Thursday, December 17, 2009

வன்முறையின் அரசியல் - 4

இனியொருவில் பாராட்டத்தக்க விதத்தில் விவாதத்தை
முன்னெடுத்த தோழர் மக்கள் கருத்து இறுதியாக,
சொல்லி இருந்த விசயம் சர்வதேச அரங்கில் மீண்டும்
சாதகமான நேரம் வரும்வரை புலிகள் காத்து
இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன் அதுவரை
புலிகள் பின்வாங்கி கொரில்லாக்களாக செல்லாமல்
மக்களை அரண் காத்து அழிந்துவிட்டார்கள் என்று.
புலிகளுக்கு பொருந்தும் இதே விசயம் நேபாள
மாவோயிஸ்டுகளுக்கும் பொருந்தும்தானே?
உலகில் தேசிய இன விடுதலையையும்,புரட்சிகர
எழுச்சிகளையும் ஆதரிக்கிற எந்த முகாமும்
இல்லாத நிலையில் நேபாள மாவோயிஸ்டுகள்
என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள்?



முப்பது ஆண்டுகால போர் அனுபவமும்,முப்படை
பலமும்,வீரமும் கொண்ட போராளிகள் என்பதால்
புலிகளால் மூன்று ஆண்டுகள் சர்வதேச நாடுகள்
என்கிற பெயரில் அறியப்படும் முதலாளித்துவ
நாடுகளை எதிர்த்து நிற்க முடிந்தது.அத்தகைய
ராணுவ பலம் இல்லாத நிலையில் நேபாள
மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தையே
தொடர முடிவு செய்திருந்தால் அதிகபட்சம்
ஆறு மாதங்களுக்குள் முற்றாக அழிக்கபட்டு
இருப்பார்கள் என்பதுதானே யதார்த்தம்.
நேபாள மாவோயிஸ்டுகள் மீது எனக்கும்
சில விமர்சனங்கள் உண்டு.முதன்மையானது
தங்கள் போராளிகளை நேபாளத்தின் அரசு
ராணுவத்தில் இணைக்க விரும்பியது.
அது ஏற்க இயலாதது.பாட்டாளிவர்க்க
சர்வாதிகாரத்தை கைவிடுவதாக அறிவித்தது.
ஆகிய விசயங்களோடு உடன்பட முடியாத
போதும் அவர்களின் வழிமுறைகள் முற்றாக
நிராகரிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டியது
என்கிற கருத்தில் உடன்பாடில்லை.




லெனினியத்தை கைவிட்டுவிட்டார்கள்,மார்க்சிய
அடிப்படையை துறந்துவிட்டார்கள் என்றெல்லாம்
பேசுவதற்கு முன் யதார்த்த உலகம் எவ்வாறு
இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவது
நலம்.வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசுகள் மீது தாக்குதல் நிகழ்த்துவதற்கு
சர்வதேச மட்டத்தில் நிலவும் நிர்பந்தங்களை
கவனத்தில் கொண்ட பிறகே பாராளுமன்றதின்
மூலம் புரட்சியின் இடைக்கட்டத்தை
நிறைவு செய்திருக்கிறார்கள் நேபாள
மாவோயிஸ்டுகள் என்பதே என் கருத்து.
தென் அமெரிக்க நாடுகளில் மக்களின்
வாக்கெடுப்புகள் மூலம் ஆட்சிபொறுப்பில்
இருக்கும் நாடுகளின் மாதிரியை அவர்கள்
கடைபிடிக்க விரும்புகிறார்கள் என்றே அறிய
முடிகிறது.கியூபா,வெனிசுலா,பொலிவியா
போன்ற நாடுகள் அணைத்துக்கும் ஏதோ ஒரு
விதத்தில் சீனா,மற்றும்,ரஸ்யாவின் ஆதரவு
இருப்பதை நாம் மறுக்க இயலாது.நேபாள்
மாவோயிஸ்டுகளின் நடைமுறைகளையும்
ஏன் ஒரு இடைக்கட்டமாக கருதக் கூடாது?
சர்வதேச அரங்கில் சாதகமான நிலை வரை
கடைபிடிக்கப்படும் அதாவது அணு ஆயுத
வலிமை கொண்ட ஒரு நாடோ அல்லது
நாடுகளின் கூட்டமைப்போ உருவாகி
தேசிய விடுதலை போர்களையும்,இடது
சாரி எழுச்சிகளையும் ஆதரிக்கும் நிலை
வரும்வரை கடைபிடிக்கப்பட வேண்டிய
ஒரு இடைக்கட்டமாக கருதலாமே?
அரசு சாரா நிறுவனங்கள் பங்கை
ஆற்றும் சி.பி.ஐ.சி.பி.எம் கட்சிகள்
பற்றி ஏற்கனவே என் பதிவுகளில்
குறிப்பிட்டுவிட்டதால அவர்களின்
வழிமுறைகளை நான் ஏற்பதாக கருத
வேண்டாம்.




முதலாளித்துவம் அதன் அடுத்தகட்டமாக சோசலிசம்
நோக்கி மட்டுமே செல்ல வேண்டியதில்லை
காட்டுமிராண்டித்தனத்தை நோக்கியும் செல்லலாம்
என்ற மார்க்சின் வார்த்தைகள் இன்று நிதர்சனமாகிக்
கொண்டு இருக்கிறது.தன்னை தக்கவைத்துக்
கொள்ள சகலவிதத்திலும் முயலும் முதலாளித்துவ
அமைப்புக்கு கடிவாளம் போடும் முயற்சியில்
இடைகட்டங்களில் நிலவும் அரசுகளாக
தென் அமெரிக்க மாதிரிகளை ஏன் கருதக் கூடாது?
இரண்டு வழிகள் மட்டும்தான் இப்போது உண்டு.
ஒன்று பல தசாப்தங்கள் தொடர வேண்டிய
கொரில்லா போராட்டம் அல்லது,அல்லது ஒரு
இடைக்கட்டத்தில் பாராளுமன்றத்துக்கு செல்வது.



தேசிய விடுதலைப்போர்களோ அல்லது புரட்சிகர
வர்க்கபோராட்டங்களோ எதுவாக இருப்பினும்
இன்றைக்கு மக்கள் மயப்படுத்தப்பட்ட வெகுசன
வன்முறை மூலம் மட்டுமே எதிரிகளை எதிர்
கொள்ள முடியும் என்பதுதான் யதார்த்தம்.
உதாரணங்களாக குஜ்ஜார்கள் போராட்டம்.
காஸ்மீரிகள் போராட்டம்,பெக்டெலுக்கு
எதிராக எழுந்த பொலிவிய மக்களின்
போராட்டம்.பாலஸ்தீன மக்களின் இண்டிபதா
ஆகியவைகளில் இருந்து நாம் பாடம் கற்க
வேண்டி இருக்கிறது.அமர்நாத் நிலபிரசனை
தொடர்பான போராட்டங்களில் படுகொலை
செய்யப்பட்ட காஸ்மீரிகள் இருபது பேர்
என்றால் 1200 மத்திய ரிசர்வ்படையினர்
படுகாயமடைந்து வெளியேற்றபட்டனர்.



உஸ்பெகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவத்தை நாம்
நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.அமெரிக்க
இராணுவத்தளத்தை அகற்ற முயன்ற அந்நாட்டு
அதிபர் தன் மக்களை பயன்படுத்தி அந்த தளத்தை
முற்றுகையிடச் செய்து குடிநீர்,மின்சாரம்,உணவு
எல்லாவற்றையும் முகாமுக்குள் செல்லாமல்
தடுத்தி நிறுத்தினார்.என் மக்களுக்கு எதிராக
காவல்துறையை பயன்படுத்த மாட்டேன் என்று
சொல்லி தன் நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
அதற்கு மறைமுகமாக ரசிய ஆதரவு இருந்தது
என்பது உண்மைதான் என்றாலும்,அவர்
கடைபிடித்த அந்த முறை நாம் பின்பற்ற கூடியது.




புரட்சியை தக்கவைக்க வேறு வழியற்ற நிலையில்
பாராளுமன்றத்துக்கு செல்லும் கட்சிகள்.தேசிய
விடுதலைப்போரில் வேறுவழியற்ற நிலைகளில்
ஏகாதிபத்தியங்களை அனுமதிக்கும் தேசிய இனங்கள்
எல்லாம் ஏகாதிபத்திய பொருளியல்,ராணுவ.
கலாசார கட்டமைப்புகளை வெகுசன வன்முறை
என்கிற ஆயுதத்தை முதன்மையாக பயன்படுத்தி
வெளியேற்ற முயல்வதே தங்கள் பலத்தை
சரியாக கணக்கிட்டு செயல்படுவதன்
அடையாளமாகும்.



ஆயுதபோராட்டங்கள் முற்றாக சாத்தியமே இல்லை
என்கிற முடிவுக்கு நாம் வந்து விடவும் இல்லை.
அதன் வடிவங்கள் பற்றி,மரபுரீதியான
கண்ணோட்டங்களை கைவிட்டு விரிவான
விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே
நம் எதிர்பார்ப்பு.



மரபுரீதியிலான அரசியல் போராட்டப்பாதைகள்
ஆயுதப்போராட்ட வழிமுறைகளை பற்றி
வளர்த்தெடுக்கப்பட்ட தத்துவ வழிகாட்டலின்
கீழ் விரிவான விவாதங்கள் நிகழ்த்தப்பட
வேண்டும் என்பதையே இன்றைய அரசியல்
சூழல் உணர்த்துகிறது.


முடிந்தது

13 comments:

Anonymous said...

//பாட்டாளிவர்க்க
சர்வாதிகாரத்தை கைவிடுவதாக அறிவித்தது.//

When did they say this? you are too naive.

Do you know what new democratic revolution is? They have not even achieved ND revolution as per them. The contry is in a transition period. The principle enemy is still there with the support of expansionist indian background.

hmm... ask kaarmugil to teach the basics properly first. Or atleast read "The worker" it is available online indianvanguard site.

ஸ்டாலின் குரு said...

http://inioru.com/?p=7741

இந்த விவாதத்தை பாருங்கள் தோழா

ஸ்டாலின் குரு said...

hmm... ask kaarmugil to teach the basics properly first. Or atleast read "The worker" it is available online indianvanguard site.//



naan tnml il illai nanpare

ஸ்டாலின் குரு said...

//உங்கள் கட்சி முதலில் லெனினிய முறைப்படி
இயங்குகிறதா //

//உங்கள் நாட்டில் உங்களுடைய சொந்த‌ ஆய்வின்படி
(லெனின் கூறியதைப் போன்று)
(C r e a t i v e R e v o l u t i o n)
ஒரு படைப்பாக்க ரீதியிலான புரட்சிக்கு தயாரிக்காமல்//

லெனினிய முறைப்படி என்ற கருத்தாக்கத்தை கூறியதாலும் நேபாள் கட்சி படைப்பாக்கப் புரட்சி செய்கிறார்கள் அவர்களை விமர்சிக்காலாம என்று எழுதியதிலிருந்து சில கேள்விகள்.

ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியத்தின் 5 அடிப்படை அம்சங்களை அவர்கள் ஏன் காலாவதியாகிவிட்டது இன்று பொருந்தாது என்று கூறினார்கள். காவுத்ஸ்கியின் வாதத்தை ஏன் தூக்கிப்பிடிக்கிறார்கள்.
அமெரிக்க தலைமையில் அனைத்து ஏகாதிபத்தியங்களும் அணிவகுத்து விட்டதால் இனி சிறிய நாடான நேபாளில் மட்டும் ஆயுதப்புரட்சி என்பது சாத்தியமில்லை இனி ஆசியா முழுவதும்தான் புரட்சி என்று கூறுகிறார்களே அது எந்த லெனினியம் (டிராட்சிகிசம்)
ஆதாரம்: January 2006 Information Bulletin & International Dimensions of Prachanda Path-Basanta

அரசு பற்றிய லெனினிய தத்துவத்திலிருந்து மாறி ஒரு வர்க்க அரசை தூக்கியெறிய அதே வர்க்கத்தை பிரதிநித்துவப் படுத்துகிற அரசோடு கூட்டு சேர எவ்வாறு முயன்றார்கள்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இனி பொருந்தாது என்றும் பலகட்சி ஆட்சி முறைதான் இனி சரியான ஜனநாயகத்திற்கு பொருந்தும் என்றும் இதுதான் புதிய ஜனநாயக புரட்சி என்றும் ஹிந்து பத்திரிக்கையில் பிரசந்தா பேட்டி கொடுத்தாரே அது எந்த லெனினிய வரையரை.

லெனின் கூறினாரே காலாவதியாகிவிட்ட பாராளுமன்றத்தின் மூலமே (அம்பலப்படுத்தலுக்காக செயல்தந்திர ரீதியாக பாராளுமன்றத்தை பயன்படுத்துவதை அல்ல) சமூகத்தின் அடித்தளத்தை மாற்ற முடியும் என்று உண்மையிலேயே செக்குமாடாக மாறியது எந்த லெனினியம்? சட்டத்தின் மூலம் அனைத்தும் மாற்ற முடியும் என்று உங்களின் படைப்பாக்கம் மிக்க லெனினியக் கருத்தின் படி சாத்தியம் என்று கருதுகிறீரா? அதையே லிக்யூடேசனிசம் (கலைப்புவாதம்) என்று முன்பு சொன்னார்களே
(ஆதாரம்: மார்க்சியவாதியாக இருந்தபோது எழுதிய புத்தகம்: Problem and Prospects of Nepal Revolution – Published by Nepal Maoist)

இராணுவத்தை கலைத்து புதிதாக ஐக்கியப்படுத்துவது என்பது இராணுவம் போலீஸ் ஒரு வர்க்கத்தின் கருவி என்று லெனினியத்தை மறுத்து கூறுகிறார்களே அது எந்த மார்க்சியம். இராணுவம் பாராளுமன்றத்திற்கு கட்டுப்படும் என்று ஒரு மாயையை நீங்களும் ஏற்பீர்கள் என்றால் சிபிஎம் வழியை பின்பற்றுங்கள் அவர்களை விமர்சனம் செய்யாதீர்கள்.

மன்னர் ஒழிப்பே நிலப்பிரபுத்துவ ஒழிப்பு என்று அரசுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள சின்ன (முதலாளித்துவ வாதிகள் புரிந்து கொள்ளும்) வேறுபாடுகூட அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பதும் உங்கள் மொழியில் சொல்லவேண்டுமானால் படைப்பாக்க புரட்சி என்று சொல்வதும் நல்ல விளையாட்டு நேபாள் மக்களை வைத்து.

இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்க்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் உண்மையான போராளிகள் இலலை என்று விடுதலைப் புலிகளுக்கு கூறிவிட்டு அதையே நேபாளில் செயல் ரீதியாக இங்குள்ள ஆட்சியாளர்களிடம் மட்டுமில்லை இங்குள்ள எதிர்க்கட்சிகளையும் பி.ஜே.பி.யையும் சந்தித்து பேசிவிட்டு போயிருக்கிறார்களே எந்த அடிப்படையில். ஒரு வேளை படைப்பாற்றல் புரட்சி கொள்கையுடைய நேபாளுக்கு பொருந்தாதோ.

இவையெல்லாவற்றையும் விட இன்னும் புரட்சி பாக்கி இருக்கிறது இது ஒரு இடைக்கட்டம் என்று கூறும் ஏமாற்றுவித்தை தெரிந்தாலும் ஒன்றை அப்பட்டமாக மீறி இருக்கிறார்கள். அது வெளிப்படையான கட்சி. இதுவரையில் அரசியல் சுதந்திரம் அற்ற ஒரு நாட்டில் வெளிப்படையான கட்சியாக மொத்தமாக மாற்றியமைத்துவிட்டு யாரை வைத்து இனி புரட்சி செய்வதாக கூறப்போகிறார்கள். இது படைப்பாற்றல் புரட்சிகொண்ட உங்களைப் போன்ற மிகப்பெரிய சர்வதேசியவாதிகள் அறிவைகொண்டவர்களுக்கு மட்டுமே புரியும்.

நீங்கள் சொன்ன சாகசவாதம் கூட விமர்சனமாக வைக்கலாம் மாவோயிஸ்டுகளுக்கு. அது அவர்கள் பதில் சொல்லட்டும். நீங்கள் உங்கள் வலது சந்தர்ப்பவாத கருத்தினை வைத்துக்கொண்டு யாருக்கு காத்திருக்கிறீர்கள். ஒரு வேளை இன்றைய லெனினாக அவர்கள் மொழியில் பிரசந்தா வழியாக உங்களுக்கு ஏற்றுக்கொண்டிருந்தால் தயவு செய்து அதை வெளிப்படையாக நீங்கள் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்.

அரசியலை விட்டுவிட்டு வெறும் வழியை மற்றும் பேசுவது போகாதா ஊருக்கு வழி பற்றி விவாதிக்கிறீர்கள் என்பது திண்ணம்.





அந்த விவாத்தில் தோழர் மக்கள் கருத்து சொன்னது இது

ஸ்டாலின் குரு said...

மேலும் நான் முன்வைத்திருக்கிற
கருத்துக்கள் மேல் உங்கள்
எதிர்வினைகளை முன்வைத்தால்
உரையாடலாம்

ஸ்டாலின் குரு said...

Do you know what new democratic
revolution is?//


சொல்லிக் கொடுங்க தோழா கற்றுக்கொள் கற்றுக்கொடு என்கிற
மாவோவின் பாடத்தை நான் மறப்பதில்லை,உங்கள் அளவு
இல்லாவிட்டாலும் நானும் ஓரளவு படித்து இருக்கிறேன் :)



They have not even achieved ND revolution
as per them. The contry is in a transition
period.//

என் பதிவை நீங்கள் படிக்கவே இல்லை என்று நினைக்கிறேன்
நான் என்ன சொல்ல.ஒட்டுமொத்த உலகத்தின் இடைகட்டம்
பற்றி எல்லாம் பேசி இருக்கிறேன்.



The principle enemy is still there
with the support of expansionist
indian background.//

நான் மறுக்கவில்லையே

hmm... ask kaarmugil to teach the
basics properly first. Or atleast
read "The worker" it is available
online indianvanguard site.///

நான் ஒரு யதார்தவாதி மட்டுமே,உங்களை போன்ற
மார்க்சியத்தில் கரைகண்டவர்கள் சொல்லிக்கொடுத்தால்
கற்றுக்கொள்வேன் என் பதிவுகள் மீது உங்கள்
கருத்துக்களை முன்வைத்தால் உரையாடலாம்

ஸ்டாலின் குரு said...

எடுத்த உடனே தாக்க முயற்சிப்பது
முத்திரை குத்த முயற்சிப்பது
மார்க்சியதத்தில் தங்களை விட
யாரும் சிறந்தவர்கள் இல்லை
என்று பேசுவது எல்லாம்
யாருடைய பாணி என்று
இணைய விவாதங்களை
தொடர்சியாக கவனிப்பவர்களுக்கு
தெரிந்ததுதான்

ஈழமுத்துக்குமரன் said...

//எடுத்த உடனே தாக்க முயற்சிப்பது
முத்திரை குத்த முயற்சிப்பது
மார்க்சியதத்தில் தங்களை விட
யாரும் சிறந்தவர்கள் இல்லை
என்று பேசுவது எல்லாம்
யாருடைய பாணி என்று
இணைய விவாதங்களை
தொடர்சியாக கவனிப்பவர்களுக்கு
தெரிந்ததுதான்//

அது மார்க்சிய ஆதினங்களான ம.க.இ.கவினரின் பாணி என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை தோழர்..

தோழமையுடன்
ஈழமுத்துக்குமரன்

ஸ்டாலின் குரு said...

ஆம் தோழர் அது இவர்களின் பாணிதான்

நாம் அறிந்த மிகச் சாதாரண மனித
உளவியல் ஒன்று உள்ளது.நூறு
சதம் தவறான நபர்கள் தங்களை
நூறு சதம் சரியான நபர்களாகக்
காட்டிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டு
முயற்சிப்பார்கள்.இவர்களின்
போக்குகளையும் செயல்பாடுகளையும்
பார்க்கையில் அப்படித்தான் தோன்றுகிறது.

ஸ்டாலின் குரு said...

அந்த பதிவுகளில் எல்லாம் நான் சர்வதேச
சூழல்களை சுட்டிகாட்டி நேபாள
மாவோயிஸ்டுகளை ஆதரிக்கவே
செய்திருந்தேன்.முரண்படுகிற
இடங்களையும் சுட்டி காட்டினேன்
அவ்வளவுதான்.இவர்கள் ஏன் இவ்வளவு
உணர்ச்சிவசபட வேண்டும் என்பது
தெரியவில்லை.உண்மையில் இவர்களின்
கோபமூட்டல்கள்,விவாதத்தை திசை
திருப்பும் முயற்சிகள் அணைத்தையும்
தாண்டி இவர்களை அம்பலபடுத்த இயலும்
என்பதையே அந்த இனியொரு விவாதம்தான்
எனக்கு உணர்த்தியது.இவர்களை எதிர்கொள்ளாமல்
ஒரு நேரம் மன்னிப்பு கேட்டு ஒதுங்கியது
எவ்வளவு பெரிய தவறு என்று இப்போதுதான்
உணர்கிறேன்.

ஸ்டாலின் குரு said...

உண்மையில் திறந்த மனதுடன் உரையாடவும்
கற்றுகொடுக்கவும் முன்வரும் மக்கள் கருத்து
போன்றவர்கள்டம் இருந்து கற்றுக்கொள்ள
ஒரு வழியாகவே எனது இந்த பதிவுகளை
இட்டேன்.அதன் மூலம் சர்வதேச சூழல்கள்
பற்றிய என் கருத்துக்களை பகிரவும்,எனது
மார்க்சிய அறிவை விரிவுபடுதிக்கொள்ளலாம்
என்பதே என் எண்ணம்.

கிடைத்ததோ அனானியக வரும் இவர்களின்
சிவபூஜை கரடி வேலையின் தொந்தரவுகள்தான்
என்ன செய்வது :)

ஈழமுத்துக்குமரன் said...

மார்க்சியத்தின் பெயரால் புலிகளை எதிர்த்து இணையத்தில் சண்டப்பிரசண்டம் செய்து நாளாந்தம் நாலைந்து கட்டுரைகளை கிறுக்கி தள்ளிய ‘தோழர் இரயாகரன்’, தன்னுடைய தோழர் ஒருவரின் பணத்தையே அபேஸ் செய்த ‘திருட்டு தோழர்’என்று தெரிந்தவுடன், சத்தமில்லாமல் இரயாகரனுக்கு கல்தா கொடுத்துவிட்டு இனியொரு கும்பலோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள தொடங்கியிருக்கிறது ம.க.இ.க.

விமர்சணம் – சுயவிமர்சணம் என்றெல்லாம் ஊருக்குள் ஜிகினா வேலை காட்டிக் கொண்டிருக்கும் ம.க.இ.க. இணையத்தில் இனியொரு குழுவால் இரயாகரன் அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, அவர் மீது பொதுவாக விமர்சணங்களையோ அல்லது இவ்வளவு நாள் இராயாவோடு அரசியல் உறவு கொண்டிருந்ததற்கு சுயவிமர்சனத்தையோ முன்வைக்கவில்லை, இவ்வளவு ஏன், இரயாகரன் பற்றி இனியொரு முன்வைத்த விமர்சணங்களை ம.க.இ.க – வினவு ஏற்றுகொள்கிறதா அல்லது அதற்கு இரயாகரன் கொடுத்த விளக்கங்களை ஏற்றுக்கொள்கிறதா என்பதையும் வெளிப்படுத்தவில்லை.

நிற்க, இந்நிலையில் இனியொரு கும்பலோடு தமக்கிருக்கும் உறவை, வெளிப்படையாக அறிவிக்க அல்லது அவர்களது அரசியலோடு தாம் நெருங்கியிருக்கிறோம் என்பதை அறிவிக்கும் முகமாக ம.க.இ.க தம்முடைய ‘தோழர்’ சபா. நாவலன் அவர்களை பேட்டியெடுத்து கீழ் காணும் முகவரியில் பதிந்திருக்கிறது. குட்டிமணி(கடைசி ஆசையாக தன்னுடைய கண்களை தானம் செய்து அதன வழியாக ஈழத்தை காண வேண்டும் என்று கூறியதற்காக சிங்கள காடையர்களால் கண்கள் பிடுங்கப்பட்ட கொடூரமாக கொல்லப்பட்டவர்), தங்கதுரை, பிரபாகரன் போன்ற வல்வெட்டித்துறையில் பிரபலமான கடத்தல்காரர்கள் போலீசினால் ஒடுக்குப்படுவதற்கு எதிராகத்தான் சிங்கள அரசுக்கு எதிராகவே போராட்டத்தை தொடங்கினார்கள் என்பது மாதிரியான காமெடியான ஸ்டேட்மெண்டுகள் இந்த பேட்டியிலிருந்தாலும். ம.க.இ.க வின் தோழரான இந்த சபா நாவலன் கக்கும் நஞ்சு சகித்துக் கொள்ளமுடியாதது, இதற்கான எதிர்வினை அவசியம் பதியப்படவேண்டுமென கருதுகிறேன்.

http://www.vinavu.com/2009/12/27/inioru-saba-navalan-interview/

தோழமையுடன்
ஈழமுத்துக்குமரன்

ஸ்டாலின் குரு said...

மன்னிகவும் தோழர் அதிகம் இணையத்தில்
நேரம் செலவு செய்ய இயலவில்லை.
அதனால் உடனடியாக எதிர்வினைகள்
ஆற்ற இயலவில்லை.புலிகளையும்
ஈழ விடுதலைப்போராட்டத்தையும் இழிவு
செய்வதையே பிழைப்பாக வைத்துக்கொண்டு
இருப்பவர்கள் தங்களுக்கு மார்க்சிய முகமூடி
அணிந்துகொண்டு இருப்பதுதான் சகிக்க
இயலாததாக இருக்கிறது.

என்ன செய்வது.இயன்றவரை இவர்களை
அம்பலபடுத்துவதை தொடர்வோம்.

Post a Comment