது சலிப்பை தருகிறது.
அதே நேரம் பதில் அளிக்காமல் விட்டுவிட்டால்
இவர்கள் தங்களுக்கு கட்டமைத்திருக்கும்
புரட்சிகர முகமூடி நிலைத்துவிடும் அபாயமும்
இருக்கிறது.வேறு வழியில்லை என்பதால்
இந்தப் பதிவு.


தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மக்கள்
ஆதரவு எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவு கட்சிகள்
விரும்பவில்லை என்று முரண்பட்ட பதிலோடு
துவங்கி இருக்கிறார் மக்கள் கலை இலக்கிய
கழகத்தின் பொதுச்செயலாளர்.தமிழ்நாட்டில்
ஏற்படும் மக்களின் எழுச்சியும்,போர்க்குணம்
கொண்ட போராட்டங்களும்தான் ஈழத் தமிழர்கள்
மீது நடந்துகொண்டு இருந்த இனப்படுகொலையை
தடுத்து நிறுத்த முடியும் என்கிற நிலையில்,அந்த
எழுச்சியை தங்களின் தேர்தல் அரசியல்
இலாபங்களுக்காக தடுத்து நிறுத்தியவர்கள்
எப்படி புலி ஆதரவாளர்களாக இருக்க முடியும்?
மக இக வினரை புரட்சியாளர்கள் என்பது
எத்தகைய அபத்தமோ அத்தகையதுதான்,
தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளின் தலைவர்களை
புலிகள் ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுக்காக
போராடுபவர்கள் என்பதும்.


தங்கள் போராட்டங்களின் நோக்கங்களாக இவர்கள்
சொல்லி இருக்கும் கருத்துக்கள் மீதான எதிர்
வினையை இதே பதிவில் வேறு ஒரு இடத்தில்
வைத்துக்கொள்ளலாம்.அதற்கு முன்னால்
தமிழகமெங்கும் இவர்கள் நடத்தியதாக கூறிக்
கொள்ளும் போராட்டங்களின் யோக்கியதையை
பார்க்க வேண்டி இருக்கிறது.நான்கு பேரை
வைத்துக்கொண்டு நாற்பது பிளாக்குகளில்
எழுதிக்கொண்டு இருப்பதாலேயே மக இக வினர்
ஏதோ தமிழகத்தின் மாபெரும் புரட்சிகர சக்திகள்
என்று ஒரு தோற்றம் இணைய உலகில்
ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.அந்த மாயையையே
முதலில் கேள்விக்கு உள்ளாக்கி உடைக்க
வேண்டி இருக்கிறது.நாற்பது இலட்சம் மக்கள்
வசிக்கும் கோவை பகுதிகளில் இவர்கள் ஒரு
ஆர்ப்பாட்டம் நடத்தினால இருபதிலிருந்து
முப்பது பேர் மட்டுமே பங்கேற்பார்கள்
என்பதுதான் நிதர்சனமான் உண்மை.


அரசியல் உணர்வு கொண்ட மிகச்சிறிய பிரிவினரைத்
தவிர்த்து பெரும்பாலான மக்களுக்கு மக இக என்று
ஒரு அமைப்பு இருக்கிறது என்பதே தெரியாது.
அரசிடம் அனுமதி வாங்கி இவர்கள்,நகரங்களிலும்,
மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் செய்தது
உண்மையாக இருக்கலாம்.திருச்சியிலும்,
சென்னையிலும் ராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின்
முன்பாக போராட்டம் நடத்தி கைதானதை
குறிப்பிடும் இவர்கள்.மாலை ஆறு மணிக்கு
மேல் விடுவிக்கப்பட்ட கதையையும்
சொல்லலாமே எது இவர்களைத் தடுக்கிறது?


ஏற்கனவே சொன்னது போல மக இக என்கிற அமைப்பு
இருப்பதே பலருக்கும் தெரியாது என்பதே உண்மையாக
இருக்க,இவர்களின் மாணவர் அமைப்புதான்
தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்களை அணிதிரட்டிப்
போராடியது என்பது அப்பட்டமான மோசடியாகும்.
அணைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு என்று
ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலமே மாணவர்கள்
போராடிக்கொண்டு இருந்தனர்.ஈழத்தையும்,
புலிகளையும் ஏற்றுக்கொண்ட பல்வேறு
அமைப்புகளிலும் அங்கம் வகித்த,வகிக்காத
மாணவர்கள் தங்களுக்குள் இணைந்து நின்றுதான்
போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.ஒரு
கட்டத்துக்கு மேல் சரியான வழிகாட்டல் அற்ற
நிலையிலேயே மாணவர்களின் போராட்டங்கள்
தேங்கிப்போயின.


தர்க்கரீதியாக வேறு ஒரு விசயத்தின் மூலமாக இதை
நிறுவலாம்.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின்
பாதையை மக்களநடமாட்டம் இல்லாத பகுதிக்கு
விடுதலைச்சிறுத்தைகள் திருப்பிய போது
சத்தமேயில்லாமல் பின்னால் போனவர்கள் இவர்கள்.
திருமாவும்,வன்னியரசும்,வேல்முருகனும்,
முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி இடுகாட்டுக்கு
எடுத்துச்சென்ற போது வேடிக்கை பார்த்தவர்கள்
இவர்கள்.இந்த நிகழ்வுகளை வைத்தே சொல்லி
விடலாம்.இவர்களின் வீரம் எப்படிப்பட்டது என்று.
ஈழத்தையும் ஏற்காத,புலிகளையும் ஏற்காத இந்த
வீரர்களின் மாணவர் அமைப்புதான் தமிழகத்தில்
மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்களின்
பின்னனியில் நின்றது என்று சொல்வதை
அயோக்கியத்தனம் என்கிற ஒற்றை வார்த்தைக்குள்
அடக்கி விட முடியாது என்றே தோன்றுகிறது.


புரட்சிகர அரசியல் என்றால் நேபாள தோழர்களின்
முதுகுக்கு பின்னால் எப்படி ஒளிவார்களோ
அப்படியே முத்துக்குமார் விசயத்தில் இவர்கள்
மீது விமர்சனம் எழுப்பப்பட்டவுடன் இன்று
வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையனின்
முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்.
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தை எழுச்சி
மிக்கதாக்க இவர்கள் போராடினார்களாம்.எழுச்சி
மிக்கதாக நடைபெற வேண்டிய இறுதி
ஊர்வலம் சந்தர்ப்பவாதிகளால் சீர்குலைக்கைப்
படுகையில் எங்கே ஓடி ஒளிந்து கொண்டீர்கள்
என்பதுதானே கேள்வியே?அதற்கு கடைசிவரை
பதிலையே காணவில்லையே.


ஓட்டுக்கட்சி தலைவர்களின் அரசியலை இவர்கள்
விமர்சிப்பது ஒரு புறமிருக்கட்டும்.ஈழத்தமிழர்
மீதான படுகொலை பற்றிய செய்திகள் தமிழகம்
தழுவிய அளவில் ஒரு அரசியல் எழுச்சியை
ஏற்படுத்தியது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்று
அடுத்த பொய்.தமிழக அரசின் உளவுத்துறை
மாணவர்களின் மத்தியில் தோன்றக் கூடிய
எழுச்சியை சரியாக கணக்கிட்டுக் கூறி
இருந்ததாலேயே தமிழக அரசு,தமிழகம்
முழுவதும் கல்லூரிகளை காலவரையின்றி
மூட உத்தரவிட்டது.உண்மை இப்படி இருக்க
தமிழகம் தழுவிய எழுச்சி ஏற்பட்டதாக கருத
முடியாது என்று கூறுவதை என்னவென்பது ?
மேலும் முத்துக்குமாரை தொடர்ந்து
தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்காக
தங்களின் உயிரை பலரும் ஈகையாக தந்து
கொண்டிருந்த காலமது என்பதை எவ்வளவு
சாமர்த்தியமாக மறைக்கிறார்கள்.எப்படா
கல்லூரிகளைச் சாத்துவார்கள் என்று பார்த்துக்
கொண்டு இருந்துவிட்டு,மூடிய
கல்லூரிகளுக்கு மாணவர்களைத் திரட்டப்
போனால் மாணவர்களை திரட்ட
முடியாமல்தான் போகும் வீரர்களே.


போகிற போக்கில் புலிகளுக்கு எதிராகச் சேறடிப்பதில்
தினமலர்,துகளக் சோ,இந்து ராமை மிஞ்சியவர்கள்
இவர்கள் என்பது நாம் அறிந்த விசயம்தான்.அதில்
ஒன்று புலிகள் இஸ்ரேலின் உளவுத்துறைக்காக
போதைப்பொருள் கடத்தினார்கள் என்பது.
அதற்கான ஆதாரங்களை முதுகில் செருகிக்
கொண்டே அலைகிறார்களா என்பது இன்றுவரை
சிதம்பர ரகசியமாக இருக்கிறது.ஆதாரப்பூர்வமான
குற்றசாட்டுகளையே கூறுவதாக சத்தியம் செய்யும்
இவர்களிடம் நாம் கேட்பது ஒன்றுதான்.2008
இல் இருந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக
இவர்கள் நடத்திய போராட்டங்களில் கைதான
இவர்களின் அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள்,
வழக்குரைஞர்கள்,ஆண்கள்,பெண்கள்,நிர்வாகிகள்
பற்றிய விவரம்,அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட
வழக்குகள்,வழக்குகளின் இன்றைய நிலை
பற்றியெல்லாம் ஒரு வெள்ளை அறிக்கை
வெளியிட்டு உங்களின் நேர்மையை
பறைசாற்றுங்கள் முதலில்.


ஈழத்த தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான
அங்கீகாரம் தமிழக மக்களிடம் இல்லை என
அடுத்த கண்டுபிடிப்பு.ஆனந்த விகடனில்
வந்த கருத்துக்கணிப்பு என்று நினைக்கிறேன்.
ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு தனி ஈழமே
தீர்வு என்றுதான் பெரும்பாலான தமிழர்கள்
வாக்களித்திருந்தார்கள்.மேலும் புலிகள்தான்
ராஜீவ்காந்தியைக் கொன்றார்களா என்பது
இன்றளவும் விவாதத்துக்குறிய விசயமாக
நீடித்தாலும்,ராஜிவ்காந்தியின் கொலைக்காக
பிரபாகரனை தண்டிக்க வேண்டுமா என்கிற
கேள்விக்கு கூடாது என்றே பெரும்பாலான
தமிழர்கள் வாக்களித்திருந்தார்கள்.இந்த
நிகழ்வின் ஊடாக வெளிப்படும் ராஜிவ்காந்தி
கொலையை தமிழக மக்கள் மறந்து
விட்டார்கள் என்கிற விசயத்தோடு,
பெரியாருக்குப் பிறகு தமிழகத்தில் இந்திய
அதிகாரவர்க்கத்தால் கட்டமைக்கப்பட்ட
பார்ப்பன இந்தியதேச பக்தியையும் கூட
தமிழக மக்கள் கடந்து வர
துவங்கியுள்ளனர் என்பதும் புலப்படுகிறது.

11 comments:

blackpages said...

வழக்கம் போலவே அருமையான பதிலடி

ஸ்டாலின் குரு said...

நன்றி தோழர்

ஈழ முத்துக்குமரன் said...

தங்களுடைய தளத்தில் கூடி கூடி சொறிந்து கொள்வதோடு, எதிர்த்து கேள்வி எழுப்புவோரை கேலி செய்வது, திரித்து பேசுவது, திசை திருப்புவது போன்ற 'புரட்சிகரமான' விவாதமுறையின் மூலமாக எதிர்கொள்ளும் ம.க.இ.க புரட்சியாளர்கள், உங்களுடைய காத்திரமான பதிவுகளின் பக்கம் தலை காட்டியதாக எனக்கு தெரியவில்லை,எனினும் இந்த பதிவிற்கு பலர் வர வாய்ப்பிருப்பதாகவே எண்ணுகிறேன்,ஏனெனில் இந்த பதிவு மருதையனிடமிருந்து தொடங்குகிறதே, அங்கிருப்பவர்களில் பலர் மருதையனுடைய ரசிகர்களாகத்தான் இருக்கிறார்களாம்.

எனவே 'தமிழினவாதி' 'சந்தர்ப்பவாதி' போன்ற அர்சணைகளுக்கு தயாராயிருங்கள்.

மற்றபடி பதிவை முழுமையாக படித்தவுடன் விரிவான பின்னூட்டமிடுகிறேன்.

ஸ்டாலின் குரு said...

என்ன தோழர் உங்களின் எதிர்வினைகளைக்
காணவில்லை? எள்ளல் அதிகமாகவும்,
கடுமையாகவும் இவர்களைத் தாக்கி
இருப்பதை நீங்கள் சரியானதாக கருதவில்லை
என்று நினைக்கிறேன்.

இவர்களின் கீழ் இருக்கும் அப்பாவியான தோழர்களின்
அர்ப்பணிப்பு மிக்க உழைப்பையும்,நேர்மையையும்,
நான் மதிக்கவில்லை என்றா கருதுகிறீர்கள்.
நிச்சயமாக இல்லை.ஒரு மார்க்சியவாதியாக
என்னை உணர்பவன் என்கிற முறையில் அந்த
தோழர்களின் உழைப்பு வீனாகிறதே என்கிற
கோபம்தான் இப்படி பேச வைக்கிறது.

muki; said...

நல்ல எதிர்வினை

Anonymous said...

சிறப்பான பணி தோழா...

மயில்வண்ணன்..

Anonymous said...

எதுவும் தெரியாமல் எழுதுகிறீர்கள.மக்கள் போராட்டம் தேவையில்லை,நாம் பொடியன்கள் சிங்கள அரசை எதிர்த்து போராட்னால் போதும் தமி ஈழம் கிடைத்துவிடும். என்றவர்கள் தமிழ் இளைஞர்கள்.அதற்க்கு ஆயுதத்திற்கு எங்கேய் போவது ?
தமிழ் இளைஞர்கள் இந்தியாவிடம் சரண் புகுந்தனர்.இந்தியா ஆயுதனகளை கொடுத்தது .பயிற்சியும் கொடுத்தது.
புலிகள் ஆணவத்தில் சக இயக்க நபர்களை கொண்ட்ரோழித்தார்கள். [அவர்களை சக போராளிகாலாக , சகோதரர்களாக கூட எண்ணவில்லை ] தாம் ஒரு சக்தியாக வளர்ந்த பின் தம்மை சிங்கள அரசுடன் பேரம் பேசி [ பணம் ,சலுகைகள் எல்லாம் ] கொண்டார்கள்.சிங்கள ஆர்சொடு சேர்ந்து இந்தியாவை பகைத்தார்கள்.
தாங்கள் நினைத்த போது மற்றவர்கள் எல்லாம் தமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என எண்ணினார்கள்.சிங்கள அரசு செய்யும் அநீதிகளை சொல்லி தாங்கள் தமிழ் மக்கள் மேல் ராணுவ சர்வாதிகார ஆட்சியை நடாத்தினார்கள்.

முல்லிவைக்காளில் ஒழித்த போது மட்டகிலப்பிலோ ,யாழ்ப்பாணத்திலோ மக்கள் எழுச்சி கொள்ளவில்லை.எல்லாம் பொடியன்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மக்கள் எண்ணினார்கள்.அவ்வாறு தான் அவர்கள் தம் மேல் ஒரு பிம்ம்பத்தை கட்டி எழுப்பினார்கள்.ஆக,
இது மக்களுக்கு அன்னியப்பட்ட போராட்டம்.தாங்கள் நெருக்கடியில் சிக்கிய போது மட்டும் புலம் பெயர் நாடுகளில் மக்களை போராட சொன்னார்கள்.

உங்களை போலவே சீமான்களும் ,நெடுமாறன்களும் ,கோமாளி வைக்கோவும் கடிதம் எழுதவும் ,தந்தி அடித்து தமிழீழத்தை எடுத்து கொடுத்து விடுவதாக தமிழக மக்களையும் ,ஈழ மக்களையும் நம்பவித்தார்கள்.
பிரபாகரன் "ரம்போ" விளையாட்டுக்களைலேயே காலத்தை கடத்தினார்.இளமையும் வேகமும் குறைதவுடன் தான் நிலைமையை உணர்ந்தார்.ஆனால் காலம் கடன்டந்த ஞானோதயம்.சினிமா நடிகனுக்கு விளம்பரம் தேடுவது போல புலிகள் பிரபாகரனை "ஹீரோ "வாக்கினர்கள் .அந்த மயக்கம் உங்களையும் விடவில்லை.
இப்போ சீமான் அந்த வெற்றிடத்தில் ஏறி கொள்ள ஆசை படுகிறார் .நீங்கள் ஏற்றி வையுங்கள்.

இலங்கையில் இனி ஒரு புரட்சி மிக நீண்ட காலத் தொலைவிலும் நடக்காது என்பதை புலிகள் தமது எஜமானர்களுக்கு உறுதியளித்து விட்டு சென்ற்று விட்டார்கள். தலைவனுக்கு யாரும் அஞ்சலி கூட செய்யவில்லை.
இது தான் இந்த போராட்டத்தின் சாதுரியம். பானம்,, பணம்..

தாசன்

ktthas@yahoo.co.uk

Anonymous said...

இத்து தான் இந்த போராட்டத்தின் சாதுரியம். பானம்,, பணம்..

ஸ்டாலின் குரு said...
This comment has been removed by the author.
ஸ்டாலின் குரு said...

மொக்கை போடாதீங்க தாசரே

ஸ்டாலின் குரு said...

இந்த மாதிரி உங்கள் எழுத்துகளை எல்லாம் படிப்தற்கு பதில் மொன்னை கத்தியால் சித்திரவதை செய்துகொள்ளலாம்..போல

Post a Comment