Saturday, March 6, 2010

பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள் - 2

பொய்களால் வாழும் போலிப் புரட்சியாளர்கள் - 2


ராஜிவ்காந்தியின் கொலைக்குப் பிறகு இவர்கள் கடும்
ஒடுக்குமுறையை சந்தித்து போராடினார்களாம்.அது
பற்றிய மேலதிக தகவல்கள் கைவசம் இல்லாத
நிலையில் விமர்சிக்க விரும்பவில்லை.ஆனால்
சில மாதங்களுக்கு முன் ராஜிவ் கொலையுண்ட
காலத்தில் வெளியான எங்கள் பொதுச்செயளரின்
கட்டுரை என்று ஒன்றை இவர்களின் அமைப்பைச்
சேர்ந்தவர் சுட்டி அளித்துப் படிக்கத் தந்தார்.படித்து
முடித்தபோது மனதில் எழுந்த கேள்வி இதுதான்.
இதில் எங்கே ஈழம் பற்றிய அரசியல் இருக்கிறது?
அதைத்தேட ஏதேனும் விசேச கண்ணாடி
அணிந்திருக்காமல் நாம்தான் தவறு செய்து
விட்டோமோ என்று குழப்பமே வந்துவிட்டது.


மேலும் இவர்கள் அடிக்கடிச் சொல்லும் நகைச்சுவைத்
துணுக்கு ஒன்று இந்தப் பதிவிலும் வந்திருக்கிறது.
புலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு ராஜிவ்
கொலையை மக இக கூடச் செய்திருக்கலாம் என்று
காட்டிக்கொடுக்கும் வகையில் அறிக்கை விடுத்தார்
என்பது.நமது கோபமெல்லாம் இவர்களை இவ்வளவு
சீரியசாக எடுத்துக்கொண்டு கிட்டு பேசி விட்டாரே
என்பதுதான்.


நேர்காணலில் இறுதிப் பத்தியில் சொல்லப்பட்டுள்ள
அரசியலை சற்று விரிவாகவே அலச வேண்டி
இருக்கிறது.யாழ் கோட்டை புலிகளால் சுற்றி
வளைக்கப்பட்டபோது பா.ம.க. தி.மு.க.
ம.தி.மு.க அடங்கிய பாரதிய ஜனதா ஆட்சி
நடைபெற்றதாம்.அடங்கொக்காமக்கா ! 1985
காலகட்டங்களில் யாழ்கோட்டையில் இருந்த
சிங்களைப்படைகளை புலிகள் சுற்றி வளைத்த
போது பாரதிய ஜனதா எப்படி ஆட்சி அதிகாரத்தில்
இருந்திருக்க முடியும்.யாழ்ப்பாணத்தில்
டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டை இருப்பதும்
அதுதான் யாழ்கோட்டை என அழைக்கப்படுகிறது
என்பதும் கூட தெரியாத ஒரு அமைப்பின்
பொதுச்செயலாளரை நம்பி இந்தியப் புரட்சியா !
இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும்.


மேலும் இது இவர்களுக்கு வழக்கமான ஒன்றுதானே.
ஈழத்தின் மூத்த மார்க்சியர் என்ற அறிமுகத்தோடு
தோழர் சிவசேகரத்தின் நேர்காணலை இரண்டு
பகுதிகளாக புதிய ஜனநாயகம் இதழில்
வெளியிட்டிருந்தார்கள்.எப்படியாவது புலிகளை
ஏகாதிபத்தியச்சார்பாளர்களாக சித்தரிக்க வேண்டிய
நிலையில் இருந்த அவர்,1995 களிலேயே
புலிகள் யாழ்ப்பாணத்தை இழந்து வெளியேறி
இருந்தனர் என்கிற உண்மையை மறைத்து 2002
போர் நிறுத்தத்துக்குப் பின் யாழ்ப்பாணத்தில்
கோக்கை புலிகள் அனுமதித்தார்கள் என்று பச்சைப்
பொய் சொல்லி இருந்தார்.அதைக்கேட்டுக்கொண்டு
பூம் பூம் மாடு போல தலையாட்டிக் கொண்டு
வந்தவர்கள்தானே நம் புரட்ச்ச்ச்ச்ச்சீஈஈகாரர்கள்.


பிறகு இவர்கள் எந்த முற்றுகையைச் சொல்கிறார்கள்
என்று யோசித்தபோதுதான் புரிந்தது.உலகின் ராணுவ
ஆய்வாளர்களால் ஹோசி மின் வழிகாட்டுதலில்,
வியட்நாமின் வீரத்தளபதி ஜெனரல் கியாப்
தலைமையில்,அமெரிக்கப்படைகளுக்கு எதிராக
நடத்தப்பட்ட TET தாக்குதலுக்கு இணையானது
என்று பாராட்டப்பட்ட புலிகளின் யானையிறவு
முகாம மீதான தாக்குதலைத்தான் இவர்கள்
குறிப்பிடுகிறார்கள் என்று.இப்படி புலிகளை
புகழ்ந்தால் அவாள் சஙகடப்படுவா என்பதால்
இத்தோடு நிறுத்திக்கொண்டு பதிவுக்குள் போகலாம்.
ஆனையிறவு முகாமை தகர்த்துவிட்டு நாற்பதாயிரம்
சிங்கள ராணுவத்தினரை சுற்றி வளைத்து புலிகள்
நின்றிருந்தனர்.யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிடிக்க
புலிகள் முன்னேறிச் செல்லக் கூடாது என்பதே
இந்திய அரசின் மிரட்டலாக இருந்தது.


சில மணி நேரங்களுக்குள்ளாகவே ராணுவத்தினரை
கூண்டோடு புதைத்து விடுகிற இடத்தில் புலிகள்
இருந்தார்கள்.உலகின் எந்த ராணுவம் வந்தாலும்
அதைத் தடுக்க முடியாது என்பதே யதார்த்தமாக
இருந்தது. இந்திய அரசின் மிரட்டலுக்காக
அல்லாமல் மனித உயிர்களின் மதிப்பறிந்த
போராளிகளாக,உச்சபச்ச மனிதாபிமானதுடன்
இந்திய கடற்படை கப்பல்கள் வழியாக சிங்களப்
படையினர் வெளியேற புலிகள்
அனுமதித்திருந்தனர்.புலிகளுக்கு எதிரான
இந்திய அரசின் மிரட்டலை மிகப்பெரிய
வெற்றியாகநெடுமாறன் உள்ளிட்ட புலி
ஆதரவாளர்களாக சொல்லிக்கொண்ட கட்சிகள்
பேசினார்கள் என்று எழுதி இருக்கிறார்கள்.
நெடுமாறன் அமைப்புதான் நடத்திக்கொண்டு
இருக்கிறார்.ஓட்டுக்கட்சியை அல்ல என்பது
கூட தெரியாத இவர்களின் பொது அறிவை
என்னவென்பது?


நேர்காணலின் இறுதிப் பகுதியில் இவர்களே சொல்லிய
விசயத்தில் இருந்து ஒரு விசயம் தெளிவாகிறது
இந்திய அதிகாரவர்க்கத்துக்கு ஓரளவுக்கு மேல்
தமிழக அரசியல் கட்சிகளால் அழுத்தம் கொடுக்க
இயலாது என்பதை உணர்ந்திருந்த புலிகள்,அதை
மேலும் உறுதிபடுத்திக்கொள்ள அந்த நிகழ்வு
வாய்ப்பளித்திருக்கும்.ஆட்சியை வேண்டுமானாலும்
இழப்போமே தவிர ஈழத்தை அங்கீகரிக்க மாட்டோம்
என்பதே இந்திய பார்ப்பன பனியா அதிகாரவர்க்கத்தின்
முடிவாக இருந்து வந்திருக்கிறது.இந்திய அதிகார
வர்க்கத்தின் இயல்பை நன்கு அறிந்த புலிகள்
இந்தியாவை தவிர்த்துவிட்டு மேற்கத்திய நாடுகள்
வழியாகவே ஈழம் நோக்கிய நகர்வுகளை போர்நிறுத்த
காலங்களில் மேற்கொண்டிருந்தனர் என்பதும் நாம்
அறிந்த ஒன்றுதான்.தமிழக கட்சிகளின் பலத்தை
அடிப்படையாக வைத்து தங்களின் திட்டங்களை
வகுக்கும் அளவுக்கு சிறுபிள்ளைத்தனமான
எண்ணங்களை கொண்டிருந்தவர்களாக புலிகளைக்
கருத வாய்ப்பேயில்லை.


எந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசு தங்களை
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றக்கூடாது என்று
மிரட்டியதோ அதே பாரதிய ஜனதாவின்
ஆட்சி அமைந்தால் போர் நிறுத்தம் வந்து
விடும் என்று கருத புலிகள் ஒன்றும்
மக இக வினர் போன்ற அதிபுத்திசாலிகள்
அல்லவே.தமிழகத்தில் ஜெயலலிதாவின்
ஆட்சியும்,இந்தியாவில் பாரதியஜனதாவின்
ஆட்சியும் அமைந்தால் போர் நிறுத்தம்
வந்துவிடும என்று புலிகளின் தமிழக ஆதரவு
கட்சிகள் சொன்னதை நம்பி புலிகள்
ஏமாந்ததாக,இவர்கள் சித்தரிப்பதைக்
பார்க்கையில் கேட்பவன் கேனையன்
என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று
சொல்பவர்கள மக இக காரர்களைப்
போலத்தான் இருப்பார்கள் என்று புரிந்து
கொள்ள முடிகிறது.


ஈழத தமிழர்கள் மீதான உச்சபட்ச மனித அவலமும்
நிகழ்த்தி முடிக்கப்பட்ட பிறகு சாரு நிவேதிதாவும்,
ஜெயமோகனும்,கிளிநொச்சி போர்க்காலத்தில்
ஆயுதங்களைஒப்படைத்துவிட்டு சரணடையும்படி
புலிகளை,உள்துறை அமைச்சர் சிதம்பரம் கோரிய
போது அதை புலிகள் ஏற்றிருந்தால் இவ்வளவு
மக்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று
எழுதி அம்பலப்பட்டதை இணைய உலகில்
பார்த்தோம்.துரோகிகளின் மெனத்தில் துடிக்கும்
முள்ளிவாய்க்கால் என்று இவர்கள் ஒரு சிறு
வெளியீட்டை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கொடுக்கிற காசுக்கான மதிப்பைக் கூட
கொண்டிராத இவர்களின் வெளியீடுகளை வாங்கி
படிப்பதை நிறுத்த வேண்டும் என்கிற முடிவுக்கு
வந்திருப்பதால்,புதிய கலாசாரத்தில் வந்த
கட்டுரையை மட்டுமே வாசித்தேன்.


தப்பிக்கவோ தற்காத்துக்கொள்ளவோ வழியற்ற நிலையில்
ஆயுதங்களை மௌனிக்கச் செய்கிறோம் என்கிற
முடிவை சில நாட்களுக்கு முன்னால் புலிகள்
எடுத்திருந்தால் ஒருவேளை ஆயிரக்கணக்கான உயிர்கள்
காப்பாற்றப்பட்டிருக்கும் என்று எழுதி இருக்கிறார்கள்.
புலிகள்ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பிறகும்,
உச்சபச்ச தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான
மக்களை சிங்கள ராணுவம் கொன்றொழித்தது
என்கிற உண்மையை இவர்கள் மறைப்பது ஒருபுறம்
இருக்கட்டும்.இந்திய ஆட்சி மாற்றமோ,தமிழக
ஆட்சி மாற்றமோ போர்க்களத்தில் எந்த விளைவையும்
ஏற்படுத்தாது என்கிற புரிதலுடனே புலிகள்
இயங்குவார்கள் என்பதை மேலே பார்த்திருக்கிறோம்.


இந்திய தமிழக ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தும்,தமிழக
கட்சித்தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பியும்
புலிகள் ஏமாந்து விட்டதாக ஒரு சித்தரிப்பை
உருவாக்குவதன் மூலம்,மக்களின் உயிரிழப்புகளுக்கு
புலிகள்தான் காரணம் என்ற தோற்றத்தை
உருவாக்குவதுதானே இவர்களின் திட்டம்.அப்பொழுதும்
கூட இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை
ஆயிரக்கணக்கில் கொன்றது இவர்களுக்கு இரண்டாம்
பட்சமாகத்தான் படுகிறது என்பதையும்
கவனிக்க முடிகிறது.


சிதம்பரம் புலிகளைச் சரணடையக் கோரியபோதே அதை
வழிமொழிந்தால் தங்களை துரோகிகள் என்று
அடையாளம் காண்பார்கள் என்பதால் சாருநிவேதிதாவும்
ஜெயமோகனும்,இனப்படுகொலை நிகழ்த்தி
முடிக்கப்பட்ட பிறகு பேசியதைத்தான் இவர்களும்
பேசி இருக்கிறார்கள். சிதம்பரத்தின் குரலோடு மக இக
வினரின் குரலையும் சேர்த்து அடையாளம் காண்பதில்
எந்த தவறும் இருக்க முடியாது.இந்திய
மாவோயிஸ்டுகளை பயஙகரவாதிகள் என்கிற
அடைமொழியோடு எழுதுபவர்கள்தானே இவர்கள்.
ஒரு ஐந்து பக்க கட்டுரைக்குள் இவ்வளவு ஆப்பைச்
செருகுகிறவர்கள் அந்த வெளியீடு முழுவதும்
எத்தனை மோசடிகள் செய்திருப்பார்கள்
என்று நினைத்தால் மயக்கமே வருகிறது.


இறுதியாக (9.9.20009) அன்று தினமணி இதழில் வந்த
ஒரு கருத்துக்கணிப்பை அடிப்படையாக் கொண்டு ஒரு
பத்தி எழுதி இந்தப் பதிவை முடுத்து விடலாம்.
இலங்கைத் தமிழரின் தற்போதைய நிலைக்கு காரணம்
யார் என்கிற கேள்விக்கு தமிழக மக்கள் கீழ்கண்டவாறு
பதில் அளித்திருக்கிறார்கள்.


விடுதலைப்புலிகள் - 19.8%
இலங்கை அரசு - 21.33%
இந்திய அரசு - 58.69%

ஒரு சாராசரியான நாளிதழ் வாசிக்கிற தமிழனுக்கு கூட
ஈழத்தமிழர்களின் அவலங்களுக்கு காரணம் இந்திய
அரசுதான் என்பது தெரிந்திருக்கிறது என்பதை
இந்த கருத்துக் கணிப்பு உணர்த்துகிறது.விடுதலைப்
புலிகள்தான் தமிழ் மக்களின் அவலங்களுக்கு
காரணம் என்கிற அந்த 19.8% சதவிகிதத்துக்குள்
யார் யார் எல்லாம் வருவார்கள் என்று பார்க்கலாம்.
அமைப்புகள்,கட்சிகள்,இயக்கங்கள் தாண்டி
பார்ப்பனர்கள் அணைவரும்,இந்திய அரசு,காங்கிரஸ்,
கருணாநிதி,ஜெயலலிதா,சி.பி.எம்,அ.மார்க்ஸ்,
ஷோபாசக்தி போன்ற அறிவுஜீவிகள்.புலிகளுக்கு
எதிரான இவர்களின் குரலோடு மக்கள் கலை இலக்கிய
கழகத்தின் குரலும் இணைந்தே ஒலிக்கிறது என்பதே
போதும் இவர்கள் அரசியல் யாருக்கானது
என்பதை அறிய.

முடிந்தது.

60 comments:

Anonymous said...

நேர்காணலில் இறுதிப் பத்தியில் சொல்லப்பட்டுள்ள
அரசியலை சற்று விரிவாகவே அலச வேண்டி
இருக்கிறது.யாழ் கோட்டை புலிகளால் சுற்றி
வளைக்கப்பட்டபோது பா.ம.க. தி.மு.க.
ம.தி.மு.க அடங்கிய பாரதிய ஜனதா ஆட்சி
நடைபெற்றதாம்.அடங்கொக்காமக்கா ! 1985
காலகட்டங்களில் யாழ்கோட்டையில் இருந்த
சிங்களைப்படைகளை புலிகள் சுற்றி வளைத்த
போது பாரதிய ஜனதா எப்படி ஆட்சி அதிகாரத்தில்
இருந்திருக்க முடியும்.யாழ்ப்பாணத்தில்
டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டை இருப்பதும்
அதுதான் யாழ்கோட்டை என அழைக்கப்படுகிறது
என்பதும் கூட தெரியாத ஒரு அமைப்பின்
பொதுச்செயலாளரை நம்பி இந்தியப் புரட்சியா !
இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும்.///


சூப்பரப்பு(ஆப்பு)

ஸ்டாலின் குரு said...

வருகைக்கு நன்றி அனானி நண்பா

Bibiliobibuli said...

//இந்திய அரசின் மிரட்டலுக்காக அல்லாமல் மனித உயிர்களின் மதிப்பறிந்தபோராளிகளாக,உச்சபச்ச மனிதாபிமானதுடன் இந்திய கடற்படை கப்பல்கள் வழியாக சிங்களப்படையினர் வெளியேற புலிகள்அனுமதித்திருந்தனர்.//


அதெப்படி குரு உங்களால் மட்டும் புலிகள் விடயத்தில் இப்படி உண்மையை பேசமுடிகிறது? பேசாமல் வழக்கம் போல் எந்த சேதாரமும் இல்லாமல் புலிகள் தான் ஈழத்தின் எல்லா "இழவிற்கும்" காரணம் என்று எழுதிவிட்டுப் போகவேண்டியது தானே? எப்படியோ, என்னைப்பொறுத்தவரை புலிகளை மதிப்பவர்கள் என்போர் ஈழப்போராட்டத்தை மதிப்பவர்கள். புலிகள் பற்றிய உங்கள் நேர்மையான இந்த பதிவின் விமர்சனத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஒரு கணம் உங்க பதிவு என்னை கண் கலங்க வச்சிட்டுது குரு.

//யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிடிக்க புலிகள் முன்னேறிச் செல்லக் கூடாது என்பதே இந்திய அரசின் மிரட்டலாக இருந்தது.//


எனக்குள்ள அரசியல் சிற்றறிவை கொண்டு பார்த்தால் இந்தியா தசாப்தங்களாக ஈழப்போராட்டத்தில் இந்த மிரட்டல் வேலையைத்தான் செய்து வருகிறது என்று தோன்றுகிறது. இனிமேல் மறுக்கப்படும் உரிமைகளுக்காக போராடும் எந்தவொரு இனமோ, மக்களோ, யாரோ புலிகளை ஓர் உதாரணமாக கொள்ளக்கூட்டாது என்பதாலும் மாறிவரும் உலக ஒழுங்கின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தேவை என்பதாலும் நாங்களும் எங்கள் உரிமைப்போரும் பலி கொள்ளப்பட்டிருக்கிறோம். உங்களுக்கு தெரியாததல்ல ஆனாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் பதிந்தேன்.

blackpages said...

அந்த நேர்காணலில் மேல் எனது சில கருத்துக்களையும் இங்கே பின்னூட்டங்களாக பகிர்ந்து கொள்கிறேன் தோழர்

blackpages said...

ஆறு மாவட்டங்களில் மாணவர்களைத் திரட்டி வேலைநிறுத்தம்
செய்து போராட்டங்களை நடத்தினோம். சில இடங்களில்
சிபி ஐ மாணவர்கள் சிலர் கலந்து கொண்டனர். மற்றைய
இடங்களில் ஏனய மாணவர் அமைப்புக்கள் எதுவும்
இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தவில்லை.
கல்லூரி மாணவர்கள் அனைவரையும் அழைத்துவந்து
சாலை மறியல் செய்வது, வேலை நிறுதம் செய்வது,
ஊர்வலங்கள் நடத்துவது போன்ற நடவடிக்கைகளை
மேற்கொண்டோம்///


அயோக்கியத்தனம் என்கிற வார்த்தை கூட பத்தாது
எனறு தோன்றியது இதைப் படிக்கையில்.மற்ற
மாணவர்கள் அமைப்புகள் யாரும் போராடவில்லையா?.
உயிர் நோக ஐந்து நாட்கள் ஏழு நாட்கள் என்று
உண்ணாவிரதம் இருந்து,ஹிந்து நாளிதழ் அலுவலகம்,
பாஸ்போர்ட் அலுவலகங்களைத் தாக்கி
கைதாகி,சிங்கள,இந்திய தேசியக் கொடிகளை எரித்து,
முத்துகுமாரின் அறிக்கையை ஊரெல்லாம் விநியோகித்து,
கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஆர்வலம்,ஆர்பாட்டங்கள்
சாலை மறியல் செய்தது என்று போர்க்குணமிக்க
போராட்டங்களை முன்னெடுத்த புலிகளையும் ஈழ விடுதலையையும்
நேசித்த மாணவர்களின் போராட்டங்களை இதை விட
யாரும் கொச்சைப்படுத்த முடியாது.

அடையாள எதிர்ப்பு போராட்டங்களையே செய்த இவர்களுக்கு எவ்வளவு
திமிரும்,கள்ளத்தனமும் இருந்தால் இப்படி பச்சைப்பொய்
சொல்வார்கல்.

blackpages said...

இனப்படுகொலை குறித்து அன்றாடம் பத்திரிகைகளில்
வெளிவரும் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள்
மக்கள் மத்தியில் ஒரு அனுதாப அலையை
ஏற்படுத்தியிருந்தது உண்மை. ஆனால் அது
தமிழகம் தழுவிய ஒரு அரசிய எழுச்சியை
ஏற்படுத்தியது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று.//

காங்கிரஸ்காரர்களே பரவாயில்லை போல இருக்கிறது
இந்தப் பொய்யர்களுக்கு.முத்துகுமாரின் மரணத்தை
அடுத்து இரண்டு மூன்று நாட்கள் கழித்து ஜீ தமிழ்
தொலைக்காட்சியில் பேயறைந்தார் போன்ற
முகத்துடன் உக்கார்ந்திருந்த சுதர்சன நாச்சியப்பன்
என்கிற காங்கிரஸ் ....... சொன்னதுதான்
நினைவுக்கு வருகிறது.இந்தி எதிர்ப்பு போராட்ட
காலங்களில் இருந்த நிலைமை வந்துவிட்டதோ
என்று நினைக்கிற அளவுக்கு சிலர் தமிழகத்தை
மாற்றி விட்டதாக சொன்னார்.

இவர்களுக்கு மட்டும் தமிழகம் தழுவிய எழுச்சி
ஏற்பட்டதாக கூற முடியாதாம் காலக் கொடுமைடா சாமி

blackpages said...

இது தவிர சோனியா காந்தியின் கொடும்பாவி எரிப்பு,
காங்கிரஸ் கட்சிக் கொடி எரிப்பு போன்ற போராட்டங்கள்
மதுரை போன்ற இடங்களில் நடைபெற்றது///

அப்போது கூட கவனித்தீர்களா இவர்களின் வீரத்தை
காங்கிரஸ் கொடியையும் சோனியா காந்தியின்
கொடும்பாவியையும் எரித்தார்களாம்.

இந்தியக் கொடியையோ இலங்கை கொடியையோ
எரிக்கவில்லை வீரர்கள்.:)

இந்தியக் கொடியை எரித்தால் அதன் மேல்
விழுந்து அணைக்கிற அளவுக்கு தேசபக்தி
இவர்களுக்கு பொங்கும் என்பது நாம்
அறிந்ததுதான்.ஐம்பது ஆயிரம் உயிர்களை
விரட்டி விரட்டிச் சாக அடித்தாலும் இந்தியா
என் தாய்நாடு என்று இவர்கள் முழங்குவதற்கும்
தேசிய கொடி மேல் காதல் கொள்வதற்கும்
பின்னால் தேசிய இனங்களின் ஒருங்கினைவா
இருக்கிறது.ஒரு மயிரும் இல்லை.

பூனூலைக் கூட கழட்டிவிடலாம்,இந்திய
தேசபக்தியை,தேசியத்தை கேள்விக்குள்ளாக்குவது,
இந்திய ஒருமைப்பாடு வழியாக மட்டுமே
தொடரப்பட கூடிய தங்களின் ஒட்டுண்ணி
வாழ்வை சிதைத்துவிடும் என்பதால்தானே
பார்பனர்கள் இப்படி துடிக்கிறார்கள்.
மேலாதிக்க வெறியும் சுயநலமும்தானே
இவர்களின் இந்திய காதலுக்கு பின்னால்
இருக்கிறது.

ஸ்டாலின் குரு said...

அதெப்படி குரு உங்களால் மட்டும் புலிகள் விடயத்தில் இப்படி உண்மையை பேசமுடிகிறது? பேசாமல் வழக்கம் போல் எந்த சேதாரமும் இல்லாமல் புலிகள் தான் ஈழத்தின் எல்லா "இழவிற்கும்" காரணம் என்று எழுதிவிட்டுப் போகவேண்டியது தானே?


உங்களின் ஆதங்கமும் கோபமும் எனக்குள்ளும்
இருக்கிறது என்பதால்தான் உண்மைகளைப் பேச
முடிகிறது.வேறென்ன சொல்ல?

ஸ்டாலின் குரு said...

எப்படியோ, என்னைப்பொறுத்தவரை புலிகளை மதிப்பவர்கள்
என்போர் ஈழப்போராட்டத்தை மதிப்பவர்கள்.//

நிச்சயமமாக....

புலிகள் பற்றிய உங்கள் நேர்மையான இந்த பதிவின்
விமர்சனத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
ஒரு கணம் உங்க பதிவு என்னை கண்
கலங்க வச்சிட்டுது குரு.//


என்னையும் நெகிழ வைத்த,பல நாட்கள் தூக்கத்தை
இழக்க வைத்த தோழன் அமுதாப்பின் வார்த்தைகளை
மீண்டும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.


போர் நிறுத்த உடன்பாடு சிங்கள படைகளால் மீறப்பட
ஆரம்பித்த காலத்தில் சார்லஸ் ஆன்டனி சிறப்பு படை
அணிகளின் தளபதி தோழன் லெப்.கேனல் அமுதாப்
தனது போராளிகளிடம்
பேசியபோது சொன்ன கருத்துக்கள்தான் அவைகள்.
நாங்கள் போரை விரும்பவில்லை,எங்களுக்கு இரத்த
வெறியில்லை.இறந்த உடல்களை,சிதைந்த மனித
உயிர்களை தூக்கிச் சுமப்பதை நாங்கள் வெறுக்கிறோம்.
உயிர்களைப் பறிப்பது எங்களுக்கு உவப்பானதாக
இல்லை.ஆனாலும் எங்கள் மண் மீது மீண்டும்
ஆக்கிரமிக்கப்பு போர் திணிக்கபடும்போது ஒவ்வொரு
அடி மண்ணுக்காவும் நாங்கள் கடைசி மூச்சுவரை
போராடுவோம் என்று பேசியிருந்தான் அந்த தோழன்.
வீரத்தின் உச்சத்தில் இருக்கும்போதே மனிதத்தின்
உச்சத்திலும் உறுதியாக நின்றவர்கள்தான் அந்தப்
போராளிகள்.

http://stalinguru.blogspot.com/2009/12/blog-post_11.html

ஸ்டாலின் குரு said...

தேவைக்காக கொல்வதை சரியென்றும்,விருப்பத்துக்காக
கொல்வதை குற்றமென்றும் சொல்லி இருப்பார் அகிம்சையை
பற்றி பேச வரும் இடத்தில் புத்தர்.தேவைக்காக
சிங்கள ராணுவத்தினரை கொல்ல நேர்கையில் கூட
உயிர்களை அழிப்பதை வெறுக்கும் மனிதர்களாகவே
போராளிகள் இருந்தார்கள் என்பது மட்டுமே
தமிழன் என்று என்னையும் சொல்லிக்கொள்வதில்
பெருமையாக உணரச் செய்கிறது ரதி.

blackpages said...

நேர்காணலின் இறுதிப் பகுதியில் இவர்களே சொல்லிய
விசயத்தில் இருந்து ஒரு விசயம் தெளிவாகிறது
இந்திய அதிகாரவர்க்கத்துக்கு ஓரளவுக்கு மேல்
தமிழக அரசியல் கட்சிகளால் அழுத்தம் கொடுக்க
இயலாது என்பதை உணர்ந்திருந்த புலிகள்,அதை
மேலும் உறுதிபடுத்திக்கொள்ள அந்த நிகழ்வு
வாய்ப்பளித்திருக்கும்///


அழுத்தம் கொடுக்க முடியாது என்பது மட்டுமில்லை.
தங்கள் பதவி சுகங்களையும்,சுயநலத்தையும் பற்றி
மட்டுமே யோசிக்க தெரிந்த தமிழக அரசியல்
கட்சிகள் அழுத்தம் கொடுப்பதை விரும்பவும்
மாட்டார்கள் என்பதையும் புலிகள்
நிச்சயம் . அறிந்திருப்பார்கள்

blackpages said...

தமிழ் திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை
வசனம் எழுதப்போகவேண்டியவர்கள் எல்லாம்
தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு
அக்கப்போர் செய்கிறார்களே என்றுதான் தோன்றியது
இவர்களின் கட்டுரையை படித்தபோது.

இல்லை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றவர்கள் மலராவிட்டால் என்ன
செய்வது என்ற கேள்விக்கு பதிலளிக்கைவில்லை
என்று மொக்கைத்தனமான ஒரு கேள்வியை கேட்டுவிட்டு
சாதனை செய்ததுபோல பாவனை செய்திருந்தார்கள்.

அதையே இவர்களைப் பார்த்து,நீங்கள் நடத்துகிற
அடையாள எதிர்ப்பு போராட்டங்களால் போர் நின்றால்
சரி.போர் நிற்காவிட்டால் என்ன செய்வது என்கிற
கேள்வியை எழுப்பியிருந்தால் ivarkalum
மண்டையை சொரிந்துகொண்டுதானே நின்றிருப்பார்கள்

blackpages said...

தமிழ் திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை
வசனம் எழுதப்போகவேண்டியவர்கள் எல்லாம்
தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு
அக்கப்போர் செய்கிறார்களே என்றுதான் தோன்றியது
இவர்களின் கட்டுரையை படித்தபோது.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றவர்கள் மலராவிட்டால் என்ன
செய்வது என்ற கேள்விக்கு பதிலளிக்கைவில்லை
என்று மொக்கைத்தனமான ஒரு கேள்வியை கேட்டுவிட்டு
சாதனை செய்ததுபோல பாவனை செய்திருந்தார்கள்.

அதையே இவர்களைப் பார்த்து,நீங்கள் நடத்துகிற
அடையாள எதிர்ப்பு போராட்டங்களால் போர் நின்றால்
சரி.போர் நிற்காவிட்டால் என்ன செய்வது என்கிற
கேள்வியை எழுப்பியிருந்தால் ivarkalum
மண்டையை சொரிந்துகொண்டுதானே நின்றிருப்பார்கள்

ஸ்டாலின் குரு said...

காத்திரமான கருத்துக்களை முன் வைப்பதற்கும்
எதிர்வினைகளுக்கும் நன்றிகள் தோழர் blackpages


அதே நேரம் இலை மலர்ந்தால் ஈழம் மலரும்
என்றவர்களின் அரசியல் அறியாமையையும்
நாம் அங்கீகரிக்க முடியாது.

ஸ்டாலின் குரு said...

எனக்குள்ள அரசியல் சிற்றறிவை கொண்டு பார்த்தால் இந்தியா தசாப்தங்களாக ஈழப்போராட்டத்தில் இந்த மிரட்டல் வேலையைத்தான் செய்து வருகிறது என்று தோன்றுகிறது.///


உண்மைதான்.

ஸ்டாலின் குரு said...

இனிமேல் மறுக்கப்படும் உரிமைகளுக்காக போராடும் எந்தவொரு இனமோ, மக்களோ, யாரோ புலிகளை ஓர் உதாரணமாக கொள்ளக்கூட்டாது என்பதாலும் மாறிவரும் உலக ஒழுங்கின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தேவை என்பதாலும் நாங்களும் எங்கள் உரிமைப்போரும் பலி கொள்ளப்பட்டிருக்கிறோம். உங்களுக்கு தெரியாததல்ல ஆனாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் பதிந்தேன்.//

புலிகள் வெறுமனே ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக
மட்டும் போராடவில்லை.ஒடுக்கப்படும் சுரண்டப்படும்
மனித குலத்தின் விடுதலைக்காகவும் போராடினார்கள்
என்கிற உண்மையை வரலாறு தன்னிள் பதிந்து
கொள்ளும் நிச்சயமாக.சொல்லப்போனால்
மாவோவை விட புலிகள் நேர்மையாக இருந்திருக்கின்றனர் என்பதே உண்மை.

ஸ்டாலின் குரு said...

மேலும் சில விசயங்களை பகிர்ந்துகொள்ளத்
தோன்றுகிறது.


சிங்களப் பகுதிகளில் ராணுவ,பொருளாதார
இலக்குகளை புலிகள் தாக்கும்போது,
தவிர்க்க இயலாத வண்ணம் ஏற்படும்
உயிரிழப்புகளையும்,சில விதிவிலக்கான
சம்பவங்களையும் த்விர்த்து புலிகளால்
சிங்கள் மக்களுக்கு அதிகம் இழப்புகள்
ஏற்பட்டதில்லை.ஈழப் போர்க்களத்தைப்
பொறுத்தவரை புலிகளால் கொல்லப்பட்டவர்களை
விட,புலிகளின் பெயரால் கொல்லப்பட்டவர்களே
அதிகம் என்ற யதார்த்தையும் நாம் மறுக்க
முடியாது.


புலிகள் சிங்கள பகுதிகளில் தாக்குதல்
நடத்தியதால்தான் சிங்களர்கள்
தமிழர்களுக்காக போராட முன்வரவில்லை.
இல்லாவிட்டால் வீதியில் இறங்கி ராஜபக்சேவை
தூக்கில் ஏற்றி இருப்பார்கள் என்கிற விதத்தில்
பேசிக்கொண்டிருப்பவர்களிடம் நீண்ட நாட்களாக
கேட்க விரும்பிய கேள்வியை இங்கே
பதிவு செய்கிறேன்.

ஸ்டாலின் குரு said...

ஆனையிறவு முகான் தகர்ப்புக்குப் பின்,தங்களால்
எளிதில் கொல்லப்பட கூடிய நிலையில் இருந்த
நாற்பதாயிரம் சிங்கள ராணுவத்தினரை
விடுவித்ததன் மூலமும் (ஒரு ராணுவத்தினனைச்
சார்ந்து5 பேர் என்று வைத்துக்கொண்டாலும்,இரண்டரை
இலட்சம் மக்களாவது வருவர்.)அந்த மனிதர்களின்
இயல்பான வாழ்க்கையை அவர்களுக்கே
திருப்பிக்கொடுத்ததன் மூலமும் புலிகள் அழுத்தமாகச்
சொன்னார்களே,எங்கள் தாயகத்தில் எங்களுக்கான
உரிமைகளோடு வாழத்தான் நாங்கள் போராடிக்கொண்டு
இருக்கிறோமே தவிர,சிங்கள் மக்களுக்கு நாங்கள் எதிரிகள்
அல்ல என்று.

தமிழர்களின்,புலிகளின் போராட்டத்தின்
நியாயத்தை கடைசிவரை சிங்கள மக்களிடம்
முழுமையாக கொண்டு சேர்க்காதவர்கள்
தங்களை இனியும் புரட்சிகர,ஜனநாயக
சக்திகள் என்று எத்தனை நாள்தான் நடித்துக்
கொண்டு இருப்பார்கள்?

ஸ்டாலின் குரு said...
This comment has been removed by the author.
ஸ்டாலின் குரு said...

மனித உயிர்களின் மதிப்பை அறிந்து,உச்சபச்ச
மனிதாபிமானத்துடன் சிங்கள ராணுவத்தினரை
வெளியேற அனுமதித்த புலிகளுக்கு
புதுக்குடியிருப்பு சமர்க்களத்தில்
கிடைத்தது என்ன?

பிரிகேடியர் தீபன்,விதுசா,ஆதவன்,துர்க்கா,மணிவண்ணன்,
கேனல் சேரலாதன்,ராகேஸ் போன்ற தளபதிகளும்,
நூற்றுக்கணக்கான போராளிகளும்,ரசாயன
ஆயுதங்களால் இந்திய,இலங்கை ஆளும்வர்க்கங்களால்
உயிரோடு எரிக்கப்பட்டதுதானே கிடைத்த பலன்

Bibiliobibuli said...

உஙகள் பகிர்வுக்கு நன்றி குரு. புலிகள் விடயத்தில் சர்வதேசமும் சரி, தமிழர்கள், ஈழத்தமிழர்கள் உட்பட, சிலர் மனச்சாட்சியே இல்லாமல் புலிகள் மீது சேற்றை வாரிப்பூசுகிறார்கள். சர்வதேசம் தான் எஙகள் உரிமைப்பிர‌ச்சனை பற்றியும் அறியாமல் சிங்கள அரசியல்வாதிகளின் பேரினவாதக்கொள்கைகளும் புரியாமல் தங்கள் நலன் சார்ந்து
ஏதேதோ அறிக்கைகளும் விமர்சனங்களும் வைக்கிறார்கள் என்றால் இவர்களுமா என்று எரிச்சல் தான் வருகிறது.


//எங்கள் தாயகத்தில் எங்களுக்கான
உரிமைகளோடு வாழத்தான் நாங்கள் போராடிக்கொண்டு
இருக்கிறோமே தவிர,சிங்கள் மக்களுக்கு நாங்கள் எதிரிகள்
அல்ல என்று.//

புலிக‌ள் இதை எத்த‌னையோ முறை எத்த‌னையோ அறிக்கைக‌ளை மூல‌ம் சொன்னாலும் இவ‌ர்க‌ள் புதிது புதிதாக‌ எதையாவ‌து க‌ண்டு பிடித்து மேதாவிகள் போல் புல‌ம்பிக்கொண்டிருக்க‌த்தான் செய்கிறார்க‌ள். எவ்வ‌ள‌வு தூர‌ம் புல‌ம்புகிறார்க‌ள் பார்க்க‌லாம். புலிக‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு எதிரான‌வர்க்ள் என்று சொல்லி விட்டால் இவ‌ர்க‌ளின் வேலை சுல‌ப‌மாகிவிடும் இல்லையா.

ஸ்டாலின் குரு said...

உஙகள் பகிர்வுக்கு நன்றி குரு.புலிகள் விடயத்தில்
சர்வதேசமும் சரி, தமிழர்கள்,ஈழத்தமிழர்கள்
உட்பட, சிலர் மனச்சாட்சியே இல்லாமல்
புலிகள் மீது சேற்றை வாரிப்பூசுகிறார்கள்.
சர்வதேசம் தான் எஙகள் உரிமைப்பிர‌ச்சனை
பற்றியும் அறியாமல் சிங்கள அரசியல்வாதிகளின்
பேரினவாதக்கொள்கைகளும் புரியாமல் தங்கள்
நலன் சார்ந்து ஏதேதோ அறிக்கைகளும்
விமர்சனங்களும் வைக்கிறார்கள் என்றால்
இவர்களுமா என்று எரிச்சல் தான் வருகிறது.//

பெரும்பாலும் தாங்கள் செய்வதைப் பற்றி
தெரிந்தேதான் செய்கிறார்கள்.நேர்மையான,
ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மிகக்
குறைவாகத்தான் வருகின்றன.எழுத்தாளர்
தோழர் பா.செயப்பிரகாசம் தன்னை நொள்ளை
சொல்வதாக குறைபட்டுக்கொண்டிருந்தார்
ஷோபாசக்தி ஒரு நேர்காணலில்.20
ஆண்டுகளுக்கும் மேலாக புலிகளை
நொள்ளை சொல்வதை மட்டுமே முழு நேர
வேலையாக வைத்திரு(க்கும்)ந்தவர்கள்தானே
அவரும்,அவர் போன்ற புலம் பெயர்
அறிவுஜீவுகளும்.

செயல்படுபவர்கள் பேசுவதில்லை.பேசுபவர்கள்
செய்வதில்லை என்கிற பழமொழிதான்
நினைவுக்கு வருகிறது.

ஸ்டாலின் குரு said...
This comment has been removed by the author.
ஸ்டாலின் குரு said...
This comment has been removed by the author.
ஸ்டாலின் குரு said...

புலிக‌ள் இதை எத்த‌னையோ முறை எத்த‌னையோ
அறிக்கைக‌ளை மூல‌ம் சொன்னாலும் இவ‌ர்க‌ள்
புதிது புதிதாக‌ எதையாவ‌து க‌ண்டு பிடித்து
மேதாவிகள் போல் புல‌ம்பிக்கொண்டிருக்க‌த்தான்
செய்கிறார்க‌ள்.
எவ்வ‌ள‌வு தூர‌ம் புல‌ம்புகிறார்க‌ள் பார்க்க‌லாம்.
புலிக‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்கு எதிரான‌வர்க்ள்
என்று சொல்லி விட்டால் இவ‌ர்க‌ளின்
வேலை சுல‌ப‌மாகிவிடும் இல்லையா.///

ஈழத் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் தமிழர்களின்
விடுதலைக்கு மட்டுமல்ல,சிங்கள பெரும்பானமை
உழைக்கும் மக்களுக்கும் ஈழத்தின் விடுதலை மூலமே
தீர்வு கிடைக்கும் என்பதை இன்னும் அதிக காலம்
இவர்களால் மறைக்க முடியாது என்றே தோன்றுகிறது.

ஸ்டாலின் குரு said...

இன்னும் சில பின்னூட்டங்கள் பாக்கி இருக்கிறது.


இந்திய தேர்தலோ ஆட்சி மாற்றமோ போர் நிறுத்ததை
கொண்டு வராது என்கிற புரிதலோடே புலிகள்
இயங்குவார்கள் என்பதை தெளிவுபடுத்திக்
கொண்டாயிற்று.

அடுத்தது அமெரிக்கா போர் நிறுத்தத்துக்காக செயல்படும்
என்று புலிகள் எதிர்பார்த்தாக ஒரு கருத்து நிலவுகிறது.

1996 ஆம் ஆண்டே புலிகளை அமெரிக்கா தடை
செய்திருந்தது.இணைத்தலைமை நாடுகளின்
கூட்டத்தை தனது நாட்டில் நடத்தி புலிகள்
பங்கேற்பதை தடுத்திருந்தது.மேலும்
போர் நிறுத்தக் காலங்களில் ஐரோப்பிய யூனியன்
நாடுகளை வலியுறுத்தி புலிகள் மீது தடை விதிக்க
வைத்ததும் அமெரிக்காதான்.புலத்துச் செயற்பாட்டாளர்களை
ஆயுதம் வாங்கல் குற்றச்சாட்டில் கைது செய்தது,இலங்கையில்
இருந்து அதிக இறக்குமதிகளை செய்தும்,இலங்கைக்கு
குறைவாக ஏற்றுமதி செய்தும் போர்க்காலத்தில்,இலங்கை
அரசை பொருளாதார ரீதியாக சிக்கல் ஏற்படாத வண்ணம்
பாதுகாக்கும் வேலையையும் அமெரிக்க அரசு செய்திருந்தது.

மேலதிகமாக தனது உளவு செயற்கைகோள்களால்
புலிகளின் கப்பல்களை கண்காணித்து இலங்கை அரசுக்கு
தகவல் தெரிவித்து அவைகளை அழிக்க உதவியது.
போரின்போது புலிகளின் நிலைகள் பற்றிய தகவல்களையும்
இலங்கை அரசுக்கு வழங்கியது போன்ற செயல்களையும்
அமெரிக்க அரசு செய்திருந்தது.

ஸ்டாலின் குரு said...

புலம் பெயர் நாடுகளிலும்,தமிழகத்திலும்
நிகழும் போராட்டங்களை கவனித்துக்கொண்டும்,பின்
வாங்கியபடியே மக்களைக் காத்து போராடிக்கொண்டுமிருந்த
புலிகள்,அந்தப் போராட்டங்கள் போர் நிறுத்தத்தை
கொண்டு வராவிட்டால் என்ன செய்வது என்கிற
கேள்விக்கு பதிலுடனேயே பின்வாங்கலை நடத்திக்
கொண்டிருந்திருப்பார்கள் என்பது,புலிகளைப் பற்றி
ஓரளவு அறிந்தவர்களாலேயே உணர முடியும்.

ஸ்டாலின் குரு said...

யாருக்கு தெரியுமோ இந்திய,இலங்கை,அமெரிக்க
ஆளும்வர்க்கங்களுக்கு நன்றாகவே தெரியும்.
புலிகளால் தப்ப முடியும் என்பது.

அப்படி தப்புகிற புலிகள் மீண்டும் மக்களோடு இணைந்து
போராடுவதை தடுக்கவும்,வெளிப்படையாக செயல்படுவதை
முடக்கவும், இந்த அரசுகளுக்கு,புலிகள் பகுதிகளில்
இருந்து வெளியேறுகிற மக்களை தடுப்பதும்,அவர்கள்
மேல் தாக்குதல் நடத்துவதும்,அந்தப் பழியை புலிகள் மீது
சுமத்தி புலிகளை போர்குற்றவாளிகளாக்குவதும்
தேவையாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள
அதிகம் புத்திசாலித்தனம் தேவை இல்லை.

புலத்திலும்,புலிகளிலும்,களத்திலும் நிறைய
ஊடுருவல்கள் நிகழ்ந்ததாலேயே சர்வதேச நாடுகளின்
ஆளும் வர்க்கங்களுக்கு புலிகளுக்கு இந்த பெரும்
பின்னடைவை கொடுக்க முடிந்தது என்பதில்
யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

ஸ்டாலின் குரு said...

தங்களுக்கு ஆதரவாக தலையிட்டு இந்தியாவோ,அமெரிக்காவோ
போரை நிறுத்தும் என்கிற கற்பனாவாத எண்ணங்களை
கொண்டிருந்தவர்களாக புலிகளைக் கருத எந்த
நியாயமுமில்லை.

புலிகளை போர்குற்றவாளிகள் என்று கூறி முடக்கவும்,மக்கள்
மத்தியில் இருக்கும் புலிகளுக்கான ஆதரவு தளத்தை
தகர்க்கவும்,முன் கூட்டியே திட்டமிட்டிருந்த,இந்திய,இலங்கை,
அமெரிக்கா உள்ளிட்ட அரசுகள்,தங்களின் ஊடுருவல்காரகள்
மூலம் மக்களை தடுத்தன,தாக்குதல் நடத்தின
என்பதே உண்மையாக இருக்க முடியும்.

ஸ்டாலின் குரு said...

எந்த அரசும் தலையிட்டு போர் நிறுத்ததை கொண்டு
வரப்போவதில்லை என்பதை நன்கறிந்த புலிகள்,
மக்களை தாக்கியும்,தடுத்து வைத்தும் இருந்தார்கள்
என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமான் ஒன்றாகதான்
இருக்க முடியும்.

ஸ்டாலின் குரு said...

மீண்டும் மக இக வினரின் வழிக்கே வருவோம்.

புலிகள் ஆயுதங்களை மௌனிக்கும் தங்கள் முடிவை
இந்திய தேர்தல் முடியும் வரை ஒத்திப்போடாமல்
அதற்கு முன்னதாகவே அறிவித்திருந்தால் ஆயிரக்கணக்கான
உயிர்கள் காப்பாற்றப்படிருக்கும் என்றுதானே
எழுதி இருக்கிறார்கள்.

எப்படி ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்
என்கிற கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்.

ஸ்டாலின் குரு said...

இந்திய அரசு போரை நிறுத்தியிருக்கும் என்று சொல்ல
வருகிறார்களா? 3 இலட்சம் மக்கள் புலிகளோடு
இருந்தபோதும் 70 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள்
என்றே இந்தியா சொல்லிக்கொண்டுருந்தது என்பதன்
அர்த்தம் என்ன? 3 இலட்சம் மக்களும்
கொல்லப்பட்டாலும்,புலிகளையும்,புலிகளின்
தலைமையையும் அழிக்காமல் விடமாட்டோம் என்பதுதானே
அதன் அர்த்தம்.அந்த இந்தியா போரையும் நிறுத்தி,புலிகளின்
தலைமையையும் விட்டுவிட்டு,மக்களையும் காப்பாற்றி
இருக்கும் என்று சொல்ல வருகிறார்களா இவர்கள்?

அப்படியே வாதத்துக்கு இந்தியா போரை நிறுத்தச் சொன்னால்
இலங்கை ராணுவம் நிறுத்தி இருக்குமா? கனரக ஆயுதங்களை
பயன்படுத்தி தாக்குதல் நடத்த மாட்டோம் என்று சொல்லிக்கொண்டே
மக்களைத் தாக்கிய இந்திய இலங்கை ராணுவங்களுக்கும்
அரசுகளுக்கும் நற்சான்றிதழ் தர முனையும் இவர்கள்
புரட்சிகாரர்களாம்

இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது?

Bibiliobibuli said...

உங்கள் கருத்துகள் அனைத்துடனும் உடன்படுகிறேன். ஈழம் அதன் உரிமைப்போர் இரண்டின் வீழ்ச்சிக்கும் சர்வதேசம் மட்டுமில்லை தமிழினத்துரோகிகளும் தான் காரணம். ஈழத்திலும் சரி, புலத்திலும் சரி இவர்களை அடையாளம் காண்பது தான் கடினமாக உள்ளது. அண்மையில் ஈழம் சென்று வந்த நண்பர் ஒருவர் சொன்னார் அங்கே வடக்கில் மக்கள் வாயை திறந்து யாருடனும் பேசவே பயப்படுகிறார்கள் என்று. யாரை நம்புவதென்று தெரியாமலேயே குழம்பிப்போய் இருக்கிறார்கள். தலைவர் உயிரோடு இருக்கிறாரா என்று தன்னை ஆவலோடு கேட்கிறார்கள் என்றும் இன்னும் அந்த மக்கள் தலைவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கவில்லை என்று வருத்தத்தோடு சொன்னார்.

சொல்ல மறந்துவிட்டேன். நான் எப்போதோ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதற்கு நன்றி.

blackpages said...

அந்த கட்டுரையை படிக்க படிக்க சிப்பு சிப்பா வருது :)


வைகோவையும்,நெடுமாறனையும் ஏதோ ஆன்டன்
பாலசிங்கம் போல புலிகள் கருதியிருந்ததாக எழுதி
காமெடி செய்திருக்கிறார்கள்.

மேலும் ஈழத்தில் களத்தில் நின்றிருந்தவர்கள் தமிழக
ஆதரவாளர்களுடன்,தமிழ் சினிமா காதலர்கள் போல
தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததாக வேறு
சித்தரிப்பு.

எல்லோரையும், இவர்களைப் போல பாம்பும் சாகாமல்
தடியும் நோகாமல் அரச எதிர்ப்பில் ஈடுபடுபவர்களாக
கருதிக்கொண்டிருக்கிறார்களா?

சாதரண ஈழ அகதிகளையே கண்கொத்தி பாம்பாக
தமிழக காவல்துறை கண்காணித்துக்கொண்டிருக்கையில்,
ஈழத்தின் போர் முனையில் இருப்பவர்கள் தமிழகத்துக்கு
அழைத்தால் அவர்களின் பேச்சுகள் இந்திய உளவுதுறையால்
பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் என்று கூட
தெரியாதவர்களாக போராளிகளையும்,ஈழ ஆதரவாளர்களையும்
சித்தரிப்பதை எங்கே போய் சொல்ல ?

blackpages said...

மேலும் சிந்தித்தபோது ஒரு விசயம் நினைவுக்கு வந்தது.
புலிகளை வலதுசாரிகள்,இந்துதுவ,சாதிய ஆதரவாளர்கள்
என்று சித்தரிக்கும் வேலையை அ.மார்க்ஸும் அவரது
புலம் பெயர் சீடர்களும் தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர்.

கருணாநிதியை வழிபடுவது,கருணாநிதியின் ஊடாக அரசுகளை,
ஏகாதிபத்தியங்களை வழிபடுவது என்பதையே தலித்தியமாக
சொல்லிக்கொண்டிருப்பவர் அவர்.

இப்பொழுது விசயத்துக்கு வரலாம்.

முத்துகுமாரின் உடலைக் கைப்பற்ற ஸ்டாலினையோ தனது
கட்சிக்காரர்களையோ அனுப்பவில்லை கருணாநிதி.
திருமாவளவன் என்கிற தலித்தைத்தான் அனுப்பினார்.
ஒதுக்கப்பட்ட வேலைகளுக்கு தலித்துகளை அனுப்பும்
ஆண்டை குணமும்,சாதி ஆதிக்க மனமும் கொண்ட
கருணாநிதியை தலித்துகளுக்காக பாடுபடுபவராக
சித்தரித்துக்கொண்டு,புலிகளை சாதிய ஆதரவாளர்களாக
காட்டும் அ.மார்க்ஸுக்கும் அறிவு நாணயத்துக்கும்
துளியாவது தொடர்பிருக்கிறதா?

ராமதாசும் வேல்முருகன் என்கிற தலித்தைத்தான்
அனுப்பினார் என்பதை கவனியுங்கள்.

யாராவது விமர்சனம் செய்தால் தலித்துகள் மீதான
சாதிய மனோபாவத்துடன் பேசுகிறார்கள் என்று
சொல்லி,முடக்கலாம் என்பதால்தானே அப்படி
செய்திருப்பார்கள்.

ஸ்டாலின் குரு said...

உங்கள் கருத்துகள் அனைத்துடனும் உடன்படுகிறேன்.
ஈழம் அதன் உரிமைப்போர் இரண்டின் வீழ்ச்சிக்கும்
சர்வதேசம் மட்டுமில்லை தமிழினத்துரோகிகளும்
தான் காரணம். ஈழத்திலும் சரி, புலத்திலும் சரி
இவர்களை அடையாளம் காண்பது தான் கடினமாக
உள்ளது.// உண்மைதான்.இயன்றவரை இவர்களை
அம்பலபடுத்திக்கொண்டே இருப்போம்.

அண்மையில் ஈழம் சென்று வந்த நண்பர் ஒருவர்
சொன்னார் அங்கே வடக்கில் மக்கள் வாயை
திறந்து யாருடனும் பேசவே பயப்படுகிறார்கள்
என்று. யாரை நம்புவதென்று தெரியாமலேயே
குழம்பிப்போய் இருக்கிறார்கள். தலைவர்
உயிரோடு இருக்கிறாரா என்று தன்னை
ஆவலோடு கேட்கிறார்கள் என்றும் இன்னும்
அந்த மக்கள் தலைவர் மீது கொண்டுள்ள
நம்பிக்கையை இழக்கவில்லை என்று
வருத்தத்தோடு சொன்னார்.//

சதிகளை உடைத்துக்கொண்டு தலைவரின்
தலைமையில் மீண்டும் புலிகள் எழுந்து,
விடுதலைப் போரைத் தொடர்வார்கள் என்கிற
நம்பிக்கையை நாம் கைவிட வேண்டியதில்லை
என்பதே என் கருத்து.சற்று காலம் பிடிக்கும்
அவ்வளவுதான்.


சொல்ல மறந்துவிட்டேன். நான் எப்போதோ
கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதற்கு
நன்றி.//

நன்றிகள் என்கிற சம்பிரதாயங்கள் எல்லாம்
வேண்டாம் தோழர்.

ஸ்டாலின் குரு said...

இன்னும் ஓரிரு பின்னூட்டம் மீதமிருக்கவே செய்கிறது.

போரின் கடைசிக் கட்டங்களுக்குச் செல்லலாம்.என்ன
நடந்தது என்பதை தர்க்கரீதியாக ஆராயப் பார்க்கலாம்.

ஆயிரம் இரண்டாயிரம் என்கிற எண்ணிக்கையில்
மக்களை புலிகள்,படையினரின் தாக்குதலில்
சிக்காமல் அனுப்பத் துவங்கியதும்,சிறிய
எண்ணிக்கையில் செல்லும் அந்த மக்களை
புலிகளுக்கெதிரான கேடயமாக சிங்கள ராணுவம்
பயன்படுத்த ஆரம்பித்ததும் நடந்தது.அதன் பிறகே
மக்களை பெரும் எண்ணிக்கையில் புலிகள்
வெளியேற்றத் துவங்கினர்.இருபதாயிரம்,ஒன்றரை
இலட்சத்துக்கு சற்று குறைவாக ஒருமுறை,நாற்பதாயிரம்,
பதினாராயிரம்,என்று இரண்டரை இலட்சத்துக்கும் சற்று
அதிகமான மக்களை புலிகள் போரின் இறுதி நாட்களுக்கு
முன்பாகவே அனுப்பி இருந்தனர்.

ஸ்டாலின் குரு said...

புதிதாக படையணிகளில் தாங்கள் இணைத்துக்கொண்ட,
போராளிகள் பலரையும் புலிகள் வெளியேற்றி இருந்தனர்.
அதுவரை நிகழ்ந்த போரில் மடிந்த அப்பாவி மக்கள்,
போராளிகள் தவிர புலிகளோடு இருந்த மக்களின்
எண்ணிக்கை நாற்பதாயிரத்துக்கும் சற்று அதிகமாகவே
இருந்தது.என்ன செய்வது என்கிற தடுமாற்றத்துடன்
இருந்த சிறிய எண்ணிக்கையிலான அப்பாவி தமிழர்களைத்
தவிர்த்து அந்த நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோரில்
அணைவரும் புலிகளின் ஆதரவு குடும்பங்களையும்,
மாவீரர் குடும்பங்களையும் சேர்ந்தவர்களாகவே
இருந்திருப்பர் என்று அறிவதற்கு பெரிய புத்திசாலித்தனம்
தேவை இல்லை.


தங்களது உறவினர்களுக்கும்,குடும்பங்களுக்கும் எதிராகவே
புலிகள் துப்பாக்கிகளை நீட்டினர் என்று கூறுவது எவ்வளவு
முட்டாள்தனம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஸ்டாலின் குரு said...

புலிகளையும்,மாவீரர் குடும்பங்களையும்,புலிகளின்
ஆதரவாளர்கள் குடும்பங்களையும் ஒட்டுமொத்தமாக
அழிப்பது என்கிற நோக்கத்தில் இருந்த,இலங்கை,
இந்திய ஆளும் வர்க்கங்களின் ஊடுருவல்காரர்கள்,
அந்த மக்கள் வெளியேறுவதை தடுத்தும்,தாக்கியும்
திருப்பி அனுப்பியும் கொலைக்களத்துக்கு தள்ளினார்கள்
என்பதே உண்மையாக இருக்க முடியும்.

போரில் கொல்லப்பட்ட பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட
போராளிகள்,அதே எண்ணிக்கை அளவிலான அப்பாவி
மக்கள் தவிர்த்த மேலும் இருபதாயிரம் மக்களை,
புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பிறகே
கொன்றது இலங்கை அரசு.

ஸ்டாலின் குரு said...

மொத்தத்தில்,புலிகள் மக்களை மனித கேடயமாக
பபயன்படுத்தினார்க்க,தடுத்து வைத்தார்கள்,தாக்குதல் நடத்தி கொன்றார்கள் என்கிற அவதூறுகள் எல்லாம்
பச்சைப்பொய்கள் என்கிற முடிவுக்கு தர்க்கரீதியாகவே
வந்து சேர்ந்துவிடலாம்.

Anonymous said...

நீங்கள் விவாதிக்கும் மனநிலையில் பதிவுகள் எழுதுவது போல தெரியவில்லை. ஏற்கனவே நடந்த விவாதங்களில் நீங்கள் நடந்து கொண்ட
விதமும் அதையே நிரூபிக்கிறது. நிலையாக ஒரு நிலையைப் பற்றி நின்று இயங்கியல் ரீதியாக விவாதிக்கும் ஒரு முறையை நீங்கள் கற்றுத்
தேறாத போதாமை நன்றாகவே வெளிப்படுகிறது. த.நா.ம.லெ.கவின் அரசியல் வகுப்புகளில் இயங்கியலைக் கற்றுக் கொடுக்கவில்லையா என்ன?
போகட்டும்.. அரசியலைக் கோட்பாட்டு ரீதியில் கற்றுத் தேறாவிட்டாலும் - மக்களிடையே வேலை செய்யும் ஒரு சக மா.லெ அமைப்பு மேல்
ஒரு மார்க்சிய விரோதிக்கு இணையான வன்மத்தைக் கக்குவது ஏன்? அதுவும் விவாதத்துக்கான கதவுகளை அடைத்து வைத்துக் கொண்டே
இதைச் செய்வது ஏன்?

கல்லடி வாங்கிய நாய் தெருமுனைக்கு ஓடிப்போய் திரும்பி நின்று குலைப்பதைப் போல் இருக்கிறது நீங்கள் நடந்து கொள்ளும் முறை.

எத்தனை மறைத்தாலும் நீங்கள் மக்களிடமிருந்து விலகி நடைமுறையில் இல்லாதவரிடம் இருக்கும் ஒரு வரட்டுத்தனத்தோடு தனிமைப்பட்டு நிற்கும் தனிமையுணர்ச்சி உங்கள் எழுத்துக்களில் தெறிக்கிறது. நடைமுறையில் இருக்கும் மா.அ.க மேலான காழ்ப்பு நடைமுறையில் இல்லாத உங்கள்
கையாலாகத்தனத்தின் அடைப்படையிலிருந்தே கிளர்ந்தெழுகிறது.

நீங்கள் சுயபரிசீலனையும் சுயவிமர்சனமும் செய்து கொள்ள வேண்டிய தருணமிது...

நன்றி!!

p.s - ஆமாம் உங்கள் ப்ரொபைலில் இருக்கும் நபர் சினிமா நடிகர் ஜீவா தானெ?

Anonymous said...

அதனால் தான் யாரு பெத்த புள்லையோ இந்த ஸ்டாலின் குரு இங்க வந்து தனியா பெனாத்திட்டு இருக்கு

ஸ்டாலின் குரு said...

என்னை பற்றிய உங்கள் கண்டுபிடிப்புகளுக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் ஆலோசனைக்கு நன்றிகள் :)

Anonymous said...

ஒரு சக மா.லெ அமைப்பு // he he

Bibiliobibuli said...

இலங்கை பாராளுமன்றத்தேர்தல் களம், ஐரோப்பிய நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நல்லது செய்யும் முயற்சி இதிலெல்லாம் இந்தியாவின் திருவிளையாடல்களை இந்த கட்டுரைகள் தெளிவாக சொல்கின்றன. நேரமிருந்தால் படித்துப்பார்க்கவும்.

//...எனினும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்தியா தற்போது அதிக ஈடுபாடு காட்டுவதன் அர்த்தம் என்ன? விடை தெளிவானது. ஈழத்தமிழ் மக்களுக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான உறவுகளை முறியடிப்பதுதான் அதன் நோக்கம்.

இந்த உறவுகளை முறியடிக்கும் வரை இந்தியா ஈழத்தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக அதிகம் பேசும், பல நாடகங்களை அரங்கேற்றும்,....//

http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=44&id=809

http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=44&id=810

Anonymous said...

அதனால் தான் யாரு பெத்த புள்லையோ இந்த

ஸ்டாலின் குரு இங்க வந்து தனியா

பெனாத்திட்டு இருக்கு//



நல்ல சொன்னீங்க தோலர்

பினாத்தல் அதிகமாத்தான் இருக்கு அதும் உண்மையா இருக்கு.

நம்ம மருதையர் மந்திரித்த ,பூஜித்த ஒரு இந்திய புரட்சிகர

பூணூலை மாட்டிவிட்டால சரியாகி விடும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

நீங்கள் சுயபரிசீலனையும் சுயவிமர்சனமும் செய்து கொள்ள வேண்டிய தருணமிது...///


நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு

ஸ்டாலின் குரு said...

தகவலுக்கு நன்றி ரதி

ஸ்டாலின் குரு said...

.s - ஆமாம் உங்கள் ப்ரொபைலில் இருக்கும் நபர் சினிமா நடிகர் ஜீவா தானெ?//


இல்லை சிவாஜி. நல்லா கேட்குராங்கையா டீடெய்லு

ஸ்டாலின் குரு said...

இவர்களுக்கு பதில் சொல்லும் எண்ணத்தில் இல்லை என்றாலும் ஒரு
சிறு விளக்கத்தை பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.

நான் பார்த்த பங்கெடுத்துக்கொண்ட அமைப்புகளில் இறுதியானது
புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகும்.ஆம் இவர்கள் மறைக்கிற
முத்துக்குமார் அங்கம் வகித்த அதே புரட்சிகர இளைஞர் முன்னணிதான்.
மற்றபடி நான் தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சியின் வட்டத்துக்குள்
சென்றதில்லை.

ஸ்டாலின் குரு said...

இளைஞர் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கெடுத்துக் கொண்டேன்
லெவி கொடுத்தேன்.வழக்கம் போல கேள்விகள் எழுப்பினேன் ,
பதில்கள் திருப்தியாயில்லை.லெவியை குறைத்தேன்,பிறகு
படிப்படியாக விலகிக்கொண்டு விட்டேன்

ஈழ முத்துக்குமரன் said...

//கல்லடி வாங்கிய நாய் தெருமுனைக்கு ஓடிப்போய் திரும்பி நின்று குலைப்பதைப் போல் இருக்கிறது நீங்கள் நடந்து கொள்ளும் முறை.‍‍‍‍‍‍//

சூப்பரு ம.க.இ.க தோழரே, உங்களோட இந்த முறை ஆராய்ச்சியின் கண் கொண்டு, உங்களுடைய நடத்தை முறையை ஆராய்ந்து பார்த்தால், கல்லடி வாங்காத நாய் கம்பீரமாய் நின்று குரைப்பது போல் அல்லவா தோன்றுகிறது. என்ன லாஜிக் சரிதானே.


//p.s - ஆமாம் உங்கள் ப்ரொபைலில் இருக்கும் நபர் சினிமா நடிகர் ஜீவா தானெ?*//

ஸ்டாலின் குரு, இப்படி தமிழ் திரைப்படத்தில் வர்ற ஒரு கதாபாத்திரத்தோட படத்தை போய் போட்டிருக்கீங்களே, அதான் நம்ம ம.க.இ.க அனானி தோழரு கேலி பண்றாரு, ரஷ்ய படத்துல முஷ்டியை முறுக்கி காட்டுற மாதிரியோ அல்லது மென்மயிர்தோல் குல்லாவோ அணிந்த மாதிரியோ ஒரு ரஷ்ய நடிகரோட படத்தை போட்டுகிட்டு நம்ம ம.க.இ.க தோழர்கள் போல இணையத்துல வலம் வந்தீங்கன்னா உங்களுக்கு பாட்டாளி வர்க்க உணர்வுன்னு இருக்குன்னு சொல்லலாம், தமிழ் படத்திலேர்ந்து போய் பயன்படுத்தலாமா. அப்புறம் உங்களை தமிழினவாதி, சந்தர்ப்பவாதி இப்படித்தான் எதாச்சும்தான் சொல்லமுடியும்.


ஈழ முத்துக்குமரன்

ஸ்டாலின் குரு said...
This comment has been removed by the author.
ஸ்டாலின் குரு said...

நீங்கள் விவாதிக்கும் மனநிலையில் பதிவுகள் எழுதுவது போல தெரியவில்லை. ஏற்கனவே நடந்த விவாதங்களில் நீங்கள் நடந்து கொண்ட
விதமும் அதையே நிரூபிக்கிறது. நிலையாக ஒரு நிலையைப் பற்றி நின்று இயங்கியல் ரீதியாக விவாதிக்கும் ஒரு முறையை நீங்கள் கற்றுத்
தேறாத போதாமை நன்றாகவே வெளிப்படுகிறது. த.நா.ம.லெ.கவின் அரசியல் வகுப்புகளில் இயங்கியலைக் கற்றுக் கொடுக்கவில்லையா என்ன?
போகட்டும்.. அரசியலைக் கோட்பாட்டு ரீதியில் கற்றுத் தேறாவிட்டாலும் - மக்களிடையே வேலை செய்யும் ஒரு சக மா.லெ அமைப்பு மேல்
ஒரு மார்க்சிய விரோதிக்கு இணையான வன்மத்தைக் கக்குவது ஏன்? அதுவும் விவாதத்துக்கான கதவுகளை அடைத்து வைத்துக் கொண்டே
இதைச் செய்வது ஏன்?

கல்லடி வாங்கிய நாய் தெருமுனைக்கு ஓடிப்போய் திரும்பி நின்று குலைப்பதைப் போல் இருக்கிறது நீங்கள் நடந்து கொள்ளும் முறை.

எத்தனை மறைத்தாலும் நீங்கள் மக்களிடமிருந்து விலகி நடைமுறையில் இல்லாதவரிடம் இருக்கும் ஒரு வரட்டுத்தனத்தோடு தனிமைப்பட்டு நிற்கும் தனிமையுணர்ச்சி உங்கள் எழுத்துக்களில் தெறிக்கிறது. நடைமுறையில் இருக்கும் மா.அ.க மேலான காழ்ப்பு நடைமுறையில் இல்லாத உங்கள்
கையாலாகத்தனத்தின் அடைப்படையிலிருந்தே கிளர்ந்தெழுகிறது.

நீங்கள் சுயபரிசீலனையும் சுயவிமர்சனமும் செய்து கொள்ள வேண்டிய தருணமிது...

நன்றி!!

p.s - ஆமாம் உங்கள் ப்ரொபைலில் இருக்கும் நபர் சினிமா நடிகர் ஜீவா தானெ?

இதுதான் அந்த பின்னூட்டம்.தங்களுக்கு ஒரு நீதியும்
பிறர்க்கு ஒன்றும் சொல்லும் மனுவாதிகள் என்பதற்கு இந்த
பின்னூட்டமே சாட்சி

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இருந்தாலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம்தான்.
வெயில் அதிகமாக அதிகமாக வினவு சைக்கோக்களுக்கு வெறி
ஏறிக்கொண்டே இருக்கிறது.

மார்க்சிய மாமாப் பயல் மருதையனுக்கும்,இந்துத்துவ மாமாப் பயல்
சுப்ரமனியசாமிக்கும் ஒரே தளத்தின் வேறு வேறு பகுதிகளில் வைத்து
இந்திய உளவுத்துறையான ரா (raw)பயிற்சியளித்ததாக,ராவில் வேலை செய்து
ஓய்வு பெற்று கனடாவில் குடியேறியவர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக்
கொண்டே ராஜீவ் கொலையில் மக இக தொடர்பை பற்றி கிட்டு சொல்லி
இருக்ககூடும்.

வேறு ஒரு காரணமும் இருக்கிறது.ராஜீவ் கொலை நடந்த உடன் யார் அந்த
கொலையை செய்திருப்பார்கள் என்று பலதரப்பிலும் இருந்தும் பல அமைப்புகள்
மீதும் சந்தேகம் கிளப்பட்டபோது ,விடுதலைபுலிகள்தான் செய்திருப்பார்கள் என்று
சுப்ரமணியசாமி சொன்ன உடனேயே ஆமாம் போட்டு ,புலிகள்தான் செய்திருப்பார்கள்
என்று பேசியது இந்த கும்பல்தான்.

ஸ்டாலின் குரு said...

பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்யாமல் அனுமதித்து
வைத்திருந்ததால் ஒரு அனானியின் அநாகரிகமான
பின்னூட்டம் சில நாட்களுக்கு இந்த பதில் இருந்துவிட்டது.
நண்பர்கள் பொருத்தருள வேண்டும்.

இனி மட்டுறுத்தல் செய்தே பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படும்.

Anonymous said...

ஒன்றரை வருடமாக நடந்த ஈழ மக்களுக்கான தமிசகத்தின் போராட்டத்தில்
தங்கள் அமைப்பில் இருந்து ஒரு பயலையும் கூட சிறைக்கு அனுப்பாத
அளவுக்கு போர்க்குணத்தோடு போராடிய இந்த கும்பல்,ராஜீவ்
காந்தி கொலைக்குப்பின் அடக்குமுறைக்கு உள்ளானோம் என்று
கீறல் விழுந்த ரெகார்டு போல ஒப்பாரி வைத்துக்கொண்டு திரிகிறது.

Anonymous said...

மாமா மருதையன் கோஷ்டியின் கருணாதிக்கு எதிரான கருப்புக்கொடி காட்டும்
நாடகத்தை பார்த்தபோதே தோன்றியது சோழியன் குடுமி சும்மா ஆடாதே ஏதாவது
காரணம் இருக்க வேண்டுமே என்று.இருந்தாலும் எத்தனை வருடத்துக்கு தில்லை
கோவிலை வைத்தே ஓட்டுவது.இந்த கருப்புக்கொடி காட்டியதை வைத்து ஒரு
இரண்டு வருடத்தை ஓட்டலாம் என்று பார்க்கிறார்கள் என்றுதான் நினைத்தேன்.
சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய
காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு
இடைக்காலத்தடை விதித்து உச்சிக்குடுமி மன்ற நீதிபதிகள் சொல்லி
இருக்கும் கருத்துகளை பார்த்தபோதுதான்
புரிந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நியாயமாக நடக்கும் என்றெல்லாம்
எங்களுக்கு தோன்றவில்லை.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,முதலமைச்சர் முன்னாலேயே
கருப்பு கோடி காட்டுகிறார்கள் கலக்கம் செய்கிறார்கள்.சென்னை உயர்நீதிமன்ற வழகரின்கர்கள்
செயல்பாடுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றெல்லாம் சொல்லி
இருக்கிறார்கள்.

ஆக காவல்துறை அதிகாரிகளை காப்பார்ருவதர்காக இந்திய அதிகாரவர்க்க பூணூல்களும்
புரட்சிகர பூணூலும் இணைந்து நடத்தியதுதான் சென்னை உயர்நீதிமன்ற நாடகம் என்று
ஆகிறது.

blackpages said...

villangamaka thrinthalum ananiyin karuththu
sariyanaathakave thonrukirathu.

Post a Comment